siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 11 ஆகஸ்ட், 2012

கண்டி போதனா வைத்தியசாலையில் தீ விபத்து

11.08.2012.
கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று முற்பகல் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் இரசாயன பகுப்பாய்வு பிரிவில் இருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்தால் தீ பரவியுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. தற்போது தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் நடந்த மாற்றான் இசை வெளியீட்டு விழா


 


11.08.2012.
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் மாற்றான். முதன் முறையாக சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். படத்தில் அகிலம், விமலன் என்ற இரு கேரக்டரில் வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிங்கப்பூரில் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக் கச்சேரியுடன் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் இசைக் குறுந்தகட்டை இயக்குநர்கள் கவுதம் மேனன், ஹரி, விஜய், லிங்குசாமி வெளியிட, சூர்யா, கேவி ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நடிகர்கள் சிவகுமார், பிரபு, பிரசன்னா - சினேகா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பிருந்தா நடன அமைப்பில் தன்ஷிகா, பூர்ணா உள்ளிட்டோர் நடனம் ஆடினர். விழாவில் அஞ்சலா அஞ்சலா பாடலுக்கு மேடையில் திடீரென தோன்றிய சூர்யா நடனம் ஆடினார். அவருடன் இணைந்து கார்த்தி, பிரசன்னா ஆகியோரும் நடனமாடி உற்சாகப்படுத்தினர். சுமார் 10 ஆயிரம் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்

ரசிகர்கள் இம்சை தாங்க முடியலை: அஞ்சலி

11.08.2012.
கலகலப்பு படத்தில், விமலும் சிவாவும் இவளுக இம்சை தாங்க முடியல என்று அஞ்சலி, ஓவியாவைப் பார்த்து பாடினர்.
ஆனால் இப்போது அஞ்சலியோ, ரசிகருங்க இம்சை தாங்க முடியல என்று சலித்துக் கொள்கிறார்.
அப்படி என்ன பண்ணிவிட்டனர் ரசிகர்கள்? என்று கேட்டால், போன்ல பேசியே என்னை கொல்றாங்க. சரி, ரசிகர்களாச்சேன்னு இரண்டு வார்த்தை பேசினா, விட மாட்டேங்கறாங்க.
மணிக்கணக்குல கடலை போடுறாங்க. அதுவும் கலகலப்பு படத்துக்கு பின், என் அழகை அவங்க வர்ணிக்கிறது ரொம்ப அதிகமாயிடுச்சு.
என்னென்னவோ, கவிதையா சொல்றாங்க. ஒருத்தர், இரண்டு பேரு இப்படி சொன்னா ரசிக்கலாம். ஆனால் போன் பேசுற அத்தனை பேருமே லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுனா, நான் என்னங்க பண்றது என்று கூறுகிறார் அஞ்சலி.
ரசிகர்களின் அன்புத் தொல்லை சந்தோஷமான விஷயம் தானே என்றால், ஒரு நாள், இரண்டு நாள்னா பரவாயில்லை. தினமும் இதே வேலையா இருந்தா எப்படி. பகல் முழுக்க ஷூட்டிங் போயிட்டு வர்ற நான், இரவு தூங்க வேணாமா? அதனால் இப்பல்லாம் நான் போன் எடுக்கறதே இல்லை. சினிமாக்காரங்ளே பேசினா கூட, அம்மா தான் பதில் சொல்வாங்க என்கிறார் அஞ்சலி

ரூ. 25 லட்சம் சம்பளம் வாங்கும் அஞ்சலி

11.08.2012.
நடிகை அஞ்சலி ஒரு படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் வெளிவந்த அங்காடித்தெரு படத்தின் மூலம் தனக்கென்று ஒரு நன்மதிப்பை உருவாக்கிக்கொண்டார் நடிகை அஞ்சலி.
இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும், கலகலப்பு படங்கள் அபார வெற்றி பெற்றது.
தொடக்கத்தில் ஒரு படத்திற்கு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 9 லட்சம் வரை வாங்கிக்கொண்டிருந்த நடிகை அஞ்சலி, ஒரேயடியாக தனது சம்பளத்தை தற்போது உயர்த்தியுள்ளார்.
இப்போது அவருடைய சம்பளம் ரூ. 25 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக அஞ்சலி நடித்த கலகலப்பு படத்தின் வெற்றியே சம்பள உயர்வுக்கு காரணமென்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது டெல்லி பெல்லி ரீமேக், சேட்டை படத்தில் நடிகர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அஞ்சலி.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் பேஷன் ஷோ

10.08.2012.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்திய விமான நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டின் “வியட் ஜெட் ஏர்” நிறுவனம் தன்னுடைய புது விமானத்தை, ஹோசிமின் நகரிலிருந்து சுற்றுலாத் தலமான நாடிராங் பகுதிக்கு, கடந்த 3ஆம் திகதி இயக்கியது.
புது விமானம் நடுவானில் பறக்கும் போது, விமானத்திற்குள் உள்ளாடைகளுக்கான அலங்கார அணிவகுப்பு நடந்தது.
ஐந்து மொடல் அழகிகள் இந்த அணிவகுப்பின் போது மூன்று நிமிடங்கள் நடனமாடியுள்ளனர். இந்த விமானத்தில் பயணித்தவர்கள் இந்த அணிவகுப்பு மற்றும் நடனத்தை மொபைல் போனில் படம் பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட வியட்நாம் நாட்டு விமான கட்டுப்பாட்டு ஆணையம், உரிய அனுமதி பெறாமல் நடுவானில் இதுபோன்ற ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்திய விமான நிறுவனத்துக்கு 1,000 டொலர் அபராதம் விதித்துள்ளது

தன் மகளின் நண்பர்களுடன் தவறான உறவில் ஈடுபட்ட தாய்

10.08.2012.
தனது மகளின் நண்பர்களான இரு பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு 7 வருட சிறை தண்டனை கிடைக்கவுள்ளது. 4 குழந்தைகளின் தாயான பிரிட்டனைச் சேர்ந்த கெல்லி பேகர் என்ற 35 வயது பெண், மதுபோதையில் 14 மற்றும் 16 வயது சிறுவர்களுடன் ஒரே நேரத்தில் உறவு வைத்துள்ளார்.
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள டட்வேர்த் நகரில் உள்ள கெல்லியின் வீட்டுக்கு அவரது மகள் தன்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விருந்தளித்தார். இதற்காக 10 மாணவ, மாணவிகள் கெல்லியின் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது கெல்லி மது அருந்தி விட்டு அவர்களில் 16 வயதான ஒரு மாணவனுடன் சமயலறையில் நடனமாடியுள்ளார். பின்னர் அவனுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார்.
அப்போது அதைப் பார்த்துவிட்ட 14 வயது சிறுவனையும் இழுத்து உறவு வைத்துள்ளார். 14 வயது சிறுவனுடன் தவறாக நடந்து கொண்டதற்காக கெல்லி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை கெல்லி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு அதிகபட்சமாக 7 வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

காதலியின் மகனைக் குத்திக் கொன்றவன் கைது

10.08.2012.
ஜேர்மனியில் காதலியின் மகனை, காதலன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் நள்ளிரவில் நடந்தது. மகனின் அலறலைக் கேட்டு விழித்த தாய், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனைக் தூக்கி கொண்டு தெருவில் நின்று கொண்டு உதவி கேட்டு கதறினாள்.
அலறல் சத்தம் கேட்டு அண்டை வீட்டாளர் ஒருவர், பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸ் விரைந்து வந்து கொலைகாரனைப் பிடிக்க முயன்ற போது அவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டான்.
அவனுக்கு மயக்கமருந்து கொடுத்து பிடித்துச் சென்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் அதிகளவு ரத்தம் வெளியானதால் உயிரிழந்தான்.
அதன் பின், கொலையாளி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவன் என்பதுவும், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளான் என்பதுவும் தெரியவந்தது.

தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த படகிலிருந்து எதிரிகளை காப்பாற்றிய அமெரிக்கர்கள்

10.08.2012.
மத்திய கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த படகொன்றிலிருந்து 10 பேரை அமெரிக்க கடற்படையினர் முதன் முறையாக காப்பாற்றி உள்ளனர். இவர்களில் 8 பேர் ஈரானியர்கள், மீதமுள்ள 2 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ் ஜேம்ஸ் ஈ. வில்லியம்ஸ் என்ற போர்க்கப்பலே இவர்களை மீட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க கடற்படை பேச்சாளர் ஒருவர் கூறுகையில், விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்கப் படையினரால் ஈரானியர்கள் காப்பாற்றப்படுவது இது முதல் முறையல்ல.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானியர்கள் 13 பேரைக் கடற்கொள்ளையர்களிடமிருந்து அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

,லங்கா ஸ்ரீ தமிழ் ரேடியோ {f m }

மிகவும் காதுக்குவிருந்தாக தமிழ் வானொலி
#






தடைகள் வரினும் டெசோ மாநாடு நடைபெறும்; ஏற்பாடுகள் பூர்த்தி என அறிவிப்பு

10.08.2012.
news டெசோ மாநாடு திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாமுகள் அனைத்தும் பூர்த்ததியடைந்துள்ளதாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ள டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் மாநாட்டை சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளளது.

இதனையடுத்து மாநாடு நடைபெறுவதில் பல்வேறு இடையூறுகளும் நெருக்குதல்களும் எழுந்த நிலையிலும் மாநாட்டை நடத்துவதில் டெசோவின் ததலைவரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி உறுதியாக உள்ளார் என ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் தெரிவித்திருக்கிறார்