siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

வரி ஏய்ப்புக்கு உதவிய சுவிஸ் அதிகாரிகள்: வழக்கு?


சுவிஸ் வங்கியாளர் ஸ்டீபன் பக்கும்(Stefan Buck), சுவிஸ் சட்டதரனி எட்கார் பல்ட்சரும்(Edgar Paltzer) அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்ற அமெரிக்கப் பணக்காரர்கள் பலருக்கும் சதி செய்து உதவி செய்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவின் சட்டத்துறை, இவர்கள் மீது சதி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நியுயார்க் நகரில் பதிவானது.
இது குறித்து அமெரிக்க சட்டதரனி அலுவலகம் தனது ஊடகக் குறிப்பில், பால்ட்சரும், பக்கும் தமது தொழில் திறமையால் அமெரிக்க வாடிக்கையாளர்களை வரி செலுத்த விடாமல் அரசை ஏமாற்றி சதி செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த வரி ஏய்ப்புக்காக சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய வங்கியான UBS, அமெரிக்கச் சட்டத்துறைக்கு 780 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது.
இதேபோன்று சுவிட்சர்லாந்தின் மிகப்பழைய வங்கியான வெஜிலின்(Wegelin) நிறுவனம், வசதிபடைத்த அமெரிக்கர்களின் வரி ஏய்ப்புக்கு உதவியதற்காக 58 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது. ஆனால் பால்ட்சரும், பக்கும் இன்னும் கைது செய்யப்படவில்லை. 56 வயது பால்ட்சர் இரு நாட்டுக் குடியுரிமையும் பெற்றவர். 32 வயது பக் சுவிஸ் குடிமகன் ஆவர்.
இருவரும் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் தான் வசிக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு சிறைத்தண்டனை இவர்களுக்கு கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது
 

0 comments:

கருத்துரையிடுக