siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 25 டிசம்பர், 2018

நிலநடுக்கம்:இத்தாலியில் வெடிக்கத் தொடங்கிய எட்னா எரிமலை

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் தெற்கு பகுதியில் சிசிலித் தீவில் உள்ளது.
நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் அங்கு லேசனா நிலநடுக்கம் ஏற்பட்டமையைத் தொடர்ந்து எட்னா எரிமலை 
வெடிக்க ஆரம்பித்தது.
எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட
 தகவல் ஏதும் இல்லை.
எட்னா எரிமலை வெடிப்பு குறித்து இத்தாலியின் பூகோளவியல் மற்றும் எரிமலைகள் பற்றிய தேசிய ஆய்வு நிறுவனம்
 கூறியுள்ளதாவது;
எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 15 டிசம்பர், 2018

இது தான் அதிகம் வெறுக்கப்பட்ட காணொளி YouTube அறிவித்தது

ஆண்டுதோறும் இணையத்தின் முக்கிய நிகழ்வுகள், பிரபலமடைந்த ஆடல் பாடல், விளையாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றைத் தொகுத்து காணொளியாக YouTube
 வெளியிட்டு வருகிறது.
YouTube Rewind என்ற அந்தக் காணொளியை அந்தத் தளம் ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் வெளியிடுகிறது. அதனை காணொளியைக் காண இணையவாசிகள் ஆவலுடன் காத்திருப்பர்.
ஆனால், இந்த ஆண்டு வெளியான YouTube Rewind 2018 காணொளி, இணையவாசிகளை முகம் சுளிக்க 
வைத்துள்ளது.
தளத்தின் ஆக அதிகம் வெறுக்கப்பட்ட காணொளி என்ற வேண்டாத பெயரையும் அது பெற்றுள்ளது. காணொளிக்கு இதுவரை 12 மில்லியன் பேர் வெறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இணையவாசிகளிடம் பிரபலமாக உள்ள YouTube நட்சத்திரங்கள் காணொளியில் இடம்பெறவில்லை என்று பலர் கூறியுள்ளனர். மேலும், 2018ல் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் காணொளியில் இடம்பெறவில்லை என்று வேறு சிலர் குறைகூறியுள்ளனர்.
Logan Paul, KSI ஆக YouTube நட்சத்திரங்கள் நடத்திய குத்துச்சண்டை விளையாட்டு, இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட 
நிகழ்வுகளில் ஒன்றாகும்.
அது போன்ற முக்கிய நிகழ்வுகள் காணொளியில் இடம்பெறவில்லை என்று பலர் குற்றம் சுமத்தியுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



                   

திங்கள், 10 டிசம்பர், 2018

இலங்கை சிறுமிக்கு ஐரோப்பிய நாடொன்றில் நேர்ந்த துயரம்88-

இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
 நேற்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சிறுமி வசித்து வந்த குளியலறையுடன் இணைந்தவாறு காணப்பட்ட ஆடை உலர்த்தும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்த போதே குறித்த சிறுமியும் அதனுடன் சேர்ந்து தவறி விழுந்துள்ள 
உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வெரோனா நகர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 குறித்த சிறுமி தனது பாட்டி, தாத்தாவுடன் இலங்கையில் கல்வி கற்று வந்த நிலையில், விசாவை புதுப்பித்துக்கொள்வதற்காக கடந்த ஜுன் மாதம் இத்தாலியிலுள்ள தனது பெற்றோரிடம் சென்றதாகவும் ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் பாடசாலை செல்லும் நோக்குடன் இலங்கைக்கு திரும்பி வர​விருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 7 டிசம்பர், 2018

வௌிநாடுகளில் 220 இலங்கையர்கள் மரணம்

வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
 தெரிவித்துள்ளது.
இதில் 52 பெண்கள் உள்ளடங்குவதுடன் 6 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர்
 ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் உயிரிழந்த 220 பேரில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
25 ஆண்கள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்திருக்கின்றனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 
தெரிவித்துள்ளது.
மேலும் வாகன விபத்துகளால் 21 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பணியாளர்கள் குவைட், ​சவூதி, கட்டார் ஆகிய நாடுகளிலேயே அதிகம் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கைப் பணியாளர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக, இந்த வருடத்துக்குள் 7 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 3 டிசம்பர், 2018

