siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 10 ஜனவரி, 2013

அதிர்ச்சியில் உறைந்து போனது மூதூர் பிரதேசம்!



மகளின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தாய் நேற்று அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்தத் தாயுடன் இணைந்து மூதூரும் சோகத்தில் உறைந்துபோனது.

மூதூர் ரிஸானா நபீக்கிற்கு நேற்று நண்பகல் நேரம் சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை கேள்வியுற்ற ரிஸானாவின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றாள்; நம்ப மறுத்தாள். ரிஸானாவின் தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் கதறி அழுதனர்.
ரிஸானாவின் தாய், தந்தை மட்டுமல்ல, இலங்கை வாழ் மக்கள் எவருமே நினைத்துப் பார்த்திருக்காத இந்தத் துயரச் சம்பவம் நேற்று இலங்கைக்கு அறியக் கிடைத்தபோது நாடே சோகத்தில் மூழ்கியது.
ரிஸானாவின் சொந்த ஊரான மூதூர் பிரதேசம் கதறியழுதது. உறைந்து போய்நின்ற ரிஸானாவின் தாய் துடியாய் துடித்தாள். தன் கையால் மார்பில் அடித்துக் கதறினாள்.
15 வருடங்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தனது அன்பு மகளின் மரணம் இவ்வாறு அமைந்துவிட்டதே என எண்ணி விம்மினாள்.
ரிஸானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுவிட்டதை அறிந்த மூதூர் தொகுதி மக்களும், ஏனைய பிரதேச மக்களும் ரிஸானாவின் வீட்டை நோக்கி அலையாகத் திரண்டனர்.
பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனாஸாத் தொழுகைகளும் நடத்தப்பட்டன. ரிஸானா விரைவில் விடுதலையாவாள் என்று போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை ரிஸானாவின் இல்லத்தில் திரண்ட மக்கள் சாபம் உண்டாகட்டும் எனக் கூறி திட்டித் தீர்த்தனர்

0 comments:

கருத்துரையிடுக