siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

விபத்தில் கணவனை பறிகொடுத்த பெண் மறுமணம் செய்தாலும்இழப்பீடு கொடுக்க வேண்டும்

 

மதுரை: விபத்தில் கணவன் இறந்த பிறகு, மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்போனா (33). இவரது கணவர், 1998ல் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, கார் மோதி இறந்தார். ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு, நெல்போனாவும், அவரது மாமனார் சீனிவாஸ் டைட்ஸ் இருவரும், நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நெல்போனாவிற்கு ரூ.4 லட்சம், மாமனாருக்கு ரூ.1.28 லட்சமும் இழப்பீடு வழங்க தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 2000ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கோர்ட் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனம், ஐகோர்ட் கிளைரூ.ல் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. மனுவில், Ôவிபத்துக்கு மனுதாரரின் கணவர் தான் காரணம். கார் டிரைவரின் கவனக்குறைவால் விபத்து நடைபெறவில்லை. கீழ்கோர்ட்டில் இழப்பீடு தவறுதலாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கணவர் இறந்ததும் மறுமணம் செய்துள்ளார். இதனால், இழப்பீடு வழங்க முடியாதுÕ என கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கை பொறுத்தவரை, கார் டிரைவரின் கவனக்குறைவால் விபத்து நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமான டிரைவர், விபத்துக்கு தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டு கோர்ட்டில் அபராதம் செலுத்தியுள்ளார்.இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்தது சரிரூ.ல்லை என்று கூறியுள்ளனர். மனுதாரரின் கணவர் 38 வயதில் இறந் துள்ளார். நன்றாக படித்துள்ளார். சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அவர் மாதம் ரூ.4 ஆரூ.ரம் சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால், மாதம் ரூ.3 ஆரூ.ரம் சம்பளம் வாங்குவதாக கருதி, இழப்பீடு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது சரியானதே.
மறுமணம் செய்தார் என்ற காரணத்திற்காக, விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கும், மனைவியை இழந்த கணவனுக்கும் இழப்பீடு வழங்க மறுக்கக்கூடாது. இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசாக, அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். மனுதாரருக்கு கீழ்கோர்ட் உத்தரவிட்டபடி, ரூ.5 லட்சத்து 28 ஆரூ.ரம் இழப்பீடு தொகையை, 8 வாரத்தில் மனுத்தாக்கல் செய்த நாளிலிருந்து 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

கருத்துரையிடுக