siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழி, ஆடுகள் ஒப்படைப்பதற்கான தடை நீக்கம்

02.09.2012.BY.rajah.
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழிகள், ஆடுகளை பக்தர்கள் ஒப்படைப்பதற்கு நேற்றுக்காலை பொலிஸார் விதித்திருந்த தடை சிறிது நேரத்தில் ஜனாதிபதியின் இந்து சமய இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிச்சங்கர சிவாச்சாரியாரின் தலையீட்டை அடுத்து நீக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பா ளர் சிவஸ்ரீ பாலரவிச் சங்கர சிவாச்சாரியார் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்குச் சென்று வேள்வி மற்றும் மிருக பலி தொடர்பாக கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தர்மகர்த்தா காளிமுத்து சிவபாதசுந்தரம் மற்றும் சிலாபம் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புனித கபிலவஸ்து இலங்கையின் முக்கிய விகாரைகளில் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுவதால் ஜனாதிபதி மிருக பலியை இடை நிறுத்தும்படி கோரியுள்ளதை ஏற்று மிருகபலியை பின் போடுவதாக இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகத்துறை உறுதியளித்தது.

அத்துடன் இன்றைய தினம் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக ௭டுத்து வரும் கோழி, ஆடுகளை ஆலயம் பொறுப்பேற்றுக் கொள்ளுமெனவும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது. இருந்தும் நேற்றுக் காலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஒப்படைக்கவென பக்தர்கள் ௭டுத்து வந்த ஆடு, கோழிகளை பொலிஸார் ஆலயத்துக்குள் ௭டுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து ஆலய நிர்வாகம் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியாருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தது. சிவாச்சாரியார் உடனடியாக பொலிஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் ௭ட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்து விளக்கியதும் பொலிஸார் தடையை நீக்கினர். நேற்று ஆலயத்தில் மிருக பலி இடம்பெறவில்லை. ௭னினும் பூஜைகள் வழமை போல நடைபெற்றன.
 

காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினரின் வாகனம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

 
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012,BY.rajah.
மட். காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். பலுளுள் ஹக்கின் வாகனம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடியிலுள்ள வாகனத் திருந்தும் நிலையமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாகன திருத்த நிலையத்தின் உரிமையாளரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 



ஆண்ட்ராய்ட் கைபேசிகளை முழுமையாக பக்கப் செய்வதற்கு

 ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, BY.rajah.
தற்போது ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ளது. அதில் சேமிக்கப்படும் தகவல்கள் அப்பிளிகேஷன்கள் அதிகரித்துச் செல்லும் போது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்ட்ராய்ட் டிவைஸை பக்கப் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். ஏற்கனவே ரூட்டிங்க் செய்து அல்லது Bootloader Unlock மூலம் பக்கப் செய்வது அனைவருக்கும் ஏற்ற முறையல்ல. ஏனெனில் சிறிய பிழை ஏற்பட்டால் கூட முழுமையாக டிவஸை ரீஸெட் செய்தே மீண்டும் பயன்படுத்த முடியும்.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக Gigadroid என்ற பிரபல ஆண்ட்ராய்ட் கருத்துக்கள டெவெலப்பர்கள் Ultimate Backup Tool ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
விண்டோஸில் இயங்கும் இந்த டூலைக்கொண்டு ஆண்ட்ராய்ட் 4.0 டிவைஸ்களை முழுமையாக பக்கப் செய்து பின்னர் ரீஸ்டார் செய்யவும் முடியும் என்கிறார்கள்.
Galaxy Nexus, Galaxy S II தொலைபேசிகளிலும் பரிசோதனை செய்துள்ளனர்.
Ultimate Backup Tool பின்வரும் முறைகளில் பக்கப் செய்கின்றது.
• Backup all without system apps.
• Backup all with system apps.
• Backup app and device data.
• Backup apps.
• Backup device shared storage/SD card contents.
முழுமையாக பக்கப் செய்ய முன்னர் உங்கள் ஆண்ட்ராய்ட் டிவைஸில் setting இல் இருக்கும் Developer option சென்று USB debugging ஐ தெரிவு செய்யுங்கள். அதன் பின்னர் Desktop Backup password ஆப்ஸனில் பாஸ்வேர்ட் தந்து சேமிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
அவ்வாறு செய்த பின்னர் கணனியில் ஆண்ட்ராய்ட் டிவைஸின் யுஎஸ்பியை செருகியதும் கிடைக்கும் ஸ்கீரினில் பக்கப்பை செயற்படுத்த அல்லது நிறுத்துவதற்கு முடிகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்ல இலங்கை தீர்மானம்

 ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, BY.rajah.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச் செயற்படுவது என்று இலங்கை அறிவித்துள்ளது.
கடந்த மார்ச்சில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றியமையை அடுத்து இலங்கை குறித்த தீர்மானத்தை ஆட்சேபித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தது.
இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஆணைக்குழு அமர்வில் ஆராயப்படவுள்ளது.
இதன்போது தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்வது என்று இலங்கை தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் முன்னேற்ற அறிக்கை, ஐக்கிய நாடுகளின் இணையத்தளத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவிநாத் ஆரியசிங்க, கடந்த வாரங்களி;ல் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளித்த மற்றும் எதிர்ப்பு வெளியிட்ட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைக்குறித்து விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு செல்லவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

சனி, 1 செப்டம்பர், 2012

கொக்குவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு: கவலைக்கிடமான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்!

