siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 24 அக்டோபர், 2012

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி

புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012, By.Rsajah{காணொளி}
தைவானில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாயினர், 72 பேர் காயமடைந்தனர். தைவான் நகரில் உள்ள மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஐந்து மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளம் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 12 பேர் பலியாயினர், 72 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த நபர்கள் இந்நகரில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளிர்பதன அறையில் ஏற்பட்ட தீ விபத்தே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


ஈரானில் 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ஈரானில் போதை பொருளை கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடத்தல், கொலை, கொள்ளை, பெண்களை துன்புறுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது வழக்கம்.
இதன்படி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு புதிதாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை உடனடியாக இதனை நிறுத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இரண்டு முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்களுக்கே இத்தண்டனை விதித்துள்ளதாகவும், இஸ்லாமிய சட்டதிட்டத்தின் படி இது சரியான நடவடிக்கையே எனவும், நாட்டில் போதைபொருள் பிரச்சினை வளர்வதை தடுக்க இதை தவிர வேறு வழி தம்மிடம் இல்லை எனவும் ஈரானிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் 344 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மிட் ரோம்னியை மிஞ்சினார் ஒபாமா

 புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012.By.Rajah.{காணொளி,}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமாவுக்கு 48 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதிப்பது கடந்த 1960ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
இதன் படி முதல் சுற்று விவாதம் டென்வர் நகரிலும், இரண்டாவது சுற்று விவாதம் நியூயார்க்கிலும், மூன்றாவது சுற்றி விவாதம் புளோரிடாவிலும் நடந்தது.
இந்த விவாதங்களில் ஒரே மேடையில் அமர்ந்து கொண்டு ஒபாமாவும், மிட்ரோம்னியும் விவாதிப்பனர்.
முதல் சுற்று விவாதத்தில் மிட்ரோம்னியும், 2-வது சுற்று விவாவதத்தில் பராக் ஒபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சுற்று விவாதத்தில், ஒருகட்டத்தில் ஒபாமாவின் வெளிவிவகார கொள்கைகளை மிட்ரோம்னி ஏற்றுக் கொண்டார்.
எனவே ஒபாமாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சி.என்.என் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
அடுத்த மாதம் நடக்க உள்ள தேர்தலில் ஒபாமாவுக்கு 48 சதவிகித ஆதரவு உள்ளதாகவும், மிட் ரோம்னிக்கு 40 சதவிகித ஆதரவு உள்ளதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முதல் சுற்று விவாதம்

இரண்டாம் சுற்று விவாதம்

மூன்றாம் சுற்று விவாதம்


அஞ்சலிக்கு ஆர்யா கொடுத்த முத்தங்கள்


Wed, 24-10-2012.By.Rajah.கொலிவுட்டில் உருவாகி வரும் சேட்டை படத்திற்காக ஆர்யா, அஞ்சலி நடிக்கும் முத்தக்காட்சிகளை இயக்குனர் கண்ணன் எடுத்துள்ளார்.
பாலிவுட்டில் நகைச்சுவை சரவெடியாக வெடித்த டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்கே சேட்டை.
தமிழில் இப்படத்தை இயக்குனர் கண்ணன் உருவாக்க படத்தில் ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ஆர்யா அஞ்சலியின் முத்தக்காட்சிகளை இயக்குனர் கண்ணன் எடுத்து முடித்திருக்கிறார்.
அநேகமாக இக்காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி பெல்லி படத்தில் நாயகி பூர்ணா ஜெகனாதன் காரை ரிவர்ஸில் எடுக்கும் போது நாயகன் இம்ரான்கான் முத்தமிடுவது போன்ற காட்சிகளை அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

முதல் மனிதன் குரங்கு இல்லையாம்..

  October 24, 2012.By.Rajah.அணில்! சொல்கிறது புதிய ஆய்வு நமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல்,அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாசிலில் உள்ள உருவம் தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான் மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக் கூட சிக்கியுள்ளது.
இந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது.
மேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதை போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அணில் போன்ற உயிரினம் தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

தனது மரணத்தை முன்னரே பேட்டியின் மூலம் தெரிவித்த யாஷ் சோப்ரா

 

October 24, 2012.By.Rajah{காணொளி, .புகைப்படங்கள்}பாலிவுட்டில் “கிங்க் ஆப் ரொமான்ஸ்” என வர்ணிக்கப்படும் யாஷ் சோப்ரா, தன் மரணத்திற்கு முன்னதாக சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்தார்.
அண்மையில் தனது 80 வது பிறந்த தினத்தை நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து கொண்டாடினார் யாஷ் சோப்ரா.
அப்போது உங்களின் அடுத்த திட்டம் என்ன என்ற கேள்விக்கு தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் Jab Tak Hai Jaan எனது இறுதிப்படம் என கூறினார்.
இவர் இயக்கிய படங்கள் Kabhie Kabhie, Silsila, Chandni ,Dil to Pagal Hai போன்றவை உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்ற படங்களாகும்.
இந்தியா சினிமாவின் ஜாம்பவானாக இருந்த யாஷ் சோப்ரா, தனது திரைப்படங்களின் மூலமாக பல தலைமுறையினரை மகிழ்வித்துள்ளார் என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பேசிய உரையாடல் ஒன்று தற்போது நமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.