siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 13 அக்டோபர், 2012

மரணத்தை வீட்டுக்காரர்களுக்கு சொல்ல முயன்ற

          
Saturday 13 October 2012 .By.Rajah. 
  நாய் ஒன்றைப் பற்றிய செய்தி !எஜமானனின் மரணத்தை வீட்டுக்காரர்களுக்கு சொல்ல முயன்ற நாய் ஒன்றைப் பற்றிய செய்தி அண்மைய நாட்களில் சிங்கள ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

பண்டுவஸ்நுவரவைச் சேர்ந்த 70 வயது முதியவரான பெனடிக் பீரிஸ் என்பவர்தான் இந்நாயின் சொந்தக்காரர்.
இவர் எங்கெல்லாம் செல்கின்றாரோ அங்கெல்லாம் நாயும் கூடவே செல்லும்.
சம்பவ தினம் காலையில் இவர் கிணற்றில் குளிக்க சென்று விட்டார்.
தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்து போனார்.
இவர் இறந்தமையை நாய் உணர்ந்து கொண்டது.
இம்மரணச் செய்தியை வீட்டுக்காரர்களுக்கு தெரிவிக்க விரைந்து சென்றது.
வழமைக்கு மாறான விதத்தில் தேம்பித் தேம்பி புலம்பிக் கொண்டு இருந்தது. ஊளையிடவும் செய்தது.
ஆயினும் இது சொல்ல முயன்ற செய்தியை வீட்டுக்கார அம்மா புரிந்து கொள்ளவில்லை.
எஜமானனை விட்டு விட்டு நாய் தனியே ஒரு போதும் வருவதில்லை.
எனவே கணவன் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கூப்பிட்டுப் பார்த்தார்.
கணவனை ஓரிடத்திலும் காண முடியவில்லை.
ஏதோ விபரீதம் நடந்து விட்டது எனப் புரிந்து கொண்டார்.
கிணற்றடியை நோக்கி ஓடினார்.
கணவன் பயன்படுத்துகின்ற சோப், கப் ஆகியன கிணற்றுக்கு அருகில் காணப்பட்டன.
கணவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார் ஊகித்துக் கொண்டார். கிணறு ரொம்பவே ஆழமானது. வேலைக்கு சென்று இருந்த மகனை அவசரமாக தொடர்பு கொண்டு வர வைத்தார். பொலிஸாரும், சுழியோடிகளும் வரவழைக்கப்பட்டனர்.
சடலம் மீட்கப்பட்டது.
எஜமானனின் மரணச் செய்தியைத்தான் நாய் கொண்டு வந்திருந்தது என வீட்டுக்காரர்களுக்கு விளங்கிக் கொண்டது

ஒபாமா அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012,By.Rajah.{ காணொளி,-  புகைப்படங்கள்}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ஓபாமா, மிட்ரோம்னி இருவரும் தீவிர தேர்தல் பிரசாத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒபாமாவுக்காக டென்வர் நகரில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நோக்கி மர்ம மனிதன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அலுவலக கண்ணாடி உடைந்து விழுந்தது. துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கியால் சுட்ட நபர் உடனே அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எதற்காக சுட்டார் என்பது மர்மமாக உள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு தொடர்பாக ஒபாமா அலுவலகத்தில் இருந்து இதுவரை கருத்து எதுவும் வெளியிடப்பட வில்லை. இந்த சம்பவம் நடந்த போது ஒபாமா வாஷிங்டனில் இருந்தார்.
மேலும் அடுத்த மாதம் 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட

 
 சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012, By.Rajah.
     வீடுகள் உடைந்து விழும் அபாய கட்டத்தில்...இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, பாண்டியன்குளம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அமைத்து கொடுக்கப்பட்ட 50 வீடுகளில் பெரும்பாலானவை சுவர் இடிந்தும், நிலம் வெடித்தும் மக்கள் தொடர்ந்தும் வாழ முடியாத அபாய கட்டத்தில் உள்ளனர்.
அதிகாரிகளின் பாராமுகம், ஒப்பந்தகாரரின் பொறுப்பற்ற தன்மையுமே தமது இந்த நிலைக்கு காரணம் என இவ்வீட்டுத்திட்ட பயணாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் கிராமத்தில் நிலமற்ற மக்களுக்காக அப்பகுதில் ஒதுக்குப்புறமாகவுள்ள காட்டுப்பகுதியில் கால் ஏக்கர் விதம் நிலம் வழங்கி இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 50வீடுகள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மக்களிடம் அவை கையளிக்கப்பட்டன.
ஆனால் அமைக்கப்பட்டுள்ள அத்தனை வீடுகளும் சேதத்துடனேயே காணப்பபடுகின்றன. இவ்வீடுகளில் மக்கள் தொடர்ந்தும் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு வீட்டின் பின்புறம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது. மேலும் பல வீடுகள் சிறிய மழைக்கே ஒழுக ஆரம்பித்திருக்கின்றன.
இதேபோல் கட்டப்பட்ட வீடுகளில் ஒன்றிரண்டை தவிர ஏனைய அனைத்து வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இடிந்த வீடுகளுக்குள் வேறு வழியில்லாமல் அபாயகரமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதாக வீட்டுத்திட்ட பயணாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும் 15 வீடுகள் சேதமடைந்திருந்த நிலையில் அவை சீர்செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்த குடியேற்றத்திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான குடிநீர், மற்றும் இதர தேவைக்கான நீர் பெறுவதற்கான வசதிகள் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
மேலும் குடியேற்றத்திட்டத்திற்குள் வீதிகள் எவையும் போடப்படாத நிலையில் சில தினங்கள் பெய்திருந்த சிறிய மழைக்கே வீதி சகதியாக மாறியிருக்கின்றன.
இந்நிலையில் வீதிகள் அமைக்கப்படாமைக்கான காரணம் குறித்துக் மாந்தை கிழக்கு பிரதேச சபையினரிடம் கேட்டபோது, வீதிகளை அமைப்பதற்கான மூல வளங்கள் குறிப்பாக கிரவல், கருங்கல் போன்றன தமது பிரதேசத்திலேயே உள்ளபோதும், அவற்றை பெறுவதற்கு இராணுவம் பெரிய தடையாகவுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இந்த மூல வளங்களை எடுப்பதற்கு படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்துள்ள நிலையில் தமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து அபிவிருத்திப் பணிகளும் பின் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் சில தென்னிலங்கை ஒப்பந்தக்காரர் இந்த வளங்களை சுரண்டி வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு விட்டதாகவும், மக்கள் நின்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் பிரசாரப்படுத்தப்படும் நிலையில் காட்டுப்பகுதியினுள் குடிநீர், முறையான வதிவிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இப்பகுதி மக்கள் அசௌகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
 

மரண அறிவித்தல்

திரு சிவகுரு குலேந்திரராஜா
(குட்டி மாமா)
அன்னை மடியில் : 9 பெப்ரவரி 1956 — ஆண்டவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2012
வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ண் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு குலேந்திரராஜா அவர்கள் 10-10-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு, பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலஷ்சுமி(சுவிஸ், பேர்ண்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தி(சுவிஸ்), கஜிபன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசமணி(இலங்கை), செல்வராஜா(இலங்கை), குஞ்சுமணி(இலங்கை), வரதராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அருணகிரி(இலங்கை), சிவஞானம்(கனடா), விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), வேல்வதி(இலங்கை), நற்குணம்(ஜேர்மனி), செல்வராணி(கனடா), புவனேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 12/10/2012, 01:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/10/2012, 01:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2012, 01:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 15/10/2012, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern 

தொடர்புகளுக்கு
தனம் - மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313714887
நிஷா - மகள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793822884
கமல் - மருமகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794000098
செல்வக்குமார் - பெறாமகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779025355

                                                   {நவற்கிரிஇணையம் }

யாழ். சண்டிலிப்பாய் விநாயகர் ஆலயத்தில் பெறுமதி மிக்க ஐம்பொன் விக்கிரகம் திருட்டு

 
 சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சண்டிலிப்பாய் அரசடி சித்தி விநாயகர் ஆலயத்தில் பெறுமதி மிக்க ஐம்பொன்னிலான பிள்ளையார் சிலை ஒன்று திருடிச்செல்லப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10ம் திகதி ஆலயத்தில் இரவு பூசைகளை முடித்துவிட்டு கதவைப் பூட்டிச்சென்றதாகவும், காலையில் வந்து பார்த்து போது ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாகவும் ஆலய பூசகர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்த ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்தபோது பழமை வாய்ந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை மானிப்பாய் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தோடர்ந்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பல மாதங்களாக யாழ். குடாநாட்டில் உள்ள ஆலயங்களில் சிலைகள் திருட்டுப் போவது இல்லாது காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆலயங்களில் சிலைகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கார்த்தி ஜோடியா? நடிக்க மறுத்த இலியானா

Saturday, 13 October 2012, By.Rajah.
வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டாராம் இலியானா.
கார்த்தி நடித்துள்ள அலெக்ஸ் பாண்டியன் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி என்ற படத்தில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூரில் தொடங்கியது.
பிரியாணிக்கு பிரபலமான ஊரில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதாக வெங்கட் பிரபு தெரிவித்தார்.
இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரிச்சா கங்கோபாத்யாய் நடிப்பதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அவர் மாற்றப்பட்டார். இதையடுத்து கதாநாயகியை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இலியானாவை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இதுபற்றி இலியானா தரப்பில் கூறுகையில், பர்பி இந்தி படத்தில் இலியானா நடித்தார். அப்படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது. இதையடுத்து அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்பு வந்துக்கொண்டிருக்கிறது.
பாலிவுட் படங்களுக்கு ஏற்ப தனது உடலை பல மடங்கு குறைத்து ஸ்லிம் ஆகி விட்டார். தனது 2வது படத்தில் சாஹித் கபூர் ஜோடியாக நடிக்கிறார்.
தென்னிந்திய படங்களில் அவர் இப்போதைக்கு கவனம் செலுத்தப்போவதில்லை. பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடிப்பதில் கவனமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்

