Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 30 ஜூலை, 2012

மெய் சிலிர்க்கிறது தோழி.. - ஒரு ஈழத்தமிழன்

30.07.2012சட்டம் சட்டம் என இக்குழந்தை உச்சரித்த இச்சட்டம் எனும் வார்த்தை காதில் தேனாய் பாய்கிறது. வாழ்க நீவிர் பல்லாண்டு                                    

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப்;; பார்த்த நால்வர் கைது

 _
30.07.2012.இளவயது இளைஞர்கள் நான்குபேர் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமைச்சோந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

குறிப்பி;ட்ட முகாமில் உள்ள பொது மண்டபத்தில் மாலை வேளையில் இவர்கள் குறிப்பி;ட்ட ஆபாசப்படங்களைக் கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள். ரோந்துக் கடமையில் சென்ற பொலிஸாரைக் கண்டு ஆபாசப்படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளார்கள்.

சந்தேகம் கொண்ட பொலிஸார் பொது மண்டபத்தில் சென்று பார்த்த வேளையில் கையடக்கத் தொலைபேசி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதனைக் கைப்பற்றிய பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஆபாசப்படம் கைத்தொலைபேசியில் பார்த்த சம்பவம் தெரியவந்தது. அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்

இலங்கை அணியில் சங்கக்கார நீக்கம்

30.07.2012.இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா வீசிய பந்து வீச்சில் இலங்கை அணியன் வீரர் சங்கக்காரவின் கையில் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவருக்கு ஸ்கேன் பரிசோதனை எடுத்து பார்த்த போது, விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் இந்த தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். அவர் 4 முதல் 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் விரைவில் தொடங்க உள்ள இலங்கை பிரிமியர் லீக்கில் அவர் கலந்து கொள்வது சந்தேகமாக உள்ளது.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 25 பேர் பலி

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 25 பேர் பலி _
30.07.2012.புது டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நெல்லூர் அருகே வந்த போது ரயிலின் ஒரு பெட்டியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பயணிகள் பலியாயினர்.

புது டில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.30க்குப் புறப்பட்டு இன்று காலை சென்னைக்கு வந்து சேரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்இ இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது ரயிலின் 11ஆவது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து அறிந்ததும் ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆயினும் இந்த விபத்தில் ‌பலர் காயமடைந்துள்ளனர்.

நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்‌கு விரைந்த‌ார். விபத்தைப் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளரிடம் பேசியபோதுஇ இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார்.

பெண்கள் உதைப்பந்தாட்ட லீக் சுற்று: பிரேசில், ஜப்பான், இங்கிலாந்து அணிகள் வெற்றி

30.07.2012.லண்டன் ஒலிம்பிக் போட்டி பெண்கள் உதைப்பந்தாட்ட லீக் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி, கெமரூன் அணியை வீழ்த்தியது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.

ஈ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரேசில் அணி, கெமரூன் அணியை சந்தித்தது. இதில் சிறப்பாக விளையாடிய பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில், நியூசிலாந்து அணியை தோற்கடித்தது.

எப் பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் ஜப்பான் பெண்கள் அணி, 2-1 என கனடா அணியையும், சுவீடன் 4-1 என்ற கோல் கணக்கில், தென் னாப்பிரிக்காவையும் வென்றன.

ஜி பிரிவு போட்டிகளில் அமெரிக்கா 4-2 என பிரான்சையும், வட கொரியா 2-0 என கொலம்பியா அணியையும் வீழ்த்தின.

இலங்கையரது பயணங்களின் போக்கினை மீள் வரையறை செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள Expo Rail

_
2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Expo Rail ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அச்சேவையானது இலங்கையின் ரயில் பயணங்களின் போக்கினை மீள் வரையறை செய்யும் முயற்சியில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது பதுளை, கண்டி, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய நான்கு இடங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள Expo Rail சேவையானது கடந்த எட்டு மாதங்களில் மொத்தமாக 25,000 இற்கும் மேற்பட்டோருக்கு தனது சொகுசு ரயில் பெட்டிகளில் பயண வசதியளித்துள்ளது.

