siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 16 ஜூலை, 2012

பிரபலங்களை உயிருடன் புதைப்பது போன்ற சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள்: சிலி நாட்டு பத்திரிக்கை எழுப்பிய சர்ச்சை

 16 யூலை 2012
உலகளவில் புகழ் பெற்ற பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேட், எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே ஆகியோரை உயிருடன் புதைப்பது போன்ற புகைப்படங்களை சிலி நாட்டு பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
இப்புகைப்படங்களின் விபரம்: முதல் புகைப்படத்தில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவியும் இளவரசியுமான கேட் வில்லியம் ஆகிய இருவரையும் சமீபத்தில் மறைந்த பிரிட்டனின் பிரசித்த பாடகி அமி வைன்ஹவுஸ் புதைகுழி ஒன்றில் புதைப்பது போல் அமைந்துள்ளது.
இரண்டாவது படத்தில் சமீபத்தில் கொல்லப்பட்ட லிபியா சர்வாதிகாரியான கடாஃபி எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியும் இராணுவத் தளபதியுமான ஹோஸ்னி முபாரக்கை புதைகுழியில் புதைப்பது போல் அமைந்துள்ளது.
மூன்றாவது படத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவ் ஜொப்ஸ் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மற்றும் தலைவர் ஜூலியன் அசாஞ்சேயை புதை குழியில் புதைப்பது போலவும் உள்ளது.
இப்புகைப்படங்கள் போஃட்டோ ஷாப் மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்டது என்றும் விளம்பர நோக்கத்துக்காக சிலி நாட்டு பத்திரிகையில் வெளியாகியிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

0 comments:

கருத்துரையிடுக