siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 21 ஜனவரி, 2013

மனிதரின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் பூனைகள்:

மெஸ்சினா பல்கலைக் கழகம்,அறிவுள்ள விலங்குகளில் பூனையும் ஒன்று. அவை தன்னை வளர்ப்பவர்களின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் நன்கு கவனித்து அதை அப்படியே பிரதிபலிக்கின்றன. அதாவது தனக்கு ஒதுக்கப்பட்ட உணவை சாப்பிடுவது, உறங்குவது, கழிவறை செல்வது போன்றவற்றை ஒழுங்காக செய்கின்றன. மேலும் உணவு பொருள் வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடித்து சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதுபற்றிய ஆய்வை மெஸ்சினா பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் குளூசெப்பே பிக்சியோனி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். பூனைகளை 2 பிரிவுகளாக்கி அவற்றின் ஒரு பிரிவை சிறிய வீட்டிலும், மற்றொரு பிரிவை பெரிய வீட்டிலும் வளர்த்தனர். அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து சிறப்பாக பராமரித்தனர். அவற்றுடன் அவைகளை வளர்ப்பவர்களை எப்போதும் உடன் இருக்கும்படி செய்தனர். அவற்றில் சிறிய வீட்டில் வளர்ந்த பூனைகள் தன்னை வளர்க்கும் எஜமானர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தன. அவை தன்னை வளர்த்தவர்களின் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் அப்படியே பிரதிபலித்தன. அதே நேரத்தில் பெரிய வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளிடம் சிறிய வீட்டில் வளர்ந்த பூனைகளின் செயல்பாடுகளில் பாதி அளவே இருந்தது. இதன் மூலம் பூனைகள் தங்களை வளர்ப்பவர்களின் செயல்பாடுகளை பிரதிபலிப் பவையாக இருப்பது தெரிகிறது

0 comments:

கருத்துரையிடுக