siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது படையினரிடம்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மதம்

07.09.2012.by.rajah.கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது படையினரிடம்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மதம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார். இதனால் இந்த 550 பரப்புக் காணி படையினரின் கைக்குப் பறிபோகவுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் நேற்றுக்காலை நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இறுதியாக கூட்டத்தின் அனுமதி பெறவேண்டிய தீர்மானம் பிரதேச செயலரினால் வாசிக்கப்பட்டது. கோப்பாயில் ஜே/261 கிராம சேவையாளர் பிரிவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த சிறைச்சாலைக்கென ஒதுக்கப்பட்ட 333.09 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படைப்பிரிவின் 51ஆவது படைத் தலைமையகம் அமைக்க வழங்குவது எனவும், நீர்வேலி ஜே/269 கிராம சேவையாளர் பிரிவில் பன்னாலை பகுதியிலுள்ள 36.37 பரப்பு அரச காணியை இலங்கை பாதுகாப்புப் படையினர் முகாம் அமைக்க வழங்குவது எனவும், தம்பாலை கதிரிப்பாய் ஜே/287 கிராம அலுவலர் பிரிவில் 179.43 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் தேவைக்கு வழங்க நில அளவை செய்யப்பட்டுள்ளது எனவும், நீர்வேலி ஜே/268 கிராம அலுவலர் பிரிவில் பனை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 2 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படைக்கு வழங்குவது எனவும் பிரதேச செயலர் தீர்மானங்களைக் கூட்டத்தில் வாசித்தார். மேற்படி பகுதிகளில் உள்ள காணிகளையும் படையினருக்கு வழங்குவதற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பங்குபற்றிய ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் உட்பட எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தொண்டமானாற்றுப் பகுதியில் விருந்தினர் விடுதி அமைப்பதற்கான அனுமதிகோரப்பட்ட போது திருமதி அமுதா சிறீஸ்கந்தராஜா என்பவர் குறித்த காணி தனியொருவருக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆட்சேபம் தெரிவித்தார். இதனை விட மயிலிட்டி மக்களை, தொண்டமானாறு அக்கரைப் பிரதேசத்தில் குடியமர்த்துவதற்கும் படையினர் மேற்கொண்ட முயற்சிக்கும் இந்தப் பெண்மணி எதிர்ப்பு வெளியிட்டார். ஆயினும் முன்னர் குறிப்பிடப்பட்ட நான்கு காணிக்கும் ஆட்சேபம் தெரிவிக்காமையினால் அவை கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானத்துக்கு அமைய படையினருக்கு வழங்கப்படும் என்று கோப்பாய்ப் பிரதேச செயலர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவருமான சில்வெஸ்திரி அலென்ரினிடம் படையினருக்கு காணிகளை வழங்க உடன்படுகிறார்களா எனக் கேட்டபோது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தான் இன்னமும் கையொப்பம் இடவில்லை என அவர் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் தெரிவித்தார்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

நொக்கியாவின் இறுதி நம்பிக்கை லுமியா 920: கைகொடுக்குமா?

06.09.2012.by.rajah.
கையடக்கத்தொலைபேசிச் சந்தையில் நொக்கியா என்ற சொல்லை அறியாதவர்கள் இல்லையெனலாம்.
குறிப்பாக ஆசிய நாடுகளில் நொக்கியாவுக்கு என்றுமே தனியான கூட்டமிருந்தது.
நியாயமான விலையில்,நீண்டகால பாவனைக்கேற்ற அனைவருக்குமான கையடக்கத்தொலைபேசியினைத் தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது நொக்கியாதான் என இன்றும் பலர் கூறுவதனைக் கேட்கலாம்.
குறைந்த விலை, 3 ஆம் தர மற்றும் மத்தியதர சந்தைக்கான கையடக்கத்தொலைபேசிகளைத் தயாரிப்பதில் நொக்கியா ஜாம்பவானாகத் திகழ்ந்தது.
எனினும் நுகர்வோர் மெல்லமெல்ல ஸ்மார்ட் போன்களை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர்.
இருந்தபோதிலும் ஸ்மார்ட் போன் சந்தையில் நொக்கியாவால் பெரிதாக எதுவும் சாதிக்கமுடியவில்லை.
அப்பிள் மற்றும் செம்சுங் என்ற இரண்டு மிகப்பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் நொக்கியாவால் மோதி ஜெயிக்கமுடியவில்லை.
இதன்காரணமாக பங்குச்சந்தையிலும் நொக்கியா வீழ்ச்சியையே சந்தித்து பலவகையில் போராடி சலித்துப்போனது நொக்கியா.
பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் தன்னை ஸ்மார்ட் போன் சந்தையில் மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ளும் பொருட்டு வின்டோஸுடன் கைகோர்த்தது நொக்கியா.
அண்ட்ரோய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இன் பிடிக்குள் இருக்கும் ஸ்மார்ட் போன் சந்தையில் வின்டோஸ் மூலம் பாவனையாளர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கி சந்தையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே இவ்விரு நிறுவனங்களும் இணைந்தமைக்கான பிரதான காரணமாகும்.
இதனையடுத்து வின்டோஸ் மூலம் இயங்கும் சில ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது நொக்கியா.
லுமியா எனப் பெயரிடப்பட்ட வின்டோஸ் மூலம் இயங்கும் நொக்கியா ஸ்மார்ட் போன்கள் தொடர்பில் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போதிலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பினைப் பெறமுடியவில்லை.
வின்டோஸுடன் இணைந்தபோதிலும் நொக்கியாவின் சரிவு தொடர்ந்தது.
இந்நிலையில் இறுதி முயற்சியாக வின்டோஸுடன் புதிய இயங்குதளமான வின்டோஸ் 8 மூலம் இயங்கும் லுமியா 920 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
பல நவீன வசதிகளுடன் கூடிய லுமியா 920 ஸ்மார்ட் போனை நொக்கியா மிகவும் நம்பியுள்ளது. இது தனக்கு இறுதி மூச்சளிக்குமென எதிர்பார்க்கின்றது.
இதன் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்க்கும் போது,
1280-pixel-by-768-pixel resolution உடன் கூடிய 4.5 அங்குலPure motion HD + WXGA IPS LCD திரையைக் கொண்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மிகத்தெளிவான திரைகளில் ஒன்றாக இத்திரை கருதப்படுகின்றது.
மேலும் இத்தொடுதிரையானது 'Super Sensitive' என நொக்கியா தெரிவிக்கின்றது.
இதனுடன் 8.7 மெகா பிக்ஸல், 3264 x 2448 pixels, Carl Zeiss optics, optical image stabilization, autofocus, LED flash வசதியுடன் கூடிய PureView தொழில்நுட்பத்தில் இயங்கும் கெமராவினைக் கொண்டுள்ளது.
இக்கெமராவானது பல டிஜிட்டல் எஸ்.எல்.ஆர். கெமராக்களை விட சிறந்ததென நொக்கியா தெரிவிக்கின்றது.
லுமியா 920 இல் காணப்படும் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் வயர்லெஸ் அதாவது வயர்கள் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதியாகும்.இதற்கென தனியான சார்ஜிங் பேளேட்டை நொக்கியா பாவனையாளர்களுக்கு வழங்கவுள்ளது.
இதனைத்தவிர
டுவல்கோர் 1.5 GHz Krait புரசசர்
Adreno 225 ஜி.பி.யு
Qualcomm MSM8960 Snapdragon சிப்செட்
NFC எனப்படும் (Near Field Communication)
HSDPA, 42 Mbps; HSUPA, 5.76 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

நொக்கியா லுமியா 920 ஸ்மார்ட் போனானது அதி நவீன வசதிகள் பலவற்றைக்கொண்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதனால் சந்தையில் முன்னணியில் உள்ள அப்பிள் மற்றும் செம்சுங் ஆகியவற்றை வெற்றிகொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அண்மையில் வெளியாகிய செம்சுங்கின் கெலக்ஸி S3 விற்பனையில் சாதனைபடைத்து வருகின்றது.
அதேபோல செம்சுங் கெலக்ஸி நோட் 2 ஸ்மார்ட் போனையும் அண்மையில் அறிமுகப்படுத்தியது இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி அப்பிளின் ஐ போன் 5 அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
எனவே சந்தையில் இலகுவாக ஆதிக்கம் செலுத்தலாம் என நொக்கியா கருதினால் அது வெறும் கனவாகவே இருக்கப்போகின்றது.
தற்போது சந்தையில் முன்னணியில் உள்ள ஸ்மார்ட் போன்கள் சிலவற்றுடனான ஒப்பீடு

பிபாஷா பாசு நடிக்கும் பில்லி சூனிய கதை

06.09.2012.by.rajah.பாலிவுட்டில் 1980ல் நடந்த ஒரு நடிகையின் உண்மை கதை ‘ராஸ் 3' என்ற பெயரில் இந்தியில் 3டி படமாக தயாராகிறது.
‘அவதார்' படத்தை தயாரித்த ஹாலிவுட் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ்பட் இணைந்து இதை தயாரிக்கிறார்.
விக்ரம் பட் இயக்கத்தில் நாயகனாக இம்ரான் ஹாஷ்மியும், நாயகிகளாக பிபாஷா பாசுவும், இஷா குப்தாவும் நடிக்கின்றனர். ‘ராஸ்' படத்தின் முதல்பாகம் 2003ம் ஆண்டு வெளியானது.
இதில் பிபாஷா பாசு, டினோ மோரியா நடித்திருந்தனர். இதன் 2ம்பாகம் 2009ம் ஆண்டு ‘ராஸ் 2' என்ற பெயரில் வெளியானது. இம்ரான் ஹாஷ்மி, கங்கனா ரனவத் நடித்திருந்தனர்.
முதல் 2 பாகம் வெற்றி பெற்றதையடுத்து 3ம் பாகம் உருவாகியுள்ளது. திரையுலகில் கனவு கன்னியாக புகழின் உச்சியில் இருக்கும் நடிகைக்கும் அப்பட இயக்குனருக்கும் காதல் மலர்கிறது.
இவர்களுக்கிடையே மற்றொரு நடிகை குறுக்கிடுகிறார். அவருடனும் இயக்குனருக்கு காதல் பிறக்கிறது. இயக்குனரின் உதவியுடன் முன்னணி நடிகையாகிறார்.
இந்நிலையில் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகையோ மார்க்கெட் இழப்பதுடன், காதலையும் இழக்கிறார்.
இதில் கோபமடைந்தவர் பில்லி சூன்யம், மந்திர வித்தைகளை பயன்படுத்தி காதல் ஜோடியை பிரிக்க முயல்கிறார். இதன் முடிவு என்ன என்பது தான் கதை. இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது

அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிப்பு

06.09.2012.by.rajah.
அமெரிக்காவின் கடன் சுமை 16 லட்சம் கோடி டொலரை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் பால் ரயன், லோவாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், கடன் சுமை அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்.
இது ஜனாதிபதி ஒபாமா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டது. இந்த கடன் சுமை வேலை வாய்ப்பு பிரச்னையை உருவாக்கி விட்டுள்ளது. மேலும் நமது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு எதிர்காலம் குறித்த பயத்தை உருவாக்கி உள்ளது.
அமெரிக்காவை வழிநடந்த எங்கள் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரோம்னிக்கு வாக்களித்தால் இந்த சூழ்நிலை மாறும். செலவுகளை குறைத்தும், பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியும் தருவோம் என்றார் பால் ரயன்.
மிட் ரோம்னி தேர்தல் பிரசார குழுவின் செய்தித் தொடர்பாளர் ரியான் வில்லியம்ஸ் கூறுகையில், ஒபாமா பதவியேற்ற பின்னர் வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார தேக்கம் போன்றவை வந்துவிட்டது. நாட்டின் அபரிமித கடன் சுமை எதிர்கால சந்ததிகளை துயரத்துக்கு ஆளாக்கி விட்டுள்ளது என்று தெரிவித்தார்.
செனட் பட்ஜெட் குழுவின் உறுப்பினரும், செனட்டருமான ஜான் கார்னின் கூறுகையில், கடன் சுமை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் கீழ்நிலைக்கு தள்ளிவிட்டது. ஒபாமா நிர்வாகத்தில் இது மற்றுமொரு வெட்கக் கேடான நிகழ்வு. தலைமை மாறுவதுதான் இதற்கு சரியான தீர்வு என்றார்.
நாடாளுமன்ற குடியரசு கட்சியின் அரசியல் குழுத் தலைவர் டாம் பிரைஸ், கடந்த 40 ஆண்டுகளாக இருந்த கடன் சுமையை விட இப்போது கடன் சுமை அதிகரித்துவிட்டது.
அமெரிக்க வரலாற்றில் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தவர்களால் உருவான கடன் சுமைகளில் இதுதான் பெரிய தொகை. மேலும், 2 கோடி அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். கடந்த 42 மாதங்களில் வேலை வாய்ப்பின்மை 8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
குடியரசு கட்சியின் செனட்டர் பாப் கார்கர் கூறுகையில், நாட்டின் கடன் சுமை 16 லட்சம் கோடி டொலரை எட்டி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தனியார் முதலீட்டை பெருக்குவதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். பொருளாதாரமும் வளரும். இதற்கு தேர்தலில் எங்களை(குடியரசு கட்சி) ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

கனடாவில் 27,000 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

06.09.2012.by.rajah.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 20 ஆண்டுகள் கழித்து சுமார் 27,000 அரசுப் பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டும், வரிச்சுமையை குறைக்க கோரியும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு தொழிற்சங்கத்தினை சேர்ந்த 25,000 பேரும், மற்ற இரண்டு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 2000 பேரும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டம் நடந்த அதே நாளில் முதல்வர் கிறிஸ்ட்டி கிளார்க், தனது அமைச்சரவையில் மாற்றங்களை நிகழ்த்தி புதிய நிதியமைச்சரை பணியில் அமர்த்தினார். மேலும் தனது அரசு இந்தப் போராட்டத்திற்குப் பணியாது என்றும் முதல்வர் தெரிவித்தார்

சட்டவிரோதமாக குடியேற முயன்ற அகதிகளின் படகு விபத்துக்குள்ளானது: 39 பேர் பலி

06.09.2012.by.rajah.
துருக்கியில் சட்டவிரோதமாக குடியேறிய சிலர் ஐரோப்பாவுக்கு படகில் செல்ல முயன்ற போது, அவர்கள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான குழந்தைகள் உட்பட 39 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன, 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
துருக்கியின் மேற்கு கடல் பகுதியிலிருந்து புறப்பட்ட படகு, கிரேக்க தீவுகளுக்கு அருகில் சென்ற போது கடலின் நடுவே இருந்த பாறையில் மோதி கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அரேபியாவிலிருந்து சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் துருக்கி மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் முதலில் குடியேறி, பின்னர் அங்கிருந்து ஐரோப்பா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.


சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயற்படுத்துமாறு கோரிக்கை

 
 
06.09.2012.by.rajah.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயற்படுத்துமாறு மத்திய அரசிற்கு திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம்,இன்று காலை 10 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் மானமிகு துரை-சக்ரவர்த்தி நிலையத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இராமன் என்ற இதிகாச கற்பனைப் பாத்திரத்தை முன்னிறுத்தி, நிறைவேற்றச் செய்யாமல் முட்டுக் கட்டை போடும் சக்திகளுக்கு இச்செயற்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
‘நீரி’ என்ற தொழில் நுட்ப நிறுவனம் வகுத்துத் தந்த அந்த 6-ஏ என்ற நீர்த் தடத்திலேயே திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தினை இச்செயற்குழு வரவேற்கிறது.
இந்த நிலையில், இத்திட்டத்தை நிறைவேற்றிட கால தாமதம் செய்யும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் வாய்தா கேட்டு காலத்தை நீட்டிப்பது முரண்பட்டதும் - மத்திய அரசின் மீதான நம்பகத் தன்மைக்கு ஊறு விளைவிப்பதுமாகும்.
எனவே, திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் நாளை இலங்கை வருகிறார்!

 
 
06.09.2012.by.rajah.
இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவர் மைக்கேல் சிசன் நாளை இலங்கை வருவார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அவர் இலங்கையர்களுக்கு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையிலான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் இலங்கையுடன் உறவினை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகள் குறித்து ஆராயவிருப்பதாகவும், குறிப்பாக வர்த்தக, பொருளாதார, சுற்றுலா வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாம் மக்களின் சக்தி குறித்து நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

யாழ். பல்கலைக்கழகம் இன்று திறந்திருந்த போதிலும் விரிவுரையாளர்கள் எவரும் வருகை தரவில்லை!

 
 
06.09.2012.by.rajah.
இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நடத்தி வருகின்ற தொழிற்சங்கப் போராட்டத்தையடுத்து, திடீரென இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை அரசாங்கம் வியாழனன்று திறந்திருந்தது. எனினும் ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சமூகமளிக்கவில்லை.
இதன் காரணமாக அங்கு கல்விச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
அரசாங்க அறிவிப்பையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்திற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களே வருகை தந்திருந்ததாக அந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் தெரிவித்தார்.
பல்கலைக்கழக அலுவலகங்கள் செயற்பட்ட போதிலும் விரிவுரையாளர்கள் எவரும் வருகை தரவில்லை. இதனால் பல்கலைக்கழகம் வெறிச்சோடிக் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தானே மூடிய பல்கலைக்கழகங்களை அரசாங்கம் இன்று திறந்தபோதிலும், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகப் விரிவுரையாளர்கள் எவரும் கடமைக்குத் திரும்பவில்லை என பல்கலைக்கழக ஆசியர் சங்க சம்மேளனத்தின் பொருளாளர் பவித்ரா கைலாசபதி தெரிவித்தார்.
நிதியமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தலைமையில் உயர் மட்டச் சந்திப்பு ஒன்று புதன்கிழமை நடைபெற்ற போதிலும், அந்தச் சந்திப்பிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும், இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்வதாகவும் பவித்ரா கைலாசபதி கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமும், பல்கலைக்கழகங்களைப் பாதூக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தாங்கள் முன்னெடுத்துள்ள பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வேலைத்திட்டமும் நடைபெறவிருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்திருக்கின்றது

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் அகிலதாஸ் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்! வடக்கின் வசந்தம்

 
 
