| வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| இத்தாலியின்
முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தாலியின் பிரதமராக சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்த போது, வரி ஏய்ப்பு
செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது குற்றவியல் வழக்கும், வரி ஏய்ப்பு செய்ததற்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, பெர்லுஸ்கோனிக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தாலிய சட்டப்படி வழக்குகள் மீதான தீர்ப்புகள் இரண்டு கட்ட மேல்முறையீடுகளில் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே பெர்லுஸ்கோனி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நான்காவது முறையாக இத்தாலி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாக பெர்லுஸ்கோனி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
வெள்ளி, 26 அக்டோபர், 2012
சர்ச்சைக்குரிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு சிறைத்தண்டனை
தேர்தலுக்கு முன்பே வாக்களித்தார் ஒபாமா?
| வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah( காணொளி.புகைப்படங்கள்) |
| அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு
முன்பே சிகாகோவில் பராக் ஒபாமா இன்று வாக்களித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவும், எதிர் வேட்பாளர் மிட் ரோம்னியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே ஒருவர் தமது வாக்கை செலுத்த முடியும். இதனடிப்படையில் தேர்தலுக்கு 12 நாட்களுக்கு முன்பே சிகாகோவில் ஒபாமா இன்று வாக்களித்தார். இதற்காக தமது தேர்தல் பிரச்சாரத்தை 48 மணி நேரம் நிறுத்தி வைத்த ஒபாமா, இன்று காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். ஒபாமாவின் மனைவி மிச்செல் ஏற்கனவே 16ஆம் திகதி வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() |
குத்தாட்டம் போட்ட ஷாருக், கத்ரீனா
| Friday, 26 October 2012, By.Rajah |
| அமிதாப்பச்சன் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஷாருக்கான், கத்ரீனா கைப் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். |
பிரபல நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ, கேம் ஷோவில் பங்கேற்பது
இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி
கூடுவதோடு தங்களின் படத்தையும் புரமோட் செய்யலாம்.சமீபத்தில் மறைந்த பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் கடைசிப் படமான ‘ஜப் தக் ஹை ஜான்' திரைப்படத்தில் ஷாருக், கத்ரீனா இணைந்து நடித்துள்ளனர். இது விரைவில் வெளியாக உள்ளது. இதனை புரமோட் செய்யும் வகையில் குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கங்னம் ஸ்டைல் பாடல் யூடிபில் பிரபலம். கோடிக்கணக்கில் ஹிட் அடித்துள்ள இந்த பாடலை கேட்பவர்களையும், நடனத்தை பார்ப்பவர்களையும் குத்தாட்டம் போடவைக்கும். அவர்கள் இருவரும் கங்னம் ஸ்டைல் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அவர்களுடன் அமிதாப்பச்சனும் இணைந்து நடமாடி அசத்தினார். மூவரும் கருப்பு நிற உடை அணிந்து ஆட்டம் போட்டது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த எபிசோட் சோனி டிவியில் நவம்பர் 4ஆம் திகதி ஒளிபரப்பாகும் குரோர்பதி நிகழ்ச்சியில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு கரன்ஜோகர், ஸ்ரீதேவி ஆகியோர் பங்கேற்று தங்களின் படங்களை புரமோட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
நகைச்சுவையும், சஸ்பென்சும் நிறைந்த படமாக உருவாகிறது Fun Size
| Friday, 26 October 2012, By.Rajah. |
| ஜோஸ் சுவார்ட்ஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள நகைச்சுவையும், சஸ்பென்சும் நிறைந்த படம் Fun Size. |
விடுமுறையை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுகிறார்
இளம் பெண் ஒருவர். அந்த பெண்ணின் தாயாரோ, சகோதரனையும்
அழைத்துச் செல்லும்படி கூறுகிறார்.சுற்றுலாவுக்கு செல்லும் வழியில் திடீரென அந்த இளம் பெண்ணின் சகோதரன் காணாமல் போகிறான். காணாமல் போன சகோதரனை தன் நண்பர்களுடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் அந்த பெண். இது தான் இந்த படத்தின் ஒன்லைன். இந்த சம்பவத்தை பரபரப்பாகவும், நகைச்சுவையாகவும் படமாக்கியுள்ளனர். விக்டோரியா ஜஸ்டிஸ், ஜான் லெவி, தாமஸ் மெக்டனால்டு, செல்சியா ஹான்ட்ஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். |
நித்யானந்தா- ரஞ்சிதா போன்று சம்பந்தப்பட்ட???
| Friday, 26 October 2012, By.Rajah. |
| காட்சி படமாக்கப்பட்ட "வெண்ணிலாவின் அரங்கேற்றம்"ஆர் புரடக்ஷன்ஸ் சார்பில் ஆர். முத்துக்குமார் இயக்கும் புதிய படம் வெண்ணிலாவின் அரங்கேற்றம். |
ஆர். முத்துக்குமார் ஏற்கெனவே "தொடக்கம்" என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகங்கள்
சமஸ்தி, மிதுனாவாலியா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கதாநாயகனாக தினேஷ்
நடிக்கிறார்."வெண்ணிலாவின் அரங்கேற்றம்" படத்துக்காக சர்ச்சைக்குரிய நித்யானந்தா - ரஞ்சிதா சம்பந்தப்பட்டது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலையில் விபச்சாரியாக மாற்றப்பட்ட இளம்பெண் ஒருவள் தனது வாழ்க்கையை விவரிக்கிறார். தனது ஒவ்வொரு இரவும் எப்படி கழிந்தது தன்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்ட பிரபலங்கள் யார்? யார்? என்பதை அவள் விவரிப்பதே படத்தின் கதை. படத்தில் ஒரு காட்சியில் இடம் பெறும் நித்யானந்தா சர்வானந்தா சித்தரிக்கப்பட்டிருக்கிறார். நித்யானந்தாவாக மூர்த்தி என்கிற திருநங்கை நடித்துள்ளார். அவருடன் படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான சமஸ்தி நடித்தார். விபச்சாரத் தொழிலில் உள்ள பல்வேறு தடங்களை கண்முன் கொண்டு வரும் காட்சி அமைப்புகள், அவர்களின் உள்மண உணர்வுகள் ஆகியவற்றை இயக்குனர் மிக தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். ![]() ![]() ![]() ![]() |
மொடல் அழகியுடன் குத்தாட்டம் போட்டார் பிரகாஷ்ராஜ்
| Friday, 26 October 2012, By.Rajah. |
| வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில், ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகிறது துள்ளிவிளையாடு. |
இப்படத்தில் யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், வெண்ணிலா
கபடி குழு புகழ் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில்
வரும் பிரகாஷ் ராஜ் ஒரு பாட்டு முழுக்க மும்பை மொடல் அங்கீதாவுடன் செம ஆட்டம்
ஆடியுள்ளார்.முழுக்க முழுக்க இந்த பாடல் ராஜஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் படமாக்கப்பட்டது. சண்டிக் குதிர சண்டிக் குதிர வண்டிக்குள்ள சிக்காத ஒன்டிக்குதிர என்ற மிக வேகமான பாடலுக்கு பிரகாஷ்ராஜ் ஆடியுள்ளார். அதுவும் வித விதமான, கலர்ஃபுல்லான ஆடைகளுடன். தனக்கு சாதகமான தகவல் வந்ததால் மகிழ்ச்சியடையும் பிரகாஷ் ராஜ், அதை தன் குழுவுடன் ஆடிக்களிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன. |
ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட ஆரோகணம் படம்
| Friday, 26 October 2012.By.Rajah. |
| கொலிவுட்டின் பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். |
சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் ஊடகத்தினருக்காக ஆரோகணம் படம்
திரையிடப்பட்டது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் குடும்ப நாயகி விஜி விபத்தில் சிக்குகிறார்.இதை அறியாத அவருடைய மகன், மகள் இருவரும் அம்மாவை தேடி அலைகிறார்கள். கடைசியில் காவல்நிலையத்தில் புகார் செய்கிறார்கள். விபத்தில் சிக்கிய விஜிக்கு என்ன ஆனது, இறுதியில் அவர் தன குடும்பத்தினருடன் இணைந்தாரா என்பதை அழுத்தமாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். விசாலமான கண்களில் உணர்வுகளை நிறுத்தி, இனம் புரியாத மனசோர்வின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார் விஜி. கேயின் இசையில் தப்பாட்டம் என்ற பாடல் ரசனைக்குரிய பாடலாக ஒலிக்கிறது. இப்படத்தை கே.பாலசந்தர், வசந்த், சற்குணம், அறிவழகன், மிஸ்கின் போன்ற இயக்குனர்கள் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது |
இருவரின் தலைகளுக்கு நிர்வாணமான படங்களை பொருத்தியவர் கைது?
Friday 26 October 2012.பாடசாலை அதிபர், இரு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் இருவரின் தலைகளுக்கு நிர்வாணமான படங்களை பொருத்தி நீச்சல் தடாகத்தில் இருப்பதை போல வடிவமைத்து பேஸ் புக் இணையத்தளத்தில் தரவேற்றம் செய்த புகைப்பட கலைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்புக்கு அண்மையிலுள்ள ஹோமாகவை அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், இரு ஆசிரியர்கள் மற்றும் ஆCரியைகள் இருவரின் தலைகளுக்கே இவ்வாறு நிர்வாணப் படங்கள் பொருத்தப்பட்டு பேஸ் புக்கில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு தரவேற்றம் செய்த புகைப்பட கலைஞர் ஒருவரை கைது செய்த கஹத்துடுவ பொலிஸார் அவரை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். பாடசாலை வைபவமொன்றில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பயன் படுத்தியே குறித்த நபர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகைப்பட கலைஞர் குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவரிடம் தன்னை காதலிக்குமாறு கேட்டமை தொடர்பில் மேலே குறிப்பிட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆரியைகள் அவரை எச்சரித்ததை அடுத்தே புகைப்பட கலைஞர் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்

பொலிஸார் விரைவில்வெளியேறுவர்!
யாழ். மாவட்டத்தில் தனியார் காணிகளிலில் நிலைகொண்டுள்ள பொலிஸார் விரைவில் வெளியேறுவர் என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் தனியார் காணிகளில் மற்றும் தனிமனிதனுடைய வீடுகளில் பொலிஸாரின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு பொலிஸார் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
தனியார் வீடுகளைப் பயன்படுத்தும் பொலிஸார் அந்த வீடுகளுக்குரிய வாடகைகளையும் வீட்டின் உரிமையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
அரச காணிகளில் பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் தனியார் காணிகளில் இருந்து பொலிஸார் வெளியேறி அரச காணிகளில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகளை செய்வர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சில மறைவான இடங்களில் கலாச்சராச சீரழிவுகள் நடைபெற்று வருகின்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த கலாச்சார சீரழிவுகள் நடைபெறும் இடங்களில் அதனைத் தடுப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். கோட்டைப் பகுதி, புல்லுக்குளப்பகுதி, யாழ்.வைரவர் கோயிலடி ஆகிய பகுதிகளில் கலாச்சார சீரழிவுகள் நடைபெற்று வருகின்றன. ஆட்டோவிலும் இது போன்ற சீரழிவுகள் நடைபெறுகின்றன. இதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவில் நடைபெறும் கலாச்சர சீரழிவுகள் தொடர்பாக பொதுமக்கள் அல்லது நலன்விரும்பிகள் அந்த ஆட்டோ இலக்கத்தை இரகசியமான முறையில் எமக்குத் தெரிவிக்கலாம்.
இதேவேளை, வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இலஞ்சமாக 1000 ரூபா வாங்கிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
வீதி விபத்துக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளிடம் வீதி ஒழுங்கை மீறிச் செயற்படுபவர்களிடம் இலஞ்சம் வாங்கியது தொடர்பாக புலன் விசாரணை செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் குற்றம் செய்தாலும் சட்டம் தண்டிக்கும். குறித்த நபர் செய்த முறைப்பாட்டை யாழில் ஊடகங்கள் ஆதாரபூர்வமாக வெளியிட்டன.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றவாளியாக பொலிஸ் உத்தியோகத்தர்இனங்காணப்பாட்டார்.இதனால்அவர்தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சைவ உணவு சாப்பிடுபவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் !
அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அசைவம் உண்பவர்களை விட காய்கறி உணவை உண்பவர்கள் 6 முதல் 9 ஆண்டுகள் அதிகமாக உயிர்வாழ்கின்றனராம்.
நோய் தாக்குதல் குறைவு
அமெரிக்காவின் உள்ள கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பழங்கள், பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், ஆகியவை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர், இருதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், ஆகியவை தடுக்கப்பெறுவதோடு, உடல் எடை குறியீடு, மற்றும் இடுப்புப் பகுதி பருமன் ஆகியவையும் கட்டுப்பட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மூளை நல்ல ஆரோக்கியம்
சைவ உணவு உண்பவர்களின் மூளையின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படுவதாக இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இறைச்சி சாப்பிடுபவர்களைக் காட்டிலும் காய்கறி உணவு உண்பவர்களின் உடல் எடை சுமார் 30 பவுண்டுகள் வரை குறைவாக உள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபணம்
1970களிலும் 80களிலும் லோமா லிண்டா பல்கலைக் கழகம் ஆயிரக்கணக்கான செவெந்த் டே அட்வென்டிஸ்ட் கிறிஸ்துவர்களை வைத்து இந்த ஆய்வினை மேற்கொண்டது. அப்போதே வெஜிடேரியன் உணவு எடுத்துக் கொள்பவர்களின் ஆயுள் அதிகம் என்பது தெரியவந்தது.
சைவ உணவே ஆரோக்கியம்
தேசிய சுகாதார கழகம் லோமா பல்கலைக் கழகத்தினருக்கு 2002ஆம் ஆண்டு நிதி அளித்து இந்த ஆய்வை மேலும் நடத்துமாறு கூறியது. இந்த ஆய்வில் அமெரிக்க, மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த மாமிச உணவு எடுத்துக் கொள்ளாத கிருஸ்துவர்கள் பங்கேற்றனர். 96,000 நபர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சைவ உணவு பற்றிய தங்களது முடிவுகளை மிகவும் உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளர்.
பத்தாண்டுகள் அதிகம் வாழலாம்
சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்டு வந்த ஆண்கள் சராசரியாக 83 வயது வரையிலும் பெண்கள் சரசாரியாக 85 வயது வரையிலும் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டது. அதாவது அசைவம் உண்பவர்களைக் காட்டிலும் இவர்களது ஆயுள் சுமார் 10 ஆண்டுகள் அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை குறியீடு குறையும்
இறைச்சி உண்பதனால் ஏற்படும் அளவுக்கதிகமான உடல் பருமன் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண்களின் ஆயுளை 6.2% குறைக்கிறது என்பதும் இந்த ஆய்வின் தகவலாகும்.பாடி மாஸ் இன்டெக்ஸ் என்று கூறப்படும் உடல் எடை குறியீடு அளவுகோல்களின் படி சைவ உணவாளர்கள், அசைவம் உண்பவர்களை விட 5 யூனிட் எடை குறைவாக உள்ளது தெரியவந்தது.
வாரம் ஒருநாள் தப்பில்லையாம்
அசைவத்தை தினசரி சாப்பிடுபவர்கள்தான் இந்த ஆய்வு முடிவு பற்றி கவலைப்படவேண்டும். வாரம் ஒருமுறை மட்டும் இறைச்சி எடுத்துக் கொள்பவர்கள் அல்லது இறைச்சி உணவை கட்டுப்பாடோடு உண்பவர்களுக்கு நோய்கள் கட்டுப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

ஆப்கானிஸ்தான் சண்டையில் பலியான நாய்க்கு வீர தீர விருது
| வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| ஆப்கானிஸ்தானில் இராணுவ வீரர்களுடன்
பணியில் ஈடுபட்டிருந்த போது, உயிரிழந்த அமெரிக்க நாய்க்கு வீர தீர செயலுக்கான
பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஐந்து மாத காலம் பணியில் ஈடுபட்ட தியோ என்ற நாய் தலிபான்கள் வைத்த வெடி குண்டுகளையும், வெடி மருந்து பொருட்களையும் கண்டுபிடித்தது. இதன் மூலம் அமெரிக்க வீரர்கள் பலர் உயிர் பிழைத்தனர். எனினும் கடந்தாண்டு மார்ச் மாதம் தலிபான்களின் தாக்குதலில் அமெரிக்க வீரர்களுடன் தியோவும் பலியானது. வீர தீர செயல் புரியும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பி.டி.எஸ்.ஏ என்ற அமைப்பு சாதனை பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வகையில் தியோவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருது 64 பிராணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 27 நாய்களும், 32 புறாக்களும், மூன்று குதிரைகளும், ஒரு பூனையும் அடக்கம். ![]() ![]() |
அமெரிக்காவில் குழந்தை கடத்தல்: தகவல் தருபவர்களுக்கு பரிசு
| வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| அமெரிக்காவில் மர்ம நபர்களால்
கடத்தப்பட்ட 10 மாத குழந்தை குறித்து தகவல் தருபவர்களுக்கு 30 ஆயிரம் டொலர் பரிசு
அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிங் ஆஃப் பிரஷ்யா பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில்
மர்ம நபர்களால் கடந்த 23ஆம் திகதி பெண் குழந்தை சாவ்னி கடத்தப்பட்டார். இதைத் தடுக்க முயன்ற குழந்தையின் பாட்டி சத்யவதியை மர்ம நபர்கள் கொன்றுவிட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்யவதியின் இறுதிச் சடங்கில் இங்குள்ள அமெரிக்கவாழ் இந்தியர்கள் பலரும் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தினர். கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உள்ளூர் பொலிசாருடன் இணைந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்பது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பென்சில்வேனியா மாநகர காவல்துறை அதிகாரி தெரிவித்தார். குழந்தையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் எத்தகைய விபரீத நடவடிக்கையையும் இத்தருணத்தில் எடுக்க தாங்கள் விரும்பவில்லை என்று மாநகர அட்டர்னி ரிசா வெட்ரி ஃபெர்மென் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தை குறித்து தகவல் தருபவர்களுக்கு 30 ஆயிரம் டொலர் பரிசு அளிக்கப்படும் என அங்குள்ள தெலுங்கு சமூகம் அறிவித்துள்ளது. ![]() ![]() ![]() |

இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி
கூடுவதோடு தங்களின் படத்தையும் புரமோட் செய்யலாம்.
அந்த பெண்ணின் தாயாரோ, சகோதரனையும்
அழைத்துச் செல்லும்படி கூறுகிறார்.
இப்படத்தில் புதுமுகங்கள்
சமஸ்தி, மிதுனாவாலியா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கதாநாயகனாக தினேஷ்
நடிக்கிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில்
வரும் பிரகாஷ் ராஜ் ஒரு பாட்டு முழுக்க மும்பை மொடல் அங்கீதாவுடன் செம ஆட்டம்
ஆடியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் குடும்ப நாயகி விஜி விபத்தில் சிக்குகிறார்.