.
 
 
01.09.2012.BYrajah.
யாழ். கொக்குவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதோடு ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினரே தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
இதன்போது சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வருகைதந்ததைத் தொடர்ந்து அவர்கள் தப்பியோடியுள்ளனர். அத்தோடு அவர்கள் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிகள் ஒன்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இப்பகுதியில் அடிக்கடி குழக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெறுவதோடு இவற்றை பொலிஸார் கண்டும் காணாதவர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

நீலாவணை களப்பிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

01.09.2012.BY.rajah.மட்டக்களப்பு நீலாவணை பிரதேசத்தில் உள்ள களப்பு ஒன்றில் இருந்து இன்று மாலை இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த வினோ (22 வயது ) மற்றும் ஏட்டின் ( 22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் களப்பில் நண்பர்களுடன் குளித்து கொண்டு இருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தால் கல்முனை எங்கும் கவலையில் ஆழ்ந்துள்ளது. சடலங்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர்

யாழில் கப்பம் கோரி இருவர் கடத்தல்; காவற்றுறையினரால் மீட்பு, சந்தேக நபர் இருவர் கைது

01.09.2012.BYrajah.யாழ் நகரை அண்டிய பகுதி ஒன்றில் கப்பம் கோரி தாயையும் அவரது இரண்டு வயது மகனையும் கடத்திய இருவர் யாழ். காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதி அருகாமையில் வைத்தே இருவரும் கடத்தப்பட்டதாகவும் பணத்திற்காகவே இக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் புலன் விசாரணைகளை மேற்கொண்டு கணவன் - மனைவி ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் தாயையும் மகனையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.

கப்பம் கேட்டு கடத்திய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வவுனியா மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்க ஏற்பாடு

01.09.2012.BYrajah.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட வவுனியா மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகள் 25 பேருக்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு எலயன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன இதற்கான கலந்துரையாடல் கடந்த 29ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


இதன் போது வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது

இலங்கை இராணுவத்திற்கு தேவையானவற்றை சீனா தொடர்ந்தும் வழங்கும்; சீன பாதுகாப்பு அமைச்சர்


01.09-2012.BY.rajah.
இலங்கைப் படையினருக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்களை தொடர்ந்தும் வழங்குவதற்கும் இவ்வாறான செயற்பாடுகளினால் இரு தரப்பு உறவுகளும் தொடர வேண்டும் என சீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ தெரிவித்துள்ளார்.


அதன்படி குறைந்த செலவிலான இராணுவ உதவித் திட்டங்கள், ஆளளி பயிற்சிகளை விஸ்தரித்தல், கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்ரித்தல், பயங்கரவாத ஒழிப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளல் என்பனவற்றிற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் சீன பாதுகாப்பு அமைச்சருக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போதே இவ்வாறான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.


யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்தன் பின்னர் அடைந்துள்ள வெற்றிகள் குறித்து சீன தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விளக்கமளித்தார்.


இடம்பெயர்ந்தோரில் 98 வீதமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் ஏறத்தாழ அனைத்து முன்னாள் போராளிகளும் முறையான புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


அத்துடன் வடபகுதியில் அபிவிருத்திப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படு வருவதாகவும் நாட்டின்மொத்த வளர்ச்சி வீதம் 7.5 ஆக உள்ளநிலையில் வடபகுதியின் வளர்ச்சி வீதம் 25 சதவீதமாக இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் தெரிவித்தார்.


சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, படையினரிகளிடத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை வழங்குவதற்கும் சீன பாதுகாப்பு அமைச்சர் குவாங்லீ உறுதியளித்துள்ளார்.


பாதுகாப்புப் படையினருக்கான கல்லூரியில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கும் உதவிகளை மேற்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்து ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அச்சுவேலியில் பெறுமதி மிக்க பொருட்கள் மாயம்; பொலிஸார் தெரிவிப்பு

01.09.2012.BY.rajah.
யாழ். அச்சுவேலி தோப்பு பகுதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து பெறுமதியான பொருட்களும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளர்.
நேற்றுய தினம் அச்சுவேலி தோப்பு இராச வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது
நேற்றுக்காலை வீட்டில் இருந்த அனைவரும் செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவிற்குச் சென்ற சமயம் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதில் 2 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி மிக்க பொருட்களும் 26 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்