siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

வடகொரியாவுக்கு ரஷ்யா திடீர் எதிர்ப்பு


வடகொரியா கடந்த ஏப்ரல் மாதம் ஏவிய ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தனது இரண்டாவது ராக்கெட்டை வருகிற 10ஆம் திகதிக்கும், 22ஆம் திகதிக்கும் இடையில் ஏவ திட்டமிட்டுள்ளது. இப்பணியில் வடகொரியா அதிகாரிகளுக்கு ஈரான் அதிகாரிகள் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வடகொரியாவின் ராக்கெட் ஏவும் திட்டம் ஐ.நா விதிமுறைகளை மீறும் செயல் என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே தற்போது ரஷ்யாவும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய வெளிவிவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியா ராக்கெட் ஏவும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை கைவிடுவது ஏற்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 

திங்கள், 3 டிசம்பர், 2012

ஜப்பான் சுரங்க பாதை விபத்து: பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது

ஜப்பான் சுரங்க பாதையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் யமனாஷி மாகாணம் சுவோ எக்ஸ்பிரஸ் சாலையில் சசாகோ என்ற சுரங்க பாதை உள்ளது.
முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்க பாதையில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும்.
விடுமுறை நாளான நேற்று காலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சுரங்க பாதையின் நடுவில் மேற்கூரை திடீரென இடிந்து கார்கள் மீது விழுந்தது.
இதனையடுத்து அடுத்தடுத்த வந்த வாகனங்கள் சுரங்க பாதைக்குள் மோதி தீப்பிடித்தன.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பொலிசார் சுரங்க பாதைக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதற்கிடையில் தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் உள்ளே சிக்கிய வாகனங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது இன்று அதிகாலை மேலும் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுரங்க பாதையை பராமரிப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் தான் சுரங்க பாதையை முழுவதுமாக சோதனை செய்தோம். அப்போது எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.{காணொளி, புகைப்படங்கள்}

மாவீரர் நெப்போலியனின் கடிதம் ஏலம்

மாவீரன் நெப்போலியன் தனது வெளிவிவகாரத்துறை அமைச்ருக்கு எழுதிய கடிதம் சுமார் 2 லட்சத்து 43 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களுக்கு(2,43,500 டொலர்) ஏலம் போனது. பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் ரஷியப் படையெடுப்பின் போது, கடந்த 1812ஆம் ஆண்டு தனது வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹுயூகஸ் பெர்னார்ட் மாரெட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள க்ரெம்ளின் மாளிகையை 22ஆம் திகதி காலை 3 மணிக்கு தகர்ப்பேன் என்று சூளுரைத்துள்ளார்.
சங்கேத வடிவில் எழுதப்பட்ட இக்கடிதம் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டது.
இதனை பாரிஸைச் சேர்ந்த கடிதங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்தது. எதிர்பார்க்கப்பட்டதை விட 10 மடங்கு அதிக தொகைக்கு இக்கடிதம் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
மாவீரன் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டை கடந்த 1804ஆம் ஆண்டு முதல் 1815ஆம் ஆண்டு வரை ஆண்டார். தனது 51வது வயதில் செயின்ட் ஹெலினா தீவில் உள்ள சிறையில் உயிர் துறந்தார்{புகைப்படங்கள்,}

பாகிஸ்தானில் இராமர் கோவில் இடிப்பு: இந்துக்கள் போராட்டம்


 
 
பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள இராமர் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் போராட்டம் நடத்தினர். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பல கோவில்கள் இடிக்கப்பட்டன.
இந்நிலையில் கராச்சியின் சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ராம பிரான் கோவில இடிக்கப்பட்டது, மேலும் அக்கோவிலை சுற்றியுள்ள இந்துக்களின் வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கினர்.
அத்துடன் கோவிலில் சிலைகள் மீது அணிவிக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் மற்றும் நகைகளை கட்டுமான நிறுவனத்தினர் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க முயன்ற இந்துக்களை சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் இந்துக்கள் இணைந்து கராச்சி பிரஸ் கிளப் அருகே நேற்று போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தி உள்ளனர்{புகைப்படங்கள், }

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியானுக்கு எதிராக போராட்டம்

அமெரிக்காவின் கவர்ச்சி புயல் கிம் கர்தஷியான் பஹ்ரைனுக்கு வருகை புரிந்துள்ளதை கண்டித்து, பெரும் போராட்டம் வெடித்துள்ளது. கிம் கர்தஷியானுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இவர் அரபு நாடான பஹ்ரைனுக்கு வருகை புரிந்துள்ளதை, அங்குள்ள பழமைவாதிகள் கண்டித்துள்ளனர்.
மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் கூடி கிம்முக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து விரைந்து வந்த கலவரத் தடுப்பு பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரை கலைத்துள்ளனர்.
இவர் பஹ்ரைனின் ரிபா நகரில், மில்லியன்ஸ் ஆப் மில்க் ஷேக்ஸ் என்ற கிளையை கிம் கர்தஷியான் திறந்து வைப்பதற்காக வந்திருந்தார்.
திறப்பு விழாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் இந்தக் கலவரம் நடந்தது. கூட்டத்தினரை அப்புறப்படுத்திய பின்னர் பலத்த பாதுகாப்புடன் கிம் அழைத்து வரப்பட்டார்.{புகைப்படங்கள், }






