siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 5 ஆகஸ்ட், 2015

பிறந்தநாள் வாழ்த்து செல்வி திரு .அருளானந்தம் அபிநயா. 05 .08 .15.


யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு .அருளானந்தம்   தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிநயா தனது  ஏழாவது  பிறந்த நாளை  05.08.2015.இன்று.தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா பெரியப்பா பெரியம்மா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமா மார்
 சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்று பல்கலைகளும்  பெற்று சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் 
நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்று பிறந்தநாள் 
ஒரு மலர் மலர்ந்தநாள் 
என் பாசமலரின் பிறந்தநாள். 
இதோ..! உனக்காக.. 
ஒரு வாழ்த்து..! 
என் அன்பு 
வானத்தின் நட்சத்திரமே..! 
வாகை சூடி சரித்திரம் படைத்திடு.! 
வானம் தொடும் புகழ் அடைந்திடு.! 
வாழ்வில் நிம்மதி தஞ்சம் அடையட்டும் 
வாழம் வாழ்வில் உறுதி நெஞ்சம் இருக்கட்டும். 
வாழ்வில் வசந்தம் வீசட்டும்...! 
-நிம்மதியான 
வாழ்க்கையின் எல்லா செல்வமும் பெற்று 
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.! 
என் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!   



திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கிடைத்த பாகம் மாயமான எம்.எச்.370 விமானத்துடையது தான்???

ரீயூனியன் தீவுகளில் கிடைத்த பாகம் 239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 போயிங் 777 விமானத்துடையதே என்று மலேசிய அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது.
அதனை தேடும் பணி 16 மாத காலங்களாக நீடித்து வந்த நிலையில், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரீயூனியன் தீவுகளில் கரையில் விமான பாகம், இறக்கை ஆகியவை ஒதுங்கியது.
இதையடுத்து அந்த பாகங்கள் காணாமல் போன மலேசிய விமானத்தை சேர்ந்தது தானா என்று பிரான்சில் பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த பரிசோதனையில், அது போயிங் 777 எம்.எச்.370 விமானத்துடையது என்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியாங் வெளியிட்ட அறிக்கையில், கண்டெடுக்கப்பட்ட இறக்கை போயிங் 777 விமானத்தினுடையது என்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.
பிரான்சில் செய்யப்பட்ட சோதனையில், போயிங் விமான தயாரிப்பாளர்கள் மற்றும் மலேசிய ஏர்லைன்ஸ் சிவில் ஏவியேஷன் துறையினரும் இதனை உறுதி செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச் சம்பவத்தின் புதிர் முடிச்சு அவிழ்ந்துள்ளது என்று 
மலேசியா தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சண்டைக்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

பிரான்ஸில் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டைக்கு பரவலாக தடை உள்ள நிலையில், இனி நாடு முழுவதும் சேவல் சண்டைக்கான புதிய மைதானங்களை அமைக்க கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் காளை அடக்குதல் போட்டி போல, சேவல் சண்டையும் அந்நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சேவல் சண்டைக்கு பெரும்பாலான நகரங்களில் சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸின் புறப்பகுதிகளில் இந்த சேவல் சண்டை விளையாட்டுகளை உள்ளூர் நிர்வாகங்கள் அனுமதித்து வருகிறது.
இந்த சேவல் சண்டைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், சேவல் சண்டை நடைப்பெற்று வந்த இடங்களிலும் அந்த விளையாட்டுக்கு எதிராக போராட்டம் நிகழ்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், Sainte-Marie என்ற நகரை சேர்ந்த இரண்டு நபர்கள் சேவல் சண்டையை நடத்த புதிய மைதானம் அமைக்க உள்ளூர் நிர்வாகம் அனுமதி தர மறுக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் அன்மையில் வந்தபோது பேசிய அந்த நபர்கள், பிரான்ஸ் நாட்டில் காளை அடக்குதல் போட்டிகளுக்கு நாடு முழுவதும் அனுமதி உள்ள நிலையில், சேவல் சண்டைக்கு அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இதனை விசாரித்த நீதிபதி, காளை சண்டையும் சேவல் சண்டையும் பிரான்ஸ் நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக இருந்தாலும் கூட, இரு விளையாட்டுகளின் தன்மைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது அல்ல.
எனவே, இனி நாடு முழுவதும் சேவல் சண்டையை நடத்த புதிதாக மைதானங்கள் அமைக்க தடை விதித்தது சரியானது தான் என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்த உத்தரவு விலங்களுகள் நல ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திருந்தாலும், சேவல் சண்டை மூலம் தங்களுக்கு வரும் வருமானம் போய்விட்டது என இந்த உத்தரவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக சேவல் சண்டை 
விளையாட்டு பிரியர்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சமமாக காதலோடு போட்டியிடும் நட்பு: நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

சர்வதேச அளவில் நண்பர்கள் தினம் எல்லோராலும் விரும்பியே கொண்டாடப்பட்டு வருகிறது.
சமுதாயத்துக்கு பயனுள்ள நல்ல விடயமாக இருக்கிற ஒவொவொன்றுக்குமே வருடத்தில் ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அங்குள்ள கலாச்சார அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடுவது வழக்கம். அப்படிப்பட்ட பண்டிகைகள் அவர்களுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பது சிறப்புடையதுதான்.
அதேவேளையில், உலகத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் ஒரு சமுதாயம் தன்னை தனித்துவத்துடன் அடையாளம் காட்டிக்கொள்கிறது. அது உலக ஒருங்கிணைப்பில் விலகி நிற்பது போன்றதுதான்.
அதனால், ஐ.நா. போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் சில தினங்களை ஏற்படுத்தி உலகில் உள்ள எல்லா நாட்டினராலும் இனத்தவராலும் கொண்டாடும்படியான ஒரு சூழலை, ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளன.
அதுவும் இந்த நுற்றாண்டில்தான் தினங்கள் கொண்டாடுவதை ஊடகங்களும் வாணிபமும் உற்சாகப்படுத்தி வருகின்றன.
நண்பர்கள் தினம் முதன்முதலாக, தென் அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள பாரகுவே மக்களிடம்தான் பிரபலமானது. இதை இளைஞர்கள் தங்கள் நண்பர்களுக்குள் கொண்டாடி வந்தனர்.
இந்தியா, பங்களாதேஷ், மலேசியா போன்ற நாடுகளிலும் இந்த நாளில் கார்டுகள், மலர்க்கொத்துகள் கொடுத்து வாழ்த்து பரிமாறிக்கொண்டனர்.
காதலர் தினம், மகளிர் தினம், யோகாதினம் போல, நண்பர்கள் தினமும் ஐ.நா. வால் அறிவிக்கப்பட்டது.1958 ஆம் ஆண்டுதான். ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு கொண்டாடப்படுகிது.
இதை கொண்டாடுகிறார்களோ இல்லையோ கொண்டாடுகிற உரிமை எல்லோருக்கும் தரப்பட்டுள்ளது.
காதலர் தினம், யோகா தினம் போன்றவைகளுக்கு கூட சில நாடுகளில் மதம், கலாச்சாரத்தை காரணம் காட்டி எதிர்ப்பாளர்கள் உருவாகின்றனர்.
நண்பர்கள் தினத்துக்கு எந்த பிரிவினரிடமும் எதிர்ப்பு எழ 
வாய்ப்பே இல்லை.
காதல், மனிதர்களுக்கு இரண்டாவது உயிர் என்றால், அந்த காதலோடு சமமாக போட்டியிட்டு வருவது நட்பு. அது மட்டுமல்ல, சமயங்களில் காதலையே வெல்லக் கூடியதாகவும் உள்ளது நட்பு.
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் நட்புக்கு ஒரு அதிகாரத்தையே தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒதுக்கியுள்ளபோது. 365 நாட்களில் ஒரு நாளை நண்பர்கள் தினத்துக்கு ஒதுக்கியிருப்பது கூட நாம் அதற்கு அளித்திருக்கும் சிறிய அங்கீகாரம்தான்.
இந்நாளில், நட்பை வளர்ப்பதற்கும், உறவுக்கு சமமான அங்கீகாரம் கிடைப்பதற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபடலாம்.
இளமையில் நண்பர்கள் வட்டம் விரிவடைந்து கொண்டே செல்லும், முதுமையில் அதை சுருக்கிக்கொள்வதையே சராசரி மனிதர்களின் மனநிலை நிம்மதியாக கருதுகிறது.
இதை மாற்றுகிற கடமை இந்த நண்பர்கள் தினத்துக்குதான் உண்டு.
காதல்தான் சமுதாயத்தில் சமத்துவத்தை கொண்டுவர முடிந்தது என்று எல்லோரும் எண்ணுகிறோம். அதை அதனினும் அனுகூலமாக செய்யும் வலிமை நட்புக்கும் உண்டு.
ரத்த பாத்தியதை உள்ள உறவுகள் துன்பத்தில் உதவுவது. ஆச்சரியத்துக்கும் பாராட்டுக்கும் உரியதல்ல. ரத்த சம்பந்தம் இல்லாத நண்பர்கள் உதவுவதுதான் மெய்சிலிர்க்க வைப்பதும் மெச்ச தகுந்ததுமாகும்.
அத்தகைய மாண்புமிக்க நண்பர்கள் தினத்தில் உங்கள் நண்பர்களுக்கு உயர்வான உதவிகளை செய்யுங்கள்.
அல்லது, உங்களுக்கு உதவிய நண்பர்களுக்கு இந்த நன்னாளில் நன்றியை நினைவு கூருங்கள். 




சனி, 1 ஆகஸ்ட், 2015

தந்தை மகனை தூக்கி விளையாடியதால் கைது ???

அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது மகனை முதுகில் தூக்கி விளையாடும்போது, எதிர்பாராதவிதமாக மகன் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்ட குற்றத்திற்காக தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒரேகன் மாகாணம், பிவர்டன் நகரில் வசித்து வந்த இந்த தந்தை, கடந்த பிப்ரவரி 6ம் திகதி, தனது மூன்றரை வயது மகனை முதுகில் தூக்கி உப்பு மூட்டை விளையாட்டு காண்பிக்க முயன்றுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக மகன் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ரன்டல் சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர் கேட்ட கேள்விக்கு, மகனை அவனது தந்தை கீழே போட்டிருக்கலாம் என்று ஒரு வார்த்தையை கூறிவிட்டார். உடனே மருத்துவமனையில் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த சமூக சேவை அமைப்பினர் அந்த பெண்ணிடம் ஏதேதோ ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
அவசரத்தில் அப்பெண்ணும் கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் பிறகுதான் தெரிந்துள்ளது, சிறுவனை கீழே தள்ளிய தந்தையை வீட்டுக்குள்ளே அனுமதிக்க கூடாது என்பதற்கான உத்தரவுதான் அந்த ஆவணங்களில் எழுதப்பட்டிருந்தது என்பது.
இதன்பிறகு கணவர், அந்த சமூக சேவை அமைப்பினர் அப்பெண்ணுக்கு கவுன்சிலிங் என்ற பெயரில், அவரது கணவரை பற்றி கேள்வி மேல் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
உனது கணவர் கோபக்காரரா? அடித்து துன்புறுத்துபவரா? என்றெல்லாம் கேள்விகள் கேட்க, இப்பெண்ணும் எனது கணவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த கவுன்சிலிங் முடிவுற்றதைத் தொடர்ந்து, யூன் மாத கடைசியில், தந்தை மீதான வழக்கை வாபஸ் பெறலாம் என்று சேவை அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.
ஆனால் யூலை மாதம் 22ம் திகதி, இவ்வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குழந்தையின் தாய், மனதளவில் சோர்ந்துள்ளார். எனவே, சிறுவனை அவனது தந்தை தள்ளிவிட்டிருக்கும் வாய்ப்பை அந்த பெண் மறுத்து சொல்வதை ஏற்க முடியாது என்று கூறி, தந்தை குற்றவாளிதான் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து மறுநாளே தந்தை கைது செய்யப்பட்டார்  தற்போது, 1000 டொலர் செலுத்தி ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 31 ஜூலை, 2015

அதிகரித்து வருகின்றது இந்து கோயில்கள்????

அமெரிக்காவில் இந்து கோயில்கள் அதிகரித்து வருகின்றது என்று நாம் பெறுமைப்பட வேண்டாம், உலகிலேயே 160 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இந்து ஆலயம் அமெரிக்காவில் கட்டப்பட்டு வருவதாக அறிகின்றோம். எமது இந்து மதம் உலகின் அத்தனை மதங்களுக்கும் தாய் மதமாகும்.
அமெரிக்கர்களின் ஒரே குனம் உலகில் எது சிறந்ததோ அதை தாங்கள் உரிமை கொண்டாடுவதாகும்.
காலப்போக்கில் அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு இந்து மதம் வெள்ளையர்களின் மதமாக கூட மாறலாம்.
ஆகவே நாம் எங்கு சென்றாலும் எமது மதசம்பிர்தாயங்களை பின்பற்றுவோம் அதேநேரம் இவ்வளர்சியிலும் கவனமாக இருப்போம், இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 30 ஜூலை, 2015

ஆபாசபடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!


கனடா ரொறன்ரோவில் குழந்தைகள் ஆபாசபடங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எரிக் பெர்க்மானின் என்ற 54 வயதுடைய குறித்த நபர் குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் கைதின் போது அவரது வீட்டில் அவ்வாறான 

புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணையத்தளம் ஊடான செயற்பாடுகளிலும் அவர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சிதைவுகள், மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகளா

ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.
அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு தாண்டிவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும்பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடத்திற்கு மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் ரீயூனியன் கடற்பகுதியில் 
கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில்உள்ள பிரஞ்சு நாட்டின் தீவான ரீயூனியன் கடற்பகுதியில் விமானத்தின் உதிரிபாகங்கள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ரீயூனியன் கடற்பகுதியில் கரை ஒதுங்கிஉள்ள சிதைவுப் பொருட்களானது மாயமான மலேசிய விமானத்தில் இருந்துவந்து இருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகின்றனர். இதுவரையில் வேறுஎந்தஒரு போயிங் 777 ரக விமானம் மாயமாகவில்லை.
எனவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சிதைவுகளானது மாயமான மலேசிய விமானத்தில் இருந்தே வந்து இருக்க வாய்ப்பு உள்ளது.
சிதைவுகளை ஆய்வு செய்ய பிரஞ்சு விமானப் போக்குவரத்து 
வல்லுநர்களுக்காக அமெரிக்க அதிகாரிகள் காத்திருக்கின்றனர், சிதைவில் கண்டு பிடிக்கப்பட்டுஉள்ள சிரியல் நம்பர் விமானத்து ஒத்து போனால் அது மாயமான விமானத்தின் சிதைவுகளே, என்று அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.
ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சிதைவு பொருட்கள் அனைத்தும், விமானத்தின் உதிரிபாகங்கள் போன்று உள்ளது.
விமானத்தின் பின்பகுதியில் இருக்கும் பொருட்களை ஒத்துப்போகின்றது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இது விமானத்தின் சிதைவு பாகங்கள் தான் என்பதை உறுதிசெய்யும் விதமாக உள்ளது.
இதற்கிடையே விமானத்தின் சிதைவு பாகங்கள்தானா என்பதை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். விமான போக்குவரத்து துறை வல்லூநர்களும் ஆய்வில் இருங்கி உள்ளனர். இதற்கிடையே ஆய்வு நடத்துவதற்கு ஒன்றும் இல்லை இதுவிமானத்தின் சிதைவு பாகம்தான் என்ற ஒரதரப்பு தகவலும் வெளியாகி உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கணவரால் கொலை மனைவி சடலம் தலையில்லாமல் ஆற்றில்கண்டுபிடிப்பு

சிங்கப்பூரில் ஆற்றில் தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியப்பெண், அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் வம்போவா ஆற்றில் கடந்த 2013-ம் ஆண்டு தலையில்லாத நிலையில் இந்தியாவை சேர்ந்த, 33 வயது பெண்ணின் சடலம் காணப்பட்டது. தற்போது பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று கரோனர்ஸ் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
கணவன் – மனைவி இடையே நடைபெற்ற சண்டையின்போது, ஜாஸ்விந்தர் கவுரின் தலையில் கட்டிங் பிளேடை கொண்டு அவரது கணவர் ஹர்விந்தர் சிங் அடித்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஹர்விந்தர் சிங் தற்போது இண்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். 
2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி ஜாஸ்விந்தர் கவுரை அவரது கணவர் கொலை செய்து உள்ளார் என்று கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி காலையில் ஆற்றில் மிதந்தவண்ணம் ஜாஸ்விந்தர் கவுரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜாஸ்விந்தர் சிங், கணவரிடம் இருந்து தொடர்ந்து விலகியே இருந்து உள்ளார். இதனையடுத்தே இருவர் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது ஹர்விந்தர் சிங் அடித்ததில், ஜாஸ்விந்தர் கவுர் மயங்கிவிட்டார், பின்னர் ஹர்விந்தர் சிங் தனது நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடத்த சம்பவத்தை தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்தே சடலத்தை மறைக்க அவர் முயற்சி செய்து உள்ளார் என்று சிங்கப்பூர் செய்தி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
கவுரின் சடலத்தை வெளியே கொண்டு செல்ல உதவிசெய்த இந்தியர் குருஷரன் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தை அடுத்து ஹர்விந்தர் மலேசியா சென்று
 பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அவரை பிடிக்கமுடியாமல் தொடந்து தலைமறைவாக உள்ளது. இருப்பினும் கவுர் மரணத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியாத நிலையே நீடிக்கிறது.
இதுவரையில் ஜாஸ்விந்தர் கவுரின் வெட்டப்பட்ட கைகள் மற்றும் தலை இதுவரையில் கண்டுபிடிக்கப்படாதது, தொடர்ந்து மர்ம நீடித்துக் கொண்டே இருக்கிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் ஒரே மகள் மரணம்.

கடந்த 6 மாதமாக மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் உயிருக்கு போராடிவந்த பிரபல பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் ஒரே மகளான பாபி கிறிஸ்டினா பிரவுன் தனது 22 வயதில் நேற்று மரணம் அடைந்தார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி ஜோர்ஜியாவில் உள்ள தனது வீட்டு குளியல் அறை உள்ள குளியல் தொட்டியில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் 
ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று துலுத் நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதிகப்படியான போதை பொருள் மற்றும் மதுவை எடுத்துக்கொண்டதன் மூலம் அவரது இதயம் பாதிக்கப்பட்டது தான் அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>