siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 22 ஜூன், 2014

அதிகரிக்கும் மக்கள் தொகை இறப்பு விகிதம் குறைந்ததால்

tokai


ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் மக்கள் தொகை கூடிக்கொண்டே போவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் வரும் 2032ம் ஆண்டில் 350,000 மக்கள் கூடுதலாக சேரக் கூடும் என பவேரியா மாநில புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது. தென் ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் 2012ம் ஆண்டில் இருந்த 12.5 மில்லியன் மக்கள் தொகை, வரும் 2023ம் ஆண்டில் 12.9 மில்லியனாக உயரும் என தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான காரணம் பிறப்பு விகிதம் இல்லை என்றும், இறப்பு விகிதம் குறைந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த 2000 முதல் 2009ம் ஆண்டில் சராசரியாக ஆண்டிற்கு 9600, குடிபெயர்ந்திருந்தாகவும், ஆனால் கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 76,000 வெளிநாட்டு மக்கள் குடிபெயர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பவேரியா மாநிலத்தில் 65 வயதிற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் அதே சமயம் வடக்கு மாநிலமான பிரான்கோனியாவில் மக்கள் தொகை 18 சதவிகிதம் குறைந்துள்ளது.


!மற்றைய செய்திகள் "

0 comments:

கருத்துரையிடுக