siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 14 ஆகஸ்ட், 2013

தேசிய சாலையில்வீதி வேகச் சாதனை!!



எசொன்னில் (Essonne - Etrechy )உள்ள தேசிய சாலையில் மணிக்கு 90 கிலோமீற்றர் வேகக் கட்டுப்பாடுள்ள பகுதியில் மணிக்கு 193 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற சிற்றுந்துச் சாரதி காவற்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 20:40 அளவில் 34 வயதுடைய இச் சாரதி காவற்துறையினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இவரது சாரதி அனுமதிப் பத்திரம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். வேறு ஒருவரிடம் இரவல் வாங்கி வந்நத வாகனம் என்பதால் அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை.
அதே தேசியச் சாலையில் அதே மணிக்கு 90 கிலோமீற்றர் வேகக் கட்டுப்பாடுள்ள பகுதியில் ஒரு உந்துருளிச் சாரதி மணிக்கு 142 கிலோமீற்றர் வேகத்தில் காவற்துறையினரால் மடக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தத்தில் லிட்டருக்கு 1.30 கிராம் அல்ககோல் இருந்துள்ளது. இவரிடமும் தற்காலிகமாக சாரதி அனுமதிப் பத்திரம்  பறிமுதல் செய்யப்பட்டது.
யூலை மாத இறுதியில் Val-d'Oise இல் ஒரு உந்துருளிச் சாரதி மணிக்கு 90 கிலோமீற்றர் வேகக் கட்டுப்பாடுள்ள பகுதியில் மணிக்கு 206 கிலோமீற்றர் வேகத்தில் சென்று காவற்துறையினரால் சோதனையிடப்பட்டதில் கனாபிஸ் (cannabis)என்னும் போதைப் பொருள் புகைத்து விட்டு வாகனம் செலுத்தியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதற்கெல்லாம் மேலாக  ஜுன்  மாதம் 17ம் திகதி கடும் புயல் மழைக்குள் நெடுஞ்சாலையில் மணிக்கு அதிகூடிய வேகமாக மணிக்கு 110 கிலோமீற்றர் மட்டுமே செல்லக்கூடிய நிலையில் A9 நெடுஞ்சாலையில் 49 வயதுடைய சாரதி தனது Porsche இல் பரிஸ் திசையில் மணிக்கு 226 கிலோமீற்றர் வேகத்தில் சென்றுள்ளார்.  அவரைத் துரத்திபபிடித்த  Yvelines காவற்துறைப்படையினர்  Saint-Arnoult (Yvelines) கட்டணச் சாவடியில் வைத்து அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுவரை அதி கூடிய வேகமாக அதுவும் ஒரு புயல் மழைக்குள் இந்த மணிக்கு 226 கிலோமீற்றர் வேகத்தையே தாம் பதிவு செய்துள்ளதாக  Yvelines காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.
கட்டுப்பாடற்ற வேகம் அவர்களது உயிர்களிற்கு மட்டுமல்லாது மற்றவர்களின் உயிர்களிற்கும் பேராபத்து விளைவிக்கும்

0 comments:

கருத்துரையிடுக