Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்!!!

       
 
Wednesday24October2012 .By.Rajah.உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மைஇல்லைஎன்றுபயப்படுகிறார்கள் அதனைப்பற்றிஒருவிரிவானஅலசல். பெரும்பான்மையானஆண்கள்தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

சூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் !புதிய ஆய்வு!


     
Wednesday24October2012.By.Rajah.வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை.
சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.
வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.

ஈழத்து மக்களையும் மீனவர்களையும் சின்மயி அவமானபடுத்தினாரா???


Wednesday.24.October 2012.By.Rajah.டுவிட்டரில் தன்னைப்பற்றி அவதூறாக எழுதுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கடந்த தினங்களுக்கு முன்பு பாடகி சின்மயி புகார் கொடுத்திருந்தார்.
சின்மயி புகாரின் பேரில் சென்னை மாநகர காவல்துறையின் கணனி குற்றப் பிரிவினர் சரவணகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்களைத் தொந்தரவு செய்வது தொடர்பான சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழும் சின்மயிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்குக்கள் பதிவாயிருக்கின்றன.
இந்நிலையில் நிஃப்ட் எனப்படும் சென்னை நாகரிக ஆடைகளுக்கான கல்லூரிப் பேராசிரியர் சரவணகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சின்மயி செய்தது என்ன?
சினிமா பின்னணி பாடகி சின்மயி டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இவர்கள் அவதூறாக எழுதியுள்ளனர்.
நாங்கள் மீன்களை துன்புறுத்துவதில்லை, வெட்டி கொல்வதுமில்லை என முத்து உதிர்த்திருக்கிறார் சின்மயி.
இது மீன் உண்பவர்களை மட்டுமல்ல, மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டுள்ள மீனவர்களையும் அவமதிப்பதாகும் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதுமட்டுமின்றி மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது? என்றும் சின்மயி கூறியிருந்தாராம்.
ஈழத்து மக்களை, மீனவர்களை அவமானப்படுத்தியதோடு, மீனை உணவாகத் தந்து வறியோரின் பசிபோக்கிய இயேசு பிரானைய குற்றம் சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்.
இவ்வளவு நாளாக அடக்கி வாசிக்கப்பட்ட இந்த ஜாதியினர் எப்பொழுது எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கிடையே இணையதளங்கள் வாயிலாக பாலியல் தொந்திரவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவர் கைதாவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

உயரத்தில் என்னோட சாதனைப் படைக்க யாராவது இருக்கீங்களா!!

         
Wednesday 24 October 2012 By.Rajah.
போலந்து நாட்டின்,ஜரோஷின் எனும் பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஆல்தோ ஷனி எனும் நாய்க்குட்டி உலகிலேயே உயரம் குறைந்த நாய்க்குட்டி என்ற சாதனையை தன் வசப்படுத்தியுள்ளது.
இதன் உயரம் 2.36 அங்குலமாகக் காணப்படுவதுடன் நியைானது 100 கிராம்களாக உள்ளது. இதன்படி இந்த நாய்க் குட்டியானது தனது எஜமானியின் கைப்பேசியைக் காட்டிலும் உயரம், எடை என்பனவற்றில் குறைந்ததாக காணப்படுகின்றது.







கொழும்பின் பிரபல கல்லூரி மாணவர் குழுக்களுக்கு இடையில்

         
Tuesday 23 October 2012  By.Rajah.
கொழும்பின் பிரபல பாடசாலைகளான ரோயல் மற்றும் தேஸ்டன் கல்லூரி மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு-7 ரீட் வீதி பகுதியிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் நிலைமை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வர முயற்சித்துள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம் மாணவக்குழு மோதலால் சுற்றுவட்டாரத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் கருவாத்தோட்டம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் இம்மோதலில் ஆறு மாணவர்களும் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.





1300 திரையரங்குகளில் வெளிவரும் SKYFALL

Tuesday, 23 October 2012,.By.Rajah.ஹாலிவுட்டில் இதுவரை 22 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ள நிலையில் இப்போது 23வது படமாக SKYFALL வெளிவரவுள்ளது.
படத்தின் கதாநாயகனாக டேனியல் கிரேக் நடித்திருக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நாயகன் அளவுக்கு வில்லன் பாத்திரமும் பேசப்படும்படி சக்திமிக்கதாக இருக்கும்.
வில்லனாக நடித்துள்ளவர் ஜேவியர் பேர்டம். சிறுவயது முதலே நடிப்பு அனுபவம் கொண்டவர். படத்துக்காக தன் தலைமுடியை வெள்ளையாக மாற்றிக் கொண்டுள்ளார்.
ஜேம்ஸ் பாண்டிற்கு காதலியாக வலம் வருபவர் நயோமி, பெர்னிஸ் மர்லோஹி இருவருமே பெரிய நட்சத்திரங்கள் ஆவார்.
மேலும் ஹெலன் மெக்ரோரி, ஜீடி டென்ச் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் சாம் மெண்டஸ். இவர் இயக்கியுள்ள எழாவது படம் தான் SKYFALL.
இவர் அகாடாமி விருது உள்பட பல விருதுகள் பெற்ற படைப்பாளி. ஜேம்ஸ்பாண்டின் முதல் பதினாறு படங்கள் ஐந்து இயக்குநர்களால் இயக்கப்பட்டன.
கடந்த நவம்பர் 7, 2011ல் படப்பிடிப்பு தொடங்கியது. லண்டனில் ஆரம்பித்து கிரீன் வீச் ஓல்டு ராயல் நேவல் கல்லூரி, பாலங்கள் மருத்துவமனை, ஸ்டேடியம், தேசிய கேலரி என்று எடுக்கப்பட்டன.
துருக்கியின் இஸ்தான்புல்லில் பல இடங்களில் எடுக்கப்பட்டன. அங்கு மட்டும் மூன்று மாதங்கள் தங்கியிருந்தது படக்குழு.
சீனாவில் ஷாங்காய் நகரில் ஏர்போர்ட் போன்ற பல இடங்கள், ஜப்பானில் நாகசாகி கடற்கரை பகுதி, ஹாஷிமா தீவு, மனிதர் வசிக்காத சில பகுதிகளிலும் செட் போட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.
மொத்தம் 133 நாட்கள் படக்குழு காட்சிகளை பதிவு செய்துள்ளன. துருக்கியில் ஏராளமான இளைகர்களுக்குப் பயிற்சியளித்து ஒத்திகை பார்த்து காட்சிகளில் இடம்பெற செய்துள்ளார்கள்.
துருக்கியில் கமெரா காணாத பல பகுதிகளை படம்பிடித்து வந்துள்ளனர். அங்கு ஸ்பைஸ் பஜார், க்ராண்ட் பஜார் போன்ற வணிகவளாகங்கள் மூடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
அதற்கான வியாபார இழப்பை தினமும் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கியே படப்பிடிப்பு நடந்துள்ளது. எங்கேல்லாம் சேதங்கள் ஏற்பட்டதோ அவை புதிதாக அமைத்து தரப்பட்டது.
இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படமான SKYFALL உலக நாடுகளைப் போல இந்தியாவிலும் நவம்பர் 1ல் வெளியாகிறது.
உலக ரசிகர்களின் 150 மில்லியன் டொலர் கனவு விரைவில் உங்கள் திரையரங்குகளில் காட்சியாக விரிய இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளிவருகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகிறது.
இந்தியாவில் மட்டும் 1300 திரையரங்குகளில் வெளி வருகிறது SKYFALL

அமாரவதி பட தயாரிப்பாளர்

 Tuesday, 23 October 2012, By.Rajah.சோழாபொன்னுரங்கம் மகள் திருமணம்
கொலிவுட்டில் நடிகர் அஜித்குமார் அறிமுகமான அமராவதி படத்தை தயாரித்தவர் சோழாபொன்னுரங்கம்.
இவர் சாதிசனம், தலைவாசல், காலாட்படை, ஒரு கல்லூரியின் கதை போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
இவரது மகள் மோகன சங்கவியும் லாடம், யாதுமாகி போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
மோகன சங்கவிக்கும், முரளி என்பவருக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் பாக்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் சிபிராஜ், எஸ்.வி சேகர் உட்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் திருட்டு: கோபமடையும் பொதுமக்கள்

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,.By.Rajah.பெர்ன் மாநிலத்தில் உள்ள பீல் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த 16 இயந்திரப்படகுகளில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் திருடு போயுள்ளன. இவற்றைத் திருடியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும்படி மாநிலக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்திருட்டு அதிகாலையிலோ நடந்திருக்கக்கூடும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
பீல் ஏரியின் கிழக்கு பக்கத்தில் டாஃபலென் படகுத்துறையின் அருகே இந்தப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. திருடு போன இந்தப் படகுகளின் இயந்திரங்கள் பல்லாயிரம் ஃபிராங்க் மதிப்புடையனவாகும்.
ஏரிப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான நபர்களை பொதுமக்கள் எவரேனும் பார்த்திருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.
இத்திருட்டு குறித்து பொதுமக்களை மிகுந்த கோபம் அடையச் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் எல்லைகளை எல்லாப்பக்கமும் திறந்துவிட்டதால் ஐரோப்பாவின் களவுக்களமாக இந்நாடு மாறிவிட்டது என்றனர். நாட்டின் உள்ளே வருவதற்கும் வெளியே போவதற்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது, என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

வாட் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

 செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சுவிட்சர்லாந்தின் வாட் மாநிலத்தில் கடந்த மூன்று மாதத்தில் இரண்டு முறை சிறைக்கைதிகள் தப்பியோடி விட்டனர். ஒர்பேயில் உள்ள குரோய்ஸி சீர்திருத்த மையத்தில் மூன்று அறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஆறு கைதிகள் ஞாயிறு அதிகாலை தப்பிச் சென்றனர்.
இவர்களில் நால்வரை சிறையதிகாரிகள் திரும்பவும் பிடித்து சிறையில் அடைத்தனர். இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.
இத்தகவலை வாட் மாநிலத்தின் தகவல்தொடர்பு துறையின் அரசுச் செய்திக் குறிப்பு தெரிவித்தது.
தப்பிச் சென்றவர்கள் சிறைக் கம்பிகளைக் கைவினைக் கருவி கொண்டு அறுத்துத் தப்பிச் சென்றனர்.
கண்காணிப்பு கமெராவின் உதவியுடன் நான்கு பேர் போனதைப் பார்த்த சிறை அதிகாரிகள் அவர்களின் பாதையை அடியொற்றிச் சென்று பிடித்துவிட்டனர்.
இதற்கு ராணுவ ஹெலிகப்டரும் காவல்துறையும் இவர்களுக்கு உதவியாக இருந்தது. தப்பிச் சென்றவர்களில் நான்கு பேர் அருகேயுள்ள சுச்சி கிராமத்தில் ஒளிந்திருந்தனர். மற்ற இருவர் கடந்த இடம் தெரியவில்லை.
யூலை மாதம் 30ம் திகதி, அல்பேனியா மற்றும் கொசோவா நாட்டு குடிமக்கள் ஐந்து பேர் சிறையின் கூரையைப் பெயர்த்துத் தப்பிச் சென்றனர். இவர்களை இன்னும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

3 வீரர்களுடன் இன்று விண்வெளிக்கு பயணமாகிறது சோயூஸ் விண்கலம்

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூன்று வீரர்களுடன் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து பூமிக்கு மேல் 410 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன.
இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், பிராண வாயு போன்றவை ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்கலங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் சார்பில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ரஷ்ய, ஜப்பானிய வீரர்கள் இதில் பயணித்தனர்.
இதற்கிடையே சோயூஸ் விண்கலம் மூலம் மூன்று விண்வெளி வீரர்கள் இன்று விண்வெளிக்கு பயணமாகின்றனர்.
விண்வெளிக்கு புறப்படும் அமெரிக்க வீரர் போர்டு விண்கலத்தை இயக்கும் விமானியாக செல்கிறார்.
சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இந்த நிலையத்திற்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெக்காவில் கட்டிடமொன்றில் தீ விபத்து: 13 பேர் காயம்

 செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். ஹஜ் பயணம் மேற்கொண்ட இந்தியா மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள், மெக்காவில் உள்ள 9 மாடிக் கட்டிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இக்கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள அறை ஒன்றில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
அங்கிருந்த 179 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

8 வயது சிறுவன் இறந்து விட்டதாக தவறுதலாக அறிவித்த மருத்துவமனை

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அமெரிக்காவில், 8 வயதான தங்கள் மகன் இறந்துவிட்டதாக தவறாக அறிவித்த மருத்துவ மனைக்கெதிராக பெற்றொர் வழக்குத் தாக் கல் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச் சேர்ந்த பிங் டோர்ஸி, ஷீனா லேன் தம்பதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஜேலன் டோர்ஸி என்ற தங்களது 8 வயது மகனை அங்குள்ள மேர்ஸி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
இங்கு சிகிச்சை பெற்ற அந்த சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உடலிலும், கண்களிலும் அசைவுகள் காணப்படுவதாக உறவி னர் கள் தெரிவித்ததையும் அலட்சியம் செய்து சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித் திருந் தனர்.
இந்நிலையில், சிறுவனின் இருதயம் இயங் குவதை உறுதிப்படுத்த ‘அல்ட்றா சவுண்ட்’ பரிசோதனையை மேற்கொள்ள உற வி னர்கள் நிர்ப்பந்தித்ததையடுத்து, சிறு வன் இறந்துவிட்டதாக மருத்துவர் களால் தெரிவிக்கப்பட்டு 5 மணி நேரம் கழித்து சிறுவனது இருதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது கண்டறியப் பட்டது.
இந்நிலையில் சிறுவனின் பெற்றோரான பிங் டோர்ஸியும், ஷீனா லேனும் மேற்படி மருத் து வமனை மீது வழக்குத் தாக்கல் செய்து ள் ள னர்.

இணைந்து வாழும் பண்பாடு தேவை: ஜேர்மனி ஜனாதிபதி

 செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah.
தலைநகர் பெர்லினில் நடந்த கூட்டத்தில் ஜனாதிபதி ஜோவாக்கீம் கௌக் மக்களுக்கு மத்தியில் பேருரை ஆற்றினார். அலெக்ஸாண்டர் பிளாட்ஸ் அருகே நகர்மன்றத்தில் நடந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பெர்லின் மாநகர் மேயர் கிளாஸ் வோவெரீட் தலைமை வகித்தார். அங்கு ஜனாதிபதி கௌக் சர்வசமய நல்லிணக்கம் குறித்து தன் முதல் உரையை ஆற்றினார்.
அப்போது அவர் பிறரது சமயக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக ஒருவர் தமது சமயக் கொள்கைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இவ்வாறான தெளிந்த நல்லறிவு இருந்தால் ஒருவர் மற்றவருடைய பண்பாட்டை மதித்து அவருடன் இணக்கமாக வாழ முடியும்.
இணைந்து வாழும் பண்பாடு இன்றைய மனித இனத்தின் இன்றியமையாத் தேவை என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.
பின்பு நியு கோல்ன் மாவட்டத்தில் உள்ள மசூதிக்கு சென்று இளைஞர்கள் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்திற்கு வந்திருந்த பல இளம் தொழிலதிபர்களின் வர்த்தக மையத்தையும் அவர் பார்வையிட்டார்.

குரங்குகளால் வளர்க்கப்பட்டதாக பெண்ணொருவர் எழுதிய புத்தகம்

 செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,By.Rajah.
பிரித்தானியாவில் வசிக்கும் மரினா சப்மான் என்ற பெண் தான் குரங்குகளால் வளர்க்கப்பட்டதாக அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார். கடந்த 1950ம் ஆண்டு பிறந்த மரினா, 5 வயது சிறுமியாக இருந்த போது கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டு காட்டில் விடப்பட்டார்.
அப்போது குரங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்ததாகவும் பறவைகளையும் முயல்களையும் பிடிக்க கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மரினா கூறியதாவது, பின்னர் வேட்டைக்காரர்கள் தன்னை ககுடா நகரிலுள்ள விபசார விடுதியொன்றில் விற்றதாகவும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறினார்.
அதன் பின் பல வருடங்களை வீதிகளில் கழித்த அவர் சில சமயங்களில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.
தொடர்ந்து சுமார் 15 வயதில் கொலம்பிய குடும்பமொன்றில் வீட்டுப் பணியாளராக பணியாற்றிய போது, மரினா லுஸ் ௭ன பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நான் வீட்டுப்பணியாளராக பணியாற்றிய கொலம்பிய குடும்பம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய பிரட்போர்ட்டில் 6 மாத காலம் தங்கிய போது அவர்களுடன் பிரித்தானியாவுக்கு வந்தேன்.
பின்னர் தேவாலயமொன்றில் ஜோன் சப்மான் என்பவரை சந்தித்து காதல் கொண்டேன்.
1977ம் ஆண்டில் அவருடன் திருமண பந்தத்தில் இணைந்தேன். தற்போது எனக்கு இரு மகள்மார் உள்ளனர்.
தென் அமெரிக்காவில் நிலவும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் மோசமான நிலைப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எனது வாழ்க்கை கதையை புத்தகமாக ௭ழுதியுள்ளேன்.
மேற்படி கதையை தொலைக்காட்சி ஆவணப்படமாகவும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

மதுபான போத்தல்களாலும் கற்களாலும்


செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,By.Rajah.
மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படைஇலங்கைக் கடற்படையினர் தாம் தமிழக மீனவர்களை தாக்குவதில்லை என கூறிவந்தாலும் இன்றும் ராமேஸ்வர மீனவர்களை தாக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 600க்கு மேற்பட்ட மீனவர்கள் 50க்கு மேற்பட்ட படகுகளின் மீன்பிடிக்க இன்று சென்றுள்ளனர்.
தனுஷ்கோடி- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர், மீன்வர்கள் மீது கற்களையும், வெற்று மதுபானப் போத்தல்களையும் வீசி தாக்கியுள்ளனர்.
மேலும் மீனவர்கள் வைத்திருந்த மீன்களையும், பறித்து விரட்டியடித்தனர் என்று கரைக்கு திரும்பியவர்கள் புகார் கூறியுள்ளனர் என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் மட்டக்களப்பிற்கு விஜயம்

 
செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012.By.Rajah.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 15ஆம் விடுதியில் செயற்படும் வலது குறைந்தோருக்கான சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து,வைத்தியசாலையின் விடுதிகள் சிலவற்றையும் தூதுவர் பார்வையிட்டார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தனுடன் கலந்துரையாடினார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த புதிய அமெரிக்க தூதுவர், ஒல்லாந்தர் கோட்டையையும் பார்வையிட்டார். மட்டக்களப்பில் அமெரிக்கத் தூதுவர் இன்றும் நாளையும தங்கியிருந்து பிரதிநிதிகள் பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

நடப்பு அரசியல் சூழ்நிலை இலங்கை-இந்திய

 
செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,.By.Rajah.உறவை நிரந்தரமாக பாதிக்கும் என அச்சம்: த டைம்ஸ் ஒப் இந்தியாஇலங்கையில் தற்போது காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலைகள் இலங்கை;கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை நிரந்தரமாக பாதிக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் வெளியிட்ட கருத்தினைத் தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தீர்வுத் திட்டமான 13ம் அரசியல் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தி வருகிறார்.
எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 13ம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வினை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ த டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் இரண்டு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது, இந்திய அரசாங்கத்தை அதிர்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனை அண்மையில் ஜனாதிபதி இந்தியா சென்றிருந்த போது, பிரதமர் மன்மோகன் சிங் சீர் செய்ய முற்பட்ட போதும், அது சாத்தியமாகவில்லை என்று த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பரிந்துரையை நிராகரிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றமையானது, இந்தியாவை கோபத்தில் ஆழ்த்தி இருப்பதுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது பாரிய விரிசலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை

 
செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை விதித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுயாட்சி அதிகாரம், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளல், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல் போன்ற நிபந்தனைகளை புலம் பெயர் தமிழர்கள் விதித்துள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என புலம் பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர்.
நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட சாத்தியமில்லை என உலக தமிழர் அமைப்பின் பணிப்பாளர் பஞ்சலிங்கம் கந்தய்யா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் விரைவில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் என விடுக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.