தீவிரமடைந்த போராட்டம் பிரான்ஸ் பாரிஸில்

பிரான்ஸ் பாரிஸில் போராட்டம் தீவிரமடைந்தமையைத் தொடர்ந்து G20 உச்சி மாநாட்டிலிருந்து அவசரமாக புறப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை
 நடத்தியுள்ளார்.
எரிபொருள் விலையுயர்வை எதிர்த்து பாரீஸில் போராட்டம் நடத்துவோர் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
பாரீஸிலுள்ள அதிபர் மாளிகையில் ஜனாதிபதி மேக்ரான் கூட்டிய அவசரக் கூட்டத்தில் பிரான்ஸ் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகள் 
கலந்து கொண்டனர்.
அவசர நிலை பிரகடனம் செய்யப்படவிருப்பதாக செய்திகள் உலவிய நிலையில், அப்படி ஒரு எண்ணம் தற்போதைக்கு அரசுக்கு இல்லை என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக மேக்ரான் பிரான்சின் புராதன நினவிடமாகிய Arc de Triomphe இல் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்தார்.
போராட்டக்காரர்கள் கார்கள் ஆகிய பொருட்களை சேதப்படுத்தியிருந்தனர்.
சேதமடைந்த பொருட்கள் முதலானவற்றை பார்வையிட்ட மேக்ரான், பொலிசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இருப்பினும் அவரை அவமதிக்கும் வகையில் சிலர் குரல் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்ட 412 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிசார், அவர்களில் 378 பேர் இன்னும் காவலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதிலும் 263 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களில் 133 பேர் தலைநகரில் காயமடைந்தவர்கள் என்றும் பாதுகாப்புப் படையினரில் 23 பேரும் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள்
 வெளியாகியுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஐ.நா எச்சரிக்கை மனிதகுலம் முற்றாக அழியும் அபாயம்?.

மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடு போலந்தில் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் உடனடி நவடிக்கைய வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 200 நாடுகள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு 2C (3.6F) க்கு கீழே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பசுமை இல்ல வாயு வெட்டுகளை கண்காணிப்பதற்கான ஒரு விதிமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைத் தலைவர் மரியா எஸ்பினோசா,
தற்போதைய விகிதத்தில் காலநிலை மாற்றம் முன்னேறினால் மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை 
விடுத்துள்ளார்.
நாங்கள் அவசரமாகவும் தைரியத்துடனும் செயல்பட வே
ண்டும் எனவும் எதிர்கால தலைமுறையினருக்கு பொறுப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பரிஸில் ஒப்புக் கொள்ளப்பட்டதைவிட கார்பன் உமிழ்வுகள் மேலும் அதிகமாக குறைக்கப்படவேண்டுமென இந்த ஆண்டு பல விஞ்ஞான அறிக்கைகள் எச்சரித்துள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பரிஸ் உடன்பாட்டிற்கு தங்கள் அர்ப்பணிப்பை G20 நாடுகள் கடந்தவார இறுதியில் உறுதிப்படுத்தியதையடுத்து இந்தவாரம் இடம்பெறும் காலநிலை மாற்ற உச்சிமாநாடு மேலதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


உலக மாற்றுத்திறனாளிகள் நாள் டிசம்பர் 03:

ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால்
ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.
1981 ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது.
1982 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.
பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.
பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு 
உறுதுணை புரிகின்றன.
அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொ
ள்ளப்படுகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 26 நவம்பர், 2018

தமிழர்! கனடாவில் உறவினர்களின் கண்ணீருடன் நல்லடக்கம்

கனடாவின் கொலைசெய்யப்பட்ட இலங்கை அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடன், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் ரொறொன்ரோவில் நல்லடக்கம்
 செய்யப்பட்டது.
  இறுதிக்கிரியைகளில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் வாழும் அவரது உறவினர்கள் கலந்துகொண்டு
 கதறியழுதனர்
 இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது தனது சகோதரனை பறிகொடுத்த கிருஷ்ணகுமார் கனகரட்னம், படகுமூலம் 
கனடாவுக்கு புகலிடம் கோரிச் சென்றார்.
 அங்கு அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதால், நண்பர்களுடன் மறைந்து வாழ்ந்துள்ளார்.
அதன் பின்னர் இவர் காணாமல் போனபோதும், உறவினர்கள் அதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. தமது மகன் நாட்டிற்கு திருப்பியனுப்பப்படலாம் என்று அஞ்சி தாம் முறையிடவில்லையென அவரது தாயார் குறிப்பிட்டிருந்தார்.
 இந்நிலையில், கனடாவை அச்சுறுத்தும் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மக் ஆர்தரினால் அவர் கொலைசெய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு, தற்போது இறுதிக்கிரியை 
நடத்தப்பட்டுள்ளது.
 புகலிட கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள், தமது உறவினர்களுடனான தொடர்பை முற்றாக நிறுத்துவதோடு, மறைந்து வாழ்வது ஆபத்தானதென மனிதநேய செயற்பாட்டாளர்கள் 
குறிப்பிடுகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 1 நவம்பர், 2018

சீனா தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு ஆபத்தா. கனடாவை எச்சரித்த

கனடாவில் வாழும் தமது பிரஜைகளை கஞ்சா பயன்பாட்டிலிருந்து விலகியிருக்குமாறு சீனா அரசாங்கம் எச்சரித்துள்ளது.
கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அண்மையில் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அண்மையில் கனடா வெளியிட்டுள்ளது.
உலகிலேயே முதன்முதலாக கஞ்சாவை வியாபாரமயமாக்கியுள்ள நாடாக கனடா விளங்குகிறது.
பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கஞ்சா பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே சீனா அரசாங்கம் அங்கு வாழும் சீன பிரஜைகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, கனடாவில் புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களும் அதிகம் வாழுகின்றனர். இந்நிலையில் புதிய சட்டத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்து இளைஞர், யுவதிகள் பாதிப்படையக் கூடிய அபாய நிலை உள்ளதாக தமிழ் சமூகம் கவலை 
வெளியிட்டுள்ளது.
இலங்கையில் யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர்கள் வாழும் பகுதியில் போதைப்பொருள் காரணமாக பல்வேறு குற்றச்செயல்கள் தீவிரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </

செவ்வாய், 30 அக்டோபர், 2018

நியூசிலாந்தில் 6.2 ரிச்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


..நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 சுமார் 165 கிலோமீற்றர் பூமிக்கு அடியில் குறித் நிலநடுக்கம் 6.2  ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டன் பகுதி சுமார் 30 வினாடிகள் வரை  அதிர்ந்ததாகவும் நாட்டின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாகவும் நியூசிலாந்து ஊடகங்கள்  தெரிவித்துள்ளன. 

 இதேவேளை நியூசிலாந்தின் வடக்கு தீவு மற்றும் தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ள போதிலும் இதனால்  எவ்விதானமான உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை.

 குறித்த நிலநடுக்கத்தால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




திங்கள், 29 அக்டோபர், 2018

இந்தோனேசியாவில் 188 பேருடன் காணாமல்போன பயணிகள் விமானம்

ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட இந்தோனேசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்தது என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் 178 பெரியவர்கள், 1 குழந்தை, இரண்டு கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 விமானப் பணியாளர்கள் உட்பட 188 பேர்
 இருந்துள்ளனர்.
ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பன்ங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்தது.
இது பாங்கா பெலீடூங் தீவின் முக்கிய நகரம்.
இழுவைப் படகு ஒன்று விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதைப் பார்த்ததாக இந்தோனீசிய துறைமுக அதிகாரி சுயாதி என்பவர் கூறியதாக இந்தோனீசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 6.20க்கு (கிரீன்விச் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 23.30) இந்த புறப்பட்ட இந்த விமானம் 'போயிங் 737 மேக்ஸ் 8' வகையைச் சேர்ந்தது. இந்த மாடல் விமானங்கள் 2016-ம் ஆண்டு முதல்தான் பயன்பாட்டில் உள்ளன.
விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் யூசூஃப் லத்தீஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என 'லயன் ஏர்' விமான நிறுவன அதிகாரி ஒருவர் முன்னர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நிறுவனம் இந்தோனீசியாவை மையமாக வைத்து
 செயல்படும், குறைந்த கட்டண விமான 
நிறுவனம் ஆகும்.
எல்லா தகவல்களையும் திரட்டிவருவதாகவும், தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எட்வார்ட் சிரய்ட் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் 
தெரிவித்துள்ளா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 18 ஏப்ரல், 2018

உலகைக் கலங்க வைத்த புகைப்படத்துக்கு புலிட்சர் விருது!