சொகுசு ரயில் பெட்டிகளிலுள்ள ஒவ்வொரு பகுதியும் சௌகரியத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், Expo Rail சேவையானது அதில் பயணம் செய்கின்ற பயணிகளுக்கு தனிச்சிறப்புமிக்க ஒரு பயண அனுபவம் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக் கூடியதாகவுள்ள மிகவும் முன்னேற்றகரமான வசதிகளை கொண்ட ரயில் போக்குவரத்து முறைமையாக தரப்படுத்தப்பட்டுள்ள Expo Rail சேவையில் பணியாற்றும் நட்புறவுமிக்க ரயில் பணியாளர்கள், ஒவ்வொரு பயணியையும் இன்முகத்தோடு எதிர்கொண்டு, தமது சொகுசு ரயில் பெட்டிகளுக்கு வரவேற்கின்றனர்.

பரந்தளவிலான சௌகரியம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்ட சாய்வான நிலைக்கு மாற்றியமைக்கக் கூடிய ஆசனங்கள், ஒவ்வொரு ஆசனத்திற்கும் தனித்தனியான மின்னிணைப்பு வசதியை கொண்டமைந்த - முற்றிலுமாக குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள், அகன்ற திரையமைப்பையுடைய LCD தொலைக்காட்சிகள் மற்றும் இலவச Wi-Fi வசதி போன்ற சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளமை மட்டுமன்றி, Expo Rail இல் பயணிக்கின்ற வேளையிலேயே உணவு பரிமாறப்படுகின்றமை ரயில் சேவைக்கு புதியதொரு பரிமாணத்தை வழங்குகின்றது. அதில் காணப்படும் ஏனைய வசதிகளுள் - போதுமான இடப்பரப்பைக் கொண்ட மேற்புற இறாக்கை, உடனடியாக பெற்றுக் கொள்ளக்கூடிய முதலுதவி மற்றும் சுத்தமான கழிவறைகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன. இதற்கு மேலதிகமாக, ரயில் பணியாளர்கள் ஒவ்வொரு பயணிக்கும் பிரத்தியேகமான சேவைகளை வழங்குகின்றனர்.



“அண்மையில் Expo Rail விஷேட செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இதன் ஒரு அங்கமாக, பல்வேறு நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வருகைதந்திருந்த டில்மா நிறுவனத்தின்; பிரதிநிதிகளுக்கென பிரத்தியேகமான ரயில் சேவை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பிரதிநிதிகள் இவ்விஷேட ரயிலில் நானுஓயா பிரதேசத்திற்கு சென்று திரும்பி வந்தனர். இதுவிடயத்தில் எமக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் சாதகமானதாகவும் உண்மையிலேயே உற்சாகம் அளிப்பதாகவும் காணப்பட்டதுடன்;, அதற்கான சகுனமும் சிறப்பானதாக அமைந்திருந்தது" என்று வர்த்தக அபிவிருத்தி மற்றும் நிர்வாக உதவி முகாமையாளர் செல்வி. அம்ரா ஷரீர் தெரிவித்தார்.

