siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

அரசாங்கதின் மகிழ்ச்சியான தகவல் பிரித்தானிய மக்களுக்கு

பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் 
அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
அந்த வகையில், நேர்மறை சோதனை செய்தவர்களை சுயமாக தனிமைப்படுத்துவதற்கான சட்டத் தேவை கைவிடப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் கோவிட் தொற்று தொடர்பான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும், இலவச ரேபிட் ஆன்டிஜென் சோதனை குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டதாக இருக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளின் அர்த்தம், இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி தனிப்பட்ட பொறுப்புக்கு செல்ல தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரித்தானியாவில் பல்வேறு கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவுள்ளது. இது அங்கு வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
பெப்ரவரி 21- பெரும்பாலான கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அறிகுறியற்ற பரிசோதனையை மேற்கொள்ளும் வழிகாட்டுதலை 
அரசாங்கம் கைவிடுகிறது.
பெப்ரவரி 24 – கோவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தவர்கள் இனி சட்டப்பூர்வமாக சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
பெப்ரவரி 24 – முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நெருங்கிய தொடர்புகள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் இனி ஏழு நாட்களுக்கு தினசரி சோதனை செய்ய சட்டப்பூர்வமாகத் தேவையில்லை.
ஏப்ரல் 1 முதல் – அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நபர்களுக்கான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவடையும்.
ஏப்ரல் 1 முதல் – கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்போது தனிப்பட்ட பொறுப்பைச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள், அதுவரை அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





0 comments:

கருத்துரையிடுக