siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 20 அக்டோபர், 2012

உளவு பார்க்கும் பணிக்கு இளைஞர்களை தெரிவு செய்யும் இங்கிலாந்து அரசு

சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012By.Rajah.
உளவு பார்ப்பதற்கு 18 வயதுக்கு உட்பட்டவர்களை இங்கிலாந்து அரசு தெரிவு செய்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இணையம் மூலம் தீவிரவாதிகள் பல்வேறு தகவல்களை, சதி திட்டங்களை பரிமாறி வருகின்றனர்.
அத்துடன் சில சமூக விரோதிகள் மற்ற முக்கிய அமைப்புகளின் கடவுச்சொல்லை திருடி ரகசியங்களை தெரிந்து கொண்டு சதி திட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இவற்றை தடுக்க ஒவ்வொரு நாடும் போராடி வருகின்றன. இந்நிலையில் சைபர் தீவிரவாதம், பாஸ்வேர்டு திருட்டு போன்ற பிரச்னைகளை சமாளிக்க 18 வயதுக்கு உட்பட்ட டீன்ஏஜ் வாலிபர்கள், இளம்பெண்களை இங்கிலாந்து அரசு தெரிவு செய்து வருகிறது.
அவர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போல், உளவு பார்க்க பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற சிறந்த மாணவர்களே உளவு பார்க்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது முதல் முறையாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இத்திட்டத்தை வெளிவிவகாரத் துறை அமைச்சர் வில்லியம் ஹாக் அறிவித்தார். அவர் கூறுகையில், வாலிபர்களும் இளம்பெண்களும்தான் நாட்டின் வருங்கால வெற்றிக்கு தூணாக உள்ளனர். 2ம் உலக போரில் இளம் வயதினர் முக்கிய பங்கு வகித்தனர் என்றார்.
இங்கிலாந்து எலக்ட்ரானிக் கண்காணிப்பு ஏஜென்சிக்காக உளவு பார்க்க 18 வயதுக்கு உட்பட்ட 100 பேரை முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் கேம் போன்றவற்றில் மிகச்சிறந்த அறிவு படை வாலிபர்கள், இளம்பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.
அதன்பின் முழு நேர பணி வழங்கப்படும். உளவு பார்க்கும் பணிக்கு பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.