“எமது ஊழியர்கள் பூரணமாக பயிற்றப்பட்டுள்ள அதேவேளை, ரயில் பயணத்தின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலைமைக்கும் ஈடுகொடுத்து செயற்படத்தக்க ஆற்றலை கொண்டுள்ளனர்” என்று குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.ஹனீப் யூசுப் தெரிவித்தார். “அண்மைக்காலங்களில் திருகோணமலை, கண்டி மற்றும் பதுளை போன்ற இடங்களில் ஏற்பட்ட ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் இதற்கு நல்லதொரு முன்னுதாரணமாகும். இந்த ரயில்கள் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ஆயினும் இவ்வாறான சம்பவங்கள் முற்றுமுழுதாக எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையாகும். எவ்வாறிருந்த போதிலும் Expo Rail அணியினர் உடனடியாக அவசியமான அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமான மேற்கொண்டதுடன், பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதுமட்டுமன்றி சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்களள் போன்ற தரப்பினரிடம் இருந்தும் நாம் இது விடயத்தில் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொண்டோம். பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்காக அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அதிசொகுசு ரயில் சேவையான Expo Rail ஆனது, உண்மையிலேயே இலங்கையின் புகையிரத சேவைத் துறையை மீள் வரையறை செய்துள்ளது. பயணத்தின் ஒவ்வொரு விடயத்திலும் முதற்தர சேவைக்கு உத்தரவாதம் வழங்கப்படுகின்றமையானது, இலங்கையின் விடுமுறைகால பயணப்பொதிகளில் இவ்வளவு காலமும் கிடைக்காது போயிருந்த வசதியாக காணப்படுகின்றது. புகையிரத சேவையில் எக்ஸ்போலங்கா நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது, பயணம்சார் மற்றும் சுற்றுலா துறையில் இலங்கை கொண்டுள்ள உள்ளார்ந்த ஆற்றலை அதிகரிக்கும் முயற்சியில் ஒரு முன்னோக்கிய செயற்பாடாக அமைந்துள்ளது. அதன்மூலம், உலகெங்குமுள்ள பயணிகளினால் விரும்பப்படுகின்ற ‘கட்டாயமாக விஜயம் செய்ய வேண்டிய' ஒரு நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

Expo Rail ஆனது, அனைத்துப் பயணிகளுக்குமான ஒரு பெறுமதிசேர் சேவையாக www.exporail.lk என்ற தனது பிரத்தியேக இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் முன்பதிவுகளை மேற்கொள்ளவும் தகவல்களை பெற்றுக் கொள்ளவும் வழியமைத்துள்ளது. அதுமாத்திரமன்றி வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் (24X7) இயங்குகின்ற வாடிக்கையாளர் சேவை தொலைபேசி தொடர்பாடல் வசதியையும் கொண்டுள்ளது.

புவியை பாதுகாப்பது தொடர்பில் சர்வதேச ரீதியாக அதிக கவனம் செலுத்தப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், ரயில் பயணத்தில் காணப்படும் சூழல்சார் அனுகூலங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. விமானங்களையும் கார்களையும் விட ரயில்கள் சூழலுக்கு எப்போதும் குறைந்த அளவிலான தாக்கத்தையே தோற்றுவிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜெட் விமானம் ஒன்றுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, ரயில்கள் 70% வரையில் குறைந்தளவிலான வலுவையே பயன்படுத்துகின்ற அதேநேரம், 85% அளவுக்கு குறைவான காற்று மாசடைதல் தாக்கத்தையே விளைவிக்கின்றன. விமானம் ஒன்றுடன் ஒப்பிடுகையில், சம அளவிலான தூரத்திற்கு பயணிப்பதற்கு 17 மடங்கு குறைவான எரிபொருளையே ரயில்கள் பயன்படுத்துகின்றன. அத்துடன் கார் ஒன்றுடன் ஒப்பிடுகையில் ‘பயணிகள் கிலோமீற்றா' ஒன்றுக்கு 5 மடங்கு குறைவான எரிபொருளையே பயன்படுத்துகின்றன. அதாவது, 30 பேரைக் கொண்ட ஒரு குழுவினர் Expo Rail இல் பயணிப்பார்களாயின், அவர்கள் 6 வாடகைக்கார்களில் பயணிப்பதை விடவும் 30 மடங்கு குறைவான எரிபொருளையே பயன்படுத்துவார்கள்

