siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

செம்சுங்குக்கு விழுந்த மரண அடி!

BY.rajah.27.08.2012.அப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவ்வழக்கினைத் தொடுத்தது. இதனூடாக செம்சுங்கிடம் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது.
இதற்குப் பதிலடியாக வழக்குத் தொடுத்த செம்சுங், அப்பிளிடம் 399 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது.

கடந்த ஒருவருட காலத்துக்கு அதிகமாக நீடித்த இவ்வழக்கின் தீர்ப்பானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.

அப்பிள் கோரிய 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈட்டுத் தொகையை ஏற்க மறுத்த நீதிமன்றம் சுமார் 1 பில்லியன் டொலர்களை மட்டும் வழங்கும்படி செம்சுங்குக்கு உத்தரவிட்டது.

செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்கள் அப்பிளின் காப்புரிமை செய்யப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை செம்சுங்கினால் அப்பிளிடம் நட்ட ஈடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கையும் நிராகரித்தது.

இத்தீர்ப்பினைத் தொடர்ந்து செம்சுங்கின் மொபைல் அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான தடையையும் அப்பிள் நீதிமன்றத்தில் கோராலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இத்தீர்ப்பானது பிரித்தானியா போன்ற நாடுகளில் செம்சுங்கின் மொபைல் சாதனங்களின் விற்பனையைப் பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இத்தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது.

செம்சுங்குக்கு எதிராக வழங்கப்பட்ட இத்தீர்ப்பானது மற்றைய நிறுவனங்கள் பலவற்றை குறிப்பாக அண்ட்ரோய்ட் இயங்குதளத்தினை தமது மொபைல் சாதனங்களில் உபயோகிக்கும் நிறுவனங்களிடையே அச்சத்தினைத் தோற்றுவித்துள்ளது.

தாமும் இத்தகைய ஒரு பாரிய தொகையினை நட்ட ஈடாக செலுத்த வேண்டிவரலாம் என அவை அச்சங்கொண்டுள்ளன.

செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் விற்பனையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை அப்பிளுக்கு மிகப் பெரும் தலையிடியாக மாறியிருந்தது. இந்நிலையில் இத்தீர்ப்பானது அப்பிளுக்கு சற்று உற்சாகமளித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்

ஜரோப்பாவில் கோலாகலமாக நடந்தேறிய கார்னிவெல் திருவிழா

BY.rajah.27.08.2012.
ஜரோப்பாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவான நோட்டிங் ஹில் கார்னிவெல் அண்மையில் இடம்பெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதுடன் பல்வேறுபட்ட கலைஞர்களும் தமது வித்தியாசமான திறமைகளை அந்த மக்கள்கூட்டத்தின் மத்தியில் வெளிக் கொணர்ந்துள்ளனர். அந்த கார்னிவெல் தொடர்பான சுவாரஸ்ய காட்சிகள் அடங்கிய புகைப்படத்தொகுப்பே இவை
.









 

50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் (பட இணைப்பு)

BY.rajah.27.08.2012.தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல இலட்சம் மோசடி செய்த கேரள அழகியான சஹானா என்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றைப் பறித்து மோசடி செய்துள்ளார்.
இவ்விடயம் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியுலகுக்குத் தெரியவந்தது.


சஹானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 5 பேர் மட்டுமே சஹானா தங்களை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளனர்.

எனினும் தொடர்ச்சியாக பலர் புகார் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சஹானாவைக் கைது செய்ய பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



sfv

fhg









வேன் விபத்துக்குள்ளானதில் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற இலங்கையர் உட்பட 18 பேர்

BY.rajah.27.08.2012.இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த இலங்கையர் உட்பட 18 பேர் விபத்துக்குள்ளாகிக் காயமடைந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜோன் (வயது 28), மட்டக்களப்புப் பகுதியை சேர்ந்த குமுதா (வயது 45), நேசலட்சுமி (வயது 43) மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளில் வசிக்கும் இவர்களின் உறவினர்கள் அன்டனி இருதயராஜ் (வயது 32), அஞ்சலின் (வயது 22), அகிலன் (வயது 20), அருள்தாஸ் (வயது 32), அரசன் (வயது 03) உட்பட 17 பேர் சுற்றுலாவாக தமிழகத்தை சுற்றிப் பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர்.

இவர்கள் சென்னையில் சுற்றுலா வேன் ஒன்றை வாடகைக்கு ௭டுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். வேனை சென்னையைச் சேர்ந்த லாசர் (வயது 25) ௭ன்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று முன்தினம் இறுதியாக கொடைக்கானலை சுற்றிப் பார்த்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த வேன் உளுந்தூர்பேட்டை அருகே ஷேக் உசேன் பேட்டை ௭ன்ற இடத்தில் வந்தபோது வேன் டிரைவர் லாசர் தூங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேன் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்து போனது. இதில் வான் டிரைவர் லாசர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் 13 பேர் உட்பட 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ௭டைக்கல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயம் அடைந்த அனைவரையும்மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

முள்ளிக்குளம் தேவாலயத்தில் ஐந்து வருடங்களின் பின் திருவிழா

BY.rajah.27.08.2012.
முள்ளிக்குளம் தேவாலயத்தில் சுமார் ஐந்து வருடங்களின் பின் திருவிழாத்திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மன்னாரின் தென்பகுதியான முசலிப்பிரதேசத்தின் மீது கடந்த 2007ஆம் ஆண்டு இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக முசலிப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.

இவ்வாறு வெளியேறியவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தம்மை தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியான பல அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுத்துவந்திருக்கின்றனர்.

ஆயினும் அவர்களது எந்தக்கோரிக்கையும் சம்பந்தப்பட்டவர்களால் நிறைவேற்றப்படாத நிலையில் அம் முள்ளிக்குள மக்கள் கடந்த இருமாதங்களுக்கு முன் தன்னிச்சையாக முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய காயாக்குழி மற்றும் மலங்காடு ஆகிய பகுதிகளில் குடியேறியிருக்கின்றனர்.

எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் காடுகளுக்குள் குடியேறியிருக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க முள்ளிக்குளம் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வழிபட்டு வந்த முள்ளிக்குளம் புனித பரலோக மாதா தேவாலயம் மற்றும் அதன் சுற்றுப்புறச்சூழல் அனைத்தும் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு பாரிய கடற்படை முகாம் ஒன்றும் நிறுவப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள முள்ளிக்குளம் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா ஆவணி மாதம் 15ஆம் திகதியே இடம்பெற வேண்டியது.

ஆயினும் குறித்த தினத்தில் மடு அன்னையின் திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெறுவதனால் முள்ளிக்குளம் தேவாலயத்தின் திருவிழா வருடந்தோறும் ஆவணி மாதம் 26ஆம் திகதியே இடம்பெற்று வருகின்றது.

இருந்த போதும் கடந்த ஐந்து வருடங்களாக இவ்வாலயத்தில் திருவிழாத்திருப்பலிகள் இடம்பெறாத நிலையில் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது.

மன்னார் ஆயர் அதிமேதகு இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற கூட்டுத்திருப்பலியில் பெருமளவிலான குருக்கள்,துறவியர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே புனித பரலோகமாதா தேவாலய திருவிழாத்திருப்பலியில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரய்யா மற்றும் நானாட்டான், மன்னார் பிரதேச சபைகளின் தலைவர்கள்,அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.


குறித்த திருவிழா திருப்பலியின் போது முள்ளிக்குளம் மக்களாகிய நாங்கள் மீண்டும் எமது சொந்த மண்ணில் குடியமர வேண்டும் எனவும்,தாங்கள் கடந்த 5 வருடங்களாக மேற்கொண்டு வந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் எனவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

திருவிழாத்திருப்பலியின் நிறைவில் அன்னையின் திருச்சொரூப பவனியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசீரும் இடம்பெற்றது

18 வயசு – பதறுது மனசு! -திரை விமர்சனம்!

BY.rajah.27.08.2012.நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் ’ரேனிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஜானி நடித்து வெளிவந்துள்ள படம் ‘18 வயசு’. ரேனிகுண்டா படம் தெலுங்கிலும், தமிழிலும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு
இருந்தது.
ஒரு மலைக்கிராமத்தில் வசித்து வரும் சாதாரணக் குடும்பத்தில் தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டு வளர்கிறான் கதாநாயகன். மகன் தந்தையிடம் மட்டும் பாசத்துடன் இருப்பது தாய்க்கு பிடிக்காததால் கதாநாயகனின் குழந்தைப்பருவம் பெற்றோர்களின் சண்டையிலேயே வளர்கிறது.
கதாநாயகனின் அம்மா வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் அப்பாவும், மகனும்.
தனது மனைவியா இப்படி என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத கதாநாயகனின் தந்தை தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதையும் நேரில் பார்த்துவிடும் கதாநாயகனை கிடைக்கும் தனிமையும், கிடைக்காத தாய்ப்பாசமும் ஒரு சைக்கோவாக மாற்றிவிடுகின்றன். சிறிய வயதில் எதுவும் தெரியாவிட்டாலும் வளர வளர கதாநாயகனுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது நன்கு தெரியவருகிறது. மன அழுத்தத்தினால் உண்டாகும் இந்த நோயினால் எந்த மிருகத்தை பார்த்தாலும் அந்த மிருகத்தைப் போலவே வெறித்தனமாக மாறிவிடும் கதாநாயகன் நகரத்திற்கு வந்ததும் படத்தின் கதாநாயகியான புதுமுக நடிகை காயத்ரியைப் பார்க்கிறான்.
கதாநாயகியும் தன்னைப்போல பெற்றோர் இல்லாமல் அனாதையாகவும், பாசத்திற்கு ஏங்கியும் உறவுக்காரர்கள் வீட்டில் வளர்ந்தது தெரியவர நண்பனாக அறிமுகமாகி பின்பு காதல் வயப்படுகிறான் கதாநாயகன். தன் அம்மாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர் “ என்னை சித்தப்பா என்று அழைக்கப் பழகிக்கொள். இனி நான் இங்கு தான் இருப்பேன்” என்று கூறி சித்ரவதை செய்ய, தன்நிலை இழக்கும் கதாநாயகனுக்கும் அவருக்குமிடையே நிகழும் சண்டையில் குறுக்கே வரும் தனது அம்மாவை கொலை செய்கிறான் ஜானி.
கொலைகாரனாகிய தன்னை வலைவீசித் தேடும் போலீஸிடமிருந்து தப்பித்து கதாநாயகியிடம் செல்லும் போது ’அம்மாவையே கொலை செய்துவிட்டான்’ என அவனை கதாநாயகி ஒதுக்கிவிடுகிறாள். சிறு வயதில் தன் தந்தை சொன்ன கதைகள் நினைவிற்கு வந்து கதாநாயகியை
ஒரு மலையடிவாரத்திற்கு கடத்திச் செல்லும் கதாநாயகனை, போலீஸ் விடாது துரத்தி வர மருத்துவராக வரும் நடிகை ரோகிணி அவன் குற்றவாளி இல்லை நோயாளி என காவல் துறைக்கு கதாநாயகனின் நிலையை புரியவைக்க முயற்சி செய்கிறார்.
காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? கதாநாயகன் குணமடைந்தானா? இது போன்ற சூழ்நிலையில் காவல்துறையின் நடவடிக்கை எந்த விதத்தில் இருந்தது? என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.படத்தின் முதல் பாதியை காமெடியாக கொண்டு சென்றிருக்கின்றனர். ஹீரோவுக்கு மனநிலை சரியில்லாத நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் குழந்தைத் தனமான பேச்சை தவிர்த்திருக்கலாம். கதாநாயகி நல்ல நடிப்பு. கதாநாயகியை அடுத்து அதிக படங்களில் பார்க்கலாம். தேவையான அளவு இசை, பிரம்மிப்பான சண்டைக் காட்சிகள் என அனைத்தும் பொருத்தம். கதாநாயகனின் நண்பனான ஜாக்கியும், நாம் பார்க்காத சென்னையும் இயக்குனரின் திறமை.