06.09.2012.by.rajah.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் சிங்கமாகக் கர்ச்சித்துக் கொண்டிருந்த அதிபர் அகிலதாஸ் கொக்குவில் இந்துக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணமாக பெருமளவு பணமோசடி என கல்லூரியை விட்டு அவரை அகலச் செய்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக கொக்குவில் இந்துக் கல்லூரி ஏனைய பலம் பொருந்திய கல்லூரிகளுக்கு நிகராக வருவதற்கு ஆணிவேராக இருந்தவர் அகிலதாஸ்.
கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்களுக்கு கசக்கும் மருந்தாக இருந்து அவர்களையும் சரியான முறையில் இயங்கச் செய்தவர் என கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட கல்லூரியில் நீண்டகாலமாகக் கட்டுப்படுத்த முடியாத சில வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் வழியிலேயே சென்று அவர்களை வழிக்குக் கொண்டு வந்தவர் என குறிப்பிட சில பிரிவைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பலவழிகளிலும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மதிப்பை உயர்த்துவதற்கு பாடுபட்ட அதிபர் தற்போது தென்மராட்சி கல்வி வலயத்தில் இணைக்கப்பட்டதன் காரணம் என்ன??
கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபராக இருந்த அகிலதாஸ் அவர்களுக்கு சில முக்கிய குறைபாடுகள் இருந்ததாகத் தெரிகின்றது.
அதில் குறிப்பாக ஆசிரியர்களுடன் கடுமையாக நடந்து கொள்வதும் மாணவர்கள் முன் ஆசிரியர்களை தாறுமாறாகப் பேசுவதும் அவரது சிறப்பான குறைபாடாக அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இவ் அதிபர் பாடசாலையின் நன்மைக்காகவே முக்கியமாகப் பாடுபட்டார் எனவும் அவர்களே தெரிவிக்கின்றார்கள். அத்துடன் இவர் நிதி மோசடி செய்திருக்க மாட்டார் என ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இவருக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் பலம் பொருந்தியதாக கருதப்படும் பழைய மாணவர் சங்கத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கும் இடையில் முறுகல் இருந்ததாகத் தெரியவருகின்றது.
இதன் அடிப்படையில் கல்லூரியில் நிதி மோசடி என தெரிவித்து பல தடவைகள் மாகாண கணக்காய்வு அதிகாரிகள் கல்லூரி ஆவணங்களைக் குடைந்தெடுத்தும் ஆதாரம் இல்லாது சென்றுள்ளார்கள்.
ஆனாலும் இவர் ஊழல் செய்துள்ளார் என முக்கிய காரணம் காட்டியே கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து மாற்றப்பட்டார் என தற்போதும் அவரைப் பதவியில் இருந்து விலகச் செய்தவர்கள் தெரிவிக்கிறனர்.
குறிப்பிட்ட அதிபரை மாற்ற வைப்பதற்காக ஈ.பி.டி.பி யின் முக்கியஸ்தரான கொக்குவிலைச் சேர்ந்த தவராஜா (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) முன்னின்று உழைத்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்ற பதவியுயர்வு பெற்றே தென்மராட்சி கல்வி வலயத்திற்கு சென்றுள்ளதாக கல்வித்திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும் முக்கிய அதிகாரிகள் சிலர் இது தொடர்பாக மூச்சு விடவும் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.
அகிலதாஸ் அவர்கள் கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இவரை அதிபர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு அது காரணமல்ல என்பது நூறு வீத உண்மை.
அவ்வாறு இருக்கும் போது அதிபர் பதவியில் இருந்து தென்மராட்சி வலயத்திற்கு இணைக்கப்பட்டு பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவி கொடுக்கப்பட்டு அவரது வாயை மூடியுள்ளது உண்மை.
கல்வி அதிகாரிகள் தரப்பில் சிலர் அதிபர் தொடர்பாக பண மோசடி இருப்பதாகக் கூறுகின்றார்களே தவிர அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கின்றார்கள் இல்லை.
கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இனி வரப்போகும் அதிபர் யார் என சிலரிடம் வினாவிய போது நல்லூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து யாழ் இந்து மகளீர் கல்லூரியில் பிரச்சனைகளுக்கு உள்ளாகி அலுவலகத்துடன் அகற்றப்பட்ட மாணிக்கராஜா எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணிக்கமாக் திகழ்ந்து கொண்டிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு ராஜாவாக வரப்போகின்றவர் யார் என பழையமாணவர்களுக்கு விளங்கியிருந்தால் சரி