siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

கொலைகார நகரமாக மாறும் பாரீஸ்!!!

பிரான்ஸின் தலைநகரமான பாரிசும் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிலுள்ள பிராங்க்ஸியும் குற்றங்களின் எண்ணிக்கையில் என்றும் ஒரே போல் உள்ளது என பிரான்ஸின் பொலிஸ் தலைமை அதிகாரி பிரடெரி பிசெனர்ட் தெரிவித்துள்ளார்.

வன்முறை செயல்களில் ஈடுபடுதல், சொத்துகளை தாக்கிடுதல், வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல், நகரத்தில் பாதுகாப்பில்லாதிருத்தல் போன்றவை பிராங்க்ஸில் அதிகம் நிகழும். அதே போல் பாரிஸிலும் நடக்கின்றது என ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

இவரின் இவ்விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து 300 பேர் கொண்ட பொலிஸ் படையை அமைத்து குற்றங்களை குறைக்க பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் 25 பேர் கண்ட பொலிஸ் படை ரோந்து பணிக்காக விடப்பட்டுள்ளது. இதில் 2009 முதல் 2012 வரை 1500 பொலிசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

செல்வி வனிதா நாதன் மூத்த லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்


கல்விச் சபை உறுப்பினர் செல்வி வனிதா நாதன் மூத்த லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்களுக்கு ஆதரவு! 
மார்க்கம் - கல்விச் சபை உறுப்பினரும் குமுகப் பணியாளரும் மார்க்கம் நகரில் நீண்டகாலமாக வாழ்பவருமான செல்வி வனிதா நாதன் தான் மார்கம்-தோண்கில் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்த தனது முடிவை மாற்றியுள்ளதாக இன்று அறிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் தான் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அறித்த முடிவை அவர் மீளப் பெற்றுள்ளார்.
   
மார்க்கம் நகரின் நலனில் தொடர்ந்தும் அக்கறை காட்டுவதோடு அதன் வளர்ச்சிக்காய் ஒரு கல்விச் சபை உறுப்பினராக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவேன் எனச் செல்வி வனிதா நாதன் தெரிவித்தார். எனது குடும்பத்தார் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வழங்கிய பெரும் ஆதரவு என்னை நெகிழச் செய்கிறது. எதிர்காலத்தில் உங்கள் அனைவரது ஆதரவுடனும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நான் போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்களுக்கு தனது முழு ஆதரவைச் செல்வி வனிதா நாதன் வழங்குவார். மார்கம்-தோண்கில் என்கிற இப் புதிய தேர்தற் தொகுதியானது அவரது பழைய தொகுதியின் பெரும் பகுதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரு யசுடின் ரூடோ அவர்களின் தலைமையில் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியும் இளையோரின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டும் வயோதிபர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கியும் ஒரு வலுவான கனடாவை உருவாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காய் நாம் இணைந்து செயற்பட வேண்டிய காலம் இது என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் செல்வி வனிதா நாதன் அவர்கள் மிகவும் திறமைமிக்க ஒரு இளம் பெண்ணும் கீழ்தட்டு மக்களோடு அர்ப்பணிப்போடும் அதிக அக்கறையுடனும் பணியாற்றுவதை முதன்மையாகக் கொண்டவர் எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தின் ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் வனிதா நாதன் தனக்கும் லிபரல் கட்சிக்கும் வழங்கும் ஆதரவு சிறப்பானது எனவும் குறிப்பிட்டார்.
 

சவுதியில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

 சவுதி அரேபியாவில் போதை மருந்து கடத்தல், கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியரின் தலை துண்டிக்கப்பட்டது. அவரது பெயர் முகமது ஷாகீர்கான்.
இவர் பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பெருமளவில் ஹெராயின் போதை மருந்து கடத்தி வந்தார்.

அவரை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர்.
இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை சவுதி அரேபியாவின் உள்துறை மந்திரி தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் கடந்த ஜனவரி முதல் இதுவரை போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 73 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 பேர் குறைவாகும்.
 

விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம்:

பிரெஞ்சு பாராளுமன்றம் விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 பிரான்சில் உள்ள 40 ஆயிரம் விலை மாதுக்கள் நைஜீரியா மற்றும் ரோமானியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களாவர்.
இதனை கருத்தில் கொண்டு பிரெஞ்சு பாராளுமன்றம் விதித்துள்ள சட்டப்படி விலை மாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு 1500 யூரோக்கள் ( 2000 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும். ஆனால் விலை மாதுக்களுக்கு தண்டனை கிடையாது என்று சட்டம் விதித்துள்ளது.

