siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

புனித கங்கை நதியின் அவலங்கள்

BY.rajah.
 












கறுப்பு மணல் கடற்கரையைப் காண ஆசையா?

 
BYrajah.27.08.2012.ஹவாய் தீவில் காணப்படும் Punalu என்ற கடல் கறுப்பு நிற மணலைக் கொண்டு காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் கடலினுள் காணப்படும் எரிமலைகள் வெடித்து குளிர்ச்சியாகி கடலின் கரையோரம் ஒதுங்குவதே ஆகும்

செம்சுங்குக்கு விழுந்த மரண அடி!

BY.rajah.27.08.2012.அப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவ்வழக்கினைத் தொடுத்தது. இதனூடாக செம்சுங்கிடம் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது.
இதற்குப் பதிலடியாக வழக்குத் தொடுத்த செம்சுங், அப்பிளிடம் 399 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது.

கடந்த ஒருவருட காலத்துக்கு அதிகமாக நீடித்த இவ்வழக்கின் தீர்ப்பானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.

அப்பிள் கோரிய 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈட்டுத் தொகையை ஏற்க மறுத்த நீதிமன்றம் சுமார் 1 பில்லியன் டொலர்களை மட்டும் வழங்கும்படி செம்சுங்குக்கு உத்தரவிட்டது.

செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்கள் அப்பிளின் காப்புரிமை செய்யப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை செம்சுங்கினால் அப்பிளிடம் நட்ட ஈடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கையும் நிராகரித்தது.

இத்தீர்ப்பினைத் தொடர்ந்து செம்சுங்கின் மொபைல் அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான தடையையும் அப்பிள் நீதிமன்றத்தில் கோராலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இத்தீர்ப்பானது பிரித்தானியா போன்ற நாடுகளில் செம்சுங்கின் மொபைல் சாதனங்களின் விற்பனையைப் பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இத்தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது.

செம்சுங்குக்கு எதிராக வழங்கப்பட்ட இத்தீர்ப்பானது மற்றைய நிறுவனங்கள் பலவற்றை குறிப்பாக அண்ட்ரோய்ட் இயங்குதளத்தினை தமது மொபைல் சாதனங்களில் உபயோகிக்கும் நிறுவனங்களிடையே அச்சத்தினைத் தோற்றுவித்துள்ளது.

தாமும் இத்தகைய ஒரு பாரிய தொகையினை நட்ட ஈடாக செலுத்த வேண்டிவரலாம் என அவை அச்சங்கொண்டுள்ளன.

செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் விற்பனையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை அப்பிளுக்கு மிகப் பெரும் தலையிடியாக மாறியிருந்தது. இந்நிலையில் இத்தீர்ப்பானது அப்பிளுக்கு சற்று உற்சாகமளித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்

ஜரோப்பாவில் கோலாகலமாக நடந்தேறிய கார்னிவெல் திருவிழா

BY.rajah.27.08.2012.
ஜரோப்பாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவான நோட்டிங் ஹில் கார்னிவெல் அண்மையில் இடம்பெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதுடன் பல்வேறுபட்ட கலைஞர்களும் தமது வித்தியாசமான திறமைகளை அந்த மக்கள்கூட்டத்தின் மத்தியில் வெளிக் கொணர்ந்துள்ளனர். அந்த கார்னிவெல் தொடர்பான சுவாரஸ்ய காட்சிகள் அடங்கிய புகைப்படத்தொகுப்பே இவை
.









 

50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் (பட இணைப்பு)

BY.rajah.27.08.2012.தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல இலட்சம் மோசடி செய்த கேரள அழகியான சஹானா என்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றைப் பறித்து மோசடி செய்துள்ளார்.
இவ்விடயம் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியுலகுக்குத் தெரியவந்தது.


சஹானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 5 பேர் மட்டுமே சஹானா தங்களை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளனர்.

எனினும் தொடர்ச்சியாக பலர் புகார் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சஹானாவைக் கைது செய்ய பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



sfv

fhg









வேன் விபத்துக்குள்ளானதில் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற இலங்கையர் உட்பட 18 பேர்

BY.rajah.27.08.2012.இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த இலங்கையர் உட்பட 18 பேர் விபத்துக்குள்ளாகிக் காயமடைந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜோன் (வயது 28), மட்டக்களப்புப் பகுதியை சேர்ந்த குமுதா (வயது 45), நேசலட்சுமி (வயது 43) மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளில் வசிக்கும் இவர்களின் உறவினர்கள் அன்டனி இருதயராஜ் (வயது 32), அஞ்சலின் (வயது 22), அகிலன் (வயது 20), அருள்தாஸ் (வயது 32), அரசன் (வயது 03) உட்பட 17 பேர் சுற்றுலாவாக தமிழகத்தை சுற்றிப் பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர்.

இவர்கள் சென்னையில் சுற்றுலா வேன் ஒன்றை வாடகைக்கு ௭டுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். வேனை சென்னையைச் சேர்ந்த லாசர் (வயது 25) ௭ன்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று முன்தினம் இறுதியாக கொடைக்கானலை சுற்றிப் பார்த்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த வேன் உளுந்தூர்பேட்டை அருகே ஷேக் உசேன் பேட்டை ௭ன்ற இடத்தில் வந்தபோது வேன் டிரைவர் லாசர் தூங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேன் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்து போனது. இதில் வான் டிரைவர் லாசர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் 13 பேர் உட்பட 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ௭டைக்கல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயம் அடைந்த அனைவரையும்மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

முள்ளிக்குளம் தேவாலயத்தில் ஐந்து வருடங்களின் பின் திருவிழா

BY.rajah.27.08.2012.
முள்ளிக்குளம் தேவாலயத்தில் சுமார் ஐந்து வருடங்களின் பின் திருவிழாத்திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மன்னாரின் தென்பகுதியான முசலிப்பிரதேசத்தின் மீது கடந்த 2007ஆம் ஆண்டு இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக முசலிப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.

இவ்வாறு வெளியேறியவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தம்மை தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியான பல அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுத்துவந்திருக்கின்றனர்.

ஆயினும் அவர்களது எந்தக்கோரிக்கையும் சம்பந்தப்பட்டவர்களால் நிறைவேற்றப்படாத நிலையில் அம் முள்ளிக்குள மக்கள் கடந்த இருமாதங்களுக்கு முன் தன்னிச்சையாக முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய காயாக்குழி மற்றும் மலங்காடு ஆகிய பகுதிகளில் குடியேறியிருக்கின்றனர்.

எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் காடுகளுக்குள் குடியேறியிருக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க முள்ளிக்குளம் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வழிபட்டு வந்த முள்ளிக்குளம் புனித பரலோக மாதா தேவாலயம் மற்றும் அதன் சுற்றுப்புறச்சூழல் அனைத்தும் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு பாரிய கடற்படை முகாம் ஒன்றும் நிறுவப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள முள்ளிக்குளம் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா ஆவணி மாதம் 15ஆம் திகதியே இடம்பெற வேண்டியது.

ஆயினும் குறித்த தினத்தில் மடு அன்னையின் திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெறுவதனால் முள்ளிக்குளம் தேவாலயத்தின் திருவிழா வருடந்தோறும் ஆவணி மாதம் 26ஆம் திகதியே இடம்பெற்று வருகின்றது.

இருந்த போதும் கடந்த ஐந்து வருடங்களாக இவ்வாலயத்தில் திருவிழாத்திருப்பலிகள் இடம்பெறாத நிலையில் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது.

மன்னார் ஆயர் அதிமேதகு இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற கூட்டுத்திருப்பலியில் பெருமளவிலான குருக்கள்,துறவியர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே புனித பரலோகமாதா தேவாலய திருவிழாத்திருப்பலியில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரய்யா மற்றும் நானாட்டான், மன்னார் பிரதேச சபைகளின் தலைவர்கள்,அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.


குறித்த திருவிழா திருப்பலியின் போது முள்ளிக்குளம் மக்களாகிய நாங்கள் மீண்டும் எமது சொந்த மண்ணில் குடியமர வேண்டும் எனவும்,தாங்கள் கடந்த 5 வருடங்களாக மேற்கொண்டு வந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் எனவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

திருவிழாத்திருப்பலியின் நிறைவில் அன்னையின் திருச்சொரூப பவனியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசீரும் இடம்பெற்றது

18 வயசு – பதறுது மனசு! -திரை விமர்சனம்!

