siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 31 ஜூலை, 2012

சுவிஸ் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியில் படங்கள் அறிமுகம்

.31.07. 2012,
சுவிட்சர்லாந்தில் பாலியல்கல்வி நடத்துவோர் மாணவர்களுக்கு பாலியலறிவைப் புகட்ட தகுந்த படங்களைக் காட்டலாம் என்று ஆசிரியர்களை பிரபல வழக்கறிஞர் மார்க்கஸ் தியூனெர்ட் வலியுறுத்தி வந்தார். உளவியலறிஞரும், சமூகவியலாளருமான மார்க்கஸ் தியூனெர்ட் சமீபத்தில் பதவி விலகியபோது ஆண்கள் மற்றும் தேசிய அமைப்பின் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து விடுபட இயலாது என்றார். அந்த அமைப்பின் மூலமாக அவர், விடுமுறை மற்றும் சில சமத்துவப் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறார்.
இவர் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்கள் வகுப்பறையில் பாலியல் படங்களைக் காட்டுவதால் மாணவர்கள் அப்படங்களைக் கையாளும் முறையைக் கற்றுக் கொள்வர் என்றார்.
“பதினாறு வயதுக்குப் குறைந்தவர்களிடம் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபாசப் படங்களையும், பொருட்களையும் பெற்றோரும் பயிற்சிபெற்ற நிபுணரும் காண்பிப்பது சட்டப்படி குற்றமானது” என்று சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று தியூனெர்ட் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
இன்றைக்கு பெரும்பாலான சிறுவர்கள் தொலைபேசி மற்றும் இணையதளம் மூலமாக ஆபாசப்படங்களைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் வகுப்பில் சில நிமிடங்கள் மென்மையான பாலியல் படங்களை மாணவர்களுக்கு காண்பிக்கலாம் என்றார் தீயூனெர்ட்.
இவர் Manner.ch என்ற ஆண்களுக்கான அமைப்பின் தலைவராக இருக்கிறார். மேலும் ஆடவர் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். சுவிட்சர்லாந்தில் பாலியல்கல்வியின் அளவையும், பாட வரையறையையும் தற்போது மாநில அரசுகள் கவனித்து வருகன்றன.

ஒற்றுமை உணர்வை உணர்த்திய சுவிஸ் போராட்டம்

.31.07. 2012,
சுவிட்சர்லாந்தில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் குறித்து சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், மக்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை விட பொதுவான சமூகக் காரணத்துக்காகவே போராட்டங்களை நடத்துவதாகத் தெரிவித்தது. இந்த ஆய்வின் முடிவுகளை இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இம்முடிவுகளில் சுவிஸ் போராட்டங்களில் வயதானவர்களும் நன்கு படித்தவர்களும் சுவிஸ் அரசியல் தலைமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை பெல்ஜியம், பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினிலும் இந்த ஆய்வை நிகழ்த்தியது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் போராட்டக்காரர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
போராட்டக்காரர்களின் நோக்கத்தையும் அவர்களின் சமூகப் பின்புலத்தையும் அறிய விரும்பி, போராட்டம் நடைபெறும் வேளையில் இது குறித்து விசாரிப்பது சிறப்பானதாக இருக்கும் என்பதால் போராட்டக்களத்திலேயே ஆய்வை நடத்தியதாக ஜெனீவா பல்கலைக்கழகத்தின் மார்கோ கியூக்னி கூறினார்.
இந்தப் போராட்டங்களில் 40 – 64 வயதுள்ளவர்களும் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களும் கலந்து கொண்டனர். கல்வியும் அரசியல் சிந்தனையும் இணைந்து செல்வதை இப்பங்கேற்பு உணர்த்தியது. பங்கேற்பாளரில் 4 சதவீதத்துக்கும் குறைவானவர்களே கல்வியறிவில் குறைந்தவராக இருந்தனர்.

ஜேர்மன் தீர்ப்பால் சுவிஸ்ஸில் விவாதம்

.31.07. 2012,
ஜேர்மனியில் கோலோன் மாவட்ட நீதிமன்றம், சமயச்சடங்கான நுனித்தோல் அகற்றுதலை மருத்துவமனையில் செய்தால் அதற்குக் குற்றவியல் சட்டப்படி தண்டனை வழங்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனால் ஜுரிச் மற்றும் செயிண்ட் கேலன் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த அறுவையை இனி எவருக்கும் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
ஜுரிச் மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் நாங்கள் ஒரு மாதத்துக்கு இரண்டு, மூன்று அறுவை மட்டுமே நடத்தினோம். அதுவும் சமயக் காரணங்களுக்காக மட்டுமே செய்தோம் என்று கூறினார். ஆனால் சில வேளைகளில் தாயார் விருப்பம் தெரிவிக்க தந்தை மறுப்பு தெரிவிப்பது உண்டு என்றார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சமயவாதிகளுக்கும், யூதர்களுக்கும் நுனித்தோல் அகற்றுதல் முஸ்லீம்களுக்கும் (சுன்னத்) இந்த அறுவை ஒரு கட்டாய சமயச் சடங்காகும். ஆனால் மருத்துவமனைகள் இவ் அறுவையைச் செய்ய மறுத்தால் அது மக்களின் சமய சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்ற கருத்து காணப்படுகிறது.
ஃபிரிபோக் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் சட்டப் பேராசிரியரான மார்செல் நிக்லி, ஜேர்மனியில் வெளிவந்த தீர்ப்புக்கு சுவிட்சர்லாந்தில் விவாதம் தேவையில்லை என்றார். இவ்விரு நாடுகளின் சட்டங்களும் ஒருமித்த கருத்துடையனவாக இருந்தாலும் ஒருவரின் சுகாதார மேம்பாட்டுக்காக நடத்தப்படும் அறுவையை, காயம் என்று கருத இயலாது என்றார்.
ஆனால் ஜுரிச் பல்கலைக்கழகத்தின் குற்றவியலறிஞரான பேரா. மார்ட்டின் கில்லியாஸ் “வெகுகாலமாக இந்தப்பிரச்னை குறித்துப் பலரும் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் ஜேர்மனி நீதிமன்றத்தின் தீர்ப்பு இதனை இன்னும் தூண்டிவிட்டுள்ளது.
மருத்துவமனைகள் இந்த அறுவையை செய்வதில்லை என்று எடுத்திருக்கும் முடிவு மிகமிகச் சரியானதே” என்றார். “குற்றவியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் பார்த்தால் மருத்துவமனைகள் இந்த அறுவையைச் செய்ய விரும்புகின்றனரா என்பதை அறியவேண்டும்.
நம்முடைய மருத்துவ தர்மத்திற்கு எதிராக இந்த அறுவை இருக்கின்றது என்பது தான் நமது மருத்துவமனைகளின் பதிலாக இருக்கும் எனது நான் நம்புகிறேன்” என கில்லியாஸ் தெரிவித்துள்ளார்.

கடுமையான சட்டங்களை தொடர்ந்து சுவிஸ்சில் குறைந்து வரும் குடியுரிமை விண்ணப்பங்கள்

 31 07.2012,
சுவிஸ்சின் குடியுரிமை வேண்டுவோருக்காக விதிக்கப்பட்ட கடுமையான சட்டங்களை தொடர்ந்து இந்த மூன்றாண்டுகளில் சில குடியுரிமை விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மண்டலங்களில் சட்டதிட்டங்கள் மிகவும் நெருக்கமான முறையில் பின்பற்றப்படுவதாக பெடரல் குடியுரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 26,554 ஆக இருந்த குடியுரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 2011ல் 26,100 ஆக குறைந்துள்ளது. கடைபிடிக்கப்பட்ட சில நெறிமுறைகளை தொடர்ந்து விண்ணப்பத் தாரர்களின் எண்ணிக்கை தானாகவே குறைந்துள்ளது.
பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை அலுவலகங்களில், கடைபிடிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தகுதியான கட்டாய மொழி படிப்பு, ஆகியவை விண்ணப்பங்கள் குறைவதற்கு காரணமாக இருந்ததாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2004ல் 32000மாகவும், 2008ல் 34,965மாகவும் அதிகரித்து வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை தற்போது நடப்பு ஆண்டுகளில் குறையத் தொடங்கியுள்ளன.

வர்த்தகம் பாதித்தாலும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்

  31 யூலை 2012,
சுவிட்சர்லாந்தில் வீடு, கடை, கல்லூரி போன்ற கட்டிடங்களுக்குள் புகை பிடிப்பதைத் தவிர்க்க தேசிய அளவில் தடையைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் 23ம் நாள் பொதுவாக்கெடுப்பு நடக்கின்றது. நான்காண்டுகளுக்கு முன்பிருந்தே நாடாளுமன்றம் புகை பிடிக்காதவர்களும், புகைபிடிப்பவரால் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இருப்பினும் இப்போது நாடு முழுக்க ஒரே நடைமுறை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுவிஸ் நுரையீரல் நலச் சங்கம் இம்முயற்சியை எடுத்துள்ளது. இதற்கு சுகாதார அமைப்பு, நுகர்வோர் சங்கம், தொழிற்சங்கம், மைய இடதுசாரிக் கட்சிகள் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இப்போது உணவகங்களிலும், மதுபானக்கூடங்களிலும் தனியாக புகைபிடிப்போருக்கென்று தனியறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மைய, வலதுசாரிக் கட்சிகள் உணவகத் தொழிலதிபர்களுடன் சேர்ந்து, மாநில அரசுகளுக்கு இதுபோன்ற விடயங்களை முடிவு செய்யும் அதிகாரம் இருக்கும் போது மத்திய அரசு இதில் தலையிட வேண்டியதன் அவசியம் குறித்து விமர்சிக்கின்றன.
நுரையீரல் நல அமைப்பின் தலைவரான ஆட்டோ பில்லெர், நாங்கள் புகைபிடிப்பவரைக் குற்றம் சொல்லவில்லை. அவர்களின் புகை மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கக்கூடாது என்பதையே வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
இப்போது பணியிடங்களிலும் பலர் கூடும் திரையரங்கு, அங்காடி போன்ற இடங்களிலும், சாலை, தெரு போன்ற பொதுவிடத்திலும் புகை பிடிக்க அனுமதியில்லை. மதுபானக்கூடங்கள் சிலவற்றில் புகை பிடிப்பதற்கென்று தனிக்கூடங்கள் உள்ளன.
26 மாநிலங்களில் பதினைந்து மாநிலத்தில் இந்தத் தடை நடைமுறையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் சட்டம் புகைபிடிப்பவர்களிடம் சற்று தாராளமாக நடந்து கொள்கிறது

அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் திருப்பியனுப்ப பட்டமை இனப் பாகுபாடே காரணம்: “த அவுஸ்திரேலியன்”

செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னரே அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் ஒருவர் திரும்பியனுப்பப்பட்டதாக “த அவுஸ்திரேலியன்” நாளிதழ் கூறுகிறது.
இலங்கை கடற்படை தளபதிக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.
அதேவேளை, அவுஸ்திரேலியா, தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவர்கள் என வகைப்படுத்தி நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கையின் கடற்படைத் தளபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதனாலேயே, தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அதிகளவில் செல்வதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையிலேயே கடந்த வாரம் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட்டதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர, அவுஸ்திரேலியாவிற்கு செல்ல எத்தனிக்கும் அதிகளவான தமிழர்களே இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சம்பவங்களுக்கு இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

லண்டனில் 9வது நாளாக நடைபெற்றுக்​கொண்டிருக்​கும் சிவந்தனின் உண்ணாவிரதப் போராட்டம்

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
லண்டனில் ஒலிம்பிக் மைதானத்தின் முன் சிவந்தன் தனது கோரிக்கை நிறைவேறும் வரை உறுதி தளராமல் ஒன்பதாவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தை தொடர்கின்றார்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல வேற்றின மக்களும் சிவந்தனின் போரட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவுகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனு பிரணாப் முகர்ஜியிடம்..!

 
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றிருக்கும் பிரணாப் முகர்ஜியிடம்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதித்துள்ள பேரறிவாளன் முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனு செல்லுமென இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மரண தண்டனையினை இம்மூவரும் எதிர்கொண்டுள்ளனர்.
இம்மூவரின் மரதண்டனைக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர் தேசங்களிலும் ஒலித்து வருகின்றது.
இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான புதிய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் மேசைக்கு குறித்த மூவரின் கருணை மனு செல்லுமென இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஆளும் இந்திய அரசாங்கத்தின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு எதிரான தமது கட்சியின் வலியுறுத்தல் தொடர்ந்து இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாடு குறித்து நான் ஏற்கனவே கதைத்துள்ளேன். பொதுவாக நான் மரணதண்டனைக்கு எதிரானவன் பேரறிவாளன் மற்றும் ஏனையோரின் மரண தண்டனை விவகாரம் குறித்து எனது கோரிக்கையை எமது கட்சி ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. அந்தக் கோரிக்கை தொடர்ந்தும் இருக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

உதயன் ஆசிரியர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நியமனம்

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
உதயன் ஆசிரியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணை செய்வதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கடிதம் இன்று தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதை நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
நீதி நலன் கருதி வேறு ஒரு நீதிபதி முன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, நீதி சேவை ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவெளை, யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்திற்கு நிதி உதவி செய்து வரும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு பிரதிநிதி, நேற்று முன்தினம் இரவு யாழ். குடாவில் உள்ள ஊடகங்களின் முதன்மையானவர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார்.
அவ் இரவு விருந்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் டான் தொலைக்காட்சியின் சார்பில் கலந்துக்கொண்ட மூத்த ஊடகவியலாளர் வேல்தஞ்சனுக்கும் உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட பிரேமானந்திற்கும் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
மகிந்த ராஜபக்சவிற்கும் கோத்தபாயவுக்கும் டக்ளசுக்கும் துதிபாடுவதாக, உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்து கொண்ட பிரேமானந், டான் தொலைகாட்சி சார்பில் கலந்தக்கொண்ட வேல்தஞ்சனிடம் கூறிய போது, இறந்து போன பிரபாகரனின் ஆவிக்கு துதிபாடுவதை விட உயிரோடு இருப்பவர்களின் அபிவிருத்தி வேலைகளுக்கு துதி பாடலாமென வேல்தஞ்சன் கூற வாயத்தர்க்கம் சூடுபிடித்திருக்கின்றது.
இதனால் உணர்ச்சிவசப்ட்ட பிரேமானந், சபைகளில் பாவிக்க தகாத தூசன வார்த்தைகளால் பேசியதுடன் வேல்தஞ்சனை தாக்க முனைந்த போது குறித்த வெளிநாட்டு பிரதிநிதி இருவரையும் சமரசப்படுத்தியதாக தெரியவருகின்றது.
சபையில் பாவிக்க தகாத வார்த்தைகளை உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட பிரேமானந் பாவித்ததையடுத்து, ஏனைய ஊடகவியலாளர்கள் முகத்தை சுழித்துக்கொண்டு வெளிறேயிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று டான் தொலைக்காட்சியல் பத்திரிகைகள் பார்வை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வேல்தஞ்சன் ஏறத்தாள 20 நிமிடங்கள் இது தொடர்பில் தனது பக்க நியாயத்தை நேற்று கொட்டித் தீர்த்துள்ளார்.
மக்கள் நம்பும் ஊடகங்களில் வேலை செய்யும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மூத்த ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சந்தைகளிலும் தெருக்களிலும் பாவிக்கின்ற வசனங்களை பொறுப்பு வாய்ந்த ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்கள் பாவிப்பதானது ஊடகவியலாளர்களை வெட்கமடையச் செய்திருக்கின்றது

யாழ்ப்பாணத்தில் காந்தி சிலை சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்

  செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
யாழ்ப்பாணத்தில் அகிம்சாவாதி மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு த ஹிந்து பத்திரிகை கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மட்டக்களப்பு நகரில் இருந்த மஹாத்மா காந்தி மற்றம் விவேகாநந்தரின் சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு இந்த சிலையை சிலர் உடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்த சிலையை உடனடியாக சீர்த்திருத்துமாறு, இந்திய உயர்ஸ்தானிகர், வெளியுறவுகள் செயலாளரிடம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.