siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 24 நவம்பர், 2014

மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் “மங்கள்யான்':“டைம் இதழ் புகழாரம்


அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “டைம்’ இதழ் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் மிகச் சிறந்த 25 கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இந்தியாவின் “மங்கள்யான்’ இடம்பெற்றுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பியுள்ள மங்கள்யான் குறித்து அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைய அமெரிக்காவால் முடியவில்லை. ரஷியாவாலும், ஐரோப்பாவாலும்கூட முடியவில்லை. ஆனால் செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்தி, இந்தியா அதை சாதித்திருக்கிறது. செவ்வாய் கிரகத்தை எட்டியதன் மூலம், மற்ற ஆசிய நாடுகள் எதுவும் இதுவரை செய்திராத சாதனையை இந்தியா செய்துள்ளது. இந்தியாவின் மங்கள்யான், படுசூட்டிகையான விண்கலம் (சூப்பர்ஸ்மார்ட் ஸ்பேஸ்கிராஃப்ட்) ஆகும். வெறும் ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள மங்கள்யானில், அங்குள்ள மீத்தேன் வாயுவை அளவிடும் கருவி உள்பட நான்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் வலிமை, இந்த விண்கலம் மூலம் நிரூபணமாகியுள்ளது என “டைம்’ இதழ் புகழாரம் சூட்டியுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக