siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 25 ஜூலை, 2012

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

 புதன்கிழமை, 25 யூலை 2012
சமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை கவனிக்கும் முதலாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களின் முதலாளிகள் தங்களது ஊழியர்களை கண்காணிப்பதற்காவே பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர் என புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக ஆய்வாளர் Vanessa de la Llama தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமது ஊழியர்களைக் கண்காணிக்கவும், புதிய தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் நிறுவனங்கள் இம்முறையை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பரிசோதனை செய்யும் போது பேஸ்புக் சுயவிபரத்தில் பொருத்தமற்ற படங்களைப் பார்த்தவுடனேயே, குறிப்பிட்ட ஊழியர்களைப் பற்றி தவறாக மதிப்பிட்டு அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை அல்லது புதியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல் போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல்: 14 பேர் பலி _

 _
25.07.2012.பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் அமைந்துள்ள ஷவால் பள்ளத்தாக்கில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நேற்று இரவு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதில் 8 ஏவுகணைகள் டிரீ நிஷ்டார் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது விழுந்துள்ளன. இதன்போது வீட்டிலிருந்த 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பலர் தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நோன்பு திறக்க பொதுமக்கள் கூடியிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் பலர் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா சந்தேகிக்கின்றது

எனவே அமெரிக்கப் படைகள் இப்பகுதியில் அடிக்கடி விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

குறிப்பாக அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அரசாங்கம் அமெரிக்கப்படைகளின் இத்தகைய தாக்குதலுக்கு தொடர்ச்சியாக கண்டனம் வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

செவ்வாய், 24 ஜூலை, 2012

யாழ். நல்லூர் கொடியேற்றம் இன்று (பட இணைப்பு

யாழ். நல்லூர் கொடியேற்றம் இன்று (பட இணைப்பு) _
24.07.2012வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் கொடியேற்ற நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அடியார்களின் அரோகரா ஒலியுடன் இடம்பெற்றது.

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்த அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தில் காலை முதல் காணப்பட்டார்கள். ஆலயக் கொடியேற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கப்பிரதட்சை செய்ததுடன் பெண்கள் அடிஅடித்தார்கள்.

ஆலயச் சுற்றாடலில் பொலிசாரும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் பலரும் சேவையில் ஈடுபட்டிருந்தார்கள்.
___

துப்பாக்கி, ரவைகள் மீட்பு: மூவர் கைது

 _
24.07.2012.மானிப்பாய் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றில் ,ஆஜர் செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

மானிப்பாய் பகுதியில் கடந்த வாரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்ட மானிப்பாய் பொலிஸார் குறிப்பி;ட்ட துப்பாக்கியையும் மற்றும் துப்பாக்கிக்கான ரவைகள் மற்றும் 02 கைக்குண்டுகள் என்பவற்றை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவரையும் கைது செய்திருந்தார்கள். மானிப்பாய் பொலிஸாரால் சந்தேக நபர்கள் மூவரும் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதன் அடிப்படையில்; பொலிஸாரின் கோரிக்கையைத் தொடர்ந்து நீதிமன்றம் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கடவுளிடத்து ஒருவழிப்பட்டு பக்தி செய்தால் தீய குணங்களைப் போக்கும்


24.07.2012
ஆடம்பரம் இன்றி தியானம் செய்ய விரும்புபவன் துயிலப் போகும் போதும் துயில் ௭ழுந்தும் கிடந்த படியே தியானம் செய்வது ௭ழியதும் மேலானதுமான முறையாகும். யான் உன்னைத் தொழ வேண்டும் தூய்மையடைய வேண்டும் பல உயிர்க்கும் பயன்பட வேண்டும் இன்புற்றிருக்க வேண்டும் ௭ன்று அவனைப் பிரார்த்திக்க வேண்டும்.

தன்னிடத்திலும் சரி ஆசிரியரிடத்திலும் சரி தமையனிடத்திலும் சரி ௭ந்த உயிரிடத்திலா யினும் நீதியோடு நிகழ்கின்ற இரக்கமே உண்மையன்பு. காரணம் தெரியாமலே பனை யிலும் பற்றையிலும் ஏழையிலும் வழிப்போக்க னிடத்திலும் உள்ளம் ஓடித்தழுவி இரக்கத் தையோ இன்பத்தையோ அடையக் கூடுமானால் அதுதான் அன்பு வாழ்வு

நல்லூர் கொடியேற்றம் இன்று விசேட முத்திரை வெளியிட ஏற்பாடு

 _
24.07.2012யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் இன்றாகும். கொடியேற்றத்தை முன்னிட்டு விசேட முத்திரைகள் மூன்று வெளியிடப்படவுள்ளன. இலங்கை அஞ்சல் திணைக்களம் இதற்கான நடவடிக்கையை ௭டுத்துள்ளது.

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் ஆலய முன்றிலில் இன்று காலை 10 மணியளவில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறும் ௭ன அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலய அறங்காவலர் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் சிறப்பைச் சித்திரிக்கும் வகையில் 5 ரூபா, 15 ரூபா, 25 ரூபா பெறுமதியான முத்திரைகளே வெளியிட்டு வைக்கப்படவுள்ளன

தாவடியில் குறைமாத சிசுவைப் பெற்று குழி தோண்டிப் புதைத்த கணவன், மனைவி கைது

 _
24.07.2012தாவடி நந்தாவில் வீதியில் குறை மாதப் பிள்ளையைப் பெற்று குழி தோண்டிப் புதைத்த குற்றச்சாட்டில் ஓர் இளம் பெண்னையும் அவருடைய கணவன் எனக் கூறப்படுபவரையும் கைது செய்துள்ளார்கள்.

தாவடி தெற்கு நந்தாவில் ஒழுங்கையில் வசிக்கும் கணவன்-மனைவியே கைது செய்யப்பட்டவர்களாவர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிக இரத்தப் பெருக்குக் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பி;ட்ட பெண் ஏற்கனவே திருமணம் செய்து முதல் கணவன் மன நோயாளியான நிலையில் இரண்டாவதாக குறிப்பிட்ட நபரைத் திருமணம் செய்து வாழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது இரண்டாவது கணவர் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறைக்காவலர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்

மன்னார் முருங்கனில் ஆட்லறி குண்டு மீட்பு

 _
24.07.2012.மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டியார் கட்டையடம்பன் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 162 மில்லி மீற்றர் ரக ஆட்லறி குண்டொன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஏ.கமல் குணவர்தன தெரிவித்தார்.

முருங்கன் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த ஆட்லறி குண்டை மீட்டுள்ளனர்.

பின் குறித்த குண்டு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு செயலிழ க்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஏ.கமல் குணவர்தன தெரிவித்தார்

கப்பல் விபத்தில் சென்னை பொறியாளர் உயிரிழந்தது எப்படி



 

24.07.2012.
சென்னை, ஜூலை 23: பத்து மாதங்களுக்கு முன்பு நைஜீரியா நாட்டில் நேரிட்ட கப்பல் விபத்தில் சென்னைப் பொறியாளர் உயிரிழந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து 12 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஆண்டர்சன் சேவியர் ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
எனது தந்தை சில்வஸ்டர் ராபர்ட் சேவியர் ராஜ் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் 12.7.2011 அன்று இரண்டாம் நிலை பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
நைஜீரியாவில் கரையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கப்பலில் 4.9.2011 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 5 சிப்பந்திகள் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேரின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் எனது தந்தை உடல் மீட்கப்படவில்லை. விபத்தின்போது இயந்திர அறையில் எனது தந்தை இருந்ததால், அவர் உடல் முற்றிலுமாக தீயில் எரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. நாங்கள் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் எனது தந்தை மரணம் குறித்த எவ்விதத் தகவலையும் கப்பல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் இதுவரை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.
ஆகவே நைஜீரியா கப்பல் விபத்தில் எனது தந்தை உயிரிழந்தது பற்றி விரிவான விசாரணை நடத்தி அது பற்றிய விவரத்தை எங்களுக்குத் தெரிவிக்குமாறு கப்பல் துறை தலைமை இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, இது பற்றி 12 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலய ஆடித்திருவிழா



 


24.07.2012.
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் பவானி அம்மன்.
கும்மிடிப்பூண்டி, ஜூலை 22: கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பவானி அம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழாவின் முதல் வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 75 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் திரண்டனர்.
இந்த ஆண்டு ஆடி திருவிழாவை, நடத்தும் பொருட்டு இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், பவானி அம்மன் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் சேது ரத்தினம்மாள் மற்றும் எல்லாபுரம் ஒன்றியக் குழுவின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் அவரவர் வேண்டுதலின்படி முடி காணிக்கை, கோழி, ஆடு வெட்டி காணிக்கை செலுத்துதல், அங்கப்பிரதட்சணம், வேப்பஞ்சேலை காணிக்கை ஆகியவைகளை செலுத்தி கோயில் வளாகத்தில் உள்ள பொங்கல் வைக்கும் மண்டபத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த நிலையில் அவர்கள் தங்குவதற்கு கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் மண்டபம் மட்டுமல்லாது எல்லாபுரம் ஒன்றியக் குழு சார்பில்க ஒன்றிய அலுவலக வளாகத்தில் தாற்காலிக தங்கும் கூடார வசதிகள், மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
அதே போல பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக சென்னை கோயம்பேடு, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலப் பகுதிகளில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி, கழிவறை வசதி, குளிக்க வசதிகள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ வசதி, அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகன வசதிகளை எல்லாபுரம் ஒன்றியக் குழு சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வசதிகளை அவ்வப்போது மாவட்டக் குழுத் தலைவர் பி.ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் அம்மிணி மகேந்திரன் மேற்பார்வை செய்து வருகின்றனர்.
200-க்கும் மேற்பட்ட போலீஸôரும், போக்குவரத்து போலீஸôரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்