Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இளம்பெண்ளை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் கைது

 Friday, 19 October 2012, By.Rajah.ஜேர்மனியில் பல பெண்களை பாலியல் ரீதியாக  துன்புறுத்தி வந்த நபரை பொலிசார் கைது செய்தனர்.
ரெபேக்கா என்ற 17 வயது இளம்பெண்ணை, 28 வயது மதிக்கத்தக்க மரியோ என்பவர் கடத்தி சென்றார்.
தெருவில் வைத்து அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளதுடன், வீட்டுக்கு கொண்டு சென்று கட்டி போட்டு வைத்துள்ளார்.
அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்கள் அப்பெண்ணை பாலியல் ரீதியான முறையில் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தப்பித்து வந்த பெண் பொலிசாரிடம் முறையிட்டார்.
இதனையடுத்து பொலிசார் மரியோவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மரியோ பதின்வயது பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் பாலியல் குற்றத்திற்காக மரியோ மூன்றாண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்ததும், மீண்டும் ஒரு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளதும் தெரியவந்துள்ளது

பள்ளிக்கு செல்லும் ஒபாமா மகள்களுக்கு தொலைபேசியில் மிரட்டல்

Friday, 19 October 2012,.By.Rajah.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா- மிஷெல் தம்பதிக்கு மாலியா (வயது 14), சாஷா (வயது 11) என்று இரு மகள்கள் உள்ளனர்.இவர்கள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள “சித்வெல் பிரண்ட்ஸ்” என்ற தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.
இந்நிலையில், இவர்கள் படிக்கும் பள்ளிக்கு நேற்று தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து, பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களது பேக்குகள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. ஆனால், ஆபத்தான பொருள் எதுவும் இல்லை.
இதுகுறித்து பள்ளியின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் தொலைபேசியில் எவ்வித மிரட்டல் வந்தது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
வெள்ளை மாளிகையிலும் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் 6ம் திகதி நடைபெற உள்ளது. அதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.
போட்டி கடுமையாக உள்ள இந்நிலையில் ஒபாமா மகள்கள் படிக்கும் பள்ளிக்கு மிரட்டல் வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார்: ஓவியா

Friday, 19 October 2012, By.Rajah.
தொடர்ந்து மாணவி வேடத்தில் நடிப்பது போரடிக்கவில்லை என்றும், கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார் ஓவியா.
நடிகர் விமலுக்கு ஜோடியாக களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா, பள்ளி மாணவி வேடம் ஏற்றிருந்தார்.
இதையடுத்து சில்லுனு ஒரு சந்திப்பு என்ற படத்தில் மீண்டும் விமல் ஜோடியாகவும், பள்ளி மாணவியாகவும் நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், மீண்டும் மாணவியாக நடிக்க வந்துவிட்டேன். கொலிவுட்டில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டானால் தொடர்ந்து அதே வேடங்கள் வருவது வழக்கம்.
களவாணியில் மாணவி வேடம் ஹிட்டானதையடுத்து அடுத்தடுத்த படங்களில் அதேபோன்று நிறைய வேடங்கள் வருகிறது. ஆனால் அது எனக்கு போர் அடிக்கவில்லை.
ஆனால் இந்த வேடத்தோடு நின்றுவிட மாட்டேன். கவர்ச்சியாக நடித்த கலகலப்பு படமும் எனக்கு பேர் பெற்றுத்தந்தது. கவர்ச்சி வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன்.
அதேபோன்று இரண்டு கதாநாயகிகள் படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அடம் பிடிக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்

விமான நிலையத்தில் தவித்த சூர்யா, அனுஷ்கா

 Friday, 19 October 2012, By.Rajah.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடிக்கும் சிங்கம்- 2 படப்பிடிப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவருவதால் நகர் முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
இதனால் தூத்துக்குடி விமான நிலையத்தின் வளாகம் மற்றும் விமான ஓடு பாதையிலும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை சென்னை திரும்புவதற்காக சூர்யா, அனுஷ்கா இருவரும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
ஆனால் ஓடுபாதையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காரணத்தினால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டபடி இருந்தது.
பின்பு அந்த விமானம் மதுரைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் சூர்யாவும் அனுஷ்காவும் விமானத்தில் ஏற முடியவில்லை. காரின் மூலமே சென்னை சென்றனர்.

கலக்கல் கொமெடியில் உருவாகும் "ஒன்பதுல குரு"

Friday, 19 October 2012,By.Rajah.
கொலிவுட்டில் நடிகர் வினய் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்பதுல குரு.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் பி.டி. செல்வக்குமார் .
இவர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகவும், இளைய தளபதி விஜய், நடிகர் ஜீவா இவர்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணிபுரிந்தவர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ம் திகதி பூஜையுடன் ஆரம்பமானது.
இப்படப் பூஜையில் இளையதளபதி விஜய், நடிகர் ஜீவா, எஸ்.ஏ.சந்திரசேகரன், இயக்குநர் எல்ரெட் குமார் மற்றும் பலர் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் நடிகர் வினய், சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ் ஆகியோர் நண்பர்களாக நடிக்க, நடிகைகள் லஷ்மிராய், அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் பல முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
இப்படத்தின் கதையை கேட்ட நடிகர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளமே கொமெடியில் களை கட்டுகிறது.

காதல் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை சொல்லும் "நீங்காத எண்ணம்"

 Friday, 19 October 2012, By.Rajah.
சஞ்சனா சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஏ.சஞ்சய் பிரகாஷ் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் "நீங்காத எண்ணம்".
இப்படத்தில் கதாநாயகனாக ஜெயந்த் நடிக்கிறார். இவர் நடிகர் பானுசந்தர் மகன் ஆவார். கதாநாயகியாக புதுமுகம் அங்கீதா நடிக்கிறார்.
இவர்களுடன் ஜெயபிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், டி.பி.கஜேந்திரன், மணிகுட்டி, சந்துரு, பாலாஜி, ரிஷா, மீரா கிருஷ்ணன், வைஜந்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை ஷாஜகான், செல்வராஜ் என்று இரு இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.
படம் குறித்து இயக்குனர்கள் கூறுகையில், பெரிய ஜமீன் குடும்பமான ஜெயபிரகாஷ் - சரண்யா தம்பதியின் மகள் அங்கீதா.
சாதாரண குடும்பமான தலைவாசல் விஜய் - மீரா கிருஷ்ணனின் மகன் ஜெயந்த்.
ஜெயந்த் - அங்கீதா இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.
அவர்கள் காதலுக்கு அந்தஸ்து தடையாக இல்லை. ஆனாலும் அவர்கள் பிரிய நேர்கிறது.
அவர்களின் பிரிவுக்கு என்ன காரணம்? மீண்டும் சேர்ந்தார்களா? என்பதை குடும்ப செண்டிமெண்ட் கலந்து சொல்லி இருக்கிறோம்.
எல்லோரும் ரசிக்கும் படியாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
முழுக்க முழுக்க புதுக்கோட்டை மாவட்டத்திலேயே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம் என்றும் சென்னை, கொடைக்கானல் போன்ற இடங்களிலும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

வாகை சூட வா படத்திற்கு இந்தியாவின் உயர்ந்த விருது

Friday, 19 October 2012, By.Rajah.
வாகை சூட வா படத்திற்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பனோராமா கிடைத்துள்ளது.
இயக்குனர் சற்குணத்தின் படைப்பான வாகை சூட வா படம் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஆழமான விழிப்புணர்வு படமாகும்.
தேசிய விருது பெற்ற இப்படம், தற்போது இந்தியாவின் உயர்ந்த விருதான பனோராமா விருதுக்கு தெரிவாகியுள்ளது.
இது குறித்து இயக்குனர் சற்குணம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் பனோராமா விருத்துக்கு தெரிவானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பல்வேறு பிராந்திய மொழிகளில் தமிழில் தெரிவான ஒரே படம் வாகை சூட வா எனும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
விருது கிடைக்கும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படமல்ல என்றாலும் பலரும் இந்த படத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
அது தற்போது நனவாகியிருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எனது தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நேரத்தில் செங்கல் சூளைக் காரர்களுக்கு தேசிய கீதம் போல என்படத்தில் பாடல் கொடுத்த இசைஅமைப்பாளர் ஜிப்ரானுக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக

         
Friday 19 October 2012  By.Rajah.
நடை பயணம் மேற்கொண்ட கனேடிய பெண்யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி வரும் யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் நிறுவனத்துக்கு நிதி சேகரிக்க மாத்தறை தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைப்பயணம் மேற்கொண்ட கனேடியப் பெண்மணிக்கு இன்று வியாழக்கிழமை பருத்தித்துறையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
கனடாவைச் சேர்ந்த திருமதி ஒசாசாய அகஸ்ரின் அம்மையார் இந்நிதி உதவி பெறுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மாத்தறை தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார்.

இவர் சுமார் 820 கிலோ மீற்றர் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஜெய்பூர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இவ் வரவேற்பு நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

வாலிபருக்கு 36 மணிநேர முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,By.Rajah.
துப்பாக்கி சூட்டினால் உருக்குலைந்து போன வாலிபரின் முகம், 36 மணி நேர முகமாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது நல்ல நிலையில் செயல்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் ரிச்சர்ட் லீ நோரிஸ்(வயது 37). மன வருத்தத்தினால் 1997ம் ஆண்டு துப்பாக்கியால் முகத்தில் சுட்டு கொண்டார்.
இதில் அவரது முகம் சிதைந்தது, தாடை உருக்குலைந்து போனது, மூக்கும், நாக்கும் காணாமல் போயின.
உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோரிஸ், தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார்.
ஆனால் முகம் வடிவம் இல்லாமல் இருந்ததால் கோரமாக காட்சியளித்தது. இதனால் இவர் முகமூடி அணிந்து தான் வெளியே நடமாடினார்.
கடந்த மார்ச் மாதம் விர்ஜீனியா மாகாணத்தில் நோரிசுக்கு 36 மணி நேரம், 100 மருத்துவர்கள் கொண்ட குழு இணைந்து முகமாற்று அறுவை சிகிச்சை செய்தது.
மற்றவர்களிடமிருந்து பெறப்பட்ட தாடை, மூக்கு, நாக்கு ஆகியவை இவருக்கு பொருத்தப்பட்டன. கழுத்து பகுதியிலிருந்து திசுக்கள் எடுத்து முகத்தில் வைக்கப்பட்டன.
இதன் மூலம் தற்போது இவரது மூக்கு, வாசனையை உணர ஆரம்பித்துள்ளது, நாக்கு சுவையை உணர்கிறது. பேச்சு மட்டும் முழுமையாக வரவில்லை.
மார்ச் மாதம் முகமாற்று அறுவை சிகிச்சை முடிந்தாலும், இந்த மாதம் வரை அவர் தொடர் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் தான் இவருக்கான தொடர் சிகிச்சை முடிவுக்கு வந்தது. தற்போது அவர் முகமூடி இல்லாமல் அழகான நபராக வெளியே நடமாடும் அளவுக்கு தேறியுள்ளார்.


அமெரிக்க ஜனாதிபதிகள் ஏராளமான அப்பாவிகளை கொல்கின்றனர்: தீவிரவாதி காலித் விவாதம்

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடம் மீது கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி விமானத்தை மோதச் செய்து அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதே போன்று பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தினர். வர்த்தக மைய கட்டிடத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 3,000 பேர் இறந்தனர்.
அமெரிக்காவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததாகவும் குவைத்தில் பிறந்து பாகிஸ்தானில் வளர்ந்தவரான காலித் ஷேக் முகமது கைது செய்யப்பட்டார்.
தற்போது கியூபாவின் குவாண்டனாமோவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் 3வது நாளாக இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது காலித் ஷேக் முகமது தனது விவாதத்தை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதிகள் ஏராளமான அப்பாவிகளையும், சிறுவர்களையும், சிறுமிகளையும் படுகொலை செய்து வருகிறார்கள்.
மேலும் பலரை சொல்லில் வடிக்க முடியாத சித்ரவதைக்கு எல்லாம் ஆளாக்கி வருகிறார்கள். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஒருவர் கொல்லப்பட்டு கடலில் புதைக்கப்பட்டு விட்டார் (அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன்).
எல்லா ஆட்சியாளர்களும் தங்களுடைய நோக்கங்களை எல்லாம், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
உலக வர்த்தக மைய கட்டிட தாக்குதலில் 3,000 பேர் இறந்ததாக அமெரிக்க அரசு வருந்துகிறது. ஆனால் அவர்களால் நாங்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளோம். கடந்த 2002ஆம் ஆண்டில் அமெரிக்க பத்திரிகை நிருபர் டேனியலை இந்த புனிதமான கையால் தான் கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.
40 நிமிடங்கள் காலித் ஷேக் முகமதுக்காக ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் இவர் அரபு மொழியில் கூறியதை, மொழி பெயர்ப்பாளர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெரிவித்தார்

அர்ஜென்டினாவில் ஓட்டு போடும் வயது 16ஆக குறைப்பு

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,By.Rajah.
அர்ஜென்டினா நாட்டில் தற்போது ஓட்டு போடும் வயது 16ஆக குறைக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டில் ஓட்டு போடும் வயது 18லிருந்து 16ஆக குறைக்கப்பட்டு, செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 2 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர்.
இதனை தொடர்ந்து அடுத்த மாதம் நாடாளுமன்ற கீழ் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டம் அமுல்படுத்தப்படும்.
விரைவில் அர்ஜென்டினாவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்கிலீக்ஸ் விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவரின் மின்னஞ்சல்களை ஒப்படைக்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah.
விக்கிலீக்ஸ் இணையத்தளத்துக்கு அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிராட்லே மேனிங் தொடர்பான மின்னஞ்சல்களை ஒப்படைக்கும் படி, அரசுத்தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணையத்தளத்துக்கு இராணுவம் மற்றும் அரசுத் துறைகளின் ஆவணங்களைக் கொடுத்து உதவியதாக, அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லே மேனிங் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மேனிங்கின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து 1,300 மின்னஞ்சல்கள் அரசுத் தரப்பில் கைப்பற்றப்பட்டது.
இதில் 700 மின்னஞ்சல்களின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே மேனிங் கைது செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 12 மின்னஞ்சல்களைத் தவிர ஏனையவற்றை, குற்றம்சாட்டப்பட்டவர் வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி டேனிஷ் லிண்ட் உத்தரவிட்டுள்ளர்.
இந்நிலையில் 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிராட்லே மேனிங் குவாண்டிகோ கப்பற்தளத்தில் வைத்து மிக மோசமாக துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டவிரோதமான இச்செயலைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்பினரும், பிராட்லேவின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மலாலாவை சுட்டது ஏன்? புதிய தகவலை வெளியிட்டனர் தலிபான்கள்

வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah.
பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட பள்ளிச் சிறுமி மலாலாவின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த வாரம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவி மலாலா யூசுப்சாய்(14), தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார். பிர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் மலாலாவின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மலாலா உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கொண்டுவர மருத்துவர்கள் நன்றாக கவனித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மலாலா சுடப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், அவரது தந்தை ஜியாவுதின் யூசுப்சாய் நடத்திவரும் பள்ளிக்கு மாணவிகளின் வருகை குறைந்திருப்பதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் சேர்ந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளதுடன், செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளால் பொதுமக்கள் மத்தியில் பள்ளி குறித்து பயம் ஏற்பட்டுள்ளது. எனவே செய்தியாளர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என முதல்வர் மரியம் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே மலாலாவை சுட்ட தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில், எங்களுக்கு எதிராக பேசியதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பாராட்டி பேசி வந்தார். அதனால் தான் சுட்டு தள்ளினோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் விசாரணையில், மலாலாவை சுட்டது அப்துல்லா என்பவர் தான் என தெரியவந்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையில் புதிதாக 5 நாடுகள் சேர்ப்பு

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012.By.Rajah.
ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கான புதிய நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 5 புதிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ருவாண்டா, அவுஸ்திரேலியா, அர்ஜென்டினா, தென் கொரியா மற்றும் லக்ஸம்பர்க் ஆகிய 5 நாடுகளே நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிக்கும்.
இப்போது நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா, கொலம்பியா, ஜேர்மனி, போர்ச்சுகல் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதை ஒட்டி தேர்தல் நடைபெற்றது.
நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில், ஐ.நா பொது சபையில் மொத்தம் உள்ள 193 உறுப்பினர்களில் 129 வாக்குகள் அல்லது மூன்றில் 2 பங்கு வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களும், 5 நிரந்தர உறுப்பினர்களும் உள்ளனர்.
அஜர்பெய்ஜான், கெளதமாலா, மொராக்கோ, பாகிஸ்தான் மற்றும் டோகோ ஆகிய மற்ற நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிகிறது.

Diet-டை மேற்கொள்ளும் ஆண்களுக்கான சில டிப்ஸ்

வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அனைவருமே டயட்டை மேற்கொள்கின்றனர். மேலும் டயட் மேற்கொண்டால், உடலில் எந்த ஒரு நோயும் எளிதில் வராமல் தடுக்கலாம். அவ்வாறு டயட் மேற்கொள்ளும் போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உணவுகளில் வேறுபாடுகள் இருக்கும்.
எனவே தான் டயட் மேற்கொள்ளும் ஆண்கள் தவறாமல் ஒருசில உணவுகளை தினமும் உடலில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தக்காளி
ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழங்களில் ஒன்று தக்காளி. ஏனெனில் இதில் உள்ள லைக்கோபைன் என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.
ஆகவே இதனை தினமும் உண்ணும் உணவில் சேர்த்தால், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
பிரேசில் நட்ஸ்
நெட்ஸ் என்றால் உடலுக்கு நல்லது என்பது தெரியும். அதிலும் பிரேசில் நட்ஸ் தான் ஆண்களுக்கு சிறந்தது.
ஏனெனில் அதில் செலினியம் எனும் பொருள் அதிகம் உள்ளது. அதனால் ஸ்பெர்ம்களின் அளவு அதிகரிக்கும்.
மேலும் செலினியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, உறவு கொள்ள ஆர்வத்தை தூண்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளும் கூட.
பச்சை காய்கறிகள்
டயட்டில் இருக்கும் ஆண்கள் முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் முளைகட்டிய பயிர்களை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த உணவுக் பொருட்களில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கெமிக்கல் இருக்கிறது. அதிலும் புரோடெஸ்ட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே தினமும் சிறிது இதனை உணவில் சேர்ப்பது நல்லது.
முட்டை
கூந்தல் உதிர்தல் அதிகமாக இருந்தால் கவலைப்படாமல் முட்டையை மட்டும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் போதும்.
ஏனெனில் முட்டையில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி7 சத்துக்கள் அடங்கியுள்ளன.
மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. ஆகவே இரத்த சோகை குறைந்து கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.
மாதுளை
மாதுளையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஆண்கள் தினமும் உணவில் சேர்க்கும் போது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.
நிறைய ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், புரோடெஸ்ட் புற்றுநோய் குறைந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூண்டு
பூண்டின் நன்மைகளுக்கு அளவே இல்லை. ஏனெனில் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதயத்தில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது.
மேலும் இதன் மீது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால், புரோடெஸ்ட் புற்றுநோய் தடைபடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.
சாலமன்
கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதிலும் சாலமன் என்னும் மீனில் அதிகம் உள்ளது.
ஆண்கள் இந்த மீனை உணவில் சேர்த்தால், உடலில் ஏற்படும் நோய்கள் பலவற்றிற்கு ஒரு ஆயில்மெண்ட் போன்றது. மேலும் இதை சாப்பிட்டால், மனஅழுத்தம் குறைந்துவிடும்.
நவதானியங்கள்
நவதானியங்களில் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்து உள்ளன. இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் சிறந்த உணவுப்பொருள்.
ஆண்கள் இதனை உடலில் அதிகம் சேர்த்தால், இதில் உள்ள வைட்டமின் பி9 ஸ்பெர்ம்களை ஆரோக்கியமாக வைக்கும். கூந்தல் உதிர்தலும் நீங்கும்

பேஸ்புக் மூலம் தாய்ப்பாலை விற்கும் பெண்கள்

Thursday, 18 October 2012, By.Rajah.இங்கிலாந்து மற்றும் அமெரி்க்காவில் பல பெண்கள் பேஸ்புக் மூலம், தங்களது தாய்ப்பாலை விற்று காசு பார்த்து வருகின்றனராம்.
பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு ஒன்றை தொடங்கும் பெண்கள்,தங்களுக்கென்று குழுவொன்றை சேர்க்கின்றனர். அதன் பின் தங்களது தாய்ப்பால் விற்பனைக்கு என்று இந்தப் பெண்கள் அறிவிப்பு வெளியிட்டு பணம் பார்க்கின்றனர்.
மேலும் இவர்கள் ஒரு அவுன்ஸ் 2 டொலர் என்ற விலைக்கு விற்கின்றனராம். ஆனால் இதுபோன்று விற்கப்படும் தாய்ப்பாலானது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.