கடந்த ஆண்டுக்கான புலிட்சர்  பிரேக்கிங் நியூஸ் போட்டோகிராபி விருது `டெய்லி ப்ராக்ரஸ்' பத்திரிகையின் ரேயான் கில்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. 
ஒவ்வோர் ஆண்டும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் புலிட்சர் விருது
 வழங்குகிறது. இந்த ஆண்டு 15 பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் போட்டோகிராபி பிரிவில், ரேயான் கில்லிக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் சார்லட்டேஸ்வில்லி 
நகரில் இனவெறிக்கு எதிரான போராட்டம் நடைபெற்றபோது, ஒருவர் காருடன் கூட்டத்திற்குள் பாய்ந்தார். மக்கள் தூக்கி எறியப்பட்டனர். இந்தக் காட்சியை ரேயான் கில்லி படம் எடுத்திருந்தார். தி டெய்லி ப்ராக்ரஸ் பத்திரிகைக்காக ரேயான் கில்லியின் கடைசி அசைன்மென்டும் இதுதான். தற்போது, ஃப்ரீலான்ஸர் புகைப்படக் கலைஞராக அவர் 
பணியாற்றுகிறார். 
future photography- பிரிவில் ரோகிங்யா முஸ்லிம் மக்களின் அவல நிலையைப் படம் பிடித்த வகையில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு புலிட்சர்  விருது கிடைத்துள்ளது.  2017- ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்குத் தப்பி வந்த ரோகிங்யா மக்களின் படகு
 டெக்னாஃப் நகர கடற்கரையை நெருங்குகையில் கடலில் கவிழ்ந்தது.
 இந்த விபத்தில் பெண் ஒருவரின் கைக்குழந்தை தண்ணீருக்குள் மூழ்கி இறந்து விடும். கைக்குழந்தையை முகத்தின் மீது முகம் வைத்து அந்தத் தாய் அழும் காட்சியை ராய்ட்டர்  என்ற புகைப்படக் கலைஞர் பதிவு செய்தார். இந்தப் புகைப்படமும் future photography பிரிவில் புலிட்சர் விருது பெற்றுள்ளது. இந்த விருது 15,000 அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசு 
கொண்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கால்பந்து போட்டி தொடக்க விழாவில் புகுந்த கரடி.பங்கேற்ற காட்சி

ரஷ்யாவில் கரடி ஒன்று கால்பந்து போட்டிக்கான தொடக்க விழாவில் பங்கேற்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் மாஸ்கோ நகரில் மாசூக் கே.எம்.வி அணிக்கும், அங்குசாட் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி
 நடைபெற்றது.
இதன் தொடக்க நிகழ்ச்சியின் போது, பயிற்சி பெற்ற டிம் என்ற கரடி அழைத்து வரப்பட்டது. பார்வையாளர்களை நோக்கி, தனது முன்னிரு கால்களை தட்டி ஒலி எழுப்பிய டிம் பின்னர், பந்தை நடுவரிடம் வழங்கி போட்டியை
 தொடங்கி வைத்தது.
இந்த காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய் பார்க்கப்பட்டு வருகிறது. இதே நேரத்தில் கரடியை கட்டாயப்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்ததாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி
 உள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் நாளை ஆபத்து

 ஞாயிற்றுக்கிழமை.01.04.2018. , சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர்ப்பு விசை காரணமாக தனது 
பாதையில் இருந்து விலகி வருகிறது. வரும் ஞாயிறு அன்று பெரும் அக்கினிப் பிழம்போடு அது எரிந்த வண்ணம் பூமியில் விழ உள்ளது.
இதன் மொத்த எடை சுமார் 9 தொன் ஆகும். சீனாவினால் உருவாக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக இது பூமிக்கு மேல் விண் வெளியில் சஞ்சரித்து வந்தது. ஆனால் அது மெல்ல மெல்ல தனது
 பாதையை இழக்க ஆரம்பித்தது. 2011ம் ஆண்டு இதனை மீண்டும் அதன் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டு வரும் கடைசி முயற்ச்சியில் சீன விஞ்ஞானிகள் இறங்கினார்கள். இருப்பினும் அதுவும் தோல்வியை தழுவிய நிலையில்.
தற்போது வரும் ஞாயிறு காலை 11.30 மணிக்கு(லண்டன் நேரப்படி) அது பூமி மீது வீழ உள்ளது. இதனால் பல நகரங்கள் மேல் துண்டுகள் வந்து விழ வாய்புகள் உள்ளது. லண்டன் , மும்பாய், பாரிஸ் றோம், மற்ரிட், என்று சுமார் 12 நகரங்கள் மேல் இதன் துண்டுகள் விழும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது./
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

தென்­ப­கு­தி­யி­லும், புலம் பெயர் நாடு­க­ளி­லும் பனம் வெல்லத்திற்கு பெரும் கிராக்கி

யாழ்ப்­பா­ணத்து பனம் வெல்லத்துக்கு தென்­ப­கு­தி­யி­லும், புலம் பெயர் நாடு­க­ளி­லும் பெரும் கிராக்கி ஏற்­பட்­டுள்­ளது எனவே பத­நீர் உற்­பத்­தியை ஊக்­கு­வித்து பனம்­வெல்ல உற்­பத்­தியை ஆரம்­பிக்­கும் நட­வ­டிக்­கையை பனை அபி­வி­ருத்தி சபை ஆரம்­பித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் பனை­ ம­ரங்­க­ளில் பருவ கால கள் உற்­பத்தி ஆரம்­பிக்­கப்­பட்டுள்­ளது. மாவட்­டத்­தில் உள்ள பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­கள் போத்­த­லில் கள் அடைக்­கும் பணி­க­ளை­யும், பத­நீர் உற்­பத்­தியை ஊக்­கு­வித்து பனம்­வெல்ல உற்­பத்­தி­யை­யும் 
ஆரம்­பிக்­க­வுள்­ள­னர்.
போத்­த­லில் கள் அடைக்­கும் பணி­கள் மற்­றும் வெல்ல உற்­பத்தி என்­பன மார்ச் முத­லாம் திகதி முதல் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குடா­நாட்­டுப் பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­ வுச் சங்­கங்­க­ளால் உற்­பத்தி செய்­யப்­ப­டும் போத்­தல் கள் மற்­றும் 
பனம் வெல்­லம் ஆகி­ய­வற்றை தென்­ப­குதி மக்­கள் உட்­பட புலம்­பெ­யர் நாடு­க­ளில் உள்­ள­வர்­க­ளும் கொள்­வ­னவு செய்­வ­தில் ஆர்­வம் காட்­டு­வ­தால் சங்­கங்­கள் இம்­முறை அதிக அள­வில் உற்­பத்­தியை மேற்­கொள்­ள­லா­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இது தொடர்­பாக தென்­ம­ராட்சி பிர­தேச பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளு­டன் தொடர்பு கொண்ட போது, ‘போத்­த­லில் அடைக்­கப்­ப­டும் கள்­ளுக்கு தென்­ப­கு­தி­யில் கிராக்கி காணப்­ப­டு­கி­றது. போத்­தல் கள் அதிக அள­வில் உற்­பத்தி செய்­தால் அங்­கத்­த­வர்­க­ளும் சங்­கங்­க­ளும் அதிக பயன் பெற­மு­டி­யும்.
ஆனால், உற்­பத்தி செய்­யப்­ப­டும் போத்­தல் கள்­ளுக்கு அர­சால் விதிக்­கப்­ப­டும் உற்­பத்தி மற்­றும் விற்­பனை வரி அதி­கம் என்­ப­தால் கடந்த வரு­டங்­க­ளைப்­போன்று மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே உற்­பத்தி செய்ய உத்­தே­சித்­துள்­ளோம். உற்­பத்தி செய்­யப்­ப­டும் போத்­தல் கள்­ளின் மொத்த விவ­ரம் வழங்­கப்­பட்டு அனைத்­துக்­கும் வரி செலுத்த வேண்­டும்.
தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளால் உற்­பத்தி செய்­யப்­பட்­ட­வற்­றில் ஒரு தொகுதி விற்­பனை செய்­யா­வி­டின் அதன் கொள்­வ­ன­வுச் செலவு, போத்­த­லில் அடைக்­கும் செலவு, வரி போன்­ற­வற்­றால் சங்­கம் நட்­ட­ம­டைய நேரி­டும் என்ற அச்­சம் சங்­கங்­க­ளி­டையே காணப்­ப­டு­கி­றது. எனவே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவு போத்­தல் கள்ளை உற்­பத்தி 
செய்­ய­வுள்­ளோம்.
பனை வெல்­லம் மற்­றும் பனங் கற்­கா­ரம் ஆகி­ய­வற்­றுக்­குத் தென்­ப­குதி மற்­றும் புலம்­பெ­யர் நாடு­க­ளில் பெரும் கிராக்கி காணப்­ப­டு­வ­தால் அங்­கத்­த­வர்­கள் மூலம் பத­நீர் உற்­பத்­தியை அதி­க­ரித்து வெல்ல உற்­பத்­தி­யில் ஈடு­ப­ட­வுள்­ளோம்’ என அவர்கள் தெரி­வித்­த­னர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>