Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

ஜப்பானில் முட்டைகோஸ் சாப்பிட்ட 7 பேர் மரணம்

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,ஜப்பானில் முட்டைகோஸ் தொக்கு சாப்பிட்ட ஏழு பேர் மரணமடைந்துள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் முட்டைகோசால் செய்யப்படும் தொக்கு, ஜப்பானில் மிகவும் பிரபலமாகி இருந்தது. ஜப்பானில் உள்ள முதியவர்கள், இந்த முட்டைகோஸ் தொக்கை விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்நிலையில் ஹொகைடோ மாகாணத்தில், கெட்டுபோன முட்டைகோஸ் தொக்கை சாப்பிட்ட ஏழு பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
போதிய அளவில் பதப்படுத்தாத காரணத்தால், முட்டைகோஸ் தொக்கு கெட்டு விட்டதாக கூறப்படுகிறது. விற்பனை செய்யபடாத முட்டை கோஸ் தொக்குகளை பொலிசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.