| சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012, |
| பாதுகாப்பற்ற இணையத்தளப்
பாவனை மூலமாகவும், ஏனைய சாதனங்களை பயன்படுத்துவதன் மூலமும் கணனியில்
தொற்றிக்கொள்ளும் வைரஸ்களின் செயற்பாட்டை முடக்குவதற்கு அல்லது முற்றாக
நீக்குவதற்கு பல்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவற்றுள் சிறந்த அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றாக கருதப்படும் Avast, 150
மில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் முகமாக இம்மென்பொருளானது காலத்திற்கு காலம் மேம்படுத்தப்பட்டு வெளிவிடப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது புதிய பதிப்பான Avast 7.0.1466 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னைய பதிப்புக்களைக் காட்டிலும் சில விசேட அம்சங்களை உள்ளடக்கியுள்ளதுடன் வினைத்திறனான வைரஸ் எதிர்ப்பையும் மேற்கொள்ளக்கூடியதாகக் காணப்படுகின்றது. |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
சனி, 25 ஆகஸ்ட், 2012
Avast அன்டி வைரஸின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
நான் (வீடியோ இணைப்பு)
| விஜய் ஆன்டனி நடித்து தயாரித்திருக்கும் படம் நான். இவரது இசையில் 25வது படமாக வெளிவந்திருக்கிறது. |
|
தனது அம்மாவும் மாமாவும் தவறாக நடந்து கொள்வதை சிறு வயதிலேயே பார்த்துவிடுகிறான்
கார்த்திக். இதை அப்பாவிடம் சொல்ல அவரோ தூக்கு போட்டு தற்கொலை செய்து
கொள்கிறார். அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு தீக்கிரையாகிவிடும் கார்த்திக்கை, பொலிஸ் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் போது இளைஞனாகியிருக்கிறான். தனது சித்தப்பாவீட்டிற்கு அவன் போக கொலைகாரன் என்கிறாள் சித்தி. அதைக் கேட்டு அங்கிருந்து கிளம்பும் கார்த்திக் சென்னை போவதற்காக வண்டி பிடிக்கிறான். அந்த பேருந்து விபத்தில் சிக்குகிறது. தனது அருகில் உட்கார்ந்து பயணம் செய்த மெடிக்கல் கல்லூரியில் சேருவதற்காக சென்னை செல்லும், சலீம் அந்த விபத்தில் இறந்துவிட, சலீமின் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்னை போகிறான் கார்த்திக். தனது பெயரை மாற்றிக் கொண்டு சலீமாக மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். அங்கு அதன் பிறகு சந்திக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை முழு நீளப் படத்தில் விரிவாக சொல்கிறது நான். படம் துவங்கிய சில நிமிடங்கள்… அதாவது, கார்த்திக் அவன் அம்மாவையும் மாமாவையும் தீவைத்துக் கொழுத்தி விடுவது ரசிகர்களை இழுத்து சீட்டோடு உட்கார வைத்துவிடுகிறது. அதே போல கடைசி காட்சியில் வரும் க்ளைமேக்ஸ் நம் மனதையே உருக்கிவிடுகிறது. இடைப்பட்ட காட்சிகள், சலீமாக மாறும் கார்த்திக்… அதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். கல்லூரியில் அவனுக்கு கிடைக்கும் நண்பன், கடைசியில் அவனையே எதிர்பாராத விதமாக கொலை செய்துவிடும் சலீம். அடுத்து இன்னொரு கொலை… அடுத்து என்ன நடக்குமோ என்கிற ரீதியில் படத்தை நகர்த்திச் செல்கிறது திரைக்கதை. ஆன்டனிக்கு இது முதல் படமாம் நம்ப முடியவில்லை. எப்போதும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அவர் கார்த்திக் சலீம் கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கின்றார். புகைப்படத்துக்காக நண்பனை விரட்டிச் செல்லும் போதும், எதிர்பாராதவிதமாக நண்பன் கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட, ஓ… என உரக்க அழும் காட்சிகளிலும் விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கின்றார். விஜய் ஆன்டனிக்கு நண்பனாக வருகிறார் சித்தார்த். இவருக்கு ஜோடியாக வருகிறார் ரூபா மஞ்சரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில்தான் நடித்திருக்கிறார். மக்கஎல பாட்டுக்கு இவர் போடுகிற நடனம் இருக்கிறதே… அடேங்கப்பா… ரூபாவின் நடிப்பும் அவரது அழகும் கூடியிருக்கிறது. அனுயாவும் படத்தில் இருக்கிறார். சில
காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். இன்னொரு அழகான புதுமுக நடிகையும் படத்தில்
