siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 14 ஜூலை, 2013

தேர்தலில் முஸ்லிம் பெண்கள் முகத்தை காட்ட வேண்டும்


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையினை கொண்டு வரும் அதேவேளை கட்டாயமாக அவர்களுடைய முகத்தையும் அங்குள்ள அதிகாரிகளுக்கு காண்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இவ்வாறு நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி சோதனையிடுவதற்கென சகல வாக்குச்சாவடிகளிலும் பெண் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் வாக்களிக்க வரும் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதனை தடை செய்யுமாறு நாம் கோரவுமில்லை. ஆனால் வாக்குச்சாவடிகளில் இருக்கும் பெண் உத்தியோகத்தர்களிடம் தேசிய அடையாள அட்டையினை காண்பிக்கும் போது முகத்தையும் காண்பிக்க வேண்டும்.
தேர்தல் சமயத்தில் நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் வீண் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்குமே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மூன்று மாகாணங்களிலும் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக