siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 1 டிசம்பர், 2012

ஜேர்மனியிடம் வழங்கியது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம்

 
ஜெனீவாவில் உள்ள நெடுஞ்சாலைச் சங்கம் நாஜிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் தகவல்களைக் கொண்ட ஆவணக்காப்பத்தை ஜேர்மனியிடம் வழங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது தொலைந்து போனவர்களையும் நாஜிகளால் கொல்லப்பட்டவர்களையும் பற்றி அறிய மக்கள் இந்த ஆவணக்காப்பத்தையே நாடினர். சர்வதேசத் தேடும் பணிக்கு(ITS) உதவிய இந்த ஆவணக்காப்பகம் 1943ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அக்காலத்தில் இதன் மூலமாகப் பலகோடி குடும்பங்கள் தங்களின் காணாமல் போன உறவினர் குறித்து அறிந்து கொண்டனர், என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீட்டர் மாரெர் தெரிவித்தார்.
இந்த ஆவணக் காப்பகத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தகவல் அட்டைகள் உள்ளன. இவற்றில் 17.5 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் குறித்த தவல்கள் காணப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலோர் நாஜிப் படையினரால் கொல்லப்பட்ட யூதர்களே ஆவர்.
கடந்த ஐம்பதாண்டுகளாக தனது பொறுப்பில் வைத்திருந்த சர்வதேசச் செஞ்சிலுவைச்சங்கம் இப்போது ஜேர்மனியிடம் இந்த ஆவணக்காப்பத்தைக் கொடுத்தாலும், அதனைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தனது ஆதரவைத் தொடந்து வழங்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப உதவிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்குத் தொடர்ந்து கிடைக்கும் என ICRCன் பொருப்பாளர் மாரெர் தெரிவித்துள்ளார்.
செஞ்சிலுவைச் சங்கம் தனது நிர்வாகப் பொறுப்பை மட்டும் ஜெர்மனிக்கு வழங்குகிறதே தவிர காப்பகத்தை அப்படியே கைகழுவி விடவில்லை, என்று மாரெர் உறுதிபடத் தெரிவித்தார். செம்பிறைச் சங்கங்களும் இந்த ஆவணக் காப்பகத்தின் பராமரிப்புக்கு ஜேர்மன் அதிகாரிகளுக்கு உதவத் தயாராக இருக்கின்றது.

0 comments:

கருத்துரையிடுக