அமெரிக்காவில் மன்னிப்பு கடிதத்துடன் 10 டாலர்

         
Saturday 13 October 2012 .By.Rajah.
பணமும் வைத்த சைக்கிள் திருடன்.அமெரிக்காவில், சைக்கிளை திருடிய நபர், மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் சைக்கிளை ஒப்படைத்து உள்ளார்.
அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள கல்லூரியில் படிப்பவர், பால் ஜில்மர். இவர் வகுப்பறையை விட்டு, வெளியே வந்து பார்த்த போது, இவரது சைக்கிளை காணவில்லை. இருப்பினும், இது தொடர்பாக அவர் யாரிடமும் புகார் தெரிவிக்கவில்லை. சில மணி நேரங்களில், இவரது சைக்கிள், அதே இடத்தில் விடப்பட்டு இருந்தது.
அதுமட்டுமல்ல, சைக்கிளை திருடியதற்கு மன்னிப்பு கடிதமும் அதில் செருகி வைக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்துடன், 10 டாலரும் இணைக்கப்பட்டிருந்தது. பூட்டு உடைக்கப்பட்டதால், அதை மீண்டும் வாங்குவதற்காக இந்த பணம் (570 ரூபாய்) வைத்துள்ளதாகவும், வேலை இல்லாததாலும், போதைக்கு அடிமையானதாலும் இந்த தவறை செய்ததாக சைக்கிளை திருடிய நபர், கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்

பிரிட்டனின் மனமாற்றத்தால், மோடிக்கு விசா கொடுக்குமா பிரிட்டன்?


Saturday 13 October 2012 .By.Rajah.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க பொது விவகாரத்துறை துணை அமைச்சர்"அமெரிக்க தரப்பில் வழங்கப்படும் எந்தஒரு விசாவும் தகுதி மற்றும் சட்டத்துக்கு உட்பட்டே வழங்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து, அந்த மாநிலத்துடனான தொடர்பை பிரிட்டன் துண்டித்துக் கொண்டது. இதனால் அமைச்சர்களோ, உயர் அதிகாரிகளோ அங்கு செல்வதில்லை. நரேந்திர மோடியும் பிரிட்டன் செல்வதைத் தவிர்த்தார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்துடனான உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள விரும்புவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுயூகோ ஸ்வைர் வியாழக்கிழமை தெரிவித்தார். இந்த முடிவுக்கு மோடியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பதில்: குஜராத் கலவரத்தை அடுத்து அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்காமல் இருந்தது. பிரிட்டனின் திடீர் முடிவைத் தொடர்ந்து, மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுதொடர்பான செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டன.
தகுதி மற்றும் அமெரிக்க சட்டத்துக்கு உட்பட்டே விசா விண்ணப்பங்களை மதிப்பீடு செய்கிறோம். இதில் தனிநபர் குறித்த கேள்விக்கு இடமில்லை. இந்த விஷயத்தில் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார் மைக் ஹம்மர்.

எந்த மதமாக இருந்தாலும் அதனை மதிக்க

         
Saturday 13 October 2012.By.Rajah.
பழகிக்கொள்ள வேண்டும்!ஜே.ஸ்ரீரங்கா அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
எந்த மதமாக இருந்தாலும் அதனை மதிக்க பழகிக்கொள்ள வேண்டும். மக்களிடையே அந்த நிலைமையை காண முடியவில்லை.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனங்களுக்கு இடையே மதங்களுக்கு இடையிலான முறுகல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
எந்தவொரு மதமும் வன்முறையை போஷிப்பதில்லை என ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

இளம் வயது உடைய கர்ப்பிணிப் பெண்களை

         
Saturday 13 October 2012 .By.Rajah.
கற்பழிக்க பார்க்கும் அரச வைத்தியர்! இளம் வயது உடைய கர்ப்பிணித் தாய்மார்களை மருத்துவ பரிசோதனை என்கிற பெயரில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்த முயன்று வருகின்ற அரச வைத்தியர் ஒருவர் குறித்து ஹற்றன் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன.
இவரது துஷ்பிரயோக முயற்சிகளால் பாதிக்கப்பட்ட பெண்களில் அநேகர் பொலிஸில் முறைப்பாடு செய்து உள்ளனர்.
வைத்தியரால் இலக்கு வைக்கப்படுகின்ற பெண்கள் பெரும்பாலும் 17 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிகின்றது.
கிளினிக்கு கர்ப்பிணிப் பெண்கள் மாதத்தில் இரு தடவைகள் வர வேண்டி உள்ளது என்றும் உடல் சோதனைகளுக்கு இப்பெண்களை உட்படுத்துகின்றபோது தாதிமாரை வைத்தியர் வெளியில் அனுப்பி விடுகின்றார் என்றும் முறைப்பாடுகளில் சொல்லப்பட்டு உள்ளது