Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 31 ஜூலை, 2012

இன்றுசுவிஸ் இன் சுதன்ந்திர தினம்இன்றுவிமலுக்கு பட்ட மழிப்பு விழாவும்

.
1.08.2012.
இன்றுசுவிஸ் இன் சுதன்ந்திர தினம் இந்தசுதன்ந்திர நாளில் எல் லோர்க்கும்சகல சிறப்புடன் வாழஉங்களை வாழ்த்துகின்றது நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் நன்றி விமல் நன்றி இந்தசுதன்ந்திர நாளில் இவருக்கு இந்த நன்னாளில் பத்து இணையதள அதிபராகஇருப்பவரும்மற்றும் பத்துக்கும் மேல் பட்டஇணையதலத்திற்கு தலைமை வதித்து இரவு பகலாக உலைத்துஅரும் பாடு பட்ட சிறுப்பிட்டிதந்த எங்கள்குமாரசாமி விமலனுக்கு நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் புதிய வரவு நிலவரை இணையமும் இணைந்து இவருக்குசிந்தனை முத்து என்ற பட்டத்தைமிகவும் சந்தோசமாக என்றும் நிலைத்துஇருக்க ஆண்டவன் அருள்ளுடன் அன்புடன்வாரி வழங்குகின்றோம் நன்றி மிகவும் நன்றி விமல் சிறுப்பிட்டிதந்த எங்கள்குமாரசாமி விமலனுக்கு நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் புதிய வரவு நிலவரை இணையமும் இணைந்து இவருக்குசிந்தனை முத்து என்ற பட்டத்தைமிகவும் சந்தோசமாக என்றும் நிலைத்துஇருக்க ஆண்டவன் அருள்ளுடன் அன்புடன் வரி வழங்குகிறோம் மீன்டும் நன்றி மிகவும் நன்றி விமல் என்றும் ஸ்ரீ ஞான வாயிரவர் துணை       


துப்பாக்கி சூடு: இராணுவ வீரர் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
கனடாவில் உள்ள பிராண்டன் நகரத்துக்கு அருகே மணிடோபாவின் தென்மேற்கில் உள்ள ஷைலோவில் ராணுவத்தளம் உள்ளது. இங்கு கிளாரென்ஸ் ஸ்டில் மேன் என்பவர் இரண்டு முறை கொலைமுயற்சியில் ஈடுபட்டார் என்று வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறி்த்து இராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கப்டன் கிளாரென்ஸ் ஸ்டில்மேன் இரண்டுமுறை கொலைமுயற்சியில் ஈடுபட்டார், நான்குமுறை துப்பாக்கியை கவனமற்ற முறையில் பயன்படுத்தினார்.
மேலும், ஒரு முறை ஆபத்தான நோக்கத்துடன் துப்பாக்கியைப் பயன்படுத்தினார் என்று அவர்மீது வழக்குகள் பதிவாயின.
இது தவிர வேறு விபரங்கள் எதுவும் இராணுவத்தால் தரப்படவில்லை

வடபகுதிக்கான பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்கியது

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இலங்கையின் வட மாகாணத்துக்கு அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்திருந்த பயணத் தடையை, அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சு நீக்கியுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்திற்கு, அவுஸ்திரேலியா தமது பிரஜைகளை பயணிக்க வேண்டாம் என தடை விதித்திருந்தது.
எனினும் இந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமை சீரடைந்த நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுகள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்! யாழ். அரியாலையில் சம்பவம்

 
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
யாழ். அரியாலையின் முள்ளிப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவான நிலையில் பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது இவ் வாள்வெட்டு இடம்பெற்றதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் யாழ். பொலிஸ் நிலைய உப பரிசோதகர் குறிப்பிட்டார்.
இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர் தீவிர தேடுதலில் பொலிஸார் அவர்களைத் தேடி வருவதாகவும் கூறினார்

மட்டு. செங்கலடி பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

மட்டு. செங்கலடி பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தின் கித்துள் காட்டுப் பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 42 வயதுடைய சாமித்தம்பி கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி நெல் உலர்த்தும் தொழில் புரிவதற்காக கித்துள் பிரதேசத்திற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை 3.00 மணியளவில் மீன் பிடிப்பதற்காக தனது சக தொழிலாளியுடன் காட்டு வழியாக செற்ற வேளை யானை துரத்தியுள்ளது.
இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓடியதையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கரடியனாறுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மானிப்பாயில் 15 பவுண் நகையுடன், 150,000 ரூபா பணமும் கொள்ளை

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணம் என்பன இன்று செவ்வாய் அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் - மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தனியார் வைத்தியசாலைக்குப் பின்பக்கமுள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர்களது மகன் சில தினங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து வந்துள்ள நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தகப்பனார் வெளியில் சென்ற சமயம் வீட்டு வாழைத் தோட்டத்துக்குள் மறைந்து நின்ற இருவர் திடீரென வந்து அவரின் கைகளைப் பின்னால் இறுக்கிப் பிடித்தவாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரது மகனின் கடவுச்சீட்டை அச்சுறுத்தி வாங்கியதுடன், சத்தமிட்டால் கடவுச்சீட்டைக் கிழித்து எறிந்து விடுவோம் என மிரட்டி 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையிட்டுச் சென்ற இருவரும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உரையாடியதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை இனங்காண்பதற்கு பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன், இந்த மோப்பநாய்கள் மதவாச்சிப் பகுதியிலிருந்தே கொண்டுவரப்படவுள்ளதால் தற்போது இரண்டு பொலிஸ் காவலாளிகளை பாதுகாப்பிற்காக வீட்டிற்கு முன்னால் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபோது 50 டாங்கிகள் அழிவடைந்தன- சரத் பொன்சேகா

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை 80 டாங்கிகளுடன் தொடங்கிய போதும், போர் முடிவுக்கு வந்தபோது 50 டாங்கிகள் புலிகளால் அழிக்கப்பட்டு 30 டாங்கிகளே இராணுவத்திடம் எஞ்சியிருந்ததாக இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், 200 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு கட்டளை வழங்கியிருந்தேன்.
இது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவானது. அது நியாயமானதே.

நான் போரைத் தொடங்கியபோது, இலங்கை இராணுவத்தில் 80 டாங்கிகள் இருந்தன.