கட்டாரில் அந்நியத் தொழிலாளர்கள் நடத்தும் சோக நாடகம்

_
30.07.2012.டோஹா விமான நிலையத்தின் வரவுப் பகுதியில் காத்துக்கொண்டிருந்தேன். மத்தியான நேரம். நிறைய விமானங்கள் இறங்கியிருந்தன. மக்கள் அலையலையாக வெளியே வந்து கொண்டிருந்தனர். பொதுவாக அரபு நாட்டினரும் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுமே பயணிகள். இதில் ஏறத்தாழ எழுபத்தைந்து வீதத்தினர் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சாதாரண திறனிலாத் தொழிலாளர்கள்தாம். வண்டி வண்டியாக பெட்டிகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் தள்ளிக்கொண்டு வரும் அரபு நாட்டுப் பயணியர் மத்தியில் மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு சாரை சாரையாக வந்து கொண்டிருந்த இவர்கள் வித்தியாசமாகப் பட்டனர். இவர்கள் வட இந்திய மாநிலங்களிலிருந்தும் நேபாள், பங்களாதேசம் போன்ற நாடுகளிலிருந்தும் வருபவர்கள் என்று தோற்றத்திலிருந்து கணிக்க முடிந்தது.

கட்டார் நாட்டிற்கு எதை எதிர்பார்த்து வருகிறார்கள்? இவர்களை அழைத்துக்கொண்டு வரும் ஏஜென்டுகள் என்னென்ன வாக்குறுதிகள் சொல்லி இவர்களை அழைத்து வருகிறார்கள்? இவர்கள் வருவதற்கு முக்கிய காரணம் பண மாற்றத்திலிருக்கும் பெரிய வித்தியாசம்தான். ஒரு கட்டார் ரியாலுக்கு இந்தியப் பணத்தில் 15, இலங்கைப் பணத்தில் 30 என்றெல்லாம் கிடைப்பது பெரிய கவர்ச்சிதான். சில வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்த்து சொந்த ஊரில் குறைந்தது ஒரு வீட்டைக் கட்டி விட வேண்டும்; பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து விட வேண்டும் என்ற கனவுகளோடு வருகிறார்கள்.

என்னுடைய மின்னஞ்சலில் ஒரு கடிதம் வந்தது. அதில் ஒரு வலைத்தளத்தின் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது அதில் பல புகைப்படங்கள் இருந்தன. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு இருக்கிறது என்று அப்படங்கள் காண்பித்தன. பரிதாபமான நிலை. குறுகிய இடங்களில் பலர் படுத்திருக்கின்றனர், டப்பாக்களில் மீன்களை அடுக்கி வைத்திருப்பது போல. இவ்வளவு துன்ப நிலையிலும் இங்கு தங்கிப் பணியாற்றுகின்றனர். இவர்களைத் தாங்கிக்கொண்டு வருவது இவர்கள் மனதில் சுமக்கும் கனவுகள்தாம்.

இவர்கள் இப்படியென்றால் மேலை நாடுகளிலிருந்து வரும் வெள்ளையர்களின் நிலை வேறு விதங்களில் பரிதாபமானது. இவர்களுக்கு ஊதியம் சற்று அதிகம் என்றாலும் வேலை நிரந்தரம் அல்ல. வேலைப் பாதுகாப்பு சுத்தமாகக் கிடையாது. ஓர் ஆங்கில நண்பருக்கு சொல்லிக்கொள்ளாமல் வேலை போய்விட்டது. அழுது புரண்டாலும் வேலை கிடையாது. இன்னொரு நண்பர் நல்ல வேலையில் இருந்தார். திடீரென்று ஒருநாள் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள். “என்னை விடக் குறைந்த சம்பளத்திற்கு நேப்பாளிலிருந்து யாரோ வந்து விட்டார்கள்” என்று புலம்பிக் கொண்டிருந்தார். உங்கள் நாட்டிற்குப் போய் விடலாமே என்று கேட்டபோது என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். “அங்கு நல்ல வேலை கிடைத்திருந்தால் நான் ஏன் இங்கு வரப் போகிறேன்?” அவருடைய கூற்றில் மிகப்பெரிய உண்மை உண்டு. மேலை நாடுகளிலிருந்து இங்கு(கட்டார்) வருபவர்கள் அங்கு வேலை கிடைக்காமல் வருபவர்கள் தாம். அங்குள்ள சமுதாயத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள். இங்கு வருகின்ற வெள்ளையர்களில் பலருக்கு பெரிய கல்வித் தகுதிகளும் இருப்பதில்லை. குறைந்த கல்வித் தகுதிகள் இருந்தாலும் தோல் நிறத்தைக் கொண்டு பெரிய பதவிகள் கிடைத்து விடுகின்றன. இவர்களைக் காட்டிலும் அதிக கல்வித் தகுதிகளும் அனுபவங்களும் உள்ள பல இலங்கையரும் இந்தியரும் குறைந்த சம்பளத்தில் வெள்ளையர்களுக்குக் கீழே பணி புரிந்து கொண்டிருக்கின்றனர்.