BY.rajah.27.08.2012.நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் ’ரேனிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஜானி நடித்து வெளிவந்துள்ள படம் ‘18 வயசு’. ரேனிகுண்டா படம் தெலுங்கிலும், தமிழிலும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு
இருந்தது.
ஒரு மலைக்கிராமத்தில் வசித்து வரும் சாதாரணக் குடும்பத்தில் தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டு வளர்கிறான் கதாநாயகன். மகன் தந்தையிடம் மட்டும் பாசத்துடன் இருப்பது தாய்க்கு பிடிக்காததால் கதாநாயகனின் குழந்தைப்பருவம் பெற்றோர்களின் சண்டையிலேயே வளர்கிறது.
கதாநாயகனின் அம்மா வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் அப்பாவும், மகனும்.
தனது மனைவியா இப்படி என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத கதாநாயகனின் தந்தை தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதையும் நேரில் பார்த்துவிடும் கதாநாயகனை கிடைக்கும் தனிமையும், கிடைக்காத தாய்ப்பாசமும் ஒரு சைக்கோவாக மாற்றிவிடுகின்றன். சிறிய வயதில் எதுவும் தெரியாவிட்டாலும் வளர வளர கதாநாயகனுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது நன்கு தெரியவருகிறது. மன அழுத்தத்தினால் உண்டாகும் இந்த நோயினால் எந்த மிருகத்தை பார்த்தாலும் அந்த மிருகத்தைப் போலவே வெறித்தனமாக மாறிவிடும் கதாநாயகன் நகரத்திற்கு வந்ததும் படத்தின் கதாநாயகியான புதுமுக நடிகை காயத்ரியைப் பார்க்கிறான்.
கதாநாயகியும் தன்னைப்போல பெற்றோர் இல்லாமல் அனாதையாகவும், பாசத்திற்கு ஏங்கியும் உறவுக்காரர்கள் வீட்டில் வளர்ந்தது தெரியவர நண்பனாக அறிமுகமாகி பின்பு காதல் வயப்படுகிறான் கதாநாயகன். தன் அம்மாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர் “ என்னை சித்தப்பா என்று அழைக்கப் பழகிக்கொள். இனி நான் இங்கு தான் இருப்பேன்” என்று கூறி சித்ரவதை செய்ய, தன்நிலை இழக்கும் கதாநாயகனுக்கும் அவருக்குமிடையே நிகழும் சண்டையில் குறுக்கே வரும் தனது அம்மாவை கொலை செய்கிறான் ஜானி.
கொலைகாரனாகிய தன்னை வலைவீசித் தேடும் போலீஸிடமிருந்து தப்பித்து கதாநாயகியிடம் செல்லும் போது ’அம்மாவையே கொலை செய்துவிட்டான்’ என அவனை கதாநாயகி ஒதுக்கிவிடுகிறாள். சிறு வயதில் தன் தந்தை சொன்ன கதைகள் நினைவிற்கு வந்து கதாநாயகியை
ஒரு மலையடிவாரத்திற்கு கடத்திச் செல்லும் கதாநாயகனை, போலீஸ் விடாது துரத்தி வர மருத்துவராக வரும் நடிகை ரோகிணி அவன் குற்றவாளி இல்லை நோயாளி என காவல் துறைக்கு கதாநாயகனின் நிலையை புரியவைக்க முயற்சி செய்கிறார்.
காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? கதாநாயகன் குணமடைந்தானா? இது போன்ற சூழ்நிலையில் காவல்துறையின் நடவடிக்கை எந்த விதத்தில் இருந்தது? என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.படத்தின் முதல் பாதியை காமெடியாக கொண்டு சென்றிருக்கின்றனர். ஹீரோவுக்கு மனநிலை சரியில்லாத நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் குழந்தைத் தனமான பேச்சை தவிர்த்திருக்கலாம். கதாநாயகி நல்ல நடிப்பு. கதாநாயகியை அடுத்து அதிக படங்களில் பார்க்கலாம். தேவையான அளவு இசை, பிரம்மிப்பான சண்டைக் காட்சிகள் என அனைத்தும் பொருத்தம். கதாநாயகனின் நண்பனான ஜாக்கியும், நாம் பார்க்காத சென்னையும் இயக்குனரின் திறமை.

மூச்சுத் திணறல்: நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி

BY.rajah.27.08.2012.மனோரமா மூச்சுத் திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மனோரமா ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். சில மாதங்களுக்கு முன் ஓட்டல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவர் காலில் முறிவு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காலை குணமாக்கினர். பின்னர் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு பின் மீண்டும் உடல்நிலை பாதித்தது. ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தார். பிறகு குணமாகி வீடு திரும்பினார்.
இன்று திடீரென மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர் பிரேம் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

வித்யாபாலன் இடத்தில் நயன்தாரா


BYrajah-Monday, 27 August 2012,
பாலிவுட் புயல் வித்யா பாலன் மலையாளத்தில் உருவாகவுள்ள "அறிவால் சுட்டிக்க நட்சத்திரம்" என்ற படத்தில் நாயகியாக நடிக்க தெரிவு செய்யப்பட்டார்.
இப்படத்தை அமல் நீரத் என்பவர் இயக்க மம்மூட்டி, பிருத்விராஜ் இணைந்து நடிக்கின்றனர்.
உருமி படத்துக்கு திரைக்கதை எழுதிய சங்கர் ராமகிருஷ்ணன் இப்படத்துக்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
இப்படத்தில் வித்யாபாலனுக்கு பதிலாக தற்போது நயன்தாராவை நடிக்க அமல் கேட்டதாகவும் அதற்கு நயன் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட வித்யாபாலன், திகதிகள் ஒதுக்கித் தராமல் இழுத்தடித்த காரணத்தினாலேயே இந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றுள்ளது.
1960களில் நடக்கும் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தின் திரைக்கதையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இப்படத்தை 3டியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனது திரையுலக பயணத்தை மலையாள படத்தின் மூலம்தான் தொடங்கிய நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
 

கணவருடன் மோதலா? ரீமா சென் விளக்கம்

BY.rajah - Monday, 27 August 2012,
 ,
இந்தி படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்த காட்சியால் கணவருடன் மோதல் ஏற்பட்டதா என்பதற்கு ரீமா சென் பதில் அளித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு சினிமாவில் நல்ல நேரம் வந்திருக்கிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன்.
கேங்ஸ் ஆப் வசேப்பூர் படம் வெளியானது. கேன்ஸ் பட விழாவில் பங்கேற்றேன். தோழன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.
கேங்ஸ் ஆப் வசேப்பூர் படத்தில் ஜாக்கெட் அணியாமல் முழுமையாக முதுகை காட்டி நடித்ததால் என் கணவர் ஷிவ் கரணுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது போல் வதந்தி கிளப்புகிறார்கள்.
இது நல்ல ஜோக். நான் ஒரு நடிகை. என் வேலையைத்தான் செய்கிறேன். இதுபோன்ற வதந்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை.
அந்த படத்தில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பது உண்மைதான். ஜாக்கெட் இல்லாமல் எனது முதுகுபகுதி முழுவதும் பளிச்சிடுவதுபோல் சீன் அமைந்திருந்தது. ஆனால் அது நிர்வாண காட்சி அல்ல. அதுபோல் நடித்ததற்காக நான் வருத்தப்படவில்லை.
தமிழில் எனது முதல்படம் மின்னலேவில் தொடங்கி ஒருபோதும் நான் ஓவர் கிளாமராக நடித்ததில்லை. ஆனால் கிளாமர் நடிகை என்ற இமேஜ் எனக்கு அமைந்து விட்டது.
தலைமுதல் கால்வரை மூடிக்கொண்டு நடித்தாலும் நான் கிளாமராக நடித்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்காக வருந்தவில்லை. பெருமைப்படுகிறேன்.
எனவே கிளாமர் கதாநாயகி என்ற பட்டப் பெயரை தவிர்க்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

சுந்தரபாண்டியனில் ரஜினி ரசிகராக நடிக்கிறார் சசிகுமார்

BY.rajah -Monday, 27 August 2012,
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அனைத்து பரிமாணங்களிலும் வெற்றிகளை குவித்தவர் சசிகுமார்.
போராளி படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன்.
இப்படத்தை அவரது உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க, சசிகுமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பாடலில் அவரை ரஜினி ரசிகராக சித்தரித்து ஒரு பாடல் வந்துள்ளது.
அதற்கு அவர் பதிலளிக்கும் போது, ஆமாம். இப்படத்தில் நான் ரசிகராக நடிக்கிறேன். பாடல் காட்சியிலும் அது தெரியும்.
இது வேண்டுமென்றே திணிக்கப்பட்டதில்லை. என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் ரஜினி மற்றும் கமலின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்
 

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஹங்காலின் உடல் தகனம்

BYrajah- Monday, 27 August 2012,
பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஏ.கே.ஹங்காலின் உடல் நேற்று மும்பையில் தகனம் செய்யப்பட்டது.
பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அப்பா, மாமனார் போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்த ஹங்கால் நேற்று மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு நேற்று இறுதிச்சடங்குகள் மும்பையில் நடந்தது. அவரது மகன் விஜய் தீ மூட்டினார்.
இதற்கிடையில் பல முன்னணி நடிகர்களுடன் ஹங்கால் நடித்திருந்தும் அவர்கள் எவரும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஹங்கால், ஜெயாபச்சன், ஹேமாமாலினி, ரேகா போன்ற முன்னணி நடிகைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரபலப் பாடகியும், நடிகையுமான இலா அருண் கூறுகையில், அத்தனை சூப்பர் ஸ்டார்களுடனும் ஹங்கால் நடித்துள்ளார்.
ஆனால் அதில் ஒருவர் கூட இறுதிச்சடங்குக்கு வராதது வருத்தம் தருகிறது என்றார்

திருமணத்திற்கு விருப்பமில்லாமல் தற்கொலைக்கு முயன்ற நடிகை

BYrajah
Monday, 27 August 2012,
தமிழ் நடிகை சுஜிபாலா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கொலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கூடம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடிகை சுஜிபாலா நடித்திருக்கிறார்.
தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார்.
சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் பெண் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து யூலை 5ம் திகதி அன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


அக்கா, அண்ணி வேடத்தில் நடிக்கமாட்டேன்: ரீமாசென்

BY.rajah.Monday, 27 August 2012,
'மின்னலே', 'தூள்', 'செல்லமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை ரீமா சென்.
1982ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் ரீமேக்காகி வருகிறது.

இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் அவரது உறவுக்காரப் பெண் சினேகா பிரிட்டோ இயக்கி வருகிறார். தமன்குமார், பியா, பிந்து மாதவி நடிக்கிறார்கள். இதில் ரீமா சென் முக்கிய பாத்திரத்தில் பொலிஸ் அதிகாரியாக, கதாநாயகனின் அக்காவாக நடிக்கிறார்.
இப்படத்தில் நடிப்பது குறித்து ரீமாசென் கூறுகையில், எனக்கு திருமணமாகிவிட்டதால் அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் நடிக்க வந்துவிட்டதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள்.
நான் தற்போதும் அழகாக, கிளாமராக இருக்கிறேன். அதனால் அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் படத்தை பொறுத்தவரை இந்தியில் ஹேமமாலினி நடித்த பவர்ஃபுல் கதாபாத்திரம்கேரக்டர் என்பதால் நடித்தேன்.
ரீமேக்கில் எனது கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி, காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். 18 வயது சின்ன பெண் இயக்குகிறார் அவரை ஊக்கப்படுத்த வேண்டியது மூத்தநடிகை என்கிற முறையில் எனது கடமை.
எனக்கு கிளாமர் நடிகை என்று பெயர் இருப்பது சந்தோஷம்தான். ஆனால் எந்தப் படத்திலும் உடம்பை காட்டி நடிக்கவில்லை. நான் முழுக்க சேலை அணிந்து வந்தாலும் கிளாமராக தெரிவேன் என்றும் இது கடவுள் கொடுத்த வரம் எனவும் கூறியுள்ளார்


ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாக்களும் முன்கூட்டியே வெளியாகியுள்ளன



BYrajah.-திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2012,
 

நேற்று நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாக்களும் முன்கூட்டியே வெளியாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பரீட்சை நடைபெறுவதற்கு முன்தினம் இரவும், பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு வினாக்கள் வெளியாகியுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளா மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பொல்கஹாவெல, ரம்புக்கன போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பெற்றோருக்கு இவ்வாறு வினாக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பரீட்சையின் முதலாம் பாகம் நடைபெற்றதன் பின்னரான இடைவேளையில் இரண்டாம் பாகத்திற்கான கேள்விகள் மாணவ மாணவியருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

கந்தளாய், கம்பஹா, ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் இவ்வாறு பரீட்சை வினாக்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளன.
ஒரு தரப்பினர் பரீட்சை வினாக்களை முன்கூட்டியே பெற்றோருக்கு வழங்கியுள்ளதாக இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் எண்ணிக்கையில் உயர்வு

.BY,rajah.திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2012,தமிழர்களுக்கு நிகராக சிங்களவர்களும் அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி படகு பயணங்களை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் 1076 இலங்கை அகதிகளை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 35 சதவீதமானவர்கள் சிங்களர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வெளிநாட்டினரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை இந்த அகதிகளின் குழுவில் கடந்த இரண்டு நாட்களில் நான்கு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, நீர்கொழும்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக மீன்பிடி படகுகளை பயன்படுத்தி அகதிகளாக தப்பி செல்கின்றனர்

கண்ணுக்கு மையழகு

By rajah.,27.08.2012.
 தமிழர் வாழ்வில் பெண்கள் அன்று தொட்டு இன்று வரை நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள் கொண்டும், தங்க அணிகலன்களைக் கொண்டும், இயற்கைப் பொருட்கள் கொண்டும் தங்களை அழகுபடுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது. ஒருவருடைய முகமே முதலில் பார்வைக்கு தோன்றுவது. எனவே அழகு என்றாலே முதலில் முகத்தோற்றமே முக்கியமானதாகக் கருதப்படும். பெண்கள் தமது கண்களின் அழகு தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் தங்கள் கண்களை அழகு படுத்துவதற்காகவும், தங்கள் கண்களைப் பாதுகாப்பதற்காகவும் பல இயற்கை வழிமுறைகளை காலங்காலமாகப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். அத்துடன் இதிகாசங்கள், புராணக் கதைகள் போன்ற பழந்தமிழர் இலக்கியங்களிலும், நாட்டுப்புற, கிராமியப் பாடல்களிலும் உள்ள அடிகளில் இருந்தும் கண்ணுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் எமக்குத் தெரிய வருகிறது.
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகரவீணை தண்னுமை தழுவித் தூங்க
கைவழி நயனம் செல்ல கண்வழி மனமும் செல்ல
ஐயந்தண் இடையர் ஆடும் ஆடக அரங்கு காண்பீர்
கம்பராமாயாணத்தில் இனிமையான பாடலும், மகர வீணையின் இசையும் பொருந்தி இசைக்கும் போது, நடனம் ஆடுகின்ற மங்கையின் கை செல்கின்ற வழியிலே கண் செல்ல, கண் செல்கின்ற வழி பாவம் விளங்க, அவ்வழியில் அவளது மனமும் செல்ல, அழகிய இடையுடைய பெண்கள் ஆடும் அரங்குகள் இருந்தன" என்கிறான் கம்பன். மேலும் அயோத்தி மாநகரில் ஆடல் அரங்குகள் இருந்தன என்றும், அவற்றில் மடந்தையர் ஆடும்போது, அவர்களின் வேல் போன்ற கண்களின் வீச்சு, காமம் மிகுந்த இளைஞரின் நெஞ்சத்தை உருக்கும். அவர்களின் உயிர்களோ அப்பெண்களின் இடை போல் தேயும். ஆனால் ஆசை மட்டும் வளர்ந்து கொண்டே செல்லும்" என்பதை கம்பன் இவ்வாறு மிக அழகாகச் சொல்கிறான்.
அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர்
கருங்கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ் மற்று அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல் போல் தேய்வன் வளர்வது ஆசையே
மேலும் இராமன், சீதை ஆகியோரின் உணர்வோடு ஒன்றிய சந்திப்பை கீழ்க்கண்டவாறு கம்பன் உரைக்கிறான். இதில் இருந்தும் பழங்காலத்தில் கண்ணுக்கு இருந்த முக்கியத்துவம் புலப்படுகின்றது.
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
பழைமையான இலக்கியங்களில் பெண்களின் முகம், விழி, இடை மற்றும் மார்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பெண்ணின் முகத்தை நிலவு, மலர், நதி, இயற்கை போன்றவற்றுக்கு ஒப்பிட்டிருப்பதையும் நோக்கக்கூடியதாக உள்ளது.
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் செங்கையால்
காத்தாள்; அக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!
மலரைக் கொய்பவளாகிய ஒரு பெண்ணின் ஒளி வீசும் முகத்தைச் செந்தாமரை மலர் என்று கருதி மொய்க்கின்ற வண்டுகளை, அவள் தனது செந்நிறமான கையால் தடுத்து நின்றாள். அக்கைகளையும் காந்தள் மலர் எனக் கருதி வண்டுகள் மொய்த்தன என நளவெண்பாவில் கூறப்பட்டதில் இருந்து பெண்களை மலருக்கு ஒப்பிட்டமை நன்கு புலனாகிறது.

காக்கா! காக்கா! கண்ணுக்கு மை கொண்டு வா" போன்ற வாய் மொழி இலக்கியங்கள் ஊடாகவும், நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாகவும் கண்ணின் முக்கியத்துவம் நன்கு புலப்படுகிறது.

காதலின் முக்கியமான அடையாளமாகவும் கண் கருதப்படுகிறது. கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.. என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை, கண்ணுக்கு மையழகு.. கவிதைக்கு பொய்யழகு.. அவரைக்கு பூவழகு.. அவருக்கு நான் அழகு போன்ற தற்கால சினிமாக் கவி வரிகளைக் கூட உதாரணமாகக் கூறலாம்.

அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களின் கண்களை கயல், வில், வாள் போன்றவற்றுக்கு ஒப்பிட்டுப் பேசும் வழக்கம் காணப்படுகிறது. பழங்காலத்தில் பெண்கள் தங்கள் கண்களைப் பாதுகாப்பதற்கும், அழகு படுத்துவதற்கும் குளிர்ந்த நீரையும், இயற்கையான முறையில் செய்யப்பட்ட கண் மையையும் பயன்படுத்தி வந்தார்கள்.