வருகிறார். படத்திற்கு இசை விஜய் ஆன்டனி. தான் நடிகராக அறிமுகமாகும் படம் என்பதாலும், தனது 25வது படம் என்பதாலும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையை போட்டுத் தாக்கியிருக்கிறார். உலகினில் மிக உயரம்… செம டச்சிங்கான பாடல். மக்கஎல மக்கஎல பாடல் ஆட்டம் போட வைக்கிற ரகம். இனிமேல் பல பப்களில் இந்த பாடலுக்குதான் மவுசு. ‘தப்பெல்லாம் தப்பே இல்லை…’ பாடல் தத்துவ பாடல் போல் வருகிறது. நான் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜீவா சங்கர். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். முதல் காட்சியில் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கின்றார் ஜீவா சங்கர். க்ளைமேக்ஸில் செம டச்சிங்கான சீனை வைத்து நம்மை அப்படியே மௌனமாக்கிவிடுகிறார். |
பாணந்துறையில் மூழ்கும் கப்பல்: பாரிய எண்ணைக் கசிவு அபாயம்: மூடிமறைக்கிறதா இலங்கை அரசு
பாணந்துறைக்
கடலில் கடந்த 2 தினங்களாக ஒரு கப்பல் மூழ்கி வருகிறது. இதுதொடர்பான செய்திகளை சில
சிங்கள ஊடகங்கள் வெளியிட்டபோதிலும் அவை சரக்குக் கப்பல் என்பதுபோன்ற செய்திகளே
வெளியாகியுள்ளது. ஆனால் இக் கப்பலில் எண்ணெய் இருப்பதாக தற்சமயமே தெரியவந்துள்ளது.
சற்று நேரத்துக்கு முன்னர் முற்றாக மூழ்கத்தொடங்கியுள்ள இக் கப்பலில் இருந்து பாரிய
எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இக் கப்பலில் இருந்து
கசியும் எண்ணெய், கொழும்பு, காலிமுகத்திடலிருந்து 4 � 10 கடல் மைல் தொலைவில்
காணமுடிகின்றது. இந்த எண்ணெய் கசிவு நீர்கொழும்பு கடலை நோக்கி பரவிவருவதாகவும்
மேலும் அறியப்படுகிறது.
இந்த எண்ணேய் கசிவு காலி வரை பரவிச் செல்ல வாய்பு இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த எண்ணேய் கசிவு காலி வரை பரவிச் செல்ல வாய்பு இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மாணவிகளின் மோபைல் போன் நம்பரைக் கேட்கும் இராணுவத்தினர் !
புதுக்குடியிருப்பில்
நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், கடந்த சில வாரங்களாக தமிழ் பெண்களோடு அதிகளவில்
உரையாடிவருவதாகவும் , டியூசன் சென்று திரும்பும் மாணவிகளின் மோபைல் போன்
இலக்கத்தைக் கேட்டு கடும் தொந்தரவுகள் கொடுப்பதாகவும் கூற்ப்படுகிறது. சிவில்
உடையில் ஆயுதங்கள் தாங்கி நிற்கும் இராணுவத்தினர், வீதிகளில் செல்லும் தமிழ்ப்
பெண்களைக் குறிவைத்து, பெரும் சேஷ்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மாணவிகள்
வரும் சைகிளை மறிப்பதும், அவர்களோடு தமிழில் உரையாடி அவர்களின் வீடு எங்கே
இருக்கிறது என்று கேட்டு மிரட்டுகின்றனர். பின்னர் தொலைபேசி இலக்கத்தை
தந்துவிட்டுச் செல்லுமாறு இவர்கள் கோருவதாகவும் தமிழ் மாணவிகள் பலர் தமது
பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து பல பெற்றோர், தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் முறையிட்டுள்ளனர். தமது பிள்ளைகள் பாதுகாப்பாகச் சென்று வர ஆவன செய்யுமாறு பெற்றோர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இதனை அடுத்து பல பெற்றோர், தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் முறையிட்டுள்ளனர். தமது பிள்ளைகள் பாதுகாப்பாகச் சென்று வர ஆவன செய்யுமாறு பெற்றோர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்
தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட பொலிசார்:
25. 08. 2012. by.rajah
கொழும்பில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் சமீபத்தில் கொள்ளை இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. பல பெறுமதிமிக்க அரிய பொருட்கள் களவாடப்பட்டது. இதனை அடுத்து பொலிசாரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இருப்பினும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து பொலிசார் சிறப்பு அனுமதியைப் பெற்று சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்டுள்ளனர். இதனூடாகவே அவர்கள் சில தகவல்களைப் பெற்றுள்ளனர் எனப் பொலிசார் இன்று(25) தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கலாக சுமார் 8 லட்சம் உரையாடலை ஒட்டுக்கேட்ட பொலிசார் பின்னரே, சூத்திரதாரிகளைக் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போது பொலிசார் கைதுசெய்துள்ள நபர்கள் நூதனசாலை கொள்ளையோடு உண்மையாகச் சம்பந்தப்பட்டவர்களா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் சில அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
16:40 25.08.2012ரூ. 85 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அறிமுக நடிகை கைது

Saturday, 25 August 2012,
அங்காடித் தெரு படத்தையடுத்து மகேஷ் நடித்த படம் 'கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு'.
