siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 19 செப்டம்பர், 2012

விசாரிக்க சென்ற இரு பெண் பொலிசார் படுகொலை

19.09.2012.By.Rajah.கொலை குறித்து விசாரிக்க சென்ற லண்டனை சேர்ந்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக மான்செஸ்டர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டனில் கடந்த மாதம் நடந்த இரு கொலைகள் குறித்து விசாரிக்க சென்ற போது பியோனா மற்றும் நிக்கோலா என்ற இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இரு பெண் ‌பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கி கொண்ட செல்லவில்லை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்றும், அதுவே கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது எனவும் லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதற்கான விசாரணையை லண்டன் பொலிஸ் துவங்கியுள்ளது

சுறாவால் உயிர் தப்பிய பொலிசார்

19.09.2012.By.Rajah.பசிபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்று வழி தவறி 15 வாரங்கள் கடலிலேயே தத்தளித்த பிரிட்டன் பொலிஸ்காரர், சுறா மீன் உதவியால் கரை திரும்பியதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி டோவ்காய் டெய்டோ 42, தன் உறவினர் லெலு பைலலி உடன், பசிபிக் பெருங்கடலில் கில்பர்ட் எலிஸ் தீவில் உள்ள தரவா பகுதிக்கு, படகில் மீன் பிடிக்கச் சென்றார்.
மெயினா தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் எரிபொருள் தீர்ந்து விட்டது. எனவே, இருவரும் படகிலேயே படுத்துத் தூங்கினர். பின் சில வாரங்கள் கடலிலேயே செய்வதறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
லெலு பைலலி மூச்சுத் திணறலில் இறந்தார். இதையடுத்து, டோவ்காய் மட்டும் 15 வாரங்களாக படகிலேயே கிடந்தார். சமீபத்தில் அவரை மீனவர்கள் காப்பாற்றினர்.
உயிர் பிழைத்தது குறித்து டோவ்காய் கூறுகையில், எரிபொருள் தீர்ந்த பின், என் உறவினர் உயிர் வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். சில வாரங்களுக்கு முன் அவர், மூச்சுத் திணறி இறந்தார்.
ஒருநாள் காலை படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய உருவம் படகை உலுக்கியது. விழித்து பார்த்தபோது, படகின் ஒரு முனையை சுறா மீன் உலுக்கிக் கொண்டிருந்தது. சுறாவைப் பார்த்ததும் செய்வதறியாமல் திகைத்தேன்.
பின், அந்த வழியாக ஒரு மீனவப் படகு வருவதைப் பார்த்ததும் கத்தினேன். அவர்கள் பைனாகுலர் வழியாக பார்த்து, என்னை வந்து காப்பாற்றிச் சென்றனர். அந்த சுறா மீன் மட்டும் படகை உலுக்காமல் இருந்திருந்தால், நான் தூங்கிக் கொண்டிருப்பேன். மீனவர்களும் காப்பாற்றி இருக்க மாட்டார்கள். ஒரு வகையில் பார்த்தால் சுறா மீன் தான் என்னைக் காப்பாற்றி உள்ளது என உயிர் பிழைத்த பொலிசார் தெரிவித்தள்ளார்

சுவிஸ் தொடர்வண்டித் தொழில் நுட்பத்தை அறிய இணையத்தளத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

19.09.2012.jah.சுவிட்சர்லாந்தின் தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான விஞ்ஞானிகளின் படைப்புத் திறனை அறிந்துக் கொள்ள அமெரிக்காவிலும், சுவிட்சர்லாந்திலும் இருப்பவர்கள் இணையத்தளத்தின் மூலமாக அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஸ்கைப் மூலமாக இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பட்டது. கடந்த 1870 ல் சுவிஸ் விஞ்ஞானியான அனட்டோலே மேலெட் என்பவர் கண்டுபிடித்த தொடர்வண்டி எந்திரத்தை இப்போது சீசர் மேயா என்ற பொறியாளர் இயக்கினார்.
இந்த மேலெட் எந்திரம் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய பொருள் அல்ல இன்றும் இவை நன்றாக இயங்கக்கூடிய தன்மை கொண்டது என அவர் அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
இந்த மேலட் எந்திர நுட்பம் என்பது இரட்டை எந்திரங்களைக் கொண்டதாகும். எனவே இந்த எந்திரம் பொருத்தப்பட்ட தொடர்வண்டிகளில் அமெரிக்காவில் மரங்களை ஏற்றிச் சென்றனர். இன்றும் ரஷ்மோர் சிகரத்தின் அருகே கறுப்பு மலையின் வழியாக ஒவ்வோராண்டும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் உட்பட 100,000 அமெரிக்கரை இந்தத் தொடர்வண்டி ஏற்றிச் செல்கிறது.
முதல் எந்திரத்திலிருந்து இரண்டாம் எந்திரத்திற்கு நகரும் போது நீராவியை இரண்டு முறை இந்த மேலட் எந்திரம் பயன்படுத்துவதால் இன்றும் கூட இந்தத் தொடர்வண்டி சிறப்பாக ஓடுகிறது.
மேலட் எந்திரத்துக்கும் வேறு இரண்டு சிறிய மோட்டார் வாகன இயந்திரத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடுகளைக் காட்டமுடியும். சிறிய எந்திரங்கள் நான்கு வண்டிகளை (கோச்) இழுக்க வல்லன. ஆனால் மேலட் எந்திரமோ ஏழு வண்டிகளை இழுக்கும் என்று சீசர் மேயர் விளக்கினார்

மூளையின் நரம்பிணைப்பு ஆராய்ச்சியில் சுவிஸ் விஞ்ஞானிகள் (வீடியோ இணைப்பு)

19.09.2012.By.Rajah.சுவிஸ் விஞ்ஞானிகள் ஒரு எலியின் மூளையின் மேற்பரப்பில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளின் வரைபடத்தைத் தயாரித்துள்ளனர். இதனைக் கொண்டு மனித மூளையையும் ஆராய முடியும் என்கின்றனர். இப்பணியை நிறைவேற்றாவிட்டால் மனித மூளையின் நரம்பிணைப்புகளின் வரைபடத்தில் ஒவ்வொரு நரம்பிணைப்பின் இருப்பிடத்தைக் குறித்து அறிய நாற்பது ஐம்பதாண்டுகள் ஆகலாம் என்று லாசேனில் உள்ள புளு ப்ரெயின் ஆய்வுத்திட்டத்தின் தலைவரான ஹென்றி மர்க்ராம் கூறினார்.
கடந்த 2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுத்திட்டத்தின் மூலமாக பாலூட்டி மூளை ஒன்றசை் செயற்கையாக உருவாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளை உருவாக்குவது பெரிய சவாலாக உள்ளது. இந்த இணைப்பின் மூலமாகத்தான் மின் மற்றும் வேதித் தொடர்புகள் ஏற்படுகின்றன.
உயிருள்ள மூளைத் திசுவிலிருந்து 20 ஆண்டுகளாக நரம்பணுக்களை எடுத்து தொகுத்து நரம்பிணைப்புகளை உருவாக்கி அதற்கிடையே தொடர்புபடுத்தப்படும் மின் மற்றும் வேதிப் பண்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நரம்பணுவையும் புளு ஜீன் சூப்பர் கம்யூட்டரில் முப்பரிமாண முறையில் மீட்டமைத்தனர். சுமார் 10,000 நரம்பணுக்களை இப்போது இணைத்துள்ளனர். நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் என்ற அமைப்பு வெளியிடும் வாரப்பத்திரிகை ஒன்றில் விஞ்ஞானிகள் தமது செயற்கை நரம்பிணைப்பு வரைபடத் திட்டம் பற்றி ஆய்வுக்கட்டுறை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் இந்த நரம்பணு இணைப்பு இயற்கையான மூளையில் இருப்பதைப் போல 75 - 95 சதவீதம் வரை துல்லியமாக உள்ளது.
இனி வரும் காலங்களில் இந்த ஆய்வு இன்னும் விளக்கமான முறையில் நரம்பியல் அமைப்புகளில் மாதிரி வடிவத்தை (Models) உருவாக்க உதவும்.


காசநோய் எதிர்ப்புக்கு புதிய மருந்து

19.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில், காசநோய் எதிர்ப்புக்கு மண்ணில் கிடைக்கும் நுண்ணுயிரி சரியான மருந்தாக அமைகிறது என்பதை சமீபத்தில் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். பைரிடோமைசின் என்ற இயற்கையான நுண்ணுயிரி, காசநோயை உருவாக்கும் மைகோ பேக்ட்டீரியம் ட்யுபர்குளோசிஸ் என்ற நுண்ணுயிரியை அழித்துவிடுகிறது.
இதனால் இந்த பைரிடோமைசினை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று ஐரோப்பிய பத்திரிக்கை ஒன்றில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இக்கருத்தை லாசோன்சாவில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் (EPFL) பேராசிரியர் ஸ்டூவர்ட் கோல் உறுதி செய்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி அரை மில்லியன் முதல் எட்டு அல்லது ஒன்பது மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் காசநோய்ப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே இந்த புதுமருந்து இவர்களுக்கு புதுவாழ்வைத் தருவது உறுதி.
இந்த புதிய மருந்து பற்றி ஐரோப்பிய மாலிக்யுலர் பயாலஜி அமைப்பு (EMBO) வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை விளக்குகிறது.
1953ம் ஆண்டில் ஜப்பானிய விஞ்ஞானிகள் இந்த பைரிடோமைசின் மருந்து பற்றி உலகுக்கு எடுத்துரைத்தனர்.
ஆனால் இதன் செயற்பாடும், நோயை குணமாக்கும் விதமும் தெளிவாக விளக்கப்படவில்லை என்று கூறி இதனை ஏற்க மருத்துவ உலகம் மறுத்துவிட்டது.
இப்போது ஐரோப்பிய விஞ்ஞானிய பைரிடோமைசினைப் பயன்படுத்தலாம் என்று உறுதி செய்துள்ளனர்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இப்படியும் ஒரு வில்லங்கமான போட்டியா?[காணொளி,]

 

Published:Tuesday, 18 September 2012, By.Rajah.
நண்பர்கள் தமக்கிடையே சுவாரஸ்யமான போட்டிகளை ஏற்படுத்தி ரசிப்பது வழக்கம். அவ்வாறே இங்கும் இரு இளைஞர்கள் தமக்கிடையே வினோதமான போட்டி ஒன்றை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.
அதாவது ஒரு கரண்டி கறுவாத்தூளினை தமது வாயில் போட்டு சாப்பிட வேண்டுமாம். சாப்பிட்டார்களா இல்லையா என்பதுதான் இந்தக் காணொளியின் கிளைமாக்ஸ்.

 

ஏன் இந்த யானைக்கு இப்படியொரு கோபம்?[ காணொளி ]

18.09.2012.By.Rajah.

 

 
ஜேர்மனியின் தலைநகரான பேர்லின் நகரில் காணப்படும் மிகவும் பிரபல்யமான மிருகக்காட்சிச் சாலையில் உள்ள யானை ஒன்று அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணினை நோக்கி தனது தும்பிக்கையினால் தனது கழிவினை வீசியுள்ளது.
ஏன் இப்படிய ஒரு செயலை குறித்த யானை செய்தது என்று தெரியாத போதிலும் அது குறி பார்த்து சரியாக எறிந்தமை அங்கு கூடியிருந்தவர்களை வியக்க வைத்துள்ளது.

 

நடிகர்களின் மறு ஜென்மத்தைக் காண ஆவலா?[காணொளி,]

18.09.2012.By.Rajash.

சிகரெட் பிடித்த 15 நிமிடத்தில் மரபணு பாதிக்கும்



18.09.2012.By.Rajah.


சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கா னது. புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சிகரெட் புகைத்தவுடன் புகையிலையில் உள்ள பாலி சைக்ளிக் அரோமேடிக் நைட்ரோ கார்பன் என்ற நச்சுப் பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது மரபணு வில் பாதிப்பை ஏற்படுத் துகிறது. இதை தொடர்ந்து சிகரெட் பிடித்த 15 முதல் 30 நிமிடங்களில் புற்றுநோய் தூண்டப்படுகிறது.

இதன்மூலம் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகிறது. நுரையீரல் புற்று நோயி னால் உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் உயிரிழக் கின்றனர். இதுதவிர 18 வகையான புற்றுநோய் ஏற்படவும் சிகரெட் காரணமாக உள்ளது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்

பட்டதாரி பயிலுனர்கள் மேலும் ஆறுமாதம் பயில வேண்டுமாம்; பொது நிர்வாகம்

18.09.2012.By.Rajah.
 மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தகவல்
 
பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி.அபேகோன் தெரிவித்துள்ளார்.

பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு அபிவிருத்து உத்தியோகத்தர் சேவை கொள்கைகளின் கீழ் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.

எனினும் இந்த கொள்கைகளுக்கு எதிராக சிலர் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் இதன் காரணமாக சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனால், பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்குமான பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்