siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 13 அக்டோபர், 2012

பிரிட்டனின் மனமாற்றத்தால், மோடிக்கு விசா கொடுக்குமா பிரிட்டன்?


Saturday 13 October 2012 .By.Rajah.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க பொது விவகாரத்துறை துணை அமைச்சர்"அமெரிக்க தரப்பில் வழங்கப்படும் எந்தஒரு விசாவும் தகுதி மற்றும் சட்டத்துக்கு உட்பட்டே வழங்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து, அந்த மாநிலத்துடனான தொடர்பை பிரிட்டன் துண்டித்துக் கொண்டது. இதனால் அமைச்சர்களோ, உயர் அதிகாரிகளோ அங்கு செல்வதில்லை. நரேந்திர மோடியும் பிரிட்டன் செல்வதைத் தவிர்த்தார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்துடனான உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள விரும்புவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுயூகோ ஸ்வைர் வியாழக்கிழமை தெரிவித்தார். இந்த முடிவுக்கு மோடியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பதில்: குஜராத் கலவரத்தை அடுத்து அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்காமல் இருந்தது. பிரிட்டனின் திடீர் முடிவைத் தொடர்ந்து, மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுதொடர்பான செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டன.
தகுதி மற்றும் அமெரிக்க சட்டத்துக்கு உட்பட்டே விசா விண்ணப்பங்களை மதிப்பீடு செய்கிறோம். இதில் தனிநபர் குறித்த கேள்விக்கு இடமில்லை. இந்த விஷயத்தில் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார் மைக் ஹம்மர்.