Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 23 அக்டோபர், 2012

அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் மட்டக்களப்பிற்கு விஜயம்

 
செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012.By.Rajah.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 15ஆம் விடுதியில் செயற்படும் வலது குறைந்தோருக்கான சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து,வைத்தியசாலையின் விடுதிகள் சிலவற்றையும் தூதுவர் பார்வையிட்டார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தனுடன் கலந்துரையாடினார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த புதிய அமெரிக்க தூதுவர், ஒல்லாந்தர் கோட்டையையும் பார்வையிட்டார். மட்டக்களப்பில் அமெரிக்கத் தூதுவர் இன்றும் நாளையும தங்கியிருந்து பிரதிநிதிகள் பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.