போர் முடிவுக்கு வந்தபோது 30 டாங்கிகளே எஞ்சியிருந்தன.
போரின் போது டாங்கிகளை பழுதுபார்ப்பதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை.
இதனால், போரின் இறுதி நாட்களில், பெரும்பாலும் டாங்கிகள் இன்றியே நான் சண்டை செய்ய வேண்டியிருந்தது.
போர் முடிந்த பின்னரும் நாம் இந்த துருப்புக்களை பாதுகாக்க வேண்டியிருந்தது.
அந்தநிலையில் சேதமடைந்து பழுதுபார்க்காத டாங்கிகளை கழித்து விடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
அதற்காகவே, 200 மில்லியன் டொலருக்கு கவச வாகனங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டேன்.

அது ஒரு இராணுவத் தளபதி என்ற முறையில் எனது கடமை“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எனக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 15 பொலிஸாரின் பாதுகாப்பு திருப்தி தரவில்லை. எனக்கு புலிகளின் அச்சுறுத்தல் உள்ளது.
தனிப்பட்ட நபர் ஒருவரால் அல்லது இருவரால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர்களால் பாதுகாப்பு வழங்கமுடியும். ஆனால் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து என்னைக் காப்பாற்ற 15 பொலிஸாரினால் முடியாது.என்றார் சரத் பொன்சேகா.

இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் சமுதாய மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இலங்கையில் சமுதாய மீறல்கள் மற்றும் மத பாகுபாட்டுச் சம்பவங்கள் கடந்த 2011ம் ஆண்டு பதிவாகியுள்ளதென ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் மத சுதந்திரம தொடர்பில் கடந்த வருடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த வருடம் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது பௌத்தர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இவ்வாறான சில சமூக மீறல் செயற்பாடுகளால் இலங்கையில் ஆங்காங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சமீபத்திய ஆண்டில் நடைபெற்ற தாக்குதல்களைவிட கடந்த வருடம் குறைவான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் அரசியல் யாப்பு, சட்டம், மத சுதந்திரத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் உள்ளன. அரசாங்கம் பொதுவாக மத சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறது. ஆனால் அதற்கு எடுத்துக் காட்டான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மத சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசின் செயற்பாடுகளில் முன்னேற்றம் அல்லது சரிவு காணப்படவில்லை.
மத சுதந்திரம் பிரச்சினைகள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் பற்றி ஐக்கிய அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசாங்கத்திடம் கவலை தெரிவித்ததோடு, தேவாலயங்கள் மற்றும் மத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு அரசாங்க தலைவர்களிடம் வலியுறுத்தியது.
மத சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல சம்பவங்கள் இடம்பெற்றபோது அதற்கு கட்டணம் வெளியிட்ட அரசு, நடைமுறையில் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கும் திட்டத்தில் பிரச்சினை உள்ளதென அமெரிக்காவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
வட பகுதி தமிழ் பிரதேசங்களில் அரச படையினர் புத்தர் சிலைகளை அமைத்து வருவதாகவும் புலிகள் இருந்த பகுதிகளை அரசாங்கம் சிங்களமயமாக்குவதை இதன் மூலம் காண முடிவதாகவும் தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

காந்தி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது _

_
31.07.2012.யாழ்ப்பாணம் அரியாலை புனித பெனடிக் வீதியிலுள்ள காந்தி சன சமூக நிலையத்திலிருந்து காந்திஜியின் சிலை உடைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அரியாலை காந்தி சன சமூக நிலையத்திலிந்த குறித்த காந்தி சிலையானது இனந் தெரியாத சிலரால் சேதமாக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சம்பவத்தின் போது அவர்கள் மது அருந்தியிருந்தாகவும் அத்தோடு அவர்களுடன் மேலும் இருவர் இருந்தாகவும் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

வேன் - சைக்கிள் மோதலில் ஒருவர் பலி: 13 பேர் காயம் _

 _
31.07.2012.சைக்கிள் - வேன் மோதலில் ஒருவர் மரணமடைந்தும் 13 பேர் காயமடைந்துமுள்ளனர்.

திஸ்ஸமஹாராம, காசின்கம என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் சைக்கிளில் பயணம் செய்தவர் மரணித்ததுடன் வேன் மதகு ஒன்றிலும் மின் கம்பம் ஒன்றிலும் மோதி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதால் அதில் பயணித்த 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் இவ்விபத்து குறித்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான நபர் உயிரிழப்பு _

_
31.07.2012.போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வாழைத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்று மாலை நான்கு மணியில் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.

இவ்வாறு சுகவீனமுற்ற சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் வாழைத்தோட்டம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

34 வருடங்களுக்கு முன் இறந்ததாக நம்பிய பெண் பேஸ்புக் மூலம் இணைந்தார்

 
_
31.07.2012.இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சிட். இவரது மனைவி சூசன் ஆர்ட்ரன் (61). இவர்கள் தென் ஆபிரிக்காவில் ஜோகனஸ்பேர்க் நகரில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1978ஆம் ஆண்டு வீதியில் தனியாகச் சென்ற இவர் மீது கார் மோதியது. இதனால் படுகாயமடைந்த பின் மயக்கம் அடைந்தார். உடனே பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே வீடு திரும்பாததால் கணவர் சிட் அவரை பல இடங்களில் தேடினார். இருந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவேஇ அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் கருதினர். அதைத் தொடர்ந்து தனது 4 குழந்தைகளுடன் சிட் இங்கிலாந்து திரும்பி லண்டனில் குடியமர்ந்தார்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூசனுக்கு அம்னீசியா என்ற ஞாபக மறதி நோய் ஏற்பட்டது. இதனால் தான் யார் என்பதையே அவர் மறந்து விட்டார். இதற்காக தென் ஆபிரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் 34 வருடங்களுக்குப் பிறகு அதாவது தனது 61-வது வயதில் குணமடைந்தார். இதையடுத்து தன்னைப் பற்றி பேஷ்புக் சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டார்.

அத்துடன் இளமைக் காலம் மற்றும் தற்போதைய தோற்றத்திலான போட்டோவையும் பிரசுரித்திருந்தார். அதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

34 வருடங்களுக்குப் பிறகு சூசன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தார். இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்ததைப் பார்த்த அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்

சிறைக் கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்

 _
31.07.2012கண்டியிலிருந்து தம்புள்ளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற சிறைக் கைதிகளில் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கைதிகள் பொலன்னறுவ மற்றும் பக்கமூன ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சுவர் ஒன்றின் மீது தாவி தப்பிச் சென்ற இவர்களை கைது செய்ய பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் பகீரதப் பிரயத்தனம் எடுத்துள்ளனர்.

