siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 14 டிசம்பர், 2013

போராளிகளின் துப்பாக்கிச்சூட்டில் 18 தொழிலாளர்கள்

   கடந்த 2008 ஆம் ஆண்டில் ஈராக்கில் நடைபெற்ற இனவாதக் கலவரங்களே அந்நாட்டு வரலாற்றில் பெரியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு மீண்டும் தொடங்கியுள்ள இனக்கலவரங்களும்,வன்முறைகளும் அமைதியின்மையையும், பாதுகாப்பு அபாயங்களையும் ஏற்படுத்துவதாக மக்களிடையே அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. நேற்று மாலை தலைநகர் பாக்தாதிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள இமாம் வைஸ் என்ற நகரத்தில் எரிவாயுக்குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இணைப்பு ஈராக்கை அண்டை நாடான ஈரானுடன் இணைக்கும் திட்டமாகும். அப்போது மூன்று வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய போராளிகள் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் ஈரானியத் தொழிலாளர்கள் 15 பேரும், ஈராக்கியர்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர். ஐந்து ஈரானியர்களும், ஒரு ஈராக் நாட்டவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகின்றது.
   
இதேபோல் பிற இடங்களில் நடைபெற்ற கார்குண்டு தாக்குதல்களில் 18 பேர் பலியானதாகவும், 37 பேர் காயமடைந்தள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஆதாரங்கள் அடிப்படையிலான ஏஃஎப்பி புள்ளிவிபரப்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பலியானவர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் எட்டு நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தாண்டியுள்ளது தெரியவருகின்றது.
 

0 comments:

கருத்துரையிடுக