siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஜெர்மனி இந்தியாவில் ரூ.6,600 கோடி முதலீடுசெய்கிறது ???

இந்தியாவின் முக்கிய திட்டங்களுக்காக, ரூ.6,600 கோடி முதலீடு செய்வது தொடர்பாக இந்திய-ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் உறுதி செய்யப்பட்டது. ஜெர்மனிக்கு 2 நாள் அரசு முறை பயணம் 
மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டீன்மீரை சந்தித்து பேசினார்.
 இச்சந்திப்பின் போது, இந்தியா-பாகிஸ்தான் விவகாரம், ஆப்கனில் நிலவும் சூழல் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியாவும், ஜெர்மனியும் தங்கள் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சோலார் திட்டம், கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டம், நவீன நகரங்கள் திட்டம், திறன்மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய திட்டங்களுகாக, இந்தியாவில் ஜெர்மன் ரூ.6,600 கோடி முதலீடு செய்ய முடிவு செய்வது பற்றி முடிவு செய்யப்பட்டது.
கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில், மீண்டும் ஜெர்மன் மொழியை கற்பிக்கவும், ஜெர்மன் பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்பிக்கவும் இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜெர்மன் பிரதமரின் 
இந்திய வருகையின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக