Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

சென்னையை பசுமையாக பார்க்க ஆசை: நயன்தாரா

 21-08-2012.
சென்னை உள்ள ரோடுகள் மழைக் காலங்களில் மிகவும் மோசமாக உள்ளது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
நயன்தாராவுக்கு சென்னை ரோடு ஏழு வருட பரிச்சயம். கடந்த 2005ம் ஆண்டில் ஐயா, சந்திரமுகி, கஜினி படங்கள் மூலம் பிரபலமாகி இங்கேயே தங்கினார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் அவருக்கு நிரந்தரமாக ரூம் இருந்ததால் அங்கிருந்தே சென்னையை ஒட்டி நடந்த படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார்.
தெலுங்கில் படங்களில் பரபரப்பான பின்பு ஐதராபாத் செல்ல நேர்ந்ததால் தற்போது சென்னை, ஐதராபாத், கேரளா என சுற்றிக் கொண்டு இருக்கிறார்.
மேலும் சென்னை நகரத்தைப் பற்றித் தெரிவிக்கையில், சென்னையில் நான் நிறைய நேரங்களை செலவிட்டு உள்ளேன். இங்குள்ள பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஷ
ஆனாலும் சில குறைகளும் உள்ளன. சென்னையில் உள்ள சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை.
பொதுமக்கள் நடந்து செல்லவும், வண்டிகளை ஓட்டிச் செல்லவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் ரோடுகள் மிகவும் மோசமாகி விடுகிறது.
ரோடுகளை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்தால் ரோடுகளில் தண்ணீர் நிற்காது.
இந்த குறைகளை தவிர சென்னையை விரும்புவதற்கு நிறைய விடயங்கள் இருக்கிறது.
இனிவரும் ஆண்டுகளில் சென்னையை சுத்தமான, பசுமையான நகரமாக பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்