இயற்கையான முறையில் செய்யப்படும் கண் மையை சிறுவர் முதல் பெரியவர் வரை, ஆண் பெண் வேறுபாடின்றி இட்டு வந்தமையை நாம் அறிந்து கொள்கிறோம். ஆரம்ப காலங்களில் பாதுகாப்பிற்காகப் பூசப்பட்ட கண் மையானது, பின்னர் அழகிற்காக இடப்படும் வழக்கமாக மாறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மருத்துவக் குணங்கொண்ட கரிசலாங்கண்ணி விதையை எடுத்து, அதை நன்றாக வறுத்துப் பொடியாக்கி, அதனுடன் சுத்தமான எள் கொண்டு செய்யப்பட்ட நல்லெண்ணெய் கலந்து, இளம் சூடான நெருப்பில் பதமாகக் கலந்து தூய்மையான கண் மை தயாரிக்கப்படும்.

கரிசலாங்கண்ணியானது நிறைந்த மருத்துவக் குணங்கொண்ட ஒரு செடியாகும். நல்லெண்ணெய் என்பது உடலை குளிர்மைப் படுத்தக் கூடிய ஒன்றாகும். எனவே கரிசாலாங்கண்ணியும், நல்லெண்ணெயும் ஒன்று சேர்ந்து கண்களுக்குக் குளிர்ச்சியையும், பாதுகாப்பையும் கொடுக்கும். கண் மையை கண்களின் கீழ் இமை மற்றும் மேல் இமை ஆகிய இரண்டு இமைகளுக்கும் பூச வேண்டும். இரண்டு இமைகளும் ஒன்றோடு ஒன்று சேரும்போது கண்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்படும் என்பதே காரணம் ஆகும்.

பொதுவாக நாதஸ்வரக் கலைஞர்கள், தவில் கலைஞர்கள் ஆகியோர் கண்களுக்கு கண் மை பூசும் வழக்கத்தைக் கொண்டவர்கள். காரணம் என்னவெனில்; தாங்கள் வாசிக்கும் தவில், நாதஸ்வர இசைக்கேற்றவாறு கண்களைப் பாவத்துடன் அசைத்து அழகாகத் தோன்றுவதற்கும், சூழலிலுள்ள மாசுக்களில் இருந்து தங்கள் கண்களை பாதுகாப்பதற்குமே ஆகும்.

தற்காலத்தில் உள்ள அழகு நிலையங்களில் கண்களின் கீழ் உள்ள கரு வளையங்களை நீக்குவதற்காகவும், கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்காகவும் பல்வேறுபட்ட வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். கண்களுக்கு அடியில் செய்யப்படும் மசாஜ், குளிர்ந்த நீரில் பிழிந்த சுத்தமான பஞ்சை மூடிய கண்களின் மேல் வைப்பது, வெள்ளரிக்காய்த் துண்டுகளை மூடிய கண்களின் மேல் வைப்பது, தேவையான சந்தர்ப்பங்களில் அளவான மேக்கப் போன்றவற்றைக் கூறலாம்" என்கிறார்கள் அழகுக் கலைஞர்கள்.

சத்தான உணவு, பால், இயற்கைக் காய்கறி மற்றும் கனி வகைகள், தேவையான அளவு ஓய்வு, நல்ல தூக்கம், சுத்தமான காற்று, அளவான உடற்பயிற்சி முதலியனவும் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் கண்களையும் அழகாக்கும்" என வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே வாழ்விலக்கணத்தை உலகிற்குக் கொடுத்த வள்ளுவன் கண்ணோடு கண் நோக்கும் போது வாய்ச் சொற்களுக்கு என்ன பயன் இருக்க முடியும் என்பதை,

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல

என அழகாக எடுத்துரைப்பதில் இருந்து கண்ணுக்கு உள்ள முக்கியத்துவம் நன்கு புலப்படுகிறது. எனவே கண்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பேணுவோம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 




செம்பாட்டு மண்ணின் பன்பாட்டு வேர் மகாஜனா





By rajah

27-08-2012
 
லங்கையின் வட பகுதியில் நில வளம், நீர் வளம், கலை வளம், தெய்வீக சிந்தனை, கல்வி வளம், தொழில் வளம் முதலான அனைத்து வளங்களும் நிறைந்துள்ள வலிகாமம் பிரதேசத்திற்கு முக்கிய அடித்தளமாக விளங்குவது மகாஜனாக் கல்லூரி ஆகும். இலங்கையின் கல்வி வளர்ச்சியில் முக்கியமான இடம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கு உண்டு.  நல்லைநகர் நாவலர் பெருமான் ""சுதேசிகளே! சொந்தப் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும், சைவப் பண்பாட்டின் கருவூலத்தையும் காப்பாற்றுவதற்குக் கல்லூரிகளை நிறுவுங்கள்'' என இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தன் கருத்தை முன் வைத்தார்.

அக்காலங்களில் நாவலர் பெருமானின் வாக்கைத் தெய்வவாக்காகக் கொண்ட சைவப் பெரியார் பலரும் பாடசாலைகளை ஸ்தாபிக்க தலைப்பட்டனர். பாவலர் அருளம்பலம் துரையப்பாபிள்ளை அவர்கள் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெல்லிப்பழைக் கிராமத்தில் பனஞ்சோலைகள் நிறைந்த இடத்தில் வியத்தகு மகாஜனா பாடசாலையை 1910 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 14 ஆம் திகதி தோற்றுவித்தார். இவர் ஒரு பாவலர்; புலமையாளர்; கல்விமான்; தேசப்பற்றாளர். இம்மாநிலம் பயனுற்று, மண்ணுலகம் மாண்பு பெற வாழும் வாழ்வே உண்மையான வாழ்வு என உலகுக்கு உணர்த்தியவர்தான் பாவலர். அவரது உயர்ந்த சிந்தனைகளாலும், நோக்கங்களாலும் உருவான "மஹாஜனா' என்னும் விருட்சம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படிக்கட்டைக் கடந்து, நூற்றாண்டைக் கடந்து, பாவலரின் கனவை நிஜமாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

1910 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் பாடசாலையுடனான தொடர்பை முறித்த பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தனது வீட்டில் மகாஜனா பள்ளிக்குக் கால்கோள் எடுத்தார். அதேகாலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளான கொக்குவில் இந்துப் பாடசாலை, மானிப்பாய் இந்துப் பாடசாலை போன்று தெல்லிப்பழை இந்துப் பாடசாலை என பாடசாலைக்குப் பெயர் சூட்டாமல், "மகாஜனா' எனப் பெயர் சூட்டியமை "யாவர்க்கும் உரியது' என்ற பாவலரின் தூரநோக்குப் பார்வையைப் புலப்படுத்துகிறது. 1911 ஆம் ஆண்டு பாடசாலைக்கான பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்த பாவலர், 1912 ஆம் ஆண்டு தற்போதைய கல்லூரி அமைந்துள்ள இடத்தில் பாடசாலைக்கான கட்டடத்தை நிறுவினார். 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக பாடசாலைக் கட்டடம் தரைமட்டமானதுடன், மீண்டும் பாவலரது வீட்டில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. 1919 ஆம் ஆண்டு தரைமட்டமான பாடசாலை மீண்டும் உயிர்பெற்று கட்டடம் கட்டப்பட்டு, பாடசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது. 1926 ஆம் ஆண்டு மகாஜனாவின் ஆரம்ப பாடசாலை தெல்லிப்பழை  சரஸ்வதி கனிட்ட தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதுடன், அது 1928 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

அந்நிய ஆதிக்கத்தால் தமிழர் பண்பாடுகள் அழிவடையக் கூடாது என்ற ஆழமான உணர்வுகளால் உந்தப்பட்டு பாவலர் மகாஜனாவை ஆரம்பித்தார் என்றே வரலாறுகள் கூறுகின்றன. அம்பனைக் கிராம ஏழை விவாசாயிகளின் பிள்ளைகள் நிலையான செல்வமான கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இப்பாடசாலையை ஸ்தாபித்த பாவலர், இப்பாடசாலையில் 25.06.1929 வரை அதிபராகவும் இருந்து சேவையாற்றி மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் திரு.கா.சின்னப்பா அதிபராகப் பதவியேற்றார். 1935 ஆம் ஆண்டு அதிபர் கா.சின்னப்பா  தலைமையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு, முதலாவது "மகாஜனன்' நூல் வெளியிடப்பட்டது.

மகாஜனாவானது, சைவத் தமிழ்ப் பண்பாட்டைக் கருவூலமாகக் கொண்டு கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. மக்கள் இக்கல்லூரியின் ஸ்தாபகரான பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களைக் "கல்வியின் காவலனாக'ப் போற்றுகிறார்கள். தந்தை வழியில் கர்ம வீரராக மகாஜனாக் கல்லூரியைக் கட்டியெழுப்பியவர் ஆளுமை மிக்க அவரது புதல்வர் "மகாஜன சிற்பி' அமரர் து.ஜயரத்தினம் அவர்கள். அவர் 1936 ஆம் ஆண்டு பாடசாலையில் சாரணியத்தை ஆரம்பித்து வைத்ததுடன், 1945 ஆம் ஆண்டு பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றார். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபைத் தலைவராக அணி சேர்த்த இவர், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு "துர்க்கா துரந்தரி' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 1947 ஆம் ஆண்டு பாடசாலை இரண்டாம் தரப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன், அதே ஆண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்கள் பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டு மகாஜனா முதற்தர கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதுடன், அதிபர் து.ஜயரத்தினம் வடமாகாண ஆசிரியர் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1950 ஆம் ஆண்டு கல்லூரியின் வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கும் முகமாக இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 1951 ஆம் ஆண்டு வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் கல்லூரி கீதம் மற்றும் கொடி கீதம் ஆகிய இரண்டையும் இயற்றினார். மேலும் அதே ஆண்டு முதன் முதலாக பொறியியல் துறைக்கு திரு.அ.வேல்சாமி பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார். தொடர்ந்து 1952 ஆம் ஆண்டு முதன் முதலாக திரு. எஸ். ஐ. சத்தியோசாதம் விஞ்ஞானத் துறைக்கும், திரு.கே.நல்லைநாதன் மற்றும் திரு.இ.குமாரதேவன் ஆகியோர் கலைத் துறைக்கும் தெரிவானார்கள். 1954 ஆம் ஆண்டு கல்லூரிக்கு நிதி சேகரிக்கும் முகமாக மிகப் பிரமாண்டமான களியாட்ட விழாவை து.ஜயரத்தினம் அவர்கள் ஒழுங்கு செய்தார். இக்களியாட்ட விழா ஒரு மாதம் நடைபெற்றதுடன், அதில் இந்தியக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்களியாட்ட விழாவில் லொத்தர் சீட்டிழுப்பு மூலம் கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

1955 ஆம் ஆண்டு துரையப்பா மண்டபம் (பொன் விழா மண்டபம்), நூல் நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1960 ஆம் ஆண்டு கல்லூரி தனது பொன் விழாவை கொண்டாடியதுடன், இவ்விழா துரையப்பாபிள்ளை ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவுடன் ஆரம்பமானது. இதன்போது கல்லூரி பொன்விழா மலர் வெளியிடப்பட்டதுடன், கல்லூரியில் சிவகாமி சமேத ஆனந்த நடராசர் ஆலயம் சமய சடங்கு கிரியைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கல்லூரியானது அவ்வருடம் "தனியார் பாடசாலை' என்னும் அந்தஸ்தில் இருந்து "அரசாங்கப் பாடசாலை' என்னும் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. அவ்வருடம் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1800 ஐ எட்டியது. கல்லூரியின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக 1961 ஆம் ஆண்டு கல்லூரி அதி உயர் தரத்துக்கு உயர்த்தப்பட்டது. 1969 ஆம் ஆண்டு கல்லூரியின் வைரவிழா மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் 1940  1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹாஜனாவின் மும்மணிகளான மகாகவி உருத்திரமூர்த்தி, அ.செ.முருகானந்தம், அ.ந.கந்தசாமி மற்றும் செ.கதிரேசப்பிள்ளை ஆகியோர் ஈழத்து இலக்கிய உலகிற்கு வழங்கிய பங்களிப்புக்களால் மகாஹனாவின் பெயர் அழியா இடம் பெற்றது.   

பாவலரின் மருமகளும், மகாஜன சிற்பி ஜயரத்தினம் அவர்களின் மனைவியுமான திருமதி. இராணிரத்தினம் ஜயரத்தினம் கடந்த 07.06.2010 அன்று தனது 90 ஆவது வயதில் லண்டனில் காலமானர். அவர் தனது கணவருடன் இணைந்து மகாஜன அன்னையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தன்னை அர்ப்பணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1971, 1972 ஆம் ஆண்டுகளில் முறையே  திரு.மா.மாகாதேவன், திரு.பொ.ச.குமாரசாமி ஆகியோர் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்றனர். 1973ஆம்                        ஆண்டு திரு.க.சிவசுப்பிரமணியம் அதிபராகப் பொறுப்பேற்றதுடன், 1976 ஆம் ஆண்டு திரு.பொ.கனகசபாபதி அதிபராகக் கடமையேற்றார். தொடர்ச்சியாகப் பல ஆளுமை மிக்க அதிபர்களையும், தன்னலம் கருதாத பல நூறு ஆசிரியர்களையும் இக்கல்லூரி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  1987 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் (ஐக்கிய இராட்சியம்) ஆரம்பிக்கப்பட்டதுடன், 1988 ஆம் ஆண்டு கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் சகல வசதிகள் கொண்ட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்ட 100 பாடசாலைகளில் மகாஜனாவும் ஒன்று என்பதுடன், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 பாடசாலைகளில் இதுவும் ஒன்று என்ற பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. 1991 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் (பிரான்ஸ்) உருவாக்கப்பட்டதுடன், 1994 ஆம் ஆண்டு கொழும்பு பழைய மாணவர் சங்கம் மீளமைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட போர் அனர்த்தம் காரணமாக கல்லூரி இடம்பெயர்ந்து, மீண்டும் தெல்லிப்பழையில் 1999 ஆம் ஆண்டு இயங்க ஆரம்பித்தது. 2001 ஆம் ஆண்டு ஸ்கந்தவரோதயக் கல்லூரியுடன் 'ஆச்ttடூஞு ணிஞூ tடஞு ஏஞுணூணிண்' துடுப்பாட்டப் போட்டி ஆரம்பிக்கப்பட்டதுடன், 2003 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் (ஜேர்மனி) ஆரம்பிக்கப்பட்டது. 

இக்கல்லூரியானது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கி, பெரும்பான்மையான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாவதற்கு ஊன்று கோலாக இருந்துள்ளது. இலங்கையில் கல்விமான்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் பலரை உருவாக்கும் உன்னத பணியில் மகாஜனாவுக்கு தனிப் பங்கு உண்டு. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் கல்லூரி பல இடங்களில் இடம் பெயர்ந்து, தற்காலிக கொட்டகைகள் பலவற்றில் இயங்கியமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கல்லூரி தனது சொந்த இடத்தில் நூற்றாண்டைக் கண்டமை மன மகிழ்வுக்கு உரியது.

 இங்கு கல்வி கற்ற ஒவ்வொருவரும் மகாஜனாவை தங்கள் அன்னையாக உணர்கிறார்கள்; பார்க்கிறார்கள்; மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள். ""மகாஜனா எங்கள் தாய்; எங்களது அறிவின் ஆதாரம்; நாங்கள் வரித்துக் கொண்ட இலட்சியங்கள், எங்களை வழிப்படுத்துகின்ற விழுமியங்கள், எங்கள் வாழ்வுக்கான திறன்கள், மேலான ரசனைகள் அனைத்தும் மகாஜனா அன்னையின் அருட்கொடைகள்'' என பேராசிரியர் நா.சண்முகலிங்கம் அவர்கள் பெருமை கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியின் பலனால் பல கல்வி நிறுவனங்கள் உருவாகின. அக்கல்வி நிறுவனங்களுக்கும் மகாஜனாவுக்கும் பாரியதொரு வேறுபாடு உண்டு. ஏனைய பாடசாலைகள் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த பேருள்ளம் கொண்ட நிலச் சுவாந்தார்கள் மற்றும் வள்ளல்கள் முதலியோரால் ஆரம்பிக்கப்பட்டன. அதேவேளை "இந்து போர்ட்' முதலிய கல்வி நிறுவனங்களால் ஸ்தாபித்துப் பராமரிக்கப் பட்டன. ஆனால் மகாஜனாக் கல்லூரியானது, கல்வி அறிஞர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு, கிராம மக்களாலும், பழைய மாணவர்களாலும், பெற்றோர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதனாலேயே ஒரு சிறிய பாடசாலை "கிராமத்துப் பல்கலைக்கழகமாக'ப் பரிணமித்தது என்றால் அது மிகையாகாது.

அறுபது  எழுபதுகளில் விளையாட்டுத்துறைகளில் குறிப்பாக உதைபந்தாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலும், இலங்கை முழுவதும் பல சாதனைகளை இக்கல்லூரி புரிந்துள்ளது.

"உனை நீ அறி' (ஓணணிதீ tடதூண்ஞுடூஞூ ) என்ற பாடசாலை விருது வாக்குக்கு அமைய பாடசாலையின் தூரநோக்கு "உயர் விழுமியங்களைப் பேணும் பூரண மனிதத்துவ மாணவ சமூக உருவாக்கம்' (இணூஞுச்tடிணிண ணிஞூ ணீஞுணூஞூஞுஞிt டதட்ச்ணடிண்tடிஞி ண்ணிஞிடிஞுtதூ ணிஞூ ஞ்ணூஞுச்t திச்டூதஞுண்) ஆகும். இக்கல்லூரியில் தற்போது இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்காக மாணவர் முதல்வர் ஒன்றியம், உயர் தர மாணவர் மன்றம், தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், இந்து மன்றம், கிறிஸ்தவ மன்றம், விஞ்ஞான மன்றம், சமூகக் கல்வி மன்றம், சாரணியம், சுற்றாடல் பாதுகாப்பு மன்றம், ஒழுக்காற்று சபை, நுண்கலை மன்றம், சதுரங்கக் கழகம், இளம் புத்தூக்குனர் கழகம், நூலகர் மன்றம், பொது அறிவு மன்றம், விவாத மன்றம், மனைப்பொருளியல் மன்றம், தகவல் தொழிநுட்ப மன்றம், புகைப்படக் கலை மன்றம் முதலிய மன்றங்களும், இலங்கைச் செஞ்சிலுவை சங்கம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு, மாணவர் நலன்புரி படைப்பிரிவு முதலிய கழகங்களும் இயங்கின்றன. 

இலங்கை அரசாங்கம் இக்கல்லூரி ஸ்தாபகரான அருளம்பலம் துரையாப்பாபிள்ளை அவர்களை கௌரவிக்கும் முகமாக ஞாபகார்த்த முத்திரை ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும்  இக்கல்லூரிப் பழைய மாணவரான பேராசிரியர் அருட்குமரன் "ஓணடிஞ்டtடணிணிஞீ"  பட்டம் பெற்றமையும் கல்லூரிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பேராசிரியர் அருட்குமரனுக்கு இவ்விருது கிடைத்த செய்தியை  ஃணிணஞீணிண எச்த்ஞுttஞு  “கூடஞு ட்ணிண்t ஞூணிணூதீச்ணூஞீtடடிணடுடிணஞ் ட்ஞுஞீடிஞிச்டூ டூஞுச்ஞீஞுணூ டிண tடடிண் ஞிணிதtணூதூ” எனத் தனது இணையத் தளத்தில் விபரிக்கிறது.

ஆரம்ப காலத்தில் கிராமச் சூழலில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அறிவாலயம், படிப்படியாக வளர்ச்சி கண்டு இலங்கையின் பல பாகங்களில் உள்ள மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ததுடன், கடந்த நூறு ஆண்டுகளில் தலை சிறந்த கல்விமான்கள் பலரையும் உருவாக்கியுள்ளமை கல்லூரிக்கும், ஸ்தாபகருக்கும் மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும் கிடைத்த அளப்பரிய வெற்றியாகும். வேளாண்மை வளம் மிக்க செம்பாட்டு மண்ணில், தமிழர் பண்பாட்டு வேர்கள் ஆழப் பதிந்துள்ள தெல்லிப்பழை ஊரின் நடுவில், சைவமும் தமிழும் நிறைந்த கல்விச் செல்வம் தழைத்தோங்க வேண்டும் என்ற அவாவுடன் ஆரம்பிக்கப்பட்ட மகாஜனாவின் தொடக்கமானது, தமிழர்களின் மிக உயர்ந்த வரலாற்று நிகழ்வாக பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. தம்மொழி, மதம், நிலம், பண்பாடு முதலியவற்றைப் பேணிப் பாதுகாக்க நினைக்கும் ஒரு மனிதனின் உயர்ந்த எண்ணங்கள் வாழும் ஆலயமாக "மஹாஜனா அன்னை' போற்றப்படுகிறாள்.                

  உமா பிரகாஷ்

செம்பாட்டு மண்ணின் பன்பாட்டு வேர் மகாஜனா

இலங்கையின் வட பகுதியில் நில வளம், நீர் வளம், கலை வளம், தெய்வீக சிந்தனை, கல்வி வளம், தொழில் வளம் முதலான அனைத்து வளங்களும் நிறைந்துள்ள வலிகாமம் பிரதேசத்திற்கு முக்கிய அடித்தளமாக விளங்குவது மகாஜனாக் கல்லூரி ஆகும். இலங்கையின் கல்வி வளர்ச்சியில் முக்கியமான இடம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கு உண்டு.  நல்லைநகர் நாவலர் பெருமான் 'சுதேசிகளே! சொந்தப் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும், சைவப் பண்பாட்டின் கருவூலத்தையும் காப்பாற்றுவதற்குக் கல்லூரிகளை நிறுவுங்கள்'' என இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தன் கருத்தை முன் வைத்தார்.

அக்காலங்களில் நாவலர் பெருமானின் வாக்கைத் தெய்வவாக்காகக் கொண்ட சைவப் பெரியார் பலரும் பாடசாலைகளை ஸ்தாபிக்க தலைப்பட்டனர். பாவலர் அருளம்பலம் துரையப்பாபிள்ளை அவர்கள் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெல்லிப்பழைக் கிராமத்தில் பனஞ்சோலைகள் நிறைந்த இடத்தில் வியத்தகு மகாஜனா பாடசாலையை 1910 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 14 ஆம் திகதி தோற்றுவித்தார். இவர் ஒரு பாவலர்; புலமையாளர்; கல்விமான்; தேசப்பற்றாளர். இம்மாநிலம் பயனுற்று, மண்ணுலகம் மாண்பு பெற வாழும் வாழ்வே உண்மையான வாழ்வு என உலகுக்கு உணர்த்தியவர்தான் பாவலர். அவரது உயர்ந்த சிந்தனைகளாலும், நோக்கங்களாலும் உருவான 'மஹாஜனா' என்னும் விருட்சம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படிக்கட்டைக் கடந்து, நூற்றாண்டைக் கடந்து, பாவலரின் கனவை நிஜமாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

1910 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் பாடசாலையுடனான தொடர்பை முறித்த பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தனது வீட்டில் மகாஜனா பள்ளிக்குக் கால்கோள் எடுத்தார். அதேகாலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளான கொக்குவில் இந்துப் பாடசாலை, மானிப்பாய் இந்துப் பாடசாலை போன்று தெல்லிப்பழை இந்துப் பாடசாலை என பாடசாலைக்குப் பெயர் சூட்டாமல், 'மகாஜனா' எனப் பெயர் சூட்டியமை 'யாவர்க்கும் உரியது' என்ற பாவலரின் தூரநோக்குப் பார்வையைப் புலப்படுத்துகிறது. 1911 ஆம் ஆண்டு பாடசாலைக்கான பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்த பாவலர், 1912 ஆம் ஆண்டு தற்போதைய கல்லூரி அமைந்துள்ள இடத்தில் பாடசாலைக்கான கட்டடத்தை நிறுவினார். 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக பாடசாலைக் கட்டடம் தரைமட்டமானதுடன், மீண்டும் பாவலரது வீட்டில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. 1919 ஆம் ஆண்டு தரைமட்டமான பாடசாலை மீண்டும் உயிர்பெற்று கட்டடம் கட்டப்பட்டு, பாடசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது. 1926 ஆம் ஆண்டு மகாஜனாவின் ஆரம்ப பாடசாலை தெல்லிப்பழை  சரஸ்வதி கனிட்ட தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதுடன், அது 1928 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

அந்நிய ஆதிக்கத்தால் தமிழர் பண்பாடுகள் அழிவடையக் கூடாது என்ற ஆழமான உணர்வுகளால் உந்தப்பட்டு பாவலர் மகாஜனாவை ஆரம்பித்தார் என்றே வரலாறுகள் கூறுகின்றன. அம்பனைக் கிராம ஏழை விவாசாயிகளின் பிள்ளைகள் நிலையான செல்வமான கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இப்பாடசாலையை ஸ்தாபித்த பாவலர், இப்பாடசாலையில் 25.06.1929 வரை அதிபராகவும் இருந்து சேவையாற்றி மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் திரு.கா.சின்னப்பா அதிபராகப் பதவியேற்றார். 1935 ஆம் ஆண்டு அதிபர் கா.சின்னப்பா  தலைமையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு, முதலாவது "மகாஜனன்' நூல் வெளியிடப்பட்டது.

மகாஜனாவானது, சைவத் தமிழ்ப் பண்பாட்டைக் கருவூலமாகக் கொண்டு கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. மக்கள் இக்கல்லூரியின் ஸ்தாபகரான பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களைக் 'கல்வியின் காவலனாக'ப் போற்றுகிறார்கள். தந்தை வழியில் கர்ம வீரராக மகாஜனாக் கல்லூரியைக் கட்டியெழுப்பியவர் ஆளுமை மிக்க அவரது புதல்வர் 'மகாஜன சிற்பி' அமரர் து.ஜயரத்தினம் அவர்கள். அவர் 1936 ஆம் ஆண்டு பாடசாலையில் சாரணியத்தை ஆரம்பித்து வைத்ததுடன், 1945 ஆம் ஆண்டு பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றார். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபைத் தலைவராக அணி சேர்த்த இவர், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு 'துர்க்கா துரந்தரி' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 1947 ஆம் ஆண்டு பாடசாலை இரண்டாம் தரப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன், அதே ஆண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்கள் பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டு மகாஜனா முதற்தர கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதுடன், அதிபர் து.ஜயரத்தினம் வடமாகாண ஆசிரியர் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1950 ஆம் ஆண்டு கல்லூரியின் வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கும் முகமாக இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 1951 ஆம் ஆண்டு வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் கல்லூரி கீதம் மற்றும் கொடி கீதம் ஆகிய இரண்டையும் இயற்றினார். மேலும் அதே ஆண்டு முதன் முதலாக பொறியியல் துறைக்கு திரு.அ.வேல்சாமி பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார். தொடர்ந்து 1952 ஆம் ஆண்டு முதன் முதலாக திரு. எஸ். ஐ. சத்தியோசாதம் விஞ்ஞானத் துறைக்கும், திரு.கே.நல்லைநாதன் மற்றும் திரு.இ.குமாரதேவன் ஆகியோர் கலைத் துறைக்கும் தெரிவானார்கள். 1954 ஆம் ஆண்டு கல்லூரிக்கு நிதி சேகரிக்கும் முகமாக மிகப் பிரமாண்டமான களியாட்ட விழாவை து.ஜயரத்தினம் அவர்கள் ஒழுங்கு செய்தார். இக்களியாட்ட விழா ஒரு மாதம் நடைபெற்றதுடன், அதில் இந்தியக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்களியாட்ட விழாவில் லொத்தர் சீட்டிழுப்பு மூலம் கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

1955 ஆம் ஆண்டு துரையப்பா மண்டபம் (பொன் விழா மண்டபம்), நூல் நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1960 ஆம் ஆண்டு கல்லூரி தனது பொன் விழாவை கொண்டாடியதுடன், இவ்விழா துரையப்பாபிள்ளை ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவுடன் ஆரம்பமானது. இதன்போது கல்லூரி பொன்விழா மலர் வெளியிடப்பட்டதுடன், கல்லூரியில் சிவகாமி சமேத ஆனந்த நடராசர் ஆலயம் சமய சடங்கு கிரியைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கல்லூரியானது அவ்வருடம் 'தனியார் பாடசாலை' என்னும் அந்தஸ்தில் இருந்து 'அரசாங்கப் பாடசாலை' என்னும் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. அவ்வருடம் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1800 ஐ எட்டியது. கல்லூரியின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக 1961 ஆம் ஆண்டு கல்லூரி அதி உயர் தரத்துக்கு உயர்த்தப்பட்டது. 1969 ஆம் ஆண்டு கல்லூரியின் வைரவிழா மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் 1940  1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹாஜனாவின் மும்மணிகளான மகாகவி உருத்திரமூர்த்தி, அ.செ.முருகானந்தம், அ.ந.கந்தசாமி மற்றும் செ.கதிரேசப்பிள்ளை ஆகியோர் ஈழத்து இலக்கிய உலகிற்கு வழங்கிய பங்களிப்புக்களால் மகாஹனாவின் பெயர் அழியா இடம் பெற்றது.   

பாவலரின் மருமகளும், மகாஜன சிற்பி ஜயரத்தினம் அவர்களின் மனைவியுமான திருமதி. இராணிரத்தினம் ஜயரத்தினம் கடந்த 07.06.2010 அன்று தனது 90 ஆவது வயதில் லண்டனில் காலமானர். அவர் தனது கணவருடன் இணைந்து மகாஜன அன்னையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தன்னை அர்ப்பணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1971, 1972 ஆம் ஆண்டுகளில் முறையே  திரு.மா.மாகாதேவன், திரு.பொ.ச.குமாரசாமி ஆகியோர் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்றனர். 1973ஆம் ஆண்டு திரு.க.சிவசுப்பிரமணியம் அதிபராகப் பொறுப்பேற்றதுடன், 1976 ஆம் ஆண்டு திரு.பொ.கனகசபாபதி அதிபராகக் கடமையேற்றார். தொடர்ச்சியாகப் பல ஆளுமை மிக்க அதிபர்களையும், தன்னலம் கருதாத பல நூறு ஆசிரியர்களையும் இக்கல்லூரி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் (ஐக்கிய இராட்சியம்) ஆரம்பிக்கப்பட்டதுடன், 1988 ஆம் ஆண்டு கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் சகல வசதிகள் கொண்ட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்ட 100 பாடசாலைகளில் மகாஜனாவும் ஒன்று என்பதுடன், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 பாடசாலைகளில் இதுவும் ஒன்று என்ற பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. 1991 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் (பிரான்ஸ்) உருவாக்கப்பட்டதுடன், 1994 ஆம் ஆண்டு கொழும்பு பழைய மாணவர் சங்கம் மீளமைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட போர் அனர்த்தம் காரணமாக கல்லூரி இடம்பெயர்ந்து, மீண்டும் தெல்லிப்பழையில் 1999 ஆம் ஆண்டு இயங்க ஆரம்பித்தது. 2001 ஆம் ஆண்டு ஸ்கந்தவரோதயக் கல்லூரியுடன் 'Battle of the Heros' துடுப்பாட்டப் போட்டி ஆரம்பிக்கப்பட்டதுடன், 2003 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் (ஜேர்மனி) ஆரம்பிக்கப்பட்டது. 

இக்கல்லூரியானது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கி, பெரும்பான்மையான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாவதற்கு ஊன்று கோலாக இருந்துள்ளது. இலங்கையில் கல்விமான்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் பலரை உருவாக்கும் உன்னத பணியில் மகாஜனாவுக்கு தனிப் பங்கு உண்டு. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் கல்லூரி பல இடங்களில் இடம் பெயர்ந்து, தற்காலிக கொட்டகைகள் பலவற்றில் இயங்கியமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கல்லூரி தனது சொந்த இடத்தில் நூற்றாண்டைக் கண்டமை மன மகிழ்வுக்கு உரியது.

 இங்கு கல்வி கற்ற ஒவ்வொருவரும் மகாஜனாவை தங்கள் அன்னையாக உணர்கிறார்கள்; பார்க்கிறார்கள்; மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள். 'மகாஜனா எங்கள் தாய்; எங்களது அறிவின் ஆதாரம்; நாங்கள் வரித்துக் கொண்ட இலட்சியங்கள், எங்களை வழிப்படுத்துகின்ற விழுமியங்கள், எங்கள் வாழ்வுக்கான திறன்கள், மேலான ரசனைகள் அனைத்தும் மகாஜனா அன்னையின் அருட்கொடைகள்'' என பேராசிரியர் நா.சண்முகலிங்கம் அவர்கள் பெருமை கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியின் பலனால் பல கல்வி நிறுவனங்கள் உருவாகின. அக்கல்வி நிறுவனங்களுக்கும் மகாஜனாவுக்கும் பாரியதொரு வேறுபாடு உண்டு. ஏனைய பாடசாலைகள் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த பேருள்ளம் கொண்ட நிலச் சுவாந்தார்கள் மற்றும் வள்ளல்கள் முதலியோரால் ஆரம்பிக்கப்பட்டன. அதேவேளை "இந்து போர்ட்' முதலிய கல்வி நிறுவனங்களால் ஸ்தாபித்துப் பராமரிக்கப் பட்டன. ஆனால் மகாஜனாக் கல்லூரியானது, கல்வி அறிஞர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு, கிராம மக்களாலும், பழைய மாணவர்களாலும், பெற்றோர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதனாலேயே ஒரு சிறிய பாடசாலை 'கிராமத்துப் பல்கலைக்கழகமாக'ப் பரிணமித்தது என்றால் அது மிகையாகாது.

அறுபது  எழுபதுகளில் விளையாட்டுத்துறைகளில் குறிப்பாக உதைபந்தாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலும், இலங்கை முழுவதும் பல சாதனைகளை இக்கல்லூரி புரிந்துள்ளது.

"உனை நீ அறி' (Know thyself) என்ற பாடசாலை விருது வாக்குக்கு அமைய பாடசாலையின் தூரநோக்கு 'உயர் விழுமியங்களைப் பேணும் பூரண மனிதத்துவ மாணவ சமூக உருவாக்கம்' (Creation of perfect humanistic society of great values) ஆகும். இக்கல்லூரியில் தற்போது இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்காக மாணவர் முதல்வர் ஒன்றியம், உயர் தர மாணவர் மன்றம், தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், இந்து மன்றம், கிறிஸ்தவ மன்றம், விஞ்ஞான மன்றம், சமூகக் கல்வி மன்றம், சாரணியம், சுற்றாடல் பாதுகாப்பு மன்றம், ஒழுக்காற்று சபை, நுண்கலை மன்றம், சதுரங்கக் கழகம், இளம் புத்தூக்குனர் கழகம், நூலகர் மன்றம், பொது அறிவு மன்றம், விவாத மன்றம், மனைப்பொருளியல் மன்றம், தகவல் தொழிநுட்ப மன்றம், புகைப்படக் கலை மன்றம் முதலிய மன்றங்களும், இலங்கைச் செஞ்சிலுவை சங்கம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு, மாணவர் நலன்புரி படைப்பிரிவு முதலிய கழகங்களும் இயங்கின்றன. 

இலங்கை அரசாங்கம் இக்கல்லூரி ஸ்தாபகரான அருளம்பலம் துரையாப்பாபிள்ளை அவர்களை கௌரவிக்கும் முகமாக ஞாபகார்த்த முத்திரை ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும்  இக்கல்லூரிப் பழைய மாணவரான பேராசிரியர் அருட்குமரன் 'Knighthood'   பட்டம் பெற்றமையும் கல்லூரிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பேராசிரியர் அருட்குமரனுக்கு இவ்விருது கிடைத்த செய்தியை London Gazette - 'The most forward-thinking medical leader in this coutry'  எனத் தனது இணையத் தளத்தில் விபரிக்கிறது.