ஆனால் இந்த சட்டத்தைக் கண்டு விலை மாதுக்கள் மிகவும் அச்சம் கொண்டுள்ளனர். ஏனெனில் தங்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முக்கிய பிரெஞ்சு பிரபலங்கள் விமர்சிக்கையில், இந்தக் கடுமையான சட்டம் விபச்சார வியாபாரத்தை நிலத்தடி சுரங்கப்பாதை சட்டவிரோத வர்த்தகமாக மாற்றுவதோடு மட்டுமல்லாது, பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

திங்கள், 9 டிசம்பர், 2013

தொடரும் பதற்றம்: தேர்தலை நடத்த பிரதமர் இணக்கம்

  தாய்லாந்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு அடுத்த 60 தினங்களுக்கும் தேர்தலை நடத்துவதற்கு அந்நாட்டுப் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா இணக்கம் தெரிவித்துள்ளார்.
யிங்லக் ஷினவத்ரா கடந்த 2011ஆம் ஆண்டு தாய்லாந்து பிரதமராகப் பதவியேற்றார். அவரது ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சியினர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கடந்த இரு வார காலமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைவத்து விட்டு அடுத்த 60 நாள்களில் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் யிங்லக் ஷினவத்ரா நேற்று அறிவித்தார்.

தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
எனினும், இதை எதிர்க்கட்சிகள் ஏற்கா விட்டால் அரசியல் நெருக்கடி தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் எச்சரித்தார். மேலும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வதற்காக பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, மொத்தம் 500 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இருந்து தனது 153 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்துள்ளதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இதனால், நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை ஆளுங்கட்சி நிறைவேற்றுவது தடைபடாது. எனினும், நாடாளுமன்றத்தின் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழும் என்று கருதப்படுகிறது.
இது குறித்து ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான அபிசித் வெஜ்ஜாஜிவா கூறுகையில்,

""நாங்கள் நாடாளுமன்றத்தில் எங்கள் கடமையை சிறப்பான முறையில் செய்தோம். இதற்கு மேல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பவர்கள், நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்வது எங்களை வருத்தமடையச் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்பது மக்களுக்கு அதிகாரத்தைத் திருப்பியளிக்கும் ஒரு வழியாகும். ஆனால், அதைத் தொடர்ந்து நடத்தப்படும் தேர்தலில் மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு தீர்வு காணப்பட்டாக வேண்டும்'' என்றார்.
 

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்: இந்தியருக்கு சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியாவை சேர்ந்த நிதின் ரானா என்பவர் வாடகை கார் சாரதியாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி நள்ளிரவில் ரயில் நிலையம் அருகே 17 வயதுள்ள பாடசாலை மாணவி மதுபோதை மயக்கத்தில் நின்றார்.

இந்த மாணவி தனது நண்பர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்த போதை மயக்கத்தில் தள்ளாடிய மாணவியை வழிப்போக்கர்கள் சிலர் நிதின் ரானாவின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.

குறித்த கார் சாரதி, தனை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மறுநாள் அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இதன்பேரில் நிதின் ரானா மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி வின்டே வில்மாத், இந்திய சாரதிகள் 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் 4 ஆண்டு பிணையில் வெளியே விடக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
 

சனி, 7 டிசம்பர், 2013

ஒட்டுக்கேட்ட அமெரிக்கா 500 கோடி தொலைபேசி உரையாடல்களை

நாளொன்றுக்கு 500 கோடி தொலைபேசி உரையாடல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. பதிவு செய்து வருவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை ஒட்டுக் கேட்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறித்து என்.எஸ்.ஏ. அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.
அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் கோடிக்கணக்கான தொலைபேசிகளை அமெரிக்க உளவு அமைப்பு ஒட்டுக் கேட்டு வருவது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிவதற்காகவே இதுபோன்ற ஒட்டுக்கேட்பு நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத என்.எஸ்.ஏ.வுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“நாங்கள் உலகெங்கும் இருந்து ஏராளமான தரவுகளை பெற்று வருகிறோம். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த செல்போன் வலையமைப்புகளை தீவிரமாக கண்காணித்து தகவல்களை சேகரிக்கிறோம். இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை அறிவதற்காகத்தான் செய்துள்ளோம்.