இக் கைதிகளில் ஒருவர் பின்னர் கைது செய்யப்ட்டதாகவும் தெரிய வருகிறது

சுமிடோமா நிறுவனம் தனது செயற்பாடுகளை இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்க விருப்பம்: றிசாத்

 _
31.07.2012.இலங்கையில் மீண்டும் தமது நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க ஜப்பான் சுமிடோமா நிறுவனம் தயாராகி வருகின்றது.

2009ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமது செயற்பாடுகளை நிறைவு செய்து கொண்டு ஜப்பான் சென்ற அந்நிறுவனம்,1968ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் பல் துறைகளில் தமது முதலீடுகளை செய்திருந்தது. மீண்டும் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க வருகைதருவதை தாம் பெருமனதுடன் வரவேற்பதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சுமிடோமா நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்பாளர் மசாஹிரோ புஜிதா அமைச்;சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியபோது இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்தச் சந்திப்பின் போது சுமிடோ நிறுவனத்தின் சிங்கப்பூர் மற்றும் சென்னைக் கிளைகளின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்.

2012ஆம் ஆண்டு 26.8 டொலர் மில்லியன் வருமானமாகக் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த புஜிதா, சுமிடோமா நிறுவனம் 65 நாடுகளில் 5185 ஊழியர்களைக் கொண்டு தமது பணியை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

தொலைத்தொடர்புகள் கோபுரம் அமைப்பு, பாரம் தூக்கி இயந்திரம், கனரக இயந்திரம் போன்ற துறைகளில் பிரபலமான நிறுவனமாக சுமிடோமா நிறுவனம் உள்ளது. தமது நிறுவனத்தின் செயற்பாடுகளை மீள இலங்கையில் ஆரம்பிப்பதற்கு முன்னர் தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றத்தைக் காண்பதற்கு எமது குழுவினருடன் வருகை தந்துள்ளதாகவும் தாம் இங்கிருந்து 2009இல் விடை பெற்றுச் செல்ல முன்னர், இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான நீர் விநியோகம்,தொலைத்தொடர்பு வசதிகள் என்பனவற்றை முன்னெடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

தமது அடுத்த கட்ட செயற்பாடாக விவசாய இரசாயனப் பொருட்கள் உற்பத்தி,உணவு மற்றும் மென்பான உற்பத்தித் துறைகளில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார். அதே வேளை உல்லாசத் துறை, கைத்தொழில் உடட்கட்டமைப்பு வசதிகள், இலங்கையில் இருந்து இறப்பர் ஏற்றுமதிக்கான கவனத்தையும் செலுத்துமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் சுமிடோமா நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்பாளரிடம் எடுத்துரைத்தார்.

2008ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து விடைபெற்றுச் சென்ற ஜப்பானின் பிரபல நிறுவனமான மருபேனி நிறுவனம் மீண்டும் இலங்கையில் தமது பணிகளை ஆரம்பிக்க எற்கனவே பேச்சுக்களை நடத்தியிருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது

மன்னார் நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்

மன்னார் நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் _
31.07.2013.மன்னார் நீதிமன்றம் மீது கடந்த 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 13 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.யூட்சன் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

மன்னார் நீதிமன்ற வீதியில் மன்னார் உப்புக்குளம் கிராம மக்கள் கடந்த 18ஆம் திகதி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அசம்பாவிதத்தின் போது மன்னார் நீதிமன்றத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதன் போது நீதிமன்றத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் சம்பவத் தினமன்றே குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மன்னாரைச் சேர்ந்த 13 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது குறித்த 13 பேரையும் இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் குறித்த 13 பேரும் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை(13-08-2012) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதே சமயம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 35 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் இன்று மன்னார் பொலிஸார் எவரையும் மன்றில் ஆஜர்படுத்தவில்லை.

இன்றைய தினம் மன்னார் நீதிமன்றப் பகுதியில் பொலிஸாரும் அதிரடிப் படையினரும் பாதுகாப்புக் கடமையில் விசேடமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

பொகவந்தலாவையில் நகைகளைத் திருடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது

 _
31.07.2012.பொகவந்தலாவை செல்வகந்தை தோட்டத்திலுள்ள வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை யாருமற்ற நேரத்தில் வீட்டுக் கூரையின் ஊடாக உட்புகுந்து தங்க நகைகளைத் திருடிய நபரொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள பொகவந்தலாவைப் பொலிஸார் அவரை இன்று 31ஆம் திகதி அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட வீட்டைச் சேர்ந்தவர்கள் நோன்புக் காலத்தை முன்னிட்டு தொழுகைக்காக இரவு நேரத்தில் பொகவந்தலாவை பள்ளிவாசலுக்குச் சென்றுள்ளனர். இதனை அவதானித்த நபரொருவரே கூரையின் ஊடாக வீட்டினுள் சென்று சுமார்; ஐந்தரை இலட்சம் பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலாவைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பின்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டாரின் உறவினர் ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்படவே குறிப்பிட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டது.

விசாரணைகளைத் தொடர்ந்து அவரிடமிருந்து, திருடப்பட்ட நகைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். குறிப்பிட்ட சந்தேக நபர் பொகவந்தலாவை பொய்ஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார்.

சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முயன்ற 37 பேர் கைது _

_
31.07.2012.சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 28 தமிழர்களும் 9 சிங்களவர்களுமாக 37 ஆண்கள் கிழக்குக் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் வைத்துக் கைதான இவர்களை கடற்படையினர் திருகோணமலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

படகை செலுத்திச் சென்றவர் ஒரு சிங்களவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்
.

