Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 21 டிசம்பர், 2012

கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை கலைக்கும் முயற்சி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடை இனம் தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் தற்காலிக பந்தல் ஒன்றினை அமைந்தது

 
 எனினும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அவ் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடை சேதப்படுத்தப்பட்டுள்ளது
பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.

அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தியும் உள்ளனர். அவ்விடத்திற்கு இன்று காலை வருகை தந்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது நிலத்தில் தரைப்பாள் விரித்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக