siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

செவ்வாய்க்கிரக வளிமண்டல கூறுகள் கியூரியோசிற்றி விண்கலத்தால் அளவீடு



11.09.2012.By.Rajah.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கியூரியோசிற்றி விண்கலமானது செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலத்திலுள்ள கூறுகளை அளவிட்டுள்ளது.

அந்த விண்கலத்திலுள்ள செவ்வாய் மாதிரி பகுப்பாய்வு உபகரணம் (சாம்) மூலம் செவ்வாயின் வளி மண்டலத்திலுள்ள வெவ்வேறு வாயுக்கள் அளவிடப்பட்டுள் ளன.

1970 களுக்கு பின் வேற்றுக் கோளொன்றின் மேற்பரப்பிலுள்ள வளிமண்டலத்தின் இரசாயனக் கூறுகள் பரிசோதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

ஆரம்ப கட்ட பரிசோதனைகளின் பிரகாரம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காபனீரொட்சைட் செல்வாக்கு செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலத்தின் பிரதான கூறாக காபனீரொட்சைட் உள்ள நிலையில் அதில் மெதேன் வாயும் உள் ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது.

மேற்படி செவ்வாய்க்கிரக வளிமண்டலத்திலான வாயுக் கூறுகள் தொடர்பான முதலாவது பரிசோதனையின் பெறுபேறுகள் ௭திர்வரும் வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக கியூரியோசிற்றி விண்கலத்தின் பிரதி தலைமை விஞ்ஞானி ஜோய் கிறிஸ்ப் தெரிவித்தார்.

தற்போது கியூரியோசிற்றி விண்கலமானது அது ஒரு மாதத்திற்கு முன் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய கோல் கிரேட்டர் பகுதியிலிருந்து 100 மீற்றருக்கும் அதிகமான தூரத்துக்கு நகர்ந்துள்ளது.

இந்த விண்கலத்தின் 2 மீற்றர் நீளமான ரோபோ கரத்தை பயன்படுத்தி ௭திர்வரும் தினங்களில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. செவ்வாய்க்கிரகம் பூமியின் ஈர்ப்புத் தன்மையின் சுமார் 38 சதவீத ஈர்ப்பை கொண்டிருப்பதாக கியூரியோசிற்றியின் தலைமை பொறியியலாளர்களில் ஒருவரான மட் ரொபி ன்ஸ்ன் தெரிவித்தார்