ஈஸ்வர தியாகராஜ் மங்கலம் நாதஸ்வரம்

31.07.2012. பக்த்தர்கள் படை சூழமிகவும் பார்த்து ரசிக்ககூடியநாதஸ்வரஇசை நிகழ்வு அன்பர்கள் நண்பர்கள் பார்த்து மகிழவும் Sheikh Mehboob Subhani and Khaishna-Bi-Mehboob at Svanubhava 2009

பிரிட்டனில் 7 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்

31.07. 2012,
பிரிட்டனில் குழந்தைகள் சிறுவயது முதலே போதைக்கு அடிமையாகும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக பிரிட்டனில் குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே, இதற்கான காரணம் குறித்து அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
சிறுவர்கள் இன்ப உலகில் மிதப்பதற்காக போதை பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழக்கம் 7 வயதிலிருந்தே தொடங்கி விடுகிறது. அப்போது கேன்னபிஸ் எனப்படும் ஒரு வகை போதை செடியை சிகரெட் போன்று வடிவமைத்து அவற்றை புகைக்கின்றனர்.
அதிலிருந்து படிப்படியாக முன்னேறி 9 வயதில் கோகைன், எஸ்டாசி போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் அளவு முன்னேறுகின்றனர். 7 வயதில் தொடங்கும் இந்த பழக்கம் 56 வயது வரை தொடர்கிறது.
கோகைன், எஸ்டசி, கேன்னபிஸ் போன்ற போதைப் பொருட்கள் சமூக விரோதிகளிடமிருந்து பள்ளிகளிலேயே தாராளமாக கிடைக்கிறது. அதனால்தான் மிக இளம் வயதிலேயே குழந்தைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி கடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனவே, சிறு வயதிலேயே குழந்தைகளை பெற்றோர் தீவிரமாக கண்காணித்து போதைப் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

இங்கிலாந்தின் இரும்புப் பெண்ணுக்கு அழகான ஆண்கள் என்றால் கொள்ளை ஆசை

.31.07.2012,
இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டவரான இங்கிலாந்து நாட்டு முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு அழகான ஆண்களை தான் பிடிக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தகவலை தாட்சரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் லார்ட் வாடிங்டன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தாட்சருக்கு அறிவெல்லாம் பிறகு தான். அழகு தான் அவரை ஈர்க்கும். அதிலும் அழகான ஆண்களைக் கண்டார் விட மாட்டார்.
அழகான, இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் அவருக்குப் பிரியம். உடனே அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார். அந்த அமைச்சருக்கு சுய புத்தி உள்ளதா, அறிவு உள்ளதா, செயல் திறன் உள்ளதா என்பதையெல்லாம் பார்க்க மாட்டார்.
அவர்களால் ஒரு பயனும் இல்லாவிட்டாலும் கூட அழகாக இருந்தால் போதும், பதவி தான். அமைச்சர்கள் நியமனம், அமைச்சரவை மாற்றத்தின் போது தாட்சர் பார்க்கும் முதல் தகுதியே, அழகான முகம் இருக்கிறதா என்பது குறித்துத் தான். என்ன தான் திறமையானவராக இருந்தாலும், அழகாக இல்லாவிட்டால் தாட்சருக்குப் பிடிக்காது.
தன்னைச் சுற்றிலும் அழகான ஆண்கள் இருக்க வேண்டும் என்பதில் அவர் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார்.

மொபைல் திருட்டில் தி சன் பத்திரிக்கையின் ஆசிரியர் கைது

 31 யூலை 2012,
பிரித்தானியாவில் “தி சன்” பத்திரிக்கையின் மூத்த பத்திரிகை ஆசிரியரும் வெளிநாட்டுத் தகவல் தொடர்பாளருமான நிக் பார்க்கெர் 51, என்பவர் மொபைல் திருட்டு மற்றும் தகவல் கொள்ளைக் குற்றம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் புலனாய்வுத் துறையினரால் இன்று கைது செய்யப் பட்டுள்ளார். தான் திருடிய கைத் தொலைபேசிகளில் இருந்து தகவல்களைச் சூறையாடி தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியுள்ளார்.
ஃபோன் ஹாக்கிங் எனப்படும் இந்த மொபைல் திருட்டு மற்றும் ஒட்டுக் கேட்டல் செயற்பாடுகளுக்காக சமீபத்தில் ஸ்காட்லாந்து யார்ட் பொலிஸால் ஆப்பரேஷன் 'வீட்டிங்' மூலம் 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 19ம் திகதியில் இதே குற்றத்திற்காக தி சன் பத்திரிகையாளரான 'ரோட்ரி பிலிப்ஸ்' என்பவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

