siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 19 அக்டோபர், 2013

இங்கிலாந்து ராணியுடன் பெண் கல்வி போராளி மலாலா சந்திப்பு


பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதுதவிர பல்வேறு சர்வதேச கவுரவ விருதுகளையும் பெற்றுள்ள மலாலா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாற்றினார்.

அவருக்கு கவுரவ குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியிடப்படும் என தெரிகிறது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரவுல் வேலன் பெர்க், நெல்சன் மண்டேலா, தலாய் லபாமா, ஆங்சான் சூகி, நிசாரி இஸ்மாயிவ் மதகுரு அகா கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக கனடா நாட்டின் கவுரவ குடியுரிமையை பெறும் ஆறாம் நபர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபத்தும் மலாலாவை சந்திக்க அழைப்பு அனுப்பினார்.

லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு தந்தை ஜியாவுதீனுடன் சென்ற அவர், தனக்கு தலிபான்களால் நேரிட்ட அவலம் தொடர்பாக எழுதிய ‘ஐ ஆம் மலாலா’ என்ற புத்தகத்தை ராணிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இங்கு வந்ததை நான் உயரிய கவுரவமாக கருதுகிறேன். இங்கிலாந்து உள்பட எல்லா நாடுகளிலும் வாழும் நிறைய குழந்தைகள் கல்வி உரிமை பெறாமல் உள்ளனர்.

நிறைய குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.
அவர்களின் கல்விக்காக எனது பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று ராணியிடம் மலாலா கூறினார்.
அப்போது இடைமறித்த ராணியின் கணவர், ‘எங்கள் நாட்டில் பிள்ளைகளை வீட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்’ என்று நகைச்சுவையாக கூறினார்.

ராணியின் எதிரில் அடக்கமாக இருக்க வேணடும் என்பது மரபு. இதையறிந்த மலாலா முகத்தில் பொங்கி வந்த சிரிப்பை கைகளால் மறைத்துக் கொண்டார்.

0 comments:

கருத்துரையிடுக