Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
புதன், 17 அக்டோபர், 2012
மரண ஊர்வலத்தில் உடைந்த பொலிஸ் மண்டைகள்
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பகுதியில் முஸ்லிம்களின் சவ அடக்கம் செய்யும் இடம் உள்ளது. இந்த இடத்தின் பின்புறமாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து
வந்த ஜெ. பேரவை முன்னாள் வட்டச்செயலாளர் வேலு மரணம் அடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை முஸ்லிம்களின் சவ அடக்கம் செய்யும் இடம் வழியாக கொண்டுவர வேலுவின் உ றவினர்கள் முயற்சித்தனர்.
சட்டப்படி இதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் வேலுவின் உடலை எடுத்துக்கொண்டு பிரச்சனைக்குரிய வழியாக தடையை மீறி ஒரு கும்பல் வேகமாக வந்தது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச்சேர்ந்த ராஜுவ்காந்தி, இளையராஜா ஆகியோர் மீது திடீரென சில விசமிகள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இருவருக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூவலிங்கம் கையிலும் கல் விழுந்து காயம் ஏற்பட்டது. அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் மயங்கி கீழே சாய்ந்தார். பின்னர் மூவரும் ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விடுதலை செல்வம் உட்பட 11 பேர் இச்சம்பவம் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். துணை கமிஷனர்கள் புகழேந்தி,சரவணன்,பவானீஸ்வரி,உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன், ரவிஷேகர் தலைமையில் நூற்றுக்கணக்கான இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனால் அந்தப்பகுதியே இரண்டு மணி நேரமாக போர்க்களம் போல் காட்சியளித்தது.