கத்தாருக்கு பயிற்சி விமானங்கள் விற்பனை செய்யும் சுவிஸ்

31.07.2012,
சுவிட்சர்லாந்தில் பிலேட்டுஸ் விமான தயாரிப்பு நிறுவனம், கத்தாருக்கு 24PC-21 பயிற்சி விமானங்களை அனுப்புவதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்துடன் பயிற்ச கருவிகளை அனுப்பவும், அதனை பராமரிக்கவும் சுவிஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சுமார் 600 மில்லியன் சுவிஸ் பிராங்கிற்கும் அதிகமான தொகைக்கு வர்த்தக உடன்பாடு மேற்கொண்டுள்ளது. 2014ம் ஆண்டின் மத்தியப் பகுதி வரை கத்தாரில் புதிதாகத் ஆரம்பிக்கப்பட்டுள்ள விமானப் படை பயிற்சிக் கல்லூரிக்கு, பயிற்சி விமானங்களை பிலேட்டுஸ் நிறுவனம் அனுப்பவுள்ளது.
இதனால் உலகத்தரத்தில் தனது விமானப்படையின் தரத்தையும் உயர்த்த கத்தார் எமிரி விமானப்படை முடிவு செய்துள்ளதாக பிரேட்டுஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கையாக பிளேட்டுஸ், இந்த கத்தார் வியாபாரத்தைக் கருதுகிறது. மே மாதம் இதே நிறுவனம் சவுதி அரேபியாவுக்கு 55, Pc – 21 ரக விமானங்களை அனுப்பியது. இந்தியாவுக்கு 75, PC – 7 ரக விமானங்களை அனுப்பியது.
பிளேட்டுஸ் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளுக்கு கத்தார், சௌதி அரேபியா மற்றும் இந்தியாவுக்கு பயிற்சி விமானங்களை விற்பதால் 400 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
பேஸிஃபிஸ்ட் என்ற சமாதான அமைப்பு தனக்கென்று ராணுவம் வைத்துக் கொள்ளாத சுவிட்சர்லாந்து, மனித உரிமை மீறலில் குற்றம் சாட்டப்பட்ட கத்தாருக்கு போர் விமானங்களை விற்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்த்தார் தனது குடிமக்களுக்கு எதிராகக் கூட இந்தப் போர் விமானங்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பயிற்சி விமானங்களை சட்டத்தின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வது மாபெரும் தவறாகும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
.31.07. 2012,
சுவிட்சர்லாந்தில் பிலேட்டுஸ் விமான தயாரிப்பு நிறுவனம், கத்தாருக்கு 24PC-21 பயிற்சி விமானங்களை அனுப்புவதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்துடன் பயிற்ச கருவிகளை அனுப்பவும், அதனை பராமரிக்கவும் சுவிஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சுமார் 600 மில்லியன் சுவிஸ் பிராங்கிற்கும் அதிகமான தொகைக்கு வர்த்தக உடன்பாடு மேற்கொண்டுள்ளது. 2014ம் ஆண்டின் மத்தியப் பகுதி வரை கத்தாரில் புதிதாகத் ஆரம்பிக்கப்பட்டுள்ள விமானப் படை பயிற்சிக் கல்லூரிக்கு, பயிற்சி விமானங்களை பிலேட்டுஸ் நிறுவனம் அனுப்பவுள்ளது.
இதனால் உலகத்தரத்தில் தனது விமானப்படையின் தரத்தையும் உயர்த்த கத்தார் எமிரி விமானப்படை முடிவு செய்துள்ளதாக பிரேட்டுஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கையாக பிளேட்டுஸ், இந்த கத்தார் வியாபாரத்தைக் கருதுகிறது. மே மாதம் இதே நிறுவனம் சவுதி அரேபியாவுக்கு 55, Pc – 21 ரக விமானங்களை அனுப்பியது. இந்தியாவுக்கு 75, PC – 7 ரக விமானங்களை அனுப்பியது.
பிளேட்டுஸ் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளுக்கு கத்தார், சௌதி அரேபியா மற்றும் இந்தியாவுக்கு பயிற்சி விமானங்களை விற்பதால் 400 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
பேஸிஃபிஸ்ட் என்ற சமாதான அமைப்பு தனக்கென்று ராணுவம் வைத்துக் கொள்ளாத சுவிட்சர்லாந்து, மனித உரிமை மீறலில் குற்றம் சாட்டப்பட்ட கத்தாருக்கு போர் விமானங்களை விற்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்த்தார் தனது குடிமக்களுக்கு எதிராகக் கூட இந்தப் போர் விமானங்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பயிற்சி விமானங்களை சட்டத்தின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வது மாபெரும் தவறாகும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

FIFA கால்பந்தாட்ட ஊழல் விசாரணையில் தடுமாற்றம்

31.07 2012,
FIFA என்ற கால்பந்தாட்டக்கழகத்தில் நடந்த ஊழலைக் கண்டறிய இரண்டு சட்ட நிபுணர்களை நியமித்த பின்பும் அந்த ஊழல் விசாரணை தோல்வியுற்றதாகவே சிலர் சந்தேகப்படுகின்றனர்.
கடந்த வருடங்களில் நடந்த FIFA கால்பந்தாட்டத்தை தொலைக்காட்சிகளின் மூலம் சந்தை படுத்துவதற்காக அதன் நிறுவனர் JOAO HAVELANGE மற்றும் பிரேசில் கால்பந்தாட்ட தலைவர் RICARDO TEIXEIRA ஆகிய இருவரும் ISL என்ற மார்கெட்டிங் நிறுவனத்திடமிருந்து முறைகேடாக மில்லியன் சுவிஸ் ப்ரான்குகளை பெற்றனர்.
இது தொடர்பான ஊழல் வழக்கு தற்போது சுவிஸ் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதற்கான விசாரணையை மேற்கொள்ள அமெரிக்கா சட்டத்தரனி மைக்கேல் கார்ஷியாவும் ஜேர்மனி நீதிபதி ஜோவாக்கிம் எக்கெரட்டும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இப்போது நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான கார்ஷியா, கால்பந்தாட்டக் கழகத்தில் வெகு நாட்களாக ஊறிப்போயுள்ள ஊழல் குற்றங்களைக் கண்டறிந்து முறையாக விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
FIFAவின் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுவிஸ் நாட்டின் ஊழலெதிர்ப்பு நிபுணர் மார்க் பீய்த்தின் தலைமையிலான ஒரு குழு மேற்கூறிய இருவரையும் நியமித்துள்ளது.
இந்த மார்க் பீய்த், Tages Aziger என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், கடந்த 17ம் திகதி முதல் இவ்விசாரணை நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல நடவடிக்கைகள் நடைபெற வேண்டியுள்ளது என்றார்.
இவரது கருத்துப்படி FIFA- 2013 கூட்டத்திற்கு முன்பு எந்த உருப்படியான முடிவுகளும் வெளிவராது என எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் கட்சியின் சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரோலாண்ட் பூக்கெல், தொடர்ந்து FIFAவின் முறைகேடுகளை விமர்சித்து வருகிறார்.
இவர் Swiss info.chக்கு அளித்த பேட்டியில், இந்த வருடத்திற்குள் ஃபிஃபா தன்னை ஊழலிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் அல்லது பல மில்லியன் டொலர் புழங்கும் கால்பந்தாட்டத் தொழிலுக்கு இன்னும் விளையாட்டுக்கழகம் என்ற தகுதி இருக்கின்றதா என்று நாங்கள் கேட்கும் சூழ்நிலை உருவாகும் என்றார். மேலும் வரிச்சலுகை பெறும் தகுதி உண்டா என்ற கேள்வியும் எழும் என்றார்.

சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார் வங்கி சீனாவின் (BOC) யுடன் இணைந்தது

.31.07. 2012,
சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார்(Julius Bar) என்கிற தனியார் வங்கியும் சீனாவின் மிகப்பெரிய வங்கியான (BOC) வங்கியும் இருவரும் இணைந்து செயல்படுவதற்கான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வங்கியின் வாடிக்கையாளர்கள், சந்தையிடுதல் மற்றும் முன்னேற்றத்திற்கான அனைத்து திட்டங்களிலும் இரு வங்கிகளும் இனி வரும் காலங்களில் இணைந்து செயல்பட உள்ளன.
சீனாவின் (BOC) வங்கி அந்நாட்டின் மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த நான்கு வங்கிகளில் ஒன்றாகும். சீனாவின் சுற்றியுள்ள நகரம் மற்றும் அதனைத் தாண்டிய எல்லைகளிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.
இந்த இரண்டு கூட்டாண்மை நிறுவனங்களும் இனி வரும் காலங்களில் உற்பத்தி பகிர்வு, பங்குச்சந்தை மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் இணைந்து கையெழுத்திடும்

வங்கித் தகவல்களை திருடியவருக்கு அழைப்பு: சுவிஸ் அரசாங்கம்

.31.07. 2012,
சுவிட்சர்லாந்தில் உள்ள HSBC வங்கியின் 2400 வாடிக்கையாளரின் ரொக்க இருப்பு குறித்த தகவல்களை திருட்டுத்தனமாக பிரிட்டிஷ்காரருக்கு விற்ற வழக்கில் ஃபால்சியானி என்பவரை ஸ்பெயின் அரசு கைது செய்துள்ளது. இவரிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெற்ற பிரிட்டிஷ்காரர் அதனை பிரெஞ்சு வரி அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார். இவர் இத்தாலி மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவர் மூன்று வாரங்களுக்கு முன்பு ஸ்பெயினில் கைதானார்.
சுவிஸ் அதிகாரிகள் யூலை 5ம் நாள் மேட்ரிட் நீதிமன்றத்திலிருந்து ஃபால்சியானியை சுவிட்சர்லாந்தின் விசாரணைக்கு அனுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இன்னும் நீதிபதிகள் இது குறித்து முடிவு ஏதும் தெரியவிக்கவில்லை. மேலும் 40 நாட்களில் அமைச்சரவை முடிவெடுக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.
சுவிட்சர்லாந்தின் HSBC வங்கியில் சிறப்புக் கணனியாளராக இருந்த ஃபால்சியானி ஸ்பெயினில் கைதாகியிருப்பதை நேற்று பிரெஞ்சு ஊடகங்கள் உறுதி செய்தன. இத்தகவலை மத்திய நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஃபால்சியானா, சுவிஸ் நாட்டு வங்கி ரகசியச் சட்டங்களுக்குப் புறம்பாக வாடிக்கையாளர் பற்றிய தகவல்களைத் திருடிக் கொடுத்துவிட்டு பிரான்சுக்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்டார். அவரைப் பிடிக்க 2010 ஒகஸ்ட்டில் சர்வதேச அழைப்பாணை அனுப்பப்பட்டது.
அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை இருந்ததாலும், பிரான்ஸ் அரசு தனது குடிமக்களை வழக்குத் தீர்க்க நாடுவிட்டு நாடு அனுப்பும் பழக்கமில்லை என்பதாலும் அந்த அழைப்பாணை அலட்சியப் படுத்தப்பட்டது.
இப்போது ஸ்பெயினுக்கு வந்தபோது இவர் கைதாகியிருப்பதால் ஸ்பெயின் அரசு சுவிட்சர்லாந்துக்கு இவரை அனுப்பிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிஸ் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியில் படங்கள் அறிமுகம்

.31.07. 2012,
சுவிட்சர்லாந்தில் பாலியல்கல்வி நடத்துவோர் மாணவர்களுக்கு பாலியலறிவைப் புகட்ட தகுந்த படங்களைக் காட்டலாம் என்று ஆசிரியர்களை பிரபல வழக்கறிஞர் மார்க்கஸ் தியூனெர்ட் வலியுறுத்தி வந்தார். உளவியலறிஞரும், சமூகவியலாளருமான மார்க்கஸ் தியூனெர்ட் சமீபத்தில் பதவி விலகியபோது ஆண்கள் மற்றும் தேசிய அமைப்பின் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து விடுபட இயலாது என்றார். அந்த அமைப்பின் மூலமாக அவர், விடுமுறை மற்றும் சில சமத்துவப் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறார்.
இவர் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்கள் வகுப்பறையில் பாலியல் படங்களைக் காட்டுவதால் மாணவர்கள் அப்படங்களைக் கையாளும் முறையைக் கற்றுக் கொள்வர் என்றார்.
“பதினாறு வயதுக்குப் குறைந்தவர்களிடம் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபாசப் படங்களையும், பொருட்களையும் பெற்றோரும் பயிற்சிபெற்ற நிபுணரும் காண்பிப்பது சட்டப்படி குற்றமானது” என்று சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று தியூனெர்ட் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
இன்றைக்கு பெரும்பாலான சிறுவர்கள் தொலைபேசி மற்றும் இணையதளம் மூலமாக ஆபாசப்படங்களைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் வகுப்பில் சில நிமிடங்கள் மென்மையான பாலியல் படங்களை மாணவர்களுக்கு காண்பிக்கலாம் என்றார் தீயூனெர்ட்.
இவர் Manner.ch என்ற ஆண்களுக்கான அமைப்பின் தலைவராக இருக்கிறார். மேலும் ஆடவர் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். சுவிட்சர்லாந்தில் பாலியல்கல்வியின் அளவையும், பாட வரையறையையும் தற்போது மாநில அரசுகள் கவனித்து வருகன்றன.

ஒற்றுமை உணர்வை உணர்த்திய சுவிஸ் போராட்டம்

.31.07. 2012,
சுவிட்சர்லாந்தில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் குறித்து சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், மக்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை விட பொதுவான சமூகக் காரணத்துக்காகவே போராட்டங்களை நடத்துவதாகத் தெரிவித்தது. இந்த ஆய்வின் முடிவுகளை இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இம்முடிவுகளில் சுவிஸ் போராட்டங்களில் வயதானவர்களும் நன்கு படித்தவர்களும் சுவிஸ் அரசியல் தலைமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை பெல்ஜியம், பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினிலும் இந்த ஆய்வை நிகழ்த்தியது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் போராட்டக்காரர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
போராட்டக்காரர்களின் நோக்கத்தையும் அவர்களின் சமூகப் பின்புலத்தையும் அறிய விரும்பி, போராட்டம் நடைபெறும் வேளையில் இது குறித்து விசாரிப்பது சிறப்பானதாக இருக்கும் என்பதால் போராட்டக்களத்திலேயே ஆய்வை நடத்தியதாக ஜெனீவா பல்கலைக்கழகத்தின் மார்கோ கியூக்னி கூறினார்.
இந்தப் போராட்டங்களில் 40 – 64 வயதுள்ளவர்களும் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களும் கலந்து கொண்டனர். கல்வியும் அரசியல் சிந்தனையும் இணைந்து செல்வதை இப்பங்கேற்பு உணர்த்தியது. பங்கேற்பாளரில் 4 சதவீதத்துக்கும் குறைவானவர்களே கல்வியறிவில் குறைந்தவராக இருந்தனர்.

ஜேர்மன் தீர்ப்பால் சுவிஸ்ஸில் விவாதம்

.31.07. 2012,
ஜேர்மனியில் கோலோன் மாவட்ட நீதிமன்றம், சமயச்சடங்கான நுனித்தோல் அகற்றுதலை மருத்துவமனையில் செய்தால் அதற்குக் குற்றவியல் சட்டப்படி தண்டனை வழங்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனால் ஜுரிச் மற்றும் செயிண்ட் கேலன் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த அறுவையை இனி எவருக்கும் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
ஜுரிச் மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் நாங்கள் ஒரு மாதத்துக்கு இரண்டு, மூன்று அறுவை மட்டுமே நடத்தினோம். அதுவும் சமயக் காரணங்களுக்காக மட்டுமே செய்தோம் என்று கூறினார். ஆனால் சில வேளைகளில் தாயார் விருப்பம் தெரிவிக்க தந்தை மறுப்பு தெரிவிப்பது உண்டு என்றார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சமயவாதிகளுக்கும், யூதர்களுக்கும் நுனித்தோல் அகற்றுதல் முஸ்லீம்களுக்கும் (சுன்னத்) இந்த அறுவை ஒரு கட்டாய சமயச் சடங்காகும். ஆனால் மருத்துவமனைகள் இவ் அறுவையைச் செய்ய மறுத்தால் அது மக்களின் சமய சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்ற கருத்து காணப்படுகிறது.
ஃபிரிபோக் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் சட்டப் பேராசிரியரான மார்செல் நிக்லி, ஜேர்மனியில் வெளிவந்த தீர்ப்புக்கு சுவிட்சர்லாந்தில் விவாதம் தேவையில்லை என்றார். இவ்விரு நாடுகளின் சட்டங்களும் ஒருமித்த கருத்துடையனவாக இருந்தாலும் ஒருவரின் சுகாதார மேம்பாட்டுக்காக நடத்தப்படும் அறுவையை, காயம் என்று கருத இயலாது என்றார்.
ஆனால் ஜுரிச் பல்கலைக்கழகத்தின் குற்றவியலறிஞரான பேரா. மார்ட்டின் கில்லியாஸ் “வெகுகாலமாக இந்தப்பிரச்னை குறித்துப் பலரும் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் ஜேர்மனி நீதிமன்றத்தின் தீர்ப்பு இதனை இன்னும் தூண்டிவிட்டுள்ளது.
மருத்துவமனைகள் இந்த அறுவையை செய்வதில்லை என்று எடுத்திருக்கும் முடிவு மிகமிகச் சரியானதே” என்றார். “குற்றவியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் பார்த்தால் மருத்துவமனைகள் இந்த அறுவையைச் செய்ய விரும்புகின்றனரா என்பதை அறியவேண்டும்.
நம்முடைய மருத்துவ தர்மத்திற்கு எதிராக இந்த அறுவை இருக்கின்றது என்பது தான் நமது மருத்துவமனைகளின் பதிலாக இருக்கும் எனது நான் நம்புகிறேன்” என கில்லியாஸ் தெரிவித்துள்ளார்.

கடுமையான சட்டங்களை தொடர்ந்து சுவிஸ்சில் குறைந்து வரும் குடியுரிமை விண்ணப்பங்கள்

 31 07.2012,
சுவிஸ்சின் குடியுரிமை வேண்டுவோருக்காக விதிக்கப்பட்ட கடுமையான சட்டங்களை தொடர்ந்து இந்த மூன்றாண்டுகளில் சில குடியுரிமை விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மண்டலங்களில் சட்டதிட்டங்கள் மிகவும் நெருக்கமான முறையில் பின்பற்றப்படுவதாக பெடரல் குடியுரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 26,554 ஆக இருந்த குடியுரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 2011ல் 26,100 ஆக குறைந்துள்ளது. கடைபிடிக்கப்பட்ட சில நெறிமுறைகளை தொடர்ந்து விண்ணப்பத் தாரர்களின் எண்ணிக்கை தானாகவே குறைந்துள்ளது.
பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை அலுவலகங்களில், கடைபிடிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தகுதியான கட்டாய மொழி படிப்பு, ஆகியவை விண்ணப்பங்கள் குறைவதற்கு காரணமாக இருந்ததாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2004ல் 32000மாகவும், 2008ல் 34,965மாகவும் அதிகரித்து வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை தற்போது நடப்பு ஆண்டுகளில் குறையத் தொடங்கியுள்ளன.

வர்த்தகம் பாதித்தாலும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்

  31 யூலை 2012,
சுவிட்சர்லாந்தில் வீடு, கடை, கல்லூரி போன்ற கட்டிடங்களுக்குள் புகை பிடிப்பதைத் தவிர்க்க தேசிய அளவில் தடையைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் 23ம் நாள் பொதுவாக்கெடுப்பு நடக்கின்றது. நான்காண்டுகளுக்கு முன்பிருந்தே நாடாளுமன்றம் புகை பிடிக்காதவர்களும், புகைபிடிப்பவரால் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இருப்பினும் இப்போது நாடு முழுக்க ஒரே நடைமுறை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுவிஸ் நுரையீரல் நலச் சங்கம் இம்முயற்சியை எடுத்துள்ளது. இதற்கு சுகாதார அமைப்பு, நுகர்வோர் சங்கம், தொழிற்சங்கம், மைய இடதுசாரிக் கட்சிகள் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இப்போது உணவகங்களிலும், மதுபானக்கூடங்களிலும் தனியாக புகைபிடிப்போருக்கென்று தனியறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மைய, வலதுசாரிக் கட்சிகள் உணவகத் தொழிலதிபர்களுடன் சேர்ந்து, மாநில அரசுகளுக்கு இதுபோன்ற விடயங்களை முடிவு செய்யும் அதிகாரம் இருக்கும் போது மத்திய அரசு இதில் தலையிட வேண்டியதன் அவசியம் குறித்து விமர்சிக்கின்றன.
நுரையீரல் நல அமைப்பின் தலைவரான ஆட்டோ பில்லெர், நாங்கள் புகைபிடிப்பவரைக் குற்றம் சொல்லவில்லை. அவர்களின் புகை மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கக்கூடாது என்பதையே வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
இப்போது பணியிடங்களிலும் பலர் கூடும் திரையரங்கு, அங்காடி போன்ற இடங்களிலும், சாலை, தெரு போன்ற பொதுவிடத்திலும் புகை பிடிக்க அனுமதியில்லை. மதுபானக்கூடங்கள் சிலவற்றில் புகை பிடிப்பதற்கென்று தனிக்கூடங்கள் உள்ளன.
26 மாநிலங்களில் பதினைந்து மாநிலத்தில் இந்தத் தடை நடைமுறையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் சட்டம் புகைபிடிப்பவர்களிடம் சற்று தாராளமாக நடந்து கொள்கிறது

அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் திருப்பியனுப்ப பட்டமை இனப் பாகுபாடே காரணம்: “த அவுஸ்திரேலியன்”

செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னரே அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் ஒருவர் திரும்பியனுப்பப்பட்டதாக “த அவுஸ்திரேலியன்” நாளிதழ் கூறுகிறது.
இலங்கை கடற்படை தளபதிக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.
அதேவேளை, அவுஸ்திரேலியா, தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவர்கள் என வகைப்படுத்தி நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கையின் கடற்படைத் தளபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதனாலேயே, தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அதிகளவில் செல்வதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையிலேயே கடந்த வாரம் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட்டதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர, அவுஸ்திரேலியாவிற்கு செல்ல எத்தனிக்கும் அதிகளவான தமிழர்களே இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சம்பவங்களுக்கு இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

லண்டனில் 9வது நாளாக நடைபெற்றுக்​கொண்டிருக்​கும் சிவந்தனின் உண்ணாவிரதப் போராட்டம்

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
லண்டனில் ஒலிம்பிக் மைதானத்தின் முன் சிவந்தன் தனது கோரிக்கை நிறைவேறும் வரை உறுதி தளராமல் ஒன்பதாவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தை தொடர்கின்றார்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல வேற்றின மக்களும் சிவந்தனின் போரட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவுகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனு பிரணாப் முகர்ஜியிடம்..!

 
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றிருக்கும் பிரணாப் முகர்ஜியிடம்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதித்துள்ள பேரறிவாளன் முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனு செல்லுமென இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மரண தண்டனையினை இம்மூவரும் எதிர்கொண்டுள்ளனர்.
இம்மூவரின் மரதண்டனைக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர் தேசங்களிலும் ஒலித்து வருகின்றது.
இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான புதிய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் மேசைக்கு குறித்த மூவரின் கருணை மனு செல்லுமென இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஆளும் இந்திய அரசாங்கத்தின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு எதிரான தமது கட்சியின் வலியுறுத்தல் தொடர்ந்து இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாடு குறித்து நான் ஏற்கனவே கதைத்துள்ளேன். பொதுவாக நான் மரணதண்டனைக்கு எதிரானவன் பேரறிவாளன் மற்றும் ஏனையோரின் மரண தண்டனை விவகாரம் குறித்து எனது கோரிக்கையை எமது கட்சி ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. அந்தக் கோரிக்கை தொடர்ந்தும் இருக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

உதயன் ஆசிரியர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நியமனம்

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
உதயன் ஆசிரியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணை செய்வதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கடிதம் இன்று தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதை நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
நீதி நலன் கருதி வேறு ஒரு நீதிபதி முன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, நீதி சேவை ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவெளை, யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்திற்கு நிதி உதவி செய்து வரும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு பிரதிநிதி, நேற்று முன்தினம் இரவு யாழ். குடாவில் உள்ள ஊடகங்களின் முதன்மையானவர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார்.
அவ் இரவு விருந்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் டான் தொலைக்காட்சியின் சார்பில் கலந்துக்கொண்ட மூத்த ஊடகவியலாளர் வேல்தஞ்சனுக்கும் உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட பிரேமானந்திற்கும் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
மகிந்த ராஜபக்சவிற்கும் கோத்தபாயவுக்கும் டக்ளசுக்கும் துதிபாடுவதாக, உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்து கொண்ட பிரேமானந், டான் தொலைகாட்சி சார்பில் கலந்தக்கொண்ட வேல்தஞ்சனிடம் கூறிய போது, இறந்து போன பிரபாகரனின் ஆவிக்கு துதிபாடுவதை விட உயிரோடு இருப்பவர்களின் அபிவிருத்தி வேலைகளுக்கு துதி பாடலாமென வேல்தஞ்சன் கூற வாயத்தர்க்கம் சூடுபிடித்திருக்கின்றது.
இதனால் உணர்ச்சிவசப்ட்ட பிரேமானந், சபைகளில் பாவிக்க தகாத தூசன வார்த்தைகளால் பேசியதுடன் வேல்தஞ்சனை தாக்க முனைந்த போது குறித்த வெளிநாட்டு பிரதிநிதி இருவரையும் சமரசப்படுத்தியதாக தெரியவருகின்றது.
சபையில் பாவிக்க தகாத வார்த்தைகளை உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட பிரேமானந் பாவித்ததையடுத்து, ஏனைய ஊடகவியலாளர்கள் முகத்தை சுழித்துக்கொண்டு வெளிறேயிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று டான் தொலைக்காட்சியல் பத்திரிகைகள் பார்வை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வேல்தஞ்சன் ஏறத்தாள 20 நிமிடங்கள் இது தொடர்பில் தனது பக்க நியாயத்தை நேற்று கொட்டித் தீர்த்துள்ளார்.
மக்கள் நம்பும் ஊடகங்களில் வேலை செய்யும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மூத்த ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சந்தைகளிலும் தெருக்களிலும் பாவிக்கின்ற வசனங்களை பொறுப்பு வாய்ந்த ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்கள் பாவிப்பதானது ஊடகவியலாளர்களை வெட்கமடையச் செய்திருக்கின்றது

யாழ்ப்பாணத்தில் காந்தி சிலை சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்

  செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
யாழ்ப்பாணத்தில் அகிம்சாவாதி மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு த ஹிந்து பத்திரிகை கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மட்டக்களப்பு நகரில் இருந்த மஹாத்மா காந்தி மற்றம் விவேகாநந்தரின் சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு இந்த சிலையை சிலர் உடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்த சிலையை உடனடியாக சீர்த்திருத்துமாறு, இந்திய உயர்ஸ்தானிகர், வெளியுறவுகள் செயலாளரிடம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.