மிகவும் கவலையைத் தருகின்ற உண்மை என்னவென்றால், இங்கு பணியாற்றுகின்ற தொழிலாளர்களையும் இதர பணியாளர்களையும் குறித்த கரிசனை தாய் நாட்டு அரசாங்கங்களுக்குக் கிடையாது. இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வரும் பணியாளர்களைக் குறித்த அக்கறை அந்தந்த நாட்டு அரசுகளுக்கு இல்லை. எடுத்துக்காட்டாக, இந்தியத் தொழிலாளி ஒருவருக்கு ஓர் அநீதி இழைக்கப்பட்டால் இங்குள்ள தூதரகம் அவருக்கு என்ன உதவி செய்யும்? ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போட மாட்டார்கள்.

எண்ணெய் வளம் பெருகிய இந்த நாட்டில், பல்வேறு நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் நடத்தும் சோக நாடகம்தான் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒரு நாடகம் என்று புரிந்து கொள்ளாமலேயே நடித்துக் கொண்டிருக்கின்றனர். சற்று ஆழமாகச் சிந்தித்தால், மனித வாழ்க்கையே ஒரு நாடகம் தானே

செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' வெகுமதி சீட்டிழுப்பின் ஐந்தாவது கோடீஸ்வரராக நுகேகொடை வாடிக்கையாளர் தெரிவு

செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' வெகுமதி சீட்டிழுப்பின் ஐந்தாவது கோடீஸ்வரராக நுகேகொடை வாடிக்கையாளர் தெரிவு _
30.07.2012.செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' (Seylan Thegi Pita Thegi) வெகுமதி வழங்கல் திட்டத்தின் ஐந்தாவது சீட்டிழுப்பு அண்மையில் இடம்பெற்றபோது, ரூபா 01 மில்லியன் பணப் பரிசினை வென்றெடுக்கும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக நுகேகொடை கிளையின் வாடிக்கையாளரான திரு. என்.எஸ்.கே. ஆராச்சிகே தெரிவு செய்யப்பட்டார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள செலான் வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வங்கியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் பீரிஸ், நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆர். நடராஜா, பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன ஆகியோரிடமிருந்து ஐந்தாவது தொகுதி வெற்றியாளர்கள் தமக்குரிய வெகுமதிகளை பெற்றுக் கொண்டனர்.

திரு. என்.எஸ்.ஜே. ஆராச்சி (நுகேகொடை கிளை), திருஃதிருமதி. ஜீ.எஸ். பெரேரா (மகரகம), திரு. பி.எஸ் பத்திரண (குளியாப்பிட்டிய கிளை), செல்வி. என்.பி.சந்திரணி (கொட்டாவை கிளை), திரு. டபள்யு.எம்.ஜே. வீரசிங்க (வெலிமடை கிளை), திருமதி. ஈ.எம்.தயனி அனுராதபுர கிளை), திருமதி. மொஹிடீன் ஜயஜோதி (பொகவந்தலாவை கிளை), திரு.டி.பி.எம். சமரசிங்க (கிரிபத்கொடை கிளை), திரு.எம். விஸ்வநாதன் (மட்;டக்களப்பு கிளை), மாஸ்டர் ஆர்.கே. ரணவீர (களுபோவில கிளை) ஆகிய அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களே இதன்போது பரிசுகளை பெற்றுக் கொண்டவர்களாவர்.

பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான திருமதி. மொஹிடீன் ஜயஜோதி 40 வருடங்களாக தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். சவால்களிற்கு முகம்கொடுத்து மீண்டெழும் ஆற்றல்மிக்கவரான மூன்று பிள்ளைகளின் தாயான இவர், செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' ஊக்குவிப்பு திட்டத்தின் 5ஆவது சீட்டிழுப்பில் மடிகணணி ஒன்றை வென்றெடுத்துள்ளதாக பொகவந்தலாவை கிளை முகாமையாளர் அறிவிக்கும் நாள் வரைக்கும், தகவல் தொழில்நுட்பம் என்பது அவருக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகவே தோன்றியது.

“பதினைந்து வருடங்கள் பழமைவாய்ந்த எனது சேமிப்புக் கணக்கின் மூலம் எந்தவொரு பரிசையும் வென்றெடுப்பேன் என்று நான் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆயினும், அது எனக்கு மடிகணணி ஒன்றினை பெற்றுத்தந்துள்ளது. இதனையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தின் முலோயா பிரதேசத்தில் ஒரு ஆசிரியராக கடமையாற்றும் எனது மூத்த மகன் யோகநாதனுக்கு (வயது 30) இந்த மடிகணணியை நான் பரிசாக வழங்குகின்றேன். அவர் தனது தொழிலை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கு இது உதவியாக அமையும் என்று நான் திடமாக நம்புகின்றேன்" என்று பிள்ளகளிடத்தில் தாயொருவர் கொண்டிருக்கும் அன்போடு அவர் கூறினார்.

செலான் வங்கியின் பொகவந்தலாவை கிளை ஊழியர்களுக்கு அவர் விஷேடமாக பாராட்டு தெரிவித்தார். “எமது பிரதேசத்தில் முதன்முதலாக திறக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றாக இது காணப்படுகின்றது. எமது பகுதியிலுள்ள தொழிலாளர்கள் பொதுவாக வங்கிகளுக்குச் செல்ல சற்று அச்சம் கொள்வார்கள். இருப்பினும், செலான் வங்கியின் உத்தியோகத்தர்கள் எம்மிடம் வந்தார்கள், எமது மொழியினை பேசினார்கள். அதன்மூலமாக அதுவிடயத்தில் நாம் ஒருவித சௌகரியத்தை உணரும்படி செய்தனர். எனவே இந்த அற்புதமான, மனிதநேயமிக்க சேவைக்காக அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம" ஏன்று அவர் மேலும் தெரிவித்தார்.

செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' வெகுமதி வழங்கல் திட்டம் கடந்த வருடத்தின் அக்டோபரில் மிகப் பிரமாண்டமான முறையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது முதல் இதுவரை நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த 13,100 (2620X05 மாதங்கள்) வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் - ரூபா 01 மில்லியன் பணம், மோட்டார் சைக்கிள்கள், LCD தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஹோம் என்டர்டெயின்மன்ட் சிஸ்டம், சோபா கதிரைகள், மடிகணணிகள், முழு அளவில் தன்னியக்கமாக செயற்படும் சலவை இயந்திரங்கள், 4 எரிகருவிகளைக் கொண்ட கேஸ் அடுப்புக்கள், தங்க நாணயங்கள் போன்ற பெருந்தொகையான பரிசுகளை ஒவ்வொரு மாதமும் வென்றெடுத்துள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 'செலான் பரிசு மேல் பரிசு' திட்டமானது நவீன வங்கியியல் செயற்பாடுகளின் உத்வேகமான போக்கில் புத்தெழில்மிக்க வாழ்க்கை முறைமை ஒன்றினை தோற்றுவித்துள்ளதுடன், எந்;தவொரு வங்கியினாலும் இதுவரை வழங்கப்படாத தனிச் சிறப்புமிக்க பரிசுத் திட்டம் என்ற பெருமையையும் பெறுகின்றது. இதற்கு மேலதிகமாக, செலான் வங்கியின் எட்டு விதமான வங்கிச் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு வெற்றி பெறுவதற்கான உன்னதமான வாய்ப்புக்கள் பலவற்றையும் இது வழங்குகின்றது.