மூச்சுத் திணறல்: நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி

BY.rajah.27.08.2012.மனோரமா மூச்சுத் திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மனோரமா ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். சில மாதங்களுக்கு முன் ஓட்டல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவர் காலில் முறிவு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காலை குணமாக்கினர். பின்னர் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு பின் மீண்டும் உடல்நிலை பாதித்தது. ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தார். பிறகு குணமாகி வீடு திரும்பினார்.
இன்று திடீரென மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர் பிரேம் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

வித்யாபாலன் இடத்தில் நயன்தாரா


BYrajah-Monday, 27 August 2012,
பாலிவுட் புயல் வித்யா பாலன் மலையாளத்தில் உருவாகவுள்ள "அறிவால் சுட்டிக்க நட்சத்திரம்" என்ற படத்தில் நாயகியாக நடிக்க தெரிவு செய்யப்பட்டார்.
இப்படத்தை அமல் நீரத் என்பவர் இயக்க மம்மூட்டி, பிருத்விராஜ் இணைந்து நடிக்கின்றனர்.
உருமி படத்துக்கு திரைக்கதை எழுதிய சங்கர் ராமகிருஷ்ணன் இப்படத்துக்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
இப்படத்தில் வித்யாபாலனுக்கு பதிலாக தற்போது நயன்தாராவை நடிக்க அமல் கேட்டதாகவும் அதற்கு நயன் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட வித்யாபாலன், திகதிகள் ஒதுக்கித் தராமல் இழுத்தடித்த காரணத்தினாலேயே இந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றுள்ளது.
1960களில் நடக்கும் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தின் திரைக்கதையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இப்படத்தை 3டியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனது திரையுலக பயணத்தை மலையாள படத்தின் மூலம்தான் தொடங்கிய நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
 

கணவருடன் மோதலா? ரீமா சென் விளக்கம்

BY.rajah - Monday, 27 August 2012,
 ,
இந்தி படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்த காட்சியால் கணவருடன் மோதல் ஏற்பட்டதா என்பதற்கு ரீமா சென் பதில் அளித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு சினிமாவில் நல்ல நேரம் வந்திருக்கிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன்.
கேங்ஸ் ஆப் வசேப்பூர் படம் வெளியானது. கேன்ஸ் பட விழாவில் பங்கேற்றேன். தோழன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.
கேங்ஸ் ஆப் வசேப்பூர் படத்தில் ஜாக்கெட் அணியாமல் முழுமையாக முதுகை காட்டி நடித்ததால் என் கணவர் ஷிவ் கரணுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது போல் வதந்தி கிளப்புகிறார்கள்.
இது நல்ல ஜோக். நான் ஒரு நடிகை. என் வேலையைத்தான் செய்கிறேன். இதுபோன்ற வதந்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை.
அந்த படத்தில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பது உண்மைதான். ஜாக்கெட் இல்லாமல் எனது முதுகுபகுதி முழுவதும் பளிச்சிடுவதுபோல் சீன் அமைந்திருந்தது. ஆனால் அது நிர்வாண காட்சி அல்ல. அதுபோல் நடித்ததற்காக நான் வருத்தப்படவில்லை.
தமிழில் எனது முதல்படம் மின்னலேவில் தொடங்கி ஒருபோதும் நான் ஓவர் கிளாமராக நடித்ததில்லை. ஆனால் கிளாமர் நடிகை என்ற இமேஜ் எனக்கு அமைந்து விட்டது.
தலைமுதல் கால்வரை மூடிக்கொண்டு நடித்தாலும் நான் கிளாமராக நடித்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்காக வருந்தவில்லை. பெருமைப்படுகிறேன்.
எனவே கிளாமர் கதாநாயகி என்ற பட்டப் பெயரை தவிர்க்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

சுந்தரபாண்டியனில் ரஜினி ரசிகராக நடிக்கிறார் சசிகுமார்

BY.rajah -Monday, 27 August 2012,
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அனைத்து பரிமாணங்களிலும் வெற்றிகளை குவித்தவர் சசிகுமார்.
போராளி படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன்.
இப்படத்தை அவரது உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க, சசிகுமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பாடலில் அவரை ரஜினி ரசிகராக சித்தரித்து ஒரு பாடல் வந்துள்ளது.
அதற்கு அவர் பதிலளிக்கும் போது, ஆமாம். இப்படத்தில் நான் ரசிகராக நடிக்கிறேன். பாடல் காட்சியிலும் அது தெரியும்.
இது வேண்டுமென்றே திணிக்கப்பட்டதில்லை. என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் ரஜினி மற்றும் கமலின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்