பல்வேறு வெளிநாடுகளுக்கு லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் சுற்றுலா செல்கின்றனர். அவர்களின் செல்போன்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார். உளவு அமைப்பின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
என.எஸ்.ஏ.வுக்கு தேவையான தகவல்கள் மிகவும் குறைவுதான். ஆனால், எது தனக்கு உபயோகமான தகவல் எனத் தெரியாததால், அனைத்தையும் பதிவு செய்து வருகிறது

. வியாபாரம் தொடர்பாகவோ, தனிப்பட்ட முறையிலோ வெளி நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்களின் இருப்பிட விவரங்களை, சந்திக்கும் நபர்கள் மற்றும் அவர்களுடனான பேச்சுகளை உளவு அமைப்பு சேகரிக்கிறது. அமெரிக்கர்கள் மட்டு மல்ல, பிற நாடுகளைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன்களும் இதுபோன்று ஒட்டுக்கேட்கப்படுகின்றன.

 

உலகில் முதல் சுற்றுச்சூழல் சுரங்கப்பாதை (காணொளி இணைப்பு)

உலகில் முதன்முறையாக சுற்றுச்சூழல் நட்பாக இருக்கும் சுரங்கப்பாதை ஒன்று பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள லியோன் நகரத்தில் இந்த பிரமாண்டமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையானது நடைபயணிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பாதையில் பேருந்துகளும் விடப்பட வேண்டும் என்பதற்காக நான்கு எலக்ட்ரிக் பேருந்துகள் சோதனை ஓட்டத்திற்காக விடப்பட்டுள்ளன.
இச்சுரங்கபாதையில் இசை வேலைபாடுகளை சேர்க்டன் என்ற நிறுவனம் செய்து வருகிறது. தீபவிழாவாக காட்சியளிக்கும் இச்சுரங்கபாதை காலை 5 மணி முதல் இரவு 12.30 மணிவரை திறக்கப்பட்டிருக்கும்.
இது 282.8 மில்லியன் யூரோக்கள் செலவில் வின்சி கடுமானத்தால் மேற்பார்வையிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து லியோனின் மேயர் நிரூபர்களிடம் கூறுகையில், இச்சுரங்கபாதை சுற்று சூழலிற்கு நண்பனாக அமைய வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.


 

வெள்ளி, 6 டிசம்பர், 2013

உணவுகளுடன் விண்வெளியில் கலக்கும் நாசா விஞ்ஞானிகள்

 பிரான்ஸ் உணவுகளுக்கு அமெரிக்க விண்வெளி நிலையம் நாசாவில் பலத்த வரவேற்பு அளிக்கப்படுகின்றன.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஹேனாப்பு என்ற உணவகத்தில் 25 வகை உணவுகளை நாசா ஆர்டர் செய்துள்ளது.

இவ்வுணவுகளை சுத்தம் செய்து மெல்லிய அலுமினிய தகடுப்பெட்டிகளில் பத்திரப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக விண்வெளி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த 25 வகையான உணவுகளை வீரர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் திருமணநாளன்று சுவைத்து கொண்டாடி வருகின்றனர்.

                                   
 
 

என்னிடம் ஐபோன் இல்லையே! கவலையில் ஒபாமா


என்னால் ஒரு ஐபோன் கூட வைத்துக்கொள்ள முடியவில்லை என்று அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
ஒபாமா எப்போதுமே கருப்பு நிறத்திலான, பெரிய சைஸ் பிளாக்பெர்ரி கைப்பேசியை பயன்படுத்திவருகிறார்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நான் ஐபோன் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. எனவேதான் பாதுகாப்பு மிகுந்த பிளாக்பெர்ரியைப் பயன்படுத்துகிறேன் என்று ஒபாமா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் மகள்கள் சாஷாவும், மலியாவும் தமது ஐபோன்களுடன்தான் நாளில் பாதியைச் செலவிடுகிறார்கள். எதையாவது அதில் நோண்டிக் கொண்டே பாதி நேரத்தை அதிலேயே கழிக்கிறார்கள் என்றும் நான் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது எனவும் கூறியுள்ளார்.


மற்ற ஸ்மார்ட் போன்களை விட பிளாக்பெர்ரிதான் பாதுகாப்பானது. அதாவது அதன் என்கிரிப்ஷன் வலுவானுது மற்ற போன்களை ஈஸியாக ஹேக் செய்து விட முடியும். ஆனால் பிளாக்பெர்ரியை நோண்டி உள்ளே புகுவது கொஞ்சம் கஷ்டமானது என்பதால் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள், பிளாக்பெர்ரியை அதிகாரப்பூர்வ போனாக பயன்படுத்துகின்றனர்.