siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 11 நவம்பர், 2012

பத்திரிகையாளர்; பிரெட்ரிகா ஜான்ஸை திட்டிய கோத்தபய.



By.Rajah...அரசும், ஊடகமும், நீதித் துறையும் ராஜபக்ஷே​வின் குடும்பச் சொத்து ஆகிவிட்டது என்ற கொந்தளிப்பு, கடல் கடந்து கேட்கிறது!
பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்​பளித்த நீதிபதி ஷிராணி பண்டார நாயக மீது நாடாளுமன்றத்தில் குற்றத் தீர்மானம், அரசுக்கு எதிரான செய்திகளை எழுதியதற்காக சண்டே லீடர் ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் பதவிப் பறிப்பு போன்ற சம்பவங்கள் இலங்கையைக் கொந்தளிக்க​வைத்துள்ளன.
பிரெட்ரிகா ஜான்ஸ்... சண்டே லீடர் ஆசிரியராக இருந்த லசந்தா விக்ரமதுங்க 2009-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஆசிரியர் ஆனவர் பிரெட்ரிக்கா ஜான்ஸ். ஒரு காலத்தில் சண்டே லீடர் பத்திரிகைக்கு, 'அரசை எதிர்க்கும் அஞ்சாத பத்திரிகை’ என்ற பெயர் இருந்தது. ஆனால் இன்று அந்தப்பெயர் இல்லை. காரணம், அது ராஜபக்ஷே ஆதரவு நிலைக்கு மாறிவிட்டது. அதனால்தான், பிரெட்ரிகா ஜான்ஸ், ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
'2009 போரின்போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை கோத்தபய சுடச்சொன்னார்’, 'தன் மனைவிக்கு கோத்தபய வெளிநாட்டில் இருந்து நாய்க்குட்டி இறக்குமதி செய்தார்’ என்றெல்லாம் செய்திகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்தவர், பிரெட்ரிகா. இந்தச்செய்திகள் தொடர்பான விளக்கம் கொடுப்பதற்காக பிரெட்ரிகா ஜான்ஸை அழைத்த கோத்தபய, 'நீ மலம் தின்னும் பன்றி; கேடுகெட்ட பத்திரிகையாளர்; மக்கள் உன்னை வெறுக்கிறார்கள்; உன்னைக் கொன்று விடுவார்கள்’ என்று கேவலமாகத் திட்டினார். அதையும் அப்படியே ஆதாரத்தோடு வெளியிட்டவர் ஜான்ஸ்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கோத்தபய, அவரைப் பற்றி வெளியான செய்தி தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். அதோடு, ராஜபக்ஷேவின் விசுவாசி​யான அசங்க செனிவிரட்னவை வைத்து 2012 செப்டம்பர் மாதம், சண்டே லீடர் பத்திரிகையை விலைக்கு வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே பிரெட்ரிகா நீக்கப்பட்டார். பின்னர், சண்டே லீடர் நிர்வாகம், கோத்தபய பற்றி வெளியிட்ட செய்திக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டது. 'உங்கள் பாஸ்போர்ட் முடக்கப்​பட்டு நீங்கள் கைது செய்யப்படலாம்’ என்று அவரது வழக்கறிஞர்கள் எச்சரிக்கை செய்தனர். அதனால் உடனே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார் பிரெட்ரிகா.
எதிர்பார்த்தது போலவே நவம்பர் 7-ம் தேதி பிரெட்ரிகாவைக் கைதுசெய்ய ஆணை பிறப்​பித்தது நீதிமன்றம். விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. அவர் கைது செய்யப்பட்டால், அவருக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள்

0 comments:

கருத்துரையிடுக