பாதை இடிந்தது! உள்ளே சிக்கிய கார்கள் எரிகின்றன! மூவர் பலி

ஜப்பானில் டோக்கியோ நோக்கி செல்லும் tunnel பாதை ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில், உள்ளே சில கார்கள் சிக்கிக் கொண்டன. இந்தக் கார்களையும், அதற்குள் உள்ளவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றன. இந்த tunnel வாயில் ஊடாக புகை வெளிவந்து கொண்டிருப்பதால், உள்ளே சிக்கிக் கொண்ட கார்கள் தீப்பிடித்து எரிகின்றன என ஊகிக்கப்படுகிறது.
Sasago tunnel என்ற இந்த மோட்டார் பாதை, சுவோ எக்ஸ்பிரஸ்-வே பாதையில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த விபத்து நடந்தது. தலைநகர் டோக்கியோ நோக்கிச் செல்லும் பாதை மிகவும் போக்குவரத்து நெருக்கடியானது என்ற போதிலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிக கார்கள் இல்லை.
சுமார் 5 கார்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் எனவும், மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஜப்பானிய டி.வி. சேனல், கியோடோ நியூஸ் தெரிவிக்கிறது{காணொளி, புகைப்படங்கள்}.







ஜனாதிபதியின் உதவியாளர் எதிர்க்கட்சியில் இணைகிறார்

 
எகிப்தில் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் ஜனாதிபதி முகமது முர்சியின் ஆலோசகராகவும், உதவியாளராகவும் இருந்த சமீர் மொர்கோஸ் பதவியை ராஜினாமா செய்தார்.
இவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத நிலையில், எதிர்க்கட்சியான தேசிய சால்வோன் இயக்கத்தில் சேர இருப்பதாக அதன் தலைவர் அகமது சயீத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து சமீர் மொர்கோஸ் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

நிலநடுக்கம்: கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பியதால் அதிர்ச்சி

 
நியூசிலாந்து அருகே பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுகளில் சர்வதேச நேரப்படி இன்று காலை 6.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 66 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளதன் காரணமாக வழக்கத்தைவிட அதிக உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பின.
இதனால் சுனாமி ஏற்படும் என பொதுமக்கள் அஞ்சினர். ஆனால் அது போன்ற எச்சரிக்கைகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
எனவே, பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

சனி, 1 டிசம்பர், 2012

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி

 
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பாயின்ட்டி நோரியிலிருந்து பிராசா வில்லே நகருக்கு ஒரு தனியார் நிறுவன சரக்கு விமானம் வந்து கொண்டிருந்தது. பிராசா வில்லே அருகே இந்த விமானம் வந்தபோது, இதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று அதிகாலை 5.30 மணியளவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதனால் விமானம் கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்தது.
இச்சம்பவத்தல் 30 பேர் உடல் கருகி அதே இடத்தில் பலியாகினர். அவர்களில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் தவிர குடியிருப்பு வாசிகளும் அடங்குவர்.
விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால் வீடுகளும் இடிந்து சேதமடைந்தது.
இந்த விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவில்லை என்றாலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

பாதாள அறையில் 6 பெண்களை அடைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய

சீனாவில் 6 பெண்களை ஒரு அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த ஆசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த லீ ஹவோ(வயது 35) தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக வேலை செய்து வந்தார்.
குடும்பத்தினருடன் வாழாமல் கடந்த 2009ம் ஆண்டு லுவோயாங் நகரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி உள்ளார் லீ.
வீட்டுக்குள் ரகசியமாக பாதாள அறை கட்டி, அங்கு 6 பெண்களை அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் பலரை அழைத்து வந்து விபசாரம் நடத்தியுள்ளார். இந்நிலையில் லீயின் பிடியில் இருந்து தப்பி வந்து இளம்பெண் ஒருவர் பொலிசில் தகவல் அளித்தார்.
உடனடியாக விரைந்து சென்ற பொலிசார், பாதாள அறையில் இருந்த பெண்களை மீட்டனர். இதுதெடார்பாக லீயை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
அவர் மீது கொலை, பலாத்காரம், விபசாரம், சட்டவிரோதமாக பெண்களை அடைத்து வைத்தது, பணத்துக்காக நிர்வாண காட்சிகளை வெளியிட்டது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து லுவோயாங் நீதிமன்றம், லீக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இளம்பெண்களை கடத்தி சென்று 2 மாதம் முதல் 21 மாதம் வரை பாதாள அறையில் லீ அடைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
அத்துடன் பலரையும் அழைத்து வந்து அவர்களுக்கு விருந்தாக்கி உள்ளார். தன் பிடியில் இருந்த பெண்களை நிர்வாணமாக்கி அதை ஓன்லைனில் வெளியிட்டு பணம் வசூலித்துள்ளார்.
மேலும் பாதாள அறையில் 6 பெண்களை அடைத்து வைத்துள்ளார். அவர்களில் 2 பெண்களை கொலை செய்துவிட்டார். அந்த கொலைக்கு மற்ற பெண்களும் உடந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியாக இருந்தது.
எனினும் அந்த சூழ்நிலையில் லீக்கு பயந்து அவர்கள் கொலைக்கு உதவியது தெரிய வந்தது. அதனால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.