ஆரம்ப காலத்தில் கிராமச் சூழலில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அறிவாலயம், படிப்படியாக வளர்ச்சி கண்டு இலங்கையின் பல பாகங்களில் உள்ள மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ததுடன், கடந்த நூறு ஆண்டுகளில் தலை சிறந்த கல்விமான்கள் பலரையும் உருவாக்கியுள்ளமை கல்லூரிக்கும், ஸ்தாபகருக்கும் மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும் கிடைத்த அளப்பரிய வெற்றியாகும். வேளாண்மை வளம் மிக்க செம்பாட்டு மண்ணில், தமிழர் பண்பாட்டு வேர்கள் ஆழப் பதிந்துள்ள தெல்லிப்பழை ஊரின் நடுவில், சைவமும் தமிழும் நிறைந்த கல்விச் செல்வம் தழைத்தோங்க வேண்டும் என்ற அவாவுடன் ஆரம்பிக்கப்பட்ட மகாஜனாவின் தொடக்கமானது, தமிழர்களின் மிக உயர்ந்த வரலாற்று நிகழ்வாக பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. தம்மொழி, மதம், நிலம், பண்பாடு முதலியவற்றைப் பேணிப் பாதுகாக்க நினைக்கும் ஒரு மனிதனின் உயர்ந்த எண்ணங்கள் வாழும் ஆலயமாக "மஹாஜனா அன்னை' போற்றப்படுகிறாள்


வெனிசுலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு


 By rajah.
வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வட பகுதியான பராகுவானாவில் அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது . உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான அமுவேயில் கடந்த சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதுடன் வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்தது. இதில் 26 பேர் பலியாகினர், மேலும் 80 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 26லிருந்து 41ஆக உயர்ந்துள்ளது. 
அங்கு விபத்து ஏற்பட்டதும் அதன் அருகில் இருந்த கடைகள், வீடுகள் குலுங்கின. சுத்திகரிப்பு நிலையத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது என்று அதன் அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், நாளை முதல் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெனிசுலா துணை ஜனாதிபதி எலியாஸ் கூறுகையில்,
அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பலியானோர்களில் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18 பேர் அடக்கம். இறந்தவர்களில் 6 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.
இந்த விபத்து மிகவும் கவலை அளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சவேஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பாக, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஹியூகோ சாவிஸ் தெரிவித்துள்ளார்

அம்மா இறந்ததை அறிந்து அவரது தாலிக் கொடியை கழற்றி அடகு வைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தேன்: பிரசான்

 By rajah.27.08.2012.
கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்த ௭னக்கு பெரும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்காக வருமானத்துக்கு அப்பால் கடன் பெற்றேன். கடன்தொல்லையை ௭ன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மா,அப்பாவிடம் பணம் கேட்டேன். அவர்களும் தரவில்லை. இவ்வாறான நிலையிலேயே அவர்களுக்கும் தங்கைக்கும் அளவுக்கு அதிகமான தூக்கமருந்து வில்லைகளைக் கொடுத்தேன்.
அதில் அம்மா இறந்து விட்டார். அதனை அறிந்து நான் அம்மா அணிந்திருந்த தாலிக் கொடியைக் கழற்றி அடகு வைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தேன் ௭ன்று வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபரான மகன் பிரசான் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். 
சந்தேகநபரான மகன் கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அவரிடம் பொலிஸார் 3 மணிநேரம் விசாரணைகளை நடத்திய போதிலும் அவர் ஒருசொட்டுக் கண்ணீரையேனும் சிந்தவில்லை ௭ன்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் தாய், தந்தை, மற்றும் தங்கை ஆகிய மூவரையும் படுகொலை செய்த சந்தேகநபரான பிரசான் மூவரும் கொலையுண்டதன் பின்னர் தாயின் தாலிக்கொடி அடங்கலாக சடலங்களில் இருந்த சகல நகைகளையும் கழற்றி அவற்றை அடகு வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறித்த சந்தேக நபர் யோகட்டில் தூக்க மாத்திரையினைக் கல ந்து கொடுக்கவில்லையெனவும் மில்க்ஷெக் பழச்சாற்றுடன் கலந்தே தாய், தந்தை மற்றும் தங்கை ஆகிய மூவரையும் கொலை செய்ததாகவும் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். சந்தேக நபரான பிரசான் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள பழச்சாறு பானங்கள் விற்பனை நிலையமொன்றிலிருந்து கடந்த 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று இரவு மில்க்ஷேக் பழச்சாறு பானத்தைவாங்கிக் கொண்டு சென்றதாகவும் அதிலேயே தூளாக்கப்பட்ட தூக்க மாத்திரைகளைக் கலந்து மூவருக்கும் கொடுத்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
முதலில் பானத்தை அப்பாவுக்கும் பின்னர் அம்மாவுக்கும் கொடுத்துள்ளார். அந்த சமயம் தங்கை குளியலறையில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். தங்கை குளித்து விட்டு வந்ததும் அவளுக்காக வைத்திருந்த மில்க்ஷேக்கை அப்பா ௭டுத்துக் கொடுத்துள்ளார்.
தங்கையும் அதனை முழுமையாகக் குடித்துள்ளார். மூவரும் ௭ந்தவித சந்தேகமுமின்றி அந்தப் பழச்சாற்றினை குடித்துள்ளனர். அதன் பின்னர் சந்தேகநபர் தாயின் கழுத்திலிருந்த தாலிக்கொடி உள்ளிட்ட சகல தங்க ஆபரணங்களையும் கழற்றியதுடன் தங்கையின் கழுத்து மற்றும் காதுகளில் இருந்து நகைகளையும் கழற்றியெடுத்துக் கொண்டு மூவரையும் ஒரே கட்டிலில் வரிசையாகக் கிடக்கச் செய்து விட்டுத் தானும் சிறிதளவு தூக்க மாத்திரை கலந்த பழச்சாற்றினை அருந்திவிட்டு அன்றைய பொழுதை சடலங்களுடனேயே கழித்துள்ளார்.
அடுத்த நாள் 15 ஆம் திகதி விழித்தெழுந்த சந்தேகநபர் அன்றுமாலை கொழும்பில் சில பகுதிகளில் சுற்றித்திரிந்ததுடன் காதலியை சந்தித்து கதைத்தும் உள்ளார். அதனைத் தொடர்ந்து கொழும்பு ஹோட்டல் ஒன்றில் அன்றைய பொழுதைக் கழித்துள்ளார். அதன் பின்னர் அடுத்த நாளான 16 ஆம் திகதி மீண்டும் கொட்டகலை ராணியப்புத் தோட்டத்துக்குச் சென்று பிரசான் அங்கிருந்து மேலும் சில நகைகளையும் வங்கிப்புத்தகங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களையும் ௭டுத்துக் கொண்டு கொழும்புக்கு வந்துள்ளார்.
இவ்வாறு கொழும்புக்கு வந்த பிரசான் கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள பிரபலமான நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றில் சகல நகைகளையும் அடகு வைத்து விட்டு 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியுள்ளார். குறித்த ஹோட்டலில் இரண்டு நாள் தங்குவதற்காக கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்ட அவர் அந்த ஹோட்டலில் ஒரு நாளே தங்கியுள்ளார்.
பின்னர் 18 ஆம் திகதி பதுளைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து கொழும்பு வந்துள்ளார். இவ்வாறு பல இடங்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்த அவர் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்துள்ளார். இவ்வாறு பல இடங்களுக்கும் மாறி மாறி பயணம் செய்து கொண்டிருந்த நிலையிலேயே கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று சந்தேக நபர் கடவத்தைப் பகுதியில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டார்

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு  
 By rajah.27.08.2012.
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பை விருத்திசெய்யவும் இராணுவ முகாம்களுக்கு தேவையான விடுதி மற்றும் வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கவும் சீனா முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கையுடனான பொருளாதாரம்,வர்த்தம் மற்றும் இராணுவ உறவுகளையும் சீனா மேம்படுத்திக் கொள்ளவிருக்கின்றது.
இராணுவ நலன்புரித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கவிருக்கின்றது. அதுமட்டுமன்றி படை அதிகாரிகளின் பிள்ளைகள் கல்வி பயிலும் கொழும்பு பாதுகாப்புக் கல்லூரிக்கு உதவியளிக்கவிருக்கின்றது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கு ,கிழக்கில் இராணுவத்தைக் குறைக்குமாறு மேற்குலக நாடுகள் சிலவும் இந்தியாவும் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே சீனா இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றது.
வடக்கில் மன்னார்,பளை,ஆனையிறவு,பூநகரி,தாவடி,காரைநகர் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் உள்நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 1950 ஆம் ஆண்டில் முகாம்கள் நிறுவப்பட்டன. அவ்வாறான முகாம்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும் ௭ன்பதுடன் விடுதி வசதிகளும் மேம்படுத்த வேண்டும் ௭ன்று பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை சீனப்பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி ௭திர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் பாதுகாப்பு அமைச்சருடன் சீன பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் வருகை தரவுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி 2002 தொடக்கம் 2007 வரை சீன இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும், பின்னர் சீன மத்திய இராணுவ ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
ஜெனரல் லியாங் குவாங்லி இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப் புத் துறைசார் அதிகாரிகளையும், ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவையும் சந்தித்து இருதரப்பு  ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள் வது தொ டர்பில் பேச்சுவார்த்தை நடத்தவு ள் ளா ர் . கொழும்பிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு சீனா 198 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கவிருப்பதுடன். அரசாங்கம் 13.8 மில்லின் ரூபா செலவில் ௭ம்.ஏ–60 ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக சீனாவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்