Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 18 அக்டோபர், 2012

பாலிவுட்டில் காஜல் அகர்வாலின் புதிய படம்

 Thursday, 18 October 2012, By.Rajah.
கொலிவுட்டில் மாற்றான், துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது பாலிவுட்டில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
மும்பைவாசியான காஜல் அகர்வால், பாலிவுட் பட உலகில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவான 'க்யுன் ஹோ கயா நா' படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.
அதற்கு பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்தார்.
அஜய் தேவ்கன் உடன் இணைந்து இந்தி 'சிங்கம்' படத்தில் காஜல் நடித்தார்.
கொலிவுட்டின் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் ஆகியோருடன் 'மாற்றான்', 'துப்பாக்கி' படங்களில் நடித்த காஜல் சரியான பாலிவுட் வாய்ப்புக்காக காத்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த வருடம் வெளியாகும் 'ஸ்பெஷல் ச்சப்பிஸ்' என்ற பாலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்