siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 12 அக்டோபர், 2015

டென்மார் கொல்பேக் தமிழர் ஒன்றிய கலை விழா 2015


டென்மார்கில் (10/10/2015) நேற்று சனிக்கிழமை கொல்பேக் தமிழர் ஒன்றிய கலை விழா 2015 இடம்பெற்ற கவியரங்கில் மெல்ல தமிழ் என்ற தலைப்பில் இடம்பெற்ற

அதில்இணுவை சக்திதாசன் கவிதை பாரதி இலக்கியச செல்வர் திரு. கருணானந்தராஜா (யுகசாரதி – இலண்டன்)தலைமையில் கவிஞர். பாரதிபாலன் கவிஞர் அம்பலவாணர் (ஜேர்மனி)
கவிஞர். பொன். புத்திசிகாமணி (ஜேர்மனி)அவர்களோடு இணுவை சக்திதாசன்கவியரங்கில் பங்கேற்றார்கள்,

மேற்குலகின் ஒரு நாடாம்
டென்மார்க் கரையின் சிறுதீவாம்
சேலண்டின் ஒரு நகராம் கொல்பேக் அதன் பெயராம்
வந்தேறு குடிகளாய் வந்தமர்ந்த
நம்குடிகள் பண்பாட்டைப் போற்றி
செம்பாட்டு மண் மறவா
செந்தமிழை போற்றி
ஒன்றியமாய் திசை எட்டும் கூடி
வந்தமர்ந்த பெரு விழாவில்
கவியரங்க திருவிழாவாம்
தாயே தமிழே ஊரே உறவே !
சேயாய் உந்தன் மடி மீதினிலே தவழ்ந்தேன் – எல்லை
தாண்டிய போதும் நாயாய் இருப்பேன் நின்
தமிழாய் வாழ அருள் தா! தாயே !
மெல்ல தாயை விட்டு கொல்லைப்புறமாய்
கொல்லக் கொல்ல ஓடினேன் எல்லை தாண்டி ஊரை விட்டு
சொல்லிக் கொள்ளாமல் சுந்தர தீவை விட்டு
அக்கம் பக்கம் சுற்றம் விட்டு மண்ணை கூட விட்டு
தமிழை மட்டும் காவிக் கொண்டு உயிரை கையில் கொண்டு
வானம் குடைந்து பறந்து மெல்ல மெல்ல தேடினேன் – புதிய
வானமெங்கும் தமிழை அள்ளித் தூவினேன்.
அள்ளிப் பருக ஆளில்லாட்டாலும் வெட்டவெளி எங்கும்
கொட்டிக் கிடக்கும் ஆதி மொழியாம் செந்தமிழ்
மெல்ல துளிர்த்திடும் சேதி சொல்லிப்போக வந்தேன்.
கவிக்கு ராஜா கருணைக்கும் ராஜா – இக்
கவி அரங்கிக்கும் ராஜா
தலைமைக் கவியே யுக பாரதியே
கருணானந்த ராஜாவே !
சிந்தைக்கு விருந்து தந்து சந்தங்களோடு
அரங்கில் கவிதை தந்து சென்ற
அண்டை நாட்டுடன் எம் நாட்டு கவிஞர்களே !
ரசிக்கும் பாங்குடன் கவி ருசிக்கும் சுவைஞர்களே !
வந்தனங்கள் கூறி பகருகின்றேன் எந்தன் கவிதனையே !
மெல்ல தமிழ் இனி ?
கவி எழுத கற்றுக் கொள்ள முன்னம்
காற்றள்ளி யெறிந்தது வானிலே – என்னை
புவியீர்த்ததோ புரியவில்லை
கண்டங்கள் தாண்டி விழுந்தேன் உன் முன்னே
செத்துப் போனதோ தமிலென்ரென்ன
ஏதேதோ பாசைகளில் அதட்டினான்
தமிழன்றி வேறேதும் தெரியாத என்னை
நகைத்தேன் புன்னகைத்தேன் – புது
மொழியில் கண்ணசைத்தேன் விலங்கிட்டான்
விடியும்வரை விளக்க மறியலில்
கண்ணயர முடியவில்லை என்னால்
கருவறையின் பின்னால்
நானிருந்த இருளறை முதல் சிறை
தனிமையிருளில் அடங்காத் தமிழில்
கத்தினேன் குளறினேன் – பின்
உயிலெழுதி வைத்தேன் சன்கோலமுகா சிறைக் கதவிலே
தமிலேனி சாகா தென்று திமிரிலே
விடிந்தும் விடியாப் பொழுதொன்றில்
விளக்கொளியில் தமிழ் கொண்டு வந்தானொருவன்
வணக்கமென்றபடி!
உயிர் வந்தது எனக்கும் தமிழுக்கும் !
அன்னை மண்ணை விட்டு
அகதித் தமிழனாய் விண்ணைத் தொட்டு
ஆங்காங்கே குதித்தோம்
திட்டு திட்டாய் மேற்குலக தட்டில்
இமயத்தில் இருக்கின்ற குளிர் காற்றினில் தமிழ்
இனிக்கின்ற சேதி தேன் வந்து பாயுது காதினிலே –
செந்தமிழ் நாடென்ற போதினிலே
தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதி கனா
இன்று உலாப் போகுது இதயத்தை வருடி
தமிலென்பது வெறும் மொழியல்ல – அது
உன்னை சிகரத்தில் ஏற்றும் ஏணி
கவனக் குறைவால் நீ தடக்கி விழுவாயானால்
தமிழ் இனி சாகாது – கவனி
கவலைக் கிடமாவது நீதான் இது நியதி
நம்பிக்கை கொண்டு விழித்தெழு
நடுக் கடலிலும் பிழைத் திட வழியுண்டு
தும்பிக்கை தான் பலம் யானைக்கு – பிறர்
துன்பத்தை துடைத்தேழு தமிழுக்கு அழிவில்லை
கம்பன் வடித்த தமிழ் காணமல் போவதா ?
வள்ளுவன் குடித்த தமிழ் வற்றிப் போவதா ?
பாரதி கண்ட கனா மண்ணாகிப் போவதா ?
எங்கள் தமிலேனி விண்ணளா வேண்டாமா ?
விண்ணைக் குடைந்தொரு விதியொன்று செய்தோம்
முண்டங்கள் போல முடங்கா – பனி
முகட்டுக்குள் நின்றொரு
கண்டங்கள் தாவும் தமிழ் வித்தையை கண்டோம்
தளங்களில் தேர் போலொரு ரதம்
இணையத் தளங்களில் ஊருது – தமிழ்
இதயத் தளங்களிலும் ஊறுது தேன்
இமயத்தை மிஞ்சும் மொழிகளிலே – தமிழ்
இங்கிலீசை விஞ்சுது பார்
உலக மொழிகளிலே – தமிழ்
உன்னதம் கொள்ளுது பார்
எந்த மொழி அழிந்தாலும்
பத்து மொழி அழியாதாம் – அந்த பத்தில்
ஒன்று என் தமிழ்
மெல்ல தமிழ் இனி புவி மிசை யாழும்
காலத்துக்கு காலம் ஆடை மாற்றினாலும்
கலாச்சார பண்பாட்டுக்குள் வேரை மாற்றாத மொழி
பேஸ்புக் முகங்களின் முகத்தை மாற்றினாலும்
காட்சிக்கு காட்சி உரு ஏற்றும் மொழி
மெல்ல பேசும் மனசு – தமிழில்
செல்லம் பேசுது
செல்லம் பேசும் பொழுதில் – தமிழ்
வெல்லம் போலினிக்குது
மெல்ல தமிழினி உலகை
வெல்லப் போவதுறுதி
தமிழ் எனக்கு தெரியாது – அனால்
தமிழ் எனக்கு உயிர்
கவிதை எனக்கு தெரியாது – என்
உணர்வுகளை கிறுக்கி வைத்தேன் – அது
உங்கள் உள்ளங்களில் கோலம் போடுமானால்
அது போதுமெனக்கு
இணுவை சக்திதாசன்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 comments:

கருத்துரையிடுக