அந்த எட்டு சேவைகளாக - 'Seylan Sure' (தனிநபர் சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகள்), டிக்கிரி பிளஸ் (சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்கு), நிலையான வைப்புக்கள், வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் - NRFC (சேமிப்புகள் மற்றும் நிலையான வைப்புககள்), 'Cool Cash' (இளைஞர் கணக்குகள்), அடகு பிடித்தல், கடனட்டைகள் மற்றும் வரவு அட்டைகள் ஆகியவை திகழ்வதுடன், இவற்றுள் அதிகமானவை உள்ளார்ந்தமான வெகுமதி வழங்கல் ஏற்பாடுகளை தன்னகத்தே கொண்டவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டமானது வெகுமதி வழங்கல் நடைமுறையினை புதியதொரு மட்டத்திற்கு உயர்த்தும் அதேநேரம், வழக்கமாக வழங்கப்படுவதை விடவும் அதிகமான பரிசுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. மாதாந்தோறும் தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்குவதற்கு மேலதிகமாக, மாதாந்தம் கிளைகள் தோறும் 20 வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளை வழங்குவதற்கும் இத்திட்டம் உத்தரவாதம் அளிக்கின்றது. இதற்கமைய ஒரு மாதத்தில் மொத்தமாக 2620 பேர் வெற்றியாளராகும் வாய்ப்பு கிடைக்கின்றது.

6 மாதங்களுக்கு முன்னெடுக்கப்படுகின்ற இந்த வெகுமதி வழங்கல் திட்டத்தின் இறுதியில் நடைபெறும் மாபெரும் சீட்டிழுப்பின் மூலம் இறுதி வெற்றியாளராக தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலியான நபர், ரூபா 15 மில்லியன் பெறுமதியான அதிசொகுசு வீடொன்றை பரிசாக தட்டிச் செல்வார்.

செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன கூறுகையில், “இவ்வெகுமதி வழங்கல் திட்டத்தின் இறுதி சீட்டிழுப்பினை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதால், மனக் கிளர்ச்சியும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. இத்திட்டம் குறித்து மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களிடையே உன்னதமான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை, எமது உறுதியான வலையமைப்பில் இயங்கும் 137 கிளைகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள அறிக்கைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பல்வகைப்பட்ட எமது வாடிக்கையாளர்கள் அனைவரினதும் வாழ்க்கையில் இவ்வகையான மாற்றம் ஒன்றினை நிகழ்த்துவதற்கு முடிந்ததையிட்டு உண்மையிலேயே நாம் மனமகிழ்ச்சி அடைகின்றோம். பெருமளவிலான மக்களை சென்றடையும் விதத்தில் புவியியல் அடிப்படையிலான எல்லைகளையும் கடந்து, தான் வகித்துவரும் தேசிய முக்கியத்துவமிக்க பாத்திரம் குறித்து செலான் வங்கி மிகுந்த அக்கறையுடன் செயற்படுகின்றது. 'அன்புடன் அரவணைக்கும' பழம்பெரும் வங்கியாக திகழும் செலான் வங்கியைச் சேர்ந்த நாம், இந்த நாடு முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பினை எப்போதும் உறுதிமிக்கதாக உணர்கின்றோம்" என்று தெரிவித்தார்

பகலில் தூங்குபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

, 30. யூலை 2012,
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அதே சமயம் பகலில் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. உடல் பருமனாக இருப்பவர்கள் எளிதில் சோர்வடைவதோடு பகலில் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் 20 சதவிகித இளைஞர்கள் பகல் நேர தூக்கத்தை விரும்புகின்றனராம். இதுதொடர்பாக பகலில் தூங்கும் 1,173 இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, அந்த இளைஞர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை இருந்தது கண்டறியப்பட்டது. இரவில் சரியாக உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலரும் பகல்நேரத்தில் தூங்கி பொழுதை கழிக்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வீட்டில் மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருப்போருக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையான ஒன்று என்று மற்றொரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
பெரியவர்களுக்கு மன அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் 83 ஆண்/பெண்களிடம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இருப்பதால், பெரியவர்களின் மனோநிலையிலும் மாற்றம் ஏற்படுவது தெரிய வந்தது.
குழந்தைகளின் பாதிப்புகளால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அதேசமயம் மனோநிலை பாதிப்பு ஏதுமில்லாமல் உள்ள குழந்தைகளுடன் வசிப்போருக்கு எவ்வித மன அழுத்தமும் இருப்பதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சகோதரரோ அல்லது சகோதரியோ மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பாரேயானால், வீட்டில் உள்ளவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் ஏற்பட்டு விடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கணக்குகளுக்கு மிக எளிதான வகையில் தீர்வுகளை காண