இப்படத்தின் நாயகியாக புவனேஸ்வரி என்ற அறிமுக நடிகை நடித்தார். இவர்தான் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படத்திற்காக இவரின் தாயார் சம்பூர்ணம் அம்மாள் சென்னையைச் சேர்ந்த குருநாதன் (வயது 42) என்ற சினிமா பைனான்ஸியரிடம் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் தயாரிக்கும் படத்திற்கு முதலீடு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், பணம் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் குருநாதனும் ரூ.85.50 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
பின்னர் அந்த பணத்துக்கு வங்கி காசோலை கொடுத்துள்ளார்கள். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாமல், காசோலை திரும்பி வந்தது.
எனவே அந்த பணத்தைத் தராமல் சம்பூர்ணம் அம்மாள் ஏமாற்றி விட்டார் என சென்னை பொலிஸ் கொமிஷனர் திரிபாதியிடம் குருநாதன் நேற்று புகார் அளித்தார்.
சம்பூர்ணம் அம்மாள், அவரது மகள் நடிகை புவனேஸ்வரி ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கொமிஷனர் ராதிகா மேற்பார்வையில், துணை காவல் அதிகாரி நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதன் காரணமாக நடிகை புவனேஸ்வரி (வயது 22) நேற்று கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணையில், சினிமா தயாரிப்பு செலவுக்காக குருநாதன் ரூ.15 லட்சம்தான் கொடுத்தார்.
படம் சரியாக ஓடாததால் அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று தனது வாக்குமூலத்தில் புவனேஸ்வரி கூறியதாக பொலிசார் தெரிவித்தனர். அவர் மீது மோசடி உட்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புவனேஸ்வரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கதறி அழுதபடியே சிறைக்குச் சென்றார்.
அடுத்தமாதம் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு
25.08.2012.] உலக நாயகன் கமலஹாசன் இயக்கி, நடித்து வரும் படம் விஸ்வரூபம்.
இதில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியாவும், அமெரிக்க மொடல் அழகி பூஜாகுமாரும் நடிக்கின்றனர்.
அதிக பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளன.
தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. கடந்த யூலை மாதம் டிரைலர் வெளியிடப்பட்டது.
அப்போதே படம் விரைவில் திரைக்கு வரும் என்று பேசப்பட்டது. அதுவும் டிசம்பரில் வெளியாக உள்ள கோச்சடையான் படத்திற்கு முன்னதாகவே வெளியிட கமல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்றும், ஒக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன் மனதிலும் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக பதுங்கி இருந்த கதை என்பதால், ரசிகர்கள் மனதிலும் அது தங்கும் என்று கமல் நம்பிக்கையில் இருக்கிறார்.
மேலும் கமல் படம் என்றாலே பல புதிய அம்சங்கள் இருக்கும். இதனால் கமலின் விஸ்வரூபத்தைக் காண அவரது ரசிகர்களும் மிக ஆர்வமாக உள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதி விரும்பவில்லை
25.08.2012.கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே
விரும்பவில்லை. அதனால் தான் ஒரு வருட காலத்துக்கு முன்னரே கிழக்கு மாகாண சபையை அவர்
கலைத்து விட்டார் ௭ன மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் பொன்.செல்வராசா கூறினார்.
