siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 11 டிசம்பர், 2012

ஐ.நாவின் சிறப்பு ஆலோசகராக மலாலாவின் தந்தை நியமனம்

தலிபான்களால் சுடப்பட்ட சிறுமி மலாலாவின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய், ஐ.நா சபையின் சர்வதேச கல்விக்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்கான சிறப்புத் தூதர் கோர்டன் பிரெளன் அறிவித்தார்.
அவர் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலாலாவும், கல்விக்கான பிரசாரத்தில் தந்தையுடன் சேர்ந்து பணியாற்றுவார்.
2015ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பெண்களும் கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்ற மலாலாவின் திட்டத்தை, ஜியாவுதீன் நிச்சயம் செயல்படுத்துவார் என்று தெரிவித்தார்.
மேலும் மலாலாவின் பிறந்த தினமான டிசம்பர் மாதம் 12ஆம் திகதியை உலகில் அனைத்து சிறுவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய செயல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இவர் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

கருத்துரையிடுக