siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 4 நவம்பர், 2012

ரூ350 மில்லியன் செலவில் களுவாஞ்சிக்குடி???

         
Sunday 04 November 2012.By.Rajah.
ஜப்பான் அரசாங்கத்தின் முழு பங்களிப்புடன் புனரமைக்கப்படவுள்ள மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புனரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு முதல் மாதப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜப்பானிய அரசாங்கத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த வைத்தியசாலை புனரமைக்கப்படவுள்ளது. இதற்காக ஜப்பான் அரசாங்கம் ஜய்க்கா திட்டத்தின் மூலம் 500 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடுசெய்துள்ளது.

இது தொடர்பிலான கலந்துரையாடல் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை அத்தியட்சர் கு.சுகுணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஜப்பான் அரசின் ஜெய்க்கா ஆய்வுக்குழுவின் தொழில்நுட்ப கணீப்பீட்டு பணிப்பாளர் டொமோக்கோ முராயாமா மற்றும் ஜெய்க்கா திட்டத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் கிசாந்தி மற்றும் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

வழங்கப்படும் ஒதுக்கீட்டின் மூலம் சகல வைத்திய நிலையங்களையும் உள்ளடக்கியதான வைத்தியசாலை கட்டிடம் 350 மில்லியன் ரூபாவில் கட்டப்படவுள்ளதுடன் 150 மில்லியன் செலவில் அதற்கான உபகரணங்கள் பெறப்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வைத்தியசாலை பூர்த்திசெய்யப்படும்போது அங்கு பெறப்படவுள்ள நவீன தொழில்நுட்பங்களை கையாள்வதற்காக நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் இதன்போது ஜப்பான் உறுதியளித்துள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை அத்தியட்சர் கு.சுகுணன் தெரிவித்தார்.

கடந்த கால யுத்தம் மற்றும் வெள்ள அனர்த்த காலங்களில் படுவான்கரை உட்பட பல்வேறு பகுதி மக்களுக்கு சேவையாற்றும் வைத்தியசாலையாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது.

தினமும் வெளி நோயாளர் பிரிவில் குறைந்தது 600பேர் பயனடைந்துசெல்வதாக தெரிவித்த வைத்திய அத்தியட்சர் புதிய வைத்தியசாலை அமைக்கப்படுவதன் மூலம் இந்த தொகை இரட்டிப்பாகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் வைத்தியசாலையாக இது அமையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
 



 

0 comments:

கருத்துரையிடுக