நடிகையின் ஹோட்டலில் விபசாரம் மூன்று பெண்களுடன் சார்ஜனும் கைது
25.07.2012.நடிகையொருவருக்கு சொந்தமான ஹோட் டலொன்றில் மிகவும் ரகசியமாக மேற் கொள்ளப்பட்டுவந்த
விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் இரு பெண்கள் அடங்கலாக மூவரை பாணந்துறை வலானை
பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகைக்கு சொந்தமான குறித்த ஹோட்டலில் விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்திவருவதாக வலானை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அக் ஹோட்டலை சோதனையிடுவதற்கான நீதிமன்றத்தின் அனுமதியினை பெற்றதன் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபசாரம் நடைபெற்றதாக கூறப்படும் அந்த ஹோட்டலில் ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் முகாமையாளராக இருந்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள இரு பெண்களில் ஒருவருக்கு ஒரு வயதில் குழந்தையொன்றும் இருந்துள்ளது. அக்குழந்தையை ஹோட்டல் முகாமையாளரான சார்ஜண்ட் தாய் விபசாரத்தில் ஈடுபடுகின்றபோது கண்காணிப்பில் வைத்திருந்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் விசாரணைக்குட்படுத்திவரும் பாணந்துறை வலானை பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்
சுவிஸில் நீச்சல் பயிற்சியின் போது காணாமல் போன இரு இலங்கையர்களில் ஒருவர் மீட்பு
சுவிட்சர்லாந்தின் ரிஆஸ் அருவியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன இலங்கையர்கள் இருவரில் ஒருவர், ஆர்கௌ பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை ரிஆஸ் அருவியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இலங்கை அகதிகள் காணாமல் போயினர்.
அவர்களில் ஒருவர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் நீச்சல் பயிற்சி வழங்கிய ஆசிரியர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது கவனக்குறைவின் காரணமாகவே இவர்கள் காணாமல் போயினர் என உறுதியாகும் பட்சத்தில், அவருக்கு தண்டனை வழங்கப்படும் என, சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்
நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள்!- ஒருவர் பலி! 11 படுகாயம்
சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,
புத்தளம் - அனுராதபுரம் வீதியிலுள்ள 5ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை 1.45 அளவிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
முக்கொலை சந்தேகநபர் பிரசான் நகைகளை 5 இலட்சத்திற்கு அடகுவைத்தமை அம்பலம்
வெள்ளவத்தை முக்கொலை தொடர்பில் கைதான சந்தேகநபரான பிரசான் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியில் அடகுவைத்துள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் 15,17 ஆகிய இரண்டு நாட்களில் கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள நகை அடகுபிடிக்கும் கடையொன்றில் பெருந்தொகையான தங்கநகைகளை கொண்டுசென்று அடகுவைத்து பணம் பெற்றுள்ளமை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தங்க ஆபரணங்களை சந்தேகநபரான பிரசான் கொட்டகலை ராணியப்பு தோடத்தில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிலிருந்து எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கொழும்புக்கு வந்து மருந்துப் பொருட்களின் விற்பனை பிரதிநிதியாகத் தொழில் புரிந்துள்ளார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கொழும்புக்கு வந்து மருந்துப் பொருட்களின் விற்பனை பிரதிநிதியாகத் தொழில் புரிந்துள்ளார்.
அந்தஸ்துக்கு மீறிய விதத்தில் இரண்டு காதலிகளுடனும் வாகனங்களுடனும் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்த இவர் பணப்பிரச்சினை காரணமாக ஊருக்குச் சென்று தந்தையின் ஊழியர் நம்பிக்கை நிதியப்பணத்தைக் கேட்டுள்ளார்.
தந்தை அதனை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இவர் தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவின் படி மூவரையும் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.
தான் ஒரு மருந்துவப் பொருட்களின் விற்பனை முகவர் என்பதால் மிக எளிதாக மூவருக்கும் நஞ்சூட்டியுள்ளார்.
நஞ்சூட்டிய பின்னர் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்ற எண்ணத்தில் தாயினதும் சகோதரியினதும் தங்கநகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது


அனுயாவும் படத்தில் இருக்கிறார். சில
காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். இன்னொரு அழகான புதுமுக நடிகையும் படத்தில்
வருகிறார். 