 திங்கட்கிழமை, 30 யூலை 2012,
புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதில் கூகுளுக்கு நிகர் கூகுள் தான் என்றே சொல்ல வேண்டும். தற்போது கூகுள் பயனாளர்களுக்காக கால்குலேட்டர்(Calculator) வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த கால்குலேட்டரை கூகுளின் முகப்பு பக்கத்தில் பார்க்க முடியாது. ஆனால் தேடல் பக்கத்தில் எளிதான கணக்கு(For Ex: 12+34) ஒன்றை செய்து, Search என்று கிளிக் செய்தால் கால்குலேட்டர் வருகிறது.
34 வகையான பட்டன்களை கொண்ட இந்த கால்குலேட்டரில் எல்லா வகையான கணக்குகளையும் போடலாம்

Advanced SystemCare v6.1 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

 திங்கட்கிழமை, 30 யூலை 2012,
ஒவ்வொருவரின் கணணியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருள்களில் ஒன்று தான் Advanced SystemCare v6.1. இந்த மென்பொருள் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமான வசதிகள் உள்ளது.
தற்போது இந்த மென்பொருளில் சில மாற்றங்களை செய்து புதிய பதிப்பாக Advanced SystemCare v6.1 என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளனர் iobit நிறுவனத்தினர்.
இந்த புதிய பதிப்பில் முக்கிய மாற்றமாக மென்பொருளின் தோற்றத்தை முற்றிலும் மாற்றி பார்ப்பவர்களை கவரக்கூடிய வகையில் கொடுத்துள்ளனர்.
மேலும் மென்பொருளில் தொழில் நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை செய்துள்ளதால் மென்பொருள் முன்பை விட தற்பொழுது சிறந்து விளங்கும்.
இருப்பினும் இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில்(சோதனை பதிப்பு) வெளியிட்டு உள்ளனர். ஆகவே இந்த மென்பொருள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது

வாழை இலையின் மருத்துவ குணங்கள்

 திங்கட்கிழமை, 30 யூலை 2012,
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட.
1. அழகை கெடுக்கும் வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது.
இதன் புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
2. வாழை இலையில் பல மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய சிறப்பால் இதனை ஒரு இயற்கை அளிப்பான் என்றும் சொல்வார்கள்.
3. அழகுப் பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின்(Allantoin) என்னும் பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும். மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும்.
4. குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.
5. மன அழுத்தம் போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்தால், சருமமானது மென்மையடைவதோடு, எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்

இயற்கையாகவே எலும்புகளை உருவாக்கலாம்: ஆராய்ச்சியில் தகவல்

30யூலை 2012,
மனிதனின் உடலில் எலும்புகள் சேதமடைந்தால் அதற்கு பதிலாக செயற்கையான பிளேட்டுகளை பொருத்தி சீர்செய்யும் மருத்துவ முறை தற்போது உள்ளது. இதற்கு பதிலாக இயற்கையாகவே எலும்பை உருவாக்கி சிகிச்சை அளிக்கலாம் என்று அயர்லாந்தில் உள்ள றொயல் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மரபணுக்கள் மூலமாக, அதாவது ஒரு வித புரோட்டீன் மூலமாக எலும்பு திசுவை உருவாக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலமாக எந்த விதமான எலும்பையும் உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
முதலில் இவற்றை விலங்குகளுக்கு பொருத்தி சோதனை செய்ய உள்ளனர். பின்னர் மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும்.
விபத்தில் அடிபட்டாலோ அல்லது இயற்கையாக எலும்பு சேதமடைந்தாலோ அவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.