siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

புதுமைகள் படைப்பதில் சுவிஸ் முதலிடம்


ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய அண்மைகால ஆய்வின்படி, அதன் உறுப்பினர் நாடாக இல்லாத சுவிட்சர்லாந்து புதுமைகள் படைப்பதில் முதலிடத்தைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து புதுமை மதிப்பீட்டுக் கழகம் இந்த வாரம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பினர் நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை அறிந்து தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் குரோஷியா, ஐஸ்லாந்து, மேசிடோனியா, நார்வே, செர்பியா, துருக்கி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் சேர்த்து கொள்ளப்பட்டன.
பதினைந்து அம்சங்களை அடிப்படையாக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் வெளிப்படையான, சிறப்பான மற்றும் கவர்ச்சியான ஆய்வு முறைகளை பின்பற்றுவதில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மூன்று ஆய்வு முறைகளையும் நிறுவனமுதலீடு, அறிவுசார் சொத்துகள் மற்றும் பொருளாதார விளைவுகளை அறிவதற்கு சுவிட்சர்லாந்து பயன்படுத்தியுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் ஸ்வீடன், ஜேர்மனி, டென்மார்க், ஃபின்லாந்து போன்ற நாடுகளும் புதுமைகள் படைப்பதில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது
 

0 comments:

கருத்துரையிடுக