siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பாகிஸ்தானிடையே கடும் சண்டை:

எல்லையில் தொடர் பதற்றம் இந்தியா, பாகிஸ்தான் இராணுவ வீரர்களிடையே நேற்றிரவு கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சில ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அவர்களைத் தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். இந்திய வீரர்களை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீண்ட நேரம் நீடித்தது. இரவு 9.45 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டையால் இப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. ஊடுருவல்காரர்களை நோக்கி இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியவுடன் அவர்கள் எல்லைக் கோட்டுப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதாக கர்னல் பால்டா தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது. எல்லையில் இரண்டு வீரர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு இந்திய இராணுவம் கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, எல்லையில் படைகளைகுவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவும் இத்தகைய தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது{புகைப்படங்கள்,}

0 comments:

கருத்துரையிடுக