|
அமெரிக்காவின் பொஸ்டன் மரதன் போட்டியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும், ரஷ்யாவின் செச்ன்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நேற்று ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் கைது செய்துள்ளனர். இவர்களில் 30 பேர், தங்கள் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் இங்கு வந்